என் மலர்
நீங்கள் தேடியது "Nitesh Kumar"
- கலப்பு இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நிதிஷ் குமார், துளசிமதி முருகேஷன் ஜோடி பங்கேற்றது.
- மலேசியாவின் ஹிக்மத் ராம்தானி மற்றும் லியானி ராத்ரி ஒக்டிலா ஜோடி மோதியது.
பாரா ஒலிம்பிக் தொடர் பாரீஸ் நகரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நிதிஷ் குமார், துளசிமதி முருகேஷனும் மலேசியாவின் ஹிக்மத் ராம்தானி மற்றும் லியானி ராத்ரி ஒக்டிலா ஆகியோர் மோதின.
இந்த ஆட்டத்தில் எளிதான முறையில் மலேசிய வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்திய ஜோடி 15-21, 8-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
- பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி இதுவரை 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- பேட்மிண்டனில் இந்தியாவின் நிதேஷ குமார் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இதற்கிடையே, பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் நிதேஷ் குமார் ஜப்பான் வீரரை 21-16, 21-12 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இன்று நடைபெற்றது.
- பிரிட்டன் வீரரை 21-14, 18-21, 23-21 என்ற செட் கணக்கில் நிதேஷ் குமார் வீழ்த்தினார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இன்று நடைபெற்றது. அதில், பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தேலை வீழ்த்தி இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்க பதக்கம் வென்றார்
பிரிட்டன் வீரரை 21-14, 18-21, 23-21 என்ற செட் கணக்கில் நிதேஷ் குமார் வீழ்த்தினார்.
பாரா ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இந்திய அணி 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களைப் பெற்றுள்ளது.