என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Noyal"
- ஆற்றுநீருடன் கலக்கும் சாக்கடை நீர்
- காற்றில் பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
நீலாம்பூர்,
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ராவுத்தூர் என்ற இடத்தில் நொய்யல் நதி செல்கிறது.
இதன் காரணமாக ராவுத்தூருக்கு செல்வதற்கு என்று ஆற்றுப்பாலம் உள்ளது.
இதனை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆற்றில் தற்போது குறைந்த அளவு தண்ணீரே சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த ஆற்றுப்பாலத்திற்கு கீழ் பகுதியில் அனுமதி இன்றி நொய்யல் ஆற்று நீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது.
இதன் காரணமாக ஆற்று நீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் நுரை தழும்பி நுரையுடன் ஆற்று நீர் சென்று வருகிறது.
மேலும் அவ்வாறு நுரை தழும்பி காற்றுடன் மேலே பறந்து வந்து வாகன ஓட்டிகள் மீதும் விழுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், அவ்வழியாக நடந்து செல்ப வர்களும் மிகவும் சிரமம் அடைகின்றனர்.
எனவே நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுத்து நிறுத்தி கழிவுகள் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- இரவு பிரிதிவிராஜ் மற்றும் குடும்பத்தினர் தோட்டத்தில் இருந்துள்ளனர்
- தப்பி ஓடிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் குந்தாணிபாளையம் அருகே பிரசித்தி பெற்ற பாதகாளியம்மன் கோவில் உள்ளது. கோவில் அருகே குடியிருந்து வருபவர் பொன்னுசாமி. இவரது மகன் பிரதிவிராஜ்(வயது 40). இவரது தோட்டம் அருகாமையில் உள்ளது. நேற்று இரவு பிரிதிவிராஜ் மற்றும் குடும்பத்தினர் தோட்டத்தில் இருந்துள்ளனர். அப்போது மூன்று வாலிபர்கள் பிரதிவிராஜின் வீட்டு கதவைத் திறந்து வீட்டுக்குள் சென்றுள்ளனர். மூன்று வாலிபர்கள் வீட்டுக்குள் புகுவதை பார்த்த அவரது குடும்பத்தினர் தோட்டத்தில் இருந்து ஓடி வந்து சத்தம் போட்டுள்ளன. சத்தம் கேட்டதும் மூன்று வாலிபர்களும் வீட்டுக்குள் இருந்து தப்பி ஓடி உள்ளனர். வீட்டை சுற்றி கம்பிவேலி போடப்பட்டு இருந்ததால் 2 பேர் கம்பி வேலி தாண்டி தப்பி ஓடி விட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார்.
இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் விசாரணை செய்து கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.
- போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆங்காங்கே தடுப்பு வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளது.
- மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் களை கட்டியுள்ளது.
பேரூர்,
பேரூர் நொய்யல் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா இன்று சிறப்பாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு விழாவன்று (ஆடி18) பேரூர் நொய்யல் படித்துறையில், இறந்துபோன தங்களது குழந்தைகள், கல்யாணம் ஆகாமல் இறந்து போன பெண்கள் ஆகியோருக்கு இலைப்படையல் வைத்து 7 கூழாங்கற்களை கன்னிமார் தெய்வங்களாக உருவகித்து, காதோலை, கருகுமணி, தாழைமடல், நாணல்இலை, தின்பண்டங்கள் ஆகியன வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அவ்வாறு வழிபாடு செய்வதன் மூலம், இறந்து போன குழந்தைகளின் பித்ருதோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் ஐதீகம்.
இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு, காலை முதலே பஸ்களில் ஏராளமான பக்தர்கள் பேரூருக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் நொய்யல் ஆற்றின் படித்துறைக்கு சென்று, ஆற்றின் இரு கரைகளிலும் பக்தர்கள் அமர்ந்து இறந்துபோன குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இலைப் படையல் வைத்து 7 சப்த கன்னிமார் வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து அங்கிருந்த பசுமாடு கன்றுகளுக்கு அகத்திக்கீரைகள் வழங்கியதோடு நொய்யல் ஆற்றோரம் அமர்ந்திருந்த சாதுக்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு அன்னதானங்களையும் வழங்கினர்.
ஆடிப்பெருக்கு விழா என்பதால், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர்.
மேலும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆங்காங்கே தடுப்பு வளைவுகளும் அமைக்கப்பட்டு, கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
இந்த நிலையில் பேரூர் படித்துறையில் போதுமான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டு அருளாசி பெற்றுச்சென்றனர். மேலும், வனபத்ரகாளி யம்மன் கொடி மரம் முன்பு அம்மனுக்கு விளக்கேற்றி தாங்கள் வேண்டிய காரியங்கள் நிறைவேற வேண்டி பூஜைகள் செய்தனர்.
மேலும்,பவானி ஆற்றங்கரையில் அதிகாலை முதலே ஆற்றில் குளித்து சப்த கன்னிமார்களுக்கு பிடித்த உணவுகளை படையலிட்டு வழிபட்டு வருகின்றனர்.இதனால் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் களை கட்டியுள்ளது.
- காங்கயம் ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் தலைமை வகித்தாா்.
- ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சி செயலா்கள், கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா்.
காங்கயம்:
அரசுத் துறை அலுவலா்களுக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, காங்கயம் ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜீவிதா ஜவஹா் முன்னிலை வகித்தாா்.
காங்கயம் பகுதியில் அண்மைக் காலங்களில் திருட்டு மற்றும் வழிப்பறிச் சம்பவங்கள், கொலை உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.காங்கயத்தில் உள்ள நொய்யல் ஆற்றங்கரையோரத்தில் முள்வேலி மரங்கள் அடங்கிய புதா்களை சமூக விரோதிகள் பதுங்குவதற்கும், சாராயம் காய்ச்சுவது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கும் பயன்படுத்தி வருவதாக காங்கயம் காவல் துறையில் பொதுமக்கள் புகாா் தெரிவித்து வந்தனா். திருப்பூா், ஈரோடு மாவட்ட எல்லைப் பகுதியாக நொய்யல் ஆறு இருப்பதால், குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களைப் பிடிப்பதில் காவல் துறையினருக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் காங்கயம் ஒன்றியப் பகுதியில் கத்தாங்கண்ணி பகுதி முதல் பழையகோட்டை ஊராட்சி வரையிலான 12 கி.மீ. தொலைவுக்கு நொய்யல் ஆற்றங்கரையோரத்தில் உள்ள முள்வேலி புதா்கள் மற்றும் முள் மரங்களை தன்னாா்வலா்களின் உதவியோடு வெட்டி அப்புறப்படுத்துவதற்கு காங்கயம் காவல் துறை முன்வந்துள்ளதாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், காங்கயம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டும், சந்தேக நபா்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளிலும் தலா 30 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தீா்மானிக்கப்பட்டது. பிரதம மந்திரியின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், காங்கயம் ஒன்றியப் பகுதியில் பணி மேற்கொள்வதற்கான சாலைகளைத் தோ்ந்தெடுக்கும் பணியும் நடைபெற்றது.
கூட்டத்தில் காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விமலாதேவி, ராகவேந்திரன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சித் துறைகளின் உதவிப் பொறியாளா் வசந்தாமணி, காங்கயம் ஊராட்சி ஒன்றியப் பொறியாளா்கள் சரவணன், கோகுல், காவல் உதவி ஆய்வாளா் சந்திரன் மற்றும் ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சி செயலா்கள், கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்