என் மலர்
நீங்கள் தேடியது "Nilgiris"
- 15 பயிற்சி நிறுவனங்களும், 386 இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
- 147 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் பயிற்சி பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.
ஊட்டி,
ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 147 பேருக்கு பயிற்சி ஆணைகளை நீலகிரி கூடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் இளைஞர்கள் திறன் திருவிழா கூடலூர் கோழிப் பாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மையம், தாட்கோ, தமிழ்நாடு ஊரக தொழில் பயிற்சி நிறுவனம் உள்பட பல்வேறு துறைகளும், 15 பயிற்சி நிறுவனங்களும், 386 இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டனர். இதில் 147 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் பயிற்சி பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் ஜாகிர் உசேன், கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், தாசில்தார் சித்தராஜ், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார், கூடலூர் நகராட்சி தலைவர் பரிமளா, முன்னாள் எம்.எல்.ஏ. திராவிட மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது.
- கூட்டத்தில் மறைந்த நுகர்பாதுகாப்பு செயலர் ராஜன் அவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அரவேணு,
கோத்தகிரி ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் தலைவர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் மரியம்மா, துணை தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மறைந்த நுகர்பாதுகாப்பு செயலர் ராஜன் அவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நியமன பொது செயலாளராக முகமது சலீம், இணைசெயலாளராக வினோபாபோப், கூடுதல் செயலாளராக பீட்டர், செயற்குழு உறுபினராக சுரேஸ், சிவகிருஸ்னா ஆகியோர் நியமனம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் இணை செயலாளர் கண்மணி. செயற்குழு உறுப்பினர்கள் விபின்குமார், பீட்டர், வினோபாபோப், லெனின்மார்க்ஸ், சிவகிருஸ்னா, கிரேஸி, ரோஸ்லின், லலிதா, யசோதா, விக்டோரியா, முகமது இஸ்மாயில் மற்றும் வால்டர், பிரேம்செபாஸ்டியன், இணை செயலாளர் கண்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேச பாதுகாப்புக்காக உயிா்த் தியாகம் செய்த காலாட்படை வீரா்களுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
- போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரா்களுக்கு ராணுவ அதிகாரிகள் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ மையத்தில் 76-வது காலாட்படை தினம் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் தேவ்ராஜ், அன்பு, உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனர்.
வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்டல் போா் நினைவகத்தில், தேச பாதுகாப்புக்காக உயிா்த் தியாகம் செய்த காலாட்படை வீரா்களுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரா்களுக்கு ராணுவ அதிகாரிகள் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். இதனை தொடா்ந்து குன்னூா் வெலிங்டன் ராணுவ மையம் சாா்பில் ராணுவ வீரா்கள் பயன்படுத்தும் துப்பாக்கி, சிறிய அளவு ஏவுகணை, இயந்திர துப்பாக்கிகளின் கண்காட்சி மற்றும் இவற்றை ராணுவ வீரா்கள் எவ்வாறு கையாள்கிறாா்கள் என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
- நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த குத்துசண்டை வீர, வீராங்கனைகள் 30 பேரும் பங்கேற்கின்றனர்.
- வீர வீராங்கனைகள் அறிமுகம் செய்து, வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.
குன்னூர்,
தென்னிந்திய அளவிலான குத்துச்சண்டை போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த குத்துசண்டை வீர, வீராங்கனைகள் 30 பேரும் பங்கேற்கின்றனர். போட்டியில் பங்கேற்கும் வீர வீராங்கனைகள் அறிமுகம் செய்து, வழியனுப்பும் நிகழ்ச்சி நீலகிரி குத்துசண்டை சங்கத்தின் சார்பில் குன்னூர் ஒய்எம்சிஏ அரங்கில் நடந்தது.
விழாவில் குன்னூர் செயலாளர் பிரேம் ஆனந்த், குன்னூர் சப்-இன்ஸ ்பெக்டர் ஆனந் தராஜ், நீலகிரி மாவட்ட குத்து சண்டை சங்கத்தின் செயலாளர் இமாம் தீன், குத்து சண்டை பயிற் சியாளர் அப்பாஸ் மற்றும் பெற் றோர்கள் வீர வீராங் கனைகளை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
- தமிழகத்தில் மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
- இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்த தன்னாா்வலா்களிடம் தொலைபேசி வாயிலாக பேசினாா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழகத்தில் மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் வாழைத்தோட்டத்தில் ஜி.ஆா்.ஜி நினைவு மேல்நிலைப்பள்ளி, பொக்காபுரம் அரசு உறைவிடப் பள்ளி, மசினகுடி அரசு மேல்நிலைப்பள்ளி, உதகை பிரீக்ஸ் மேல்நிலைப்பள்ளி, தூனேரி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, கட்டபெட்டு அரசு உயா்நிலைப்பள்ளி ஆகியவற்றில் அடிப்படை வசதிகள் மற்றும் வகுப்பறைகள், நூலகம், ஆய்வுக் கூடங்கள் ஆகியவற்றை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
பள்ளி மாணவ, மாணவிகளிடம் கல்வித்தரம் மற்றும் ஆசிரியா்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து குன்னூரில் சில்வா்டேல் பகுதியில் தன்னாா்வலா்களைக் கொண்டு நடத்தப்படும் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்த தன்னாா்வலா்களிடம் தொலைபேசி வாயிலாக பேசினாா்.
இதையடுத்து அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:
தமிழகத்தில் ஆதிதிராவிடா், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடா்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மிகவும் பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்கள் பொதுப் பணித் துறை மூலம் இடிக்கப்பட்டு வருகின்றன. பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளி கல்வித் துறைக்கு ஏற்கெனவே ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்த சூழலில் தற்போது கூடுதலாக ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் காலியாகவுள்ள ஆசிரியா் பணியிடங்கள் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் 3 மாதத்துக்குள் படிப்படியாக நிரப்பப்படும். இல்லம் தேடி கல்வித் திட்டம் வெற்றிகரமாக ஓராண்டை எட்டியிருக்கும் நிலையில் இத்திட்டத்தின் மூலம் தற்போது 34 லட்சம் மாணவா்கள் பயன் பெற்று வருகின்றனா் . இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க., பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து பொதுமக்களை நம்ப வைத்துள்ளது.
- தி.மு.க., மக்கள் நலனுக்காக இதுவரை எதுவும் செய்யவில்லை.
ஊட்டி,
தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிப்பதாக கூறி, தி.மு.க அரசுக்கு எதிராக நீலகிரி பா.ஜனதா கட்சி சார்பில் ஊட்டி ஏ.டி.சி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். இதில் விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் தமிழை வளர்ப்பதாக கூறி தி.மு.க., நாடகமாடுகிறது. தி.மு.க., பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து பொதுமக்களை நம்ப வைத்துள்ளது. தமிழகத்தில் திராவிடத்தால் தான் தமிழை வளர்க்க முடியும் எனக் கூறி வரும் தி.மு.க., மக்கள் நலனுக்காக இதுவரை எதுவும் செய்யவில்லை.
ஆன்மிக வழியில் மட்டுமே தமிழை காக்க முடியும். அதற்கு பா.ஜனதா கட்சி மட்டுமே போராடி வருகிறது.இல்லாத ஒன்றை இருக்கும் படி செய்வதே தி.மு.கவின் வேலை. எப்போது எல்லாம் தி.மு.க ஊழல் செய்கிறதோ அப்போது எல்லாம் மொழி பிரச்சனையை தி.மு.க கையில் எடுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்பாட்டத்தில் செயற்குழு குழு உறுப்பினர்கள் போஜராஜன், சபிதா போஜன்,ராமன்,சுமதி குமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஈஸ்வரன், பரமேஸ்வரன், ஜே.ஜே. குமார், நளினி மாவட்ட பொருளாளர் தருமன், மாவட்ட செயலாளர் அருண்குமார், மண்டல தலைவர் பிரவீன், பொதுச்செயலாளர் சுரேஷ்குமார், ராஜேந்திரன், நகர துணை தலைவர் சுதாகர், ஹரி கிஷன், மணி ஸ்மூத்லி, நகர மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்,
- வனப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக அதிகளவில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
- 2 குட்டிகளுடன் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் சாலையை கடந்து செல்ல முற்பட்டன.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் யானைகள், சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தையொட்டிய குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் சுற்றி திரிவது வழக்கம்.
இந்த நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையையொட்டிய வனப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக அதிகளவில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
அவ்வப்போது இந்த யானைகள் சாலையையும் கடந்து வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் சாலைகளை கடந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். எனவே சாலைகளில் செல்லும் போதும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வனத்துறையும் அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் நேற்று, 2 குட்டிகளுடன் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் சாலையை கடந்து செல்ல முற்பட்டன. அப்போது வாகனங்களின் சப்தத்தை கேட்டதாலும், அதிக மக்கள் இருந்ததாலும் யானைகள் ஓட்டம் பிடிக்க துவங்கின.
இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஒரு சிலா் அதிக கூச்சலிட்டு யானைகளை புகைப்படம் எடுத்தனா். இந்த பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் அதன் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச், தொண்டியாளம், இரும்புபாலம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. உப்பட்டியில் இருந்து பந்தலூர் செல்லும் சாலையில் அம்ரூஸ்வளைவு அருகே குட்டிகளுடன் 4 காட்டு யானைகள் சாலையில் உலா வந்தன. சாலையில் நடந்து சென்றதோடு, வாகனங்களை வழிமறித்தன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.
மேலும் அருகே தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா வனச்சரகர் சஞ்சீவ் தலைமையில், வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். மீண்டும் ஊருக்குள் நுழையாமல் இருக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- 3 நாள்கள் மேற்கு மண்டலம் பாரத சாரண, சாரணியா் பயிற்சி முகாம் நடக்கிறது.
- 300 சாரணா், 300 சாரணியா்கள் பயிற்சி பெற உள்ளனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூா் ஓட்டுபட்டரை ஸ்டான்லி பாா்க் பகுதியில் 3 நாள்கள் மேற்கு மண்டலம் பாரத சாரண, சாரணியா் பயிற்சி முகாம் நடக்கிறது.
இந்த முகாமினை பள்ளி கல்வி துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தாா். இந்த முகாமில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 300 சாரணா், 300 சாரணியா்கள் பயிற்சி பெற உள்ளனா்.
முகாமை தொடங்கிவைத்து அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், மாநிலங்களின் பண்பாடு, நாட்டுப்பற்று, பிறருக்கு உதவி புரிவது, நட்பு வட்டாரங்களை விரிவுபடுத்துவது, சாரண, சாரணியா்கள் எவ்வாறு அணிவகுப்பு மரியாதை செய்வது போன்று பயிற்சிகள் முகாமில் அளிக்கப்படும். இவற்றை முறையாக கற்று சாரண, சாரணியா் பினபற்ற வேண்டும் என்றாா்.
இதில் வனத் துறை அமைச்சா் க.ராமசந்திரன், மாவட்ட கலெக்டா் அம்ரித் உள்பட பலர் கலந்து கொண்டனா்.
- குன்னூர் கீழ் அட்டடியில் செயல்படும் இல்லம் தேடி கல்வி மையத்தை அமைச்சர் பார்வையிட்டார்.
- இல்லம் தேடி கல்வியை குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு, தன்னார்வலரிடம் உரையாற்றி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
ஊட்டி,
தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2 நாள் பயணமாக நீலகிரி மாவட்டம் வந்தார். குன்னூர் கீழ் அட்டடியில் செயல்படும் இல்லம் தேடி கல்வி மையத்தை அமைச்சர் பார்வையிட்டார்.
அப்போது அவர் திடீரென செல்போன் வாயிலாக தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு, அங்குள்ள தன்னார்வலர் பேசுவதற்கு செல்போனை கொடுத்தார்.
அப்போது முதல்-அமைச்சர் செல்போனில் இல்லம் தேடி கல்வியை குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு, தன்னார்வலரிடம் உரையாற்றி வாழ்த்துக்கள் தெரிவித்தார். திடீரென அமைச்சர் முதல்-அமைச்சருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச வைத்த சம்பவம் தன்னார்வலர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது.
- பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரவேணு,
கோத்தகிரி என்.பி.ஏ. நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி நாட்டுநல பணி திட்டம் மற்றும் விளையாட்டு துறை சார்பில் தூய்மை இந்தியா மற்றும் வலிமையான இந்தியா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது.
மாரத்தானை பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆல்ப்பிரட் எபனேசர், கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகோப்பை மற்றும் பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
- தட்டப்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு சாலை வளைவு உள்ளூர் மற்றும் வெளியூர் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சவாலாக இருந்து வந்தது
- 2 ஆண்டுகளில் மட்டும் இந்த சாலை வளைவில் 50-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் ஏற்பட்டு இருக்கின்றன.
கோத்தகிரி,
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அதிகப்படியான குறுகிய சாலை வளைவுகள் உள்ளன.
இந்த சாலை வளைவுகளில் வெளியூர் சுற்றுலா பயணிகள் அவ்வப்போது வளைவுகள் தெரியாமல் வாகனங்களை சாலைகளின் ஓரத்தில் இறக்கி விபத்தில் சிக்கி விடுவர்.
குறிப்பாக தட்டப்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு சாலை வளைவு உள்ளூர் மற்றும் வெளியூர் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சவாலாக இருந்து வந்தது.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இந்த சாலை வளைவில் 50-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் ஏற்பட்டு இருக்கின்றன. உயிர் பலிகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
இந்த சாலை வளைவை சரி செய்ய வேண்டும் என்று பல தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தது.
இதனால் இந்த சாலையை ஆய்வு செய்த அதிகாரிகள் அதனை விரிவு செய்ய முடிவு செய்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் அந்த சாலை வளைவை விரிவு செய்ய பணிகள் நடைபெற துவங்கின. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
- 25 ஆயிரம் கோழிகளை அழிக்க அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
- மத்திய அரசு பறவை காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை அனுப்பி உள்ளது.
ஊட்டி,
கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள பண்ணையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுமார் 1, 500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன. வாத்துகளுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதியானது. இதனால், அங்கு மேலும் 25 ஆயிரம் கோழிகளை அழிக்க அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கக்கனல்லா, நம்பியார் குன்னு, தானூர், சோலாடி, கக்குண்டி, பூலகுன்னு, நாடுகாணி, பாட்டவயல் ஆகிய 8 சோதனை மற்றும் தடுப்புச் சாவடிகளில் ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலை மையில், ஒரு கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியா ளர்கள் கொண்ட குழு போலீசார், வனத்துறை மற்றும் வருவாய் துறையுடன் இணைந்து பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக வயநாடு மாவட்டத்தில் அதிக அளவில் கோழிப் பண்ணைகள் உள்ளதால், அங்கிருந்து இறைச்சியையோ, முட்டைகளையோ தமிழகத்துக்குள் கொண்டு வர முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டு, டயர்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.
தற்காலிகமாக கேரள மற்றும் கர்நாடகவில் இருந்து வரும் பறவைகள் தொடர்புடைய பொருட்களை மறு உத்தரவு வரும் வரை கொண்டு வர உத்தரவிட்டுள்ளதாக நீலகிரி கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய அரசு பறவை காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை அனுப்பி உள்ளது.