என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Nirmala Seetharaman"
- காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த முகாமில் நிர்மலா சீதாராமன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
- தனியார் கல்லூரியில் நடைபெறும் விழாவில் நிர்மலா சீதாராமன் பங்கேற்று மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.
கோவை,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வருகிற 3-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவை வருகிறார். கோவை கொடிசியா அரங்கத்தில் கனரா வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளின் சார்பில் கடன் திட்ட முகாம் நடக்கிறது.
காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த முகாமில் நிர்மலா சீதாராமன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதைத்தொடர்ந்து பிற்பகலில் அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் விழாவில் நிர்மலா சீதாராமன் பங்கேற்று மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.
- பயறு வகைகளின் உமி, தவிடு மீதான 5% வரி ரத்து செய்யப்படுகிறது.
- ஆன்லைன் விளையாட்டு மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து விவாதிக்கப்படவில்லை.
டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் 48 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். மத்திய நிதித்துறை இணை மந்திரிகள் பங்கஜ் சௌத்ரி மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், மத்திய நிதியமைச்சகம் மற்றும் மாநிலங்களின் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
ஜிஎஸ்டியில் இணக்கத்தை உருவாக்குவதற்கும் வர்த்தக வசதி நடவடிக்கையாகவும் ஜிஎஸ்டி வரிவிகிதங்களில் மாற்றங்கள் தொடர்பான பரிந்துரைகள் இந்த கூட்டத்தில் வழங்கப்பட்டது. அதன்படி பயறு வகைகளின் உமி, தவிடு மீதான 5% வரி ரத்து செய்யப்படுகிறது. பெட்ரோலுடன் கலப்பதற்கு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் எத்தைல் ஆல்கஹால் மீதான வரி 18.5% இருந்து 5% ஆகக் குறைக்கப்படுகிறது.
நான்கு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் மோட்டார் வாகனங்களுக்கு 22% என்ற உயர் அளவான இழப்பீட்டு வரி விகிதம் பொருந்தும். ரூபே கடன் அட்டைகள், குறைந்த மதிப்பிலான பரிவர்த்தனைகளுக்குரிய பிம் யுபிஐ ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ் மத்திய அரசால் வங்கிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகைக்கு வரிவிதிப்பு கிடையாது. புதிதாக எந்த பொருள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவில்லை.
ஜிஎஸ்டியில் பதிவு செய்யாதவர்களுக்கு சேவைக் குறைபாடுகள் ஏற்பட்டால் பணத்தைத் திரும்பப் பெறுகின்ற நடைமுறை இப்போது இல்லை. எனவே இதில் மாற்றம் கொண்டுவர சிஜிஎஸ்டி விதிகள் 2017ல் திருத்தம் செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்தது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாநிலங்களுக்கு இடையே இ-வணிக ஆப்ரேட்டர்கள் மூலம் பொருள்கள் மற்றும் சேவைகள் வழங்க இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நேரமின்மை காரணமாக பான் மசாலா மற்றும் குட்கா வணிகங்களில் வரி ஏய்ப்பைத் தடுக்கும் பிரச்சினை இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவில்லை. மேலும் ஆன்லைன் விளையாட்டு மற்றும் கேசினோக்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்தும் விவாதிக்கப்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மயிலாப்பூரில் காய்கறி வாங்கும் வீடியோவை மத்திய நிதி மந்திரி வெளியிட்டிருந்தார்.
- மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வீடியோ குறித்து ப.சிதம்பரம் விமர்சனம்.
திருப்பூர்:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சென்னை மயிலாப்பூரில் உள்ள காய்கறி கடைகளில் காய்கறிகளை வாங்கியதுடன் அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடினார். அங்குள்ள வியாபாரிகளிடம் காய்கறி விலை குறித்து அவர் விசாரித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் நிர்மலா சீதாராமன் பகிர்ந்திருந்தார். இது தொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான சிதம்பரம் கூறியுள்ளதாவது:
கடந்த 6 மாதங்களில் மட்டும் 2 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 2 ஆண்டுகளுக்கு பணவீக்கம் காரணமாக விலைவாசி உயரும் என்பதை ரிசர்வ் வங்கி ஆளுநரே ஒப்புக் கொள்கிறார். மயிலாப்பூர் சந்தைக்கு சென்று (மத்திய நிதி மந்திரி) காய்கறி விலையை விசாரித்தால் மட்டும் இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கிடைக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- 48 வது ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது.
- தமிழகத்தின் கோரிக்கை ஏற்று மத்திய நிதி மந்திரி ஒப்புதல்.
47வது ஜி.எஸ்.டி கவுன்சிலின் 2 நாள் ஆலோசனை கூட்டம் சண்டிகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் நிறைவில் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் முதல் வாரம் நடைபெறும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அப்போது தமிழகம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய மந்திரி, அடுத்த கூட்டத்தை மதுரையில் நடத்த ஒப்புதல் வழங்கியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எங்கள் அழைப்பை ஏற்று, அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மதுரையில் நடத்த ஒப்புக் கொண்டதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கோவில் நகரம் மற்றும் அதன் மக்கள் சார்பாக, மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. வணிகர் தாமரை மாநில மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. மாநில செயலாளர் தட்சணாமூர்த்தி வரவேற்றார். வணிகப்பிரிவு மாநில தலைவர் ராஜகண்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் திருமலை, மாநில செயலாளர்கள் சஞ்சீவி, சி.ராஜா, ஏ.டி.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
மாநாட்டில், தமிழகத்தில் வணிகர் நல வாரியத்தை முதல்-அமைச்சர் மீண்டும் செயல்படுத்த வேண்டும். பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் பாதிப்புக்குள்ளான மக்கள் நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு உற்பத்தி வரியை குறைத்தது போல, மாநில அரசும் ‘வாட்’ வரியை குறைக்க வேண்டும் என்பது உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
காங்கிரஸ் கொடுத்த 48 ஆண்டுகால ஆட்சியை 48 மாதத்தில் பா.ஜ.க. கொடுத்திருக்கிறது. ஊழல் செய்து நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சி ஒன்றும் தெரியாததுபோல அமைதியாக இருக்கிறது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த பாடுபட்டு வருகிறார்.
காங்கிரஸ் ஆட்சியில் கடன் 3 மடங்கு அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. வங்கியில் கடன் பெற்று ஓடியவர்களின் சொத்தை பறிமுதல் செய்யவும், அவர்களை இந்தியாவுக்கு கொண்டுவரவும் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கிறது. இதனை 8 சதவீதமாக அதிகரிப்பதற்கு மோடி முயற்சி எடுத்து வருகிறார்.
மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்களை வணிகர்கள் மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். மோடி ஆட்சி மீண்டும் அமையவேண்டும். தமிழகத்திலும் மாறுதல் தேவை.
இவ்வாறு அவர் தெரிவித்தார். #NirmalaSeetharaman
பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்பட உள்ள ரபேல் போர் விமானத்தின் விலை குறித்து மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பதற்கு அதில் ஊழல் நடந்திருப்பதே காரணம் என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் நாடாளுமன்ற மக்களவையில் விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, ஆனந்த் சர்மா, ரன்தீப் சூரஜ்வாலா ஆகியோர் செய்தியாளர்களிடம் இந்த விவகாரம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டனர்.
பின்னர் ஏ.கே.அந்தோணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு ரபேல் போர் விமானத்தின் விலை குறித்து ரகசியம் காப்பதுடன், நாட்டு மக்களுக்கு அதை வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பது, அதில் தவறு நடந்துள்ளதையே காட்டுகிறது. அவர்கள் தொடர்ந்து அதை மறைப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
அரசு போர் விமானத்தின் விலையை தொடர்ந்து ரகசியமாக வைத்திருக்க முடியாது. தலைமை கணக்காயர் மற்றும் நாடாளுமன்ற பொது கணக்கு குழு ஆய்வில் அம்பலமாகி விடும். இந்த ஒப்பந்தத்தில் அரசு நிறுவனத்தை புறக்கணித்து விட்டு அனுபவம் இல்லாத தனியார் நிறுவனத்துக்கு விமான பாகங்களை இணைக்கும் ஒப்பந்தம் கொடுத்திருப்பது ஏன் என்பதை அரசு தெரிவிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதற்கு இதுவே உதாரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் ஆனந்த் சர்மா கூறுகையில், பிரதமர் மோடியும், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனும் ரபேல் போர் விமான விவகாரம் குறித்து பதில் அளிக்கையில், நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியது குறித்து ஏன் என்பதை விளக்க வேண்டும். போர் விமான விலையை வெளியிடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை என பிரான்ஸ் அரசு தெரிவித்து இருக்கிறது. இதை ராகுல் காந்தியிடம், பிரான்ஸ் அதிபர் தெரிவித்து இருக்கிறார். அப்போது மன்மோகன் சிங், நான் (ஆனந்த் சர்மா) உள்ளிட்டோர் உடன் இருந்தோம் என்றார்.
பின்னர் ரன்தீப் சூரஜ்வாலா கூறும்போது, நாடாளுமன்றத்தில் போர் விமானம் குறித்து மோடி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியது உரிமை மீறல் பிரச்சினை ஆகும். இருவருக்கும் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்குவது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் முடிவு எடுப்பார் என்றார். #RafaleDeal #PMModi #NirmalaSeetharaman
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்