என் மலர்
நீங்கள் தேடியது "Northeast monsoon"
- வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவது வழக்கமான ஒன்று தான்.
- சிட்ரங் புயல் உருவானதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
சென்னை:
தென் மண்டல வானிலை அதிகாரி பாலசந்திரன் கூறியதாவது:-
தமிழகம், கேரளா, தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் (29-ந்தேதி) தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. நவம்பர் 4-ந்தேதி வரை மழை படிப்படியாக அதிகரிக்கும்
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்றும், நாளையும் தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும், வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்ய வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். சிட்ரங் புயல் உருவானதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட 45 சதவீதம் அதிகமாக பெய்தது. அதுபோல வடகிழக்கு பருவமழையும் அதிகமாக பொழியும் என எதிர்பார்க்கிறோம்.
இன்று தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும்.
29-ந்தேதி கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை. ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
31-ந்தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வட தமிழக கடலோர பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அதிகாரிகள் விடுப்பு எடுக்காமல் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், விளைநிலங்கள் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்தினர் கண்காணித்து வருகிறார்கள்.
கடலூர்:
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை இன்று (29-ந்தேதி) தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது.
இதன் காரணமாக தென்பெண்ணை ஆறு, கெடிலம், கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கால் சிதம்பரம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதுதவிர கடலூர் மாவட்டத்தில் தொடர்கனமழை காரணமாக ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று அதிகாலை முதல் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அதிகாரிகள் விடுப்பு எடுக்காமல் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், விளைநிலங்கள் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்தினர் கண்காணித்து வருகிறார்கள். இதுதவிர வீராணம், பெருமாள் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
- சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்திற்கு அதிக மழையை தரக்கூடிய வடகிழக்கு பருவமழை எப்போதும் அக்டோபர் மாதம் 3-வது வாரத்தில் தொடங்குவது வழக்கம்.
கடந்த ஆண்டு அக்டோபர் 25-ந்தேதி பருவமழை தொடங்கியது. இந்த வருடம் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
சிட்ரங் புயலால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனாலும் 29-ந்தேதி இன்று தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை தமிழகம், தெற்கு ஆந்திரா கடலோர பகுதி, புதுச்சேரியில் இன்று தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் நோக்கி வீசும் காற்றில் மாற்றம் ஏற்பட்டு, கிழக்கு திசையில் இருந்து காற்று வீச தொடங்கியது. காற்றின் ஈரப்பதத்தின் அளவும் அதிகரித்துள்ளது. பருவமழைக்கான சாதகமான சூழலுடன் தொடங்கியதை தொடர்ந்து தமிழகம் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழையும், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
31 மற்றும் நவம்பர் 1-ந்தேதி தமிழகம், புதுவையில் அநேக இடங்களில் லேசான மழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.
வடகிழக்கு பருவமழையை எதிர்க்கொள்ள அரசு அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்து உள்ளது. சென்னையில் முன்எச்சரிக்கையாக வெள்ள தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உஷார் நிலையில் உள்ளனர். உணவு, சமையல் கூடம், தங்குமிடம், மழைநீர் தேங்கினால் அகற்ற மோட்டார் பம்ப் செட் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
- தொடர் மழையால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் அவதிக்கு உள்ளானார்கள்.
- அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதால் சின்னசேலம் பகுதிகளான நயினார் பாளையம், குரால், தோட்டப்பாடி, பாக்கம்பா டி, எலவடி, கல்லாநத்தம், வாசுதேவணூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே மழை பெய்ய தொடங்கியது காலையில் தொடங்கிய தொடர் மழையால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் அவதிக்கு உள்ளானார்கள்.
மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது சில தனியார் பள்ளிகள் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அளித்தது. இந்த மழையினால் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள். மழையின் காரணமாக சின்ன சேலத்தில் உள்ள முக்கிய சாலைகளான சேலம் மெயின் ரோடு, கடைவீதி, புதிய பேருந்து நிலையம், கூகையூர் ரோடு என அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
- வருகிற 3-ந் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- நாளை 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் 'ஆரஞ்சு அலர்ட்' கொடுக்கப்பட்டிருக்கிறது.
சென்னை:
வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், உள்தமிழகம், கேரளா, தெற்கு உள்கர்நாடகா, ராயலசீமா பகுதிகளில் பருவமழை பரவி இருக்கிறது. தமிழகத்தில் இதன் காரணமாக ஆங்காங்கே மழை பெய்தும் வருகிறது.
மேலும் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், வருகிற 3-ந் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் இன்று பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதில் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
நாளை (செவ்வாய்க்கிழமை) திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்பதால், அங்கும் நிர்வாக ரீதியாக 'ஆரஞ்சு அலர்ட்' கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதுதவிர சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை மறுதினமும் (புதன்கிழமை), அதற்கு அடுத்த நாளும் (வியாழக்கிழமை) இதேபோல், சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ஒகேனக்கல் 5 செ.மீ., திருக்கழுக்குன்றம், செய்யூர், முகையூர் தலா 4 செ.மீ., செங்கல்பட்டு, கடலாடி, மதுராந்தகம், தரங்கம்பாடி, காஞ்சிபுரம், பாம்பன், மாமல்லபுரம், ஆரணி, ராமேஸ்வரம், சூரங்குடி தலா 3 செ.மீ., உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.
- சென்னையில் கழிவுநீர் செல்லும் குழாய்களில் தூர்வாரும் பணி மீண்டும் நாளை முதல் தொடங்க உள்ளது.
- எந்திரங்கள் மூலம் பெருமளவில் கழிவு நீர் செல்லும் குழாய்கள் மற்றும் எந்திர நுழைவு வாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரப்படுகிறது.
சென்னை:
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் சென்னையில் கழிவுநீர் செல்லும் குழாய்களில் தூர்வாரும் பணி மீண்டும் நாளை (1-ந் தேதி) முதல் தொடங்க உள்ளது.
இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வடகிழக்கு பருவமழையையொட்டி பகுதி 1 முதல் 15 வரை உள்ள தெருக்களில் கழிவு நீர் செல்லும் குழாய்கள் மற்றும் எந்திர நுழைவு வாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் நாளை 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.
2106 தெருக்களில் 282 தூர்வாரும் எந்திரங்கள், 162 ஜெட்ராடிங் எந்திரங்கள் மற்றும் 57 கழிவுநீர் உறிஞ்சும் எந்திரங்கள் என மொத்தம் 501 கழிவுநீர் எந்திரங்கள் மூலம் பெருமளவில் கழிவு நீர் செல்லும் குழாய்கள் மற்றும் எந்திர நுழைவு வாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரப்படுகிறது.
எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் அடைப்பு, வழிந்தோடுதல் தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட பகுதி அலுவலகத்திலும் பணிமனை அலுவலகத்திலும் தொடர்பு கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை விட்டுவிட்டு பெய்கிறது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன் தினம் தொடங்கியது. இதையடுத்து அநேக இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தின் உள் பகுதிகள், கேரளா, தெற்கு கர்நாடகத்தின் உள்பகுதிகள், தெற்கு ஆந்திரா பகுதிகளுக்கு வடகிழக்கு பருவமழை பரவியுள்ளது. பருவகாற்றின் தாக்கத்தால் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென் இலங்கை கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு, சுழற்சி நிலவுகிறது.
இதையடுத்து தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் நவம்பர் 4-ந்தேதி வரை 5 நாட்கள் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மேலும் இன்றும் நாளையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை (1-ந்தேதி) திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும். சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2-ந்தேதி காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நவம்பர் 3-ந்தேதி தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பருவமழை தொடங்கி பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை விட்டு விட்டு பெய்கிறது.
சென்னையில் இன்று காலையில் மழை பெய்தது. அதன்பின்னர் லேசான வெயில் இருந்தபோதும் உடனே மேகங்கள் சூழ்ந்து இருண்டு மழை பெய்கிறது. சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியிலும் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- 3-வது குறுக்குத்தெரு, 6-வது மெயின்ரோடு ஆகிய இடங்களில் தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் கழிவுநீரால் கடந்த ஒரு வாரமாக தெருக்களில் மக்களால் நடமாட முடியவில்லை.
- இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் மழைநீர் மற்றும் கழிவுநீரில் மெதுவாக செல்கிறார்கள்.
சென்னை:
மழைக்காலங்களில் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கினாலும் மடிப்பாக்கம் சதாசிவம் நகர் மிக மோசமாக ஒரு காலத்தில் பாதித்தது உண்டு. படகுகள் மூலம் மக்களை மீட்பது, தெர்மாகோலில் தற்காலிக படகுகளை செய்து அதில் பொதுமக்களும், பள்ளி குழந்தைகளும் பயணிப்பது போன்ற காட்சிகள்தான் இருந்தது. இப்போது அந்த நிலை ஓரளவு தடுக்கப்பட்டாலும் மழைக்காலம் வந்தால் இப்போது பல தெருக்களில் தண்ணீர் தேங்குவது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது.
இந்த ஆண்டு பருவமழை இன்னும் தீவிரம் அடையவில்லை. அதற்குள் பல தெருக்கள் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு மழைநீரும், கழிவுநீரும் கலந்து தேங்கிநிற்கிறது.
3-வது குறுக்குத்தெரு, 6-வது மெயின்ரோடு ஆகிய இடங்களில் தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் கழிவுநீரால் கடந்த ஒரு வாரமாக தெருக்களில் மக்களால் நடமாட முடியவில்லை. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் அந்த தண்ணீரில் மெதுவாக செல்கிறார்கள்.
இந்த பகுதியில் கழிவுநீர் எப்படி வெளியே வருகிறது என்பது பற்றி அந்த பகுதி வாசியான ஹரீஸ் என்பவர் கூறியதாவது:-
இந்த பகுதியில் இன்னும் பாதாள சாக்கடை வசதிகள் முழுமையாக இல்லை. தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் தனியாக கழிவுநீர் டேங்குகள் அமைத்து லாரிகள் மூலம் அவ்வப்போது அகற்றி வருகிறார்கள். அதே நேரம் பல வீடுகளில் முறைகேடாக கழிவுநீர் குழாய்களை மழைநீர் கால்வாயுடன் இணைத்துள்ளார்கள். அதன் காரணமாக மழைக்காலங்களில் கழிவுநீரும் சேர்ந்து வெளியேறுகிறது.
பல இடங்களில் வீடுகளில் செப்டிக் டேங்க் நிரம்பியும் கழிவுநீர் வெளியேறி மழைநீருடன் கலக்கிறது.
ஏற்கனவே மாநகராட்சிக்கு பலமுறை புகார் தெரிவித்துள்ளோம். கடந்த சில ஆண்டுகளாகவே மழைநீர் கால்வாய் பணிகள் நடக்கிறது. அதைமுழுமையாக ஒருங்கிணைக்கவில்லை. ஒரே தெருவில் இரண்டு ஒப்பந்ததாரர்கள் வரை வேலை செய்கிறார்கள். எல்லா இடங்களிலும் இந்த பணிகள் அரைகுறையாகவே செய்யப்பட்டுள்ளன. இதனால்தான் மழைநீரும் வெளியேற முடியாமல் கழிவுநீரும் சேர்ந்து தேங்குகிறது. இதை முறையாக சீரமைக்காவிட்டால் இந்த நிலைமை சீராவது கடினம் என்றார்.
பெரியார் நகர் விரிவு 2 மற்றும் 3-வது தெருக்களிலும் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.
பிரதான சாலையான மடிப்பாக்கம் சபரிசாலையில் ஏற்கனவே மெட்ரோ வாட்டர் பணிகள் செய்யப்பட்டு கல், மணல் போட்டு நிரப்பி இருந்தனர் ஒரு வருடத்துக்கும் மேலாக அப்படியே போடப்பட்டிருந்த அந்த இடத்தை மீண்டும் தோண்டி, புதிதாக மணல், ஜல்லி கொட்டி வேலை செய்கிறார்கள். தேவையில்லாத இந்த வேலையால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள்.
மாநகராட்சி லாரிகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
- வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே பல குட்டைகளில் நீர் தேங்கியுள்ளன. சில குட்டைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன.
- பனங்குட்டையில் பாதி அளவுக்கு மேல் தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது.
அவிநாசி:
அவிநாசி ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகளில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் குளம், குட்டைகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டன. இதனால் மழையின் போது அவை நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகை ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே பல குட்டைகளில் நீர் தேங்கியுள்ளன. சில குட்டைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன.
அவ்வகையில் சேவூர் அருகேயுள்ள முறியாண்டம்பாளையம் ஊராட்சியில் உள்ள பனங்குட்டை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கத்தின் மூலம் 1.10 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டது.இதன் விளைவாக மழையின் போது சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வழிந்தோடி வரும் தண்ணீர் இக்குட்டையில் நிரம்பியது.
கடந்த 2020 ஜூலையில் பெய்த மழையில் இக்குட்டை நிரம்பியது. மீண்டும் கடந்த ஆண்டு 2021 நவம்பர் மாதம் பெய்த மழையில் குட்டை நிரம்பியது. தொடர்ச்சியாக கடந்த வாரங்களில் இரவு நேரங்களில் இப்பகுதியில் தொடர் மழை பெய்தது. இதில் பனங்குட்டையில் பாதி அளவுக்கு மேல் தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பனங்குட்டை நிரம்புவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.போர்வெல் மூலம் தண்ணீர் வினியோகிப்பதில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பிரச்சினை இருக்காது.மாநிலத்தில் வடகிழக்குப்பருவ மழை துவங்கியுள்ள நிலையில் மழை கைகொடுத்தால் குட்டை நிரம்பி தண்ணீர் வெளியேறும் என்றார்.
- பருவமழை தொடங்கி பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை விட்டு விட்டு பெய்கிறது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. இதையடுத்து அநேக இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு, சுழற்சி நிலவுகிறது.
இதையடுத்து தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் நவம்பர் 4-ந்தேதி வரை 5 நாட்கள் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மேலும் இன்றும் நாளையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை (1-ந்தேதி) திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும். சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2-ந்தேதி காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நவம்பர் 3-ந்தேதி தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
4-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழையும் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மற்றும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
பருவமழை தொடங்கி பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை விட்டு விட்டு பெய்கிறது.
சென்னையில் இன்று காலையில் மழை பெய்தது. அதன்பின்னர் லேசான வெயில் இருந்தபோதும் உடனே மேகங்கள் சூழ்ந்து இருண்டு மழை பெய்கிறது. சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியிலும் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- மாவட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
- அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
திருவள்ளூர்:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதையடுத்து ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்து உள்ளது.
இதையடுத்து மாவட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மிக கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. எனவே அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.