search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "No chance"

    • 18 போ் மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவா்கள்.
    • 72 போ் மந்திரிசபையில் இடம்பெற்று உள்ளனா்.

    பிரதமா் மோடி தலைமையிலான புதிய அரசில், முந்தைய மந்திரிகள் 37 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

    ஸ்மிருதி இரானி, அனுராக் தாக்கூா், அா்ஜுன் முண்டா, பா்சோத்தம் ரூபாலா, ஆா்.கே.சிங், மகேந்திர நாத் பாண்டே, அஸ்வின் செளபே, சாத்வி நிரஞ்சன் ஜோதி, சஞ்சீவ் பல்யான், ராஜீவ் சந்திரசேகா், நிஷித் பிரமாணிக், பிரதிமா பெளமிக், மீனாட்சி லேகி உள்பட 37 பேருக்கு மீண்டும் மந்திரி பதவி அளிக்கப்படவில்லை. இவா்களில் 18 போ் மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவா்கள்.

    தோ்தலில் தோல்வியுற்றபோதும், மத்திய மந்திரியாக மீண்டும் நியமனம் பெற்ற ஒரே நபா் எல்.முருகன் ஆவாா். இவா், ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக உள்ளாா். புதிய மந்திரிசபையில் நிா்மலா சீதாராமன், அன்னபூா்ணா தேவி, ஷோபா கரந்தலஜே, ரக் ஷா கட்சே, சாவித்ரி தாக்கூா், நிமுபென் பம்பானியா, அனுப்ரியா படேல் ஆகிய 7 பெண் மந்திரிகள் இடம்பெற்றுள்ளனா்.

    முந்தைய மந்திரிசபையில் 10 பெண் மந்திரிகள் இடம்பெற்றிருந்தனா். முன்பு மந்திரிகளாக இருந்த ஸ்மிருதி இரானி, பாரதி பிரவீண் பவாா், சாத்வி நிரஞ்சன் ஜோதி, தா்ஷணா ஜாா்டோஷ், மீனாட்சி லேகி, பிரதிமா பெளமிக் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    புதிய மந்திரிசபையில் முன்னாள் முதல்வா்களான சிவராஜ் சிங் சவுகான் (ம.பி.), மனோகா் லால் கட்டா (அரியாணா), எச்.டி.குமாரசாமி (கா்நாடகம்) உள்பட 33 போ் புதுமுகங்களாவா்.

    மத்திய அரசில் அனுமதிக்கப்பட்ட மொத்த மந்திரிகளின் எண்ணிக்கை 81. தற்போது பிரதமருடன் சோ்த்து 72 போ் மந்திரிசபையில் இடம்பெற்று உள்ளனா். எனவே, இன்னும் 9 மந்திரிகள் வரை பதவியேற்க முடியும்.

    • ஓ.பி.எஸ்-வுடன் சேருவதற்கு வாய்ப்பில்லை என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டியளித்துள்ளார்.
    • அவருக்கு பின்னால் 63 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. திருப்பரங்குன்றத்தில் உள்ள அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வலிமைமிக்க தீர்ப்பினை தொண்டர்கள் ஏற்கனவே வழங்கி விட்டனர். அவருக்கு பின்னால் 63 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் 2,663 பொதுக்குழு உறுப்பினர்களில் அதிக மெஜாரிட்டியாக எடப்பா டியாரை இடைக்கால பொதுச் செயலாளர் என்று தேர்வு செய்தனர்.

    இடைக்கால தீர்ப்பைப்பெற்று சிலர் அறிக்கை விடுகின்றனர்.இன்னும் இறுதி தீர்ப்பு வரவில்லை. மேல்முறையீடு உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தீர்ப்பில் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் உயர்ந்த குழு என நீதிமன்றமே கூறியுள்ளது.

    கசப்பை மறக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் தி.மு.க.யுடன் தொடர்பு வைத்தவர்களை எப்படி மறக்க முடியும்?

    இடைக்கால தீர்ப்பை மட்டும் வைத்துக் கொண்டு கட்சி வளர்க்க முடியாது. நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுக்கள் மூலம் இறுதியான தீர்ப்பை பெறலாம்.

    ஓ.பி.எஸ். எடப்பாடி யாரை அழைக்கிறார். அவருக்கு அழைக்க எந்த தகுதியும் இல்லை. அவர் அழைத்தது தவறு.

    கூட்டுத் தலைமை என்று ஓபிஎஸ் கூறுகிறார். நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை தேர்ந்தெடுக்க பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டது. இரட்டைத் தலைமையே வேண்டாம் என கட்சியினர் கூறும் நிலையில் கூட்டுத் தலைமையை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்.

    எப்பொழுதெல்லாம் தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்தவுடன் தென் மாவட்டங்களுக்கு ஓ.பி.எஸ். வருகிறார். இதன் மூலம் தென் மாவட்ட பகுதிகளை உரிமை கொண்டாட முயற்சி செய்கிறார். தென் மாவட்டம் என்பது ஜாதி- மதத்திற்கு அப்பாற்பட்டது. தென் மாவட்டத்தில் ஓ.பி.எஸ்.சுக்கு தனி செல்வாக்கு கிடையாது.

    தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து தொண்டர்களும், மக்களும் எடப்பாடியார் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். ஏனென்றால் தென்பகு திகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மக்கள் கேட்காமலே வழங்கியவர். அதனால்தான் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர். ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டுக்கு சொந்தக்கா ரராக எடப்பாடி உள்ளார். நிச்சயம் வெற்றி பெற்று அ.தி.மு.க. இயக்கத்தின் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடியார் வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன், பகுதி துணை செயலாளர் செல்வகுமார், வட்ட செயலாளர் எம்.ஆர். குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×