என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "NPL Cricket"
- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவித்துள்ளார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் ஷிகர் தவான் அடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஷிகர் தவான். 38 வயதாகும் இவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்தார்.
இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 50 ஓவர் போட்டிகளில் 6,793 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 44.11 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2315 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 40.61 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் அடித்துள்ளார்.
இதனையடுத்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் கிரிக்கெட் தொடரான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், நேபாளம் நாட்டில் நடைபெறும் நேபாள பிரீமியர் லீக் தொடரில் கர்னாலி யாக்ஸ் அணியில் விளையாடுவதற்காக ஷிகர் தவான் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
- அரையிறுதி ஆட்டத்தில் ஈஸ்ட்மேன் எக்ஸ்போா்ட்ஸ்-ரிதம் நிட் இந்தியா அணியும்,
- இரண்டாவதாக நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் சி.ஆா்.காா்மெண்ட் ஈகிள்ஸ்-எஸ்.என்.எக்ஸ்போா்ட்ஸ் அணிகளும்
திருப்பூர்:
திருப்பூா் பின்னலாடை நிறுவனங்களுக்கான என்.பி.எல். (நிஃப்ட்-டீ பிரிமியா் லீக்) கிரிக்கெட் போட்டிகள் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் கடந்த ஏப்ரல் 9 -ந் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இதில், லீக் போட்டிகள் முடிவடைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் ஈஸ்ட்மேன் எக்ஸ்போா்ட்ஸ், ரிதம் நிட் இந்தியா அணிகள் ஏற்கெனவே வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தன. இந்த நிலையில் மற்ற இரண்டு அணிகளை தோ்வு செய்வதற்கான காலிறுதிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சி.ஆா்.காா்மெண்ட்ஸ் ஈகிள்ஸ்-குவாண்டம் நிட்ஸ் -3 (கே.பி.ஆா்.) அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த சி.ஆா்.காா்மெண்ட்ஸ் ஈகிள்ஸ் அணி 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. இரண்டாவது ஆடிய குவாண்டம் நிட்ஸ் -3 (கே.பி.ஆா்.) அணி 15.2 ஓவா்களில் 73 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சி.ஆா்.காா்மெண்ட் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் எஸ்.என்.எக்ஸ்போா்ட்ஸ் - சி.ஆா்.காா்மெண்ட் டைகா்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த எஸ்.என்.எக்ஸ்போா்ட்ஸ் அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை எடுத்தது. இரண்டாவதாக ஆடிய சி.ஆா்.காா்மெண்ட்ஸ் டைகா்ஸ் அணி 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களை எடுத்து 2 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதையடுத்து, ஜூலை 2 -ந் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஈஸ்ட்மேன் எக்ஸ்போா்ட்ஸ்-ரிதம் நிட் இந்தியா அணியும், இரண்டாவதாக நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் சி.ஆா்.காா்மெண்ட் ஈகிள்ஸ்-எஸ்.என்.எக்ஸ்போா்ட்ஸ் அணிகளும் மோதுகின்றன.
- மூன்றாவது போட்டியில் எஸ்.என்., எக்ஸ்போர்ட்ஸ் - தங்கமன் அணிகள் மோதின.
- நான்காவது போட்டியில் டாலர் - சி.ஆர்., டைகர் அணிகள் மோதின.
திருப்பூர்:
பின்னலாடை நிறுவன அணிகள் மோதும் என்.பி.எல்., கிரிக்கெட் தொடர் திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் லீக் போட்டிகள் நடைபெற்றன.
ஜூபிட்டர் நிட்டிங் கம்பெனி - அமேசிங் எக்ஸ்போர்ட்ஸ் அணிகள் மோதிய போட்டியில் முதலில் களமிறங்கிய ஜூபிட்டர் 15 ஓவரில் 6 விக்கெட் இழந்து 81 ரன் எடுத்தது. தொடர்ந்து ஆடிய அமேசிங் அணி 8 விக்கெட் இழப்புக்கு, 77 ரன்னுடன் தோல்வியடைந்தது. 3 ஓவர் பந்து வீசி 14 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய ஜூபிட்டர் வீரர் செமிகுமார் ஆட்டநாயகனாக தேர்வானார்.
மற்றொரு போட்டியில் ஸ்ரீவாரி கிளாத்திங் - வார்ஷா இன்டர் நேஷனல் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஸ்ரீவாரி 7 விக்கெட் இழப்புக்கு 112 ரன் குவித்தது.அடுத்து களமிறங்கிய வார்ஷா 13.5 ஓவரில் 48 ரன்னில் ஆட்டமிழந்தது. 3 ஓவர் பந்து வீசி 7 ரன் மட்டும் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய ஸ்ரீ வாரி வீரர் பிரபு ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மூன்றாவது போட்டியில் எஸ்.என்., எக்ஸ்போர்ட்ஸ் - தங்கமன் அணிகள் மோதின. முதலில் ஆடிய எஸ்.என்., எக்ஸ்போர்ட்ஸ் அதிரடியாக விளையாடி 144 ரன் எடுத்தது.தொடர்ந்து ஆடிய தங்கமன் அணி 6 விக்கெட் இழப்புக்கு 75 ரன்னில் சுருண்டது. தான் எதிர்கொண்ட 28 பந்துக்கு 60 ரன் விளாசிய எஸ்.என்., எக்ஸ்போர்ட்ஸ் வீரர் லிபின் ஜோசப் ஆட்டநாயகனாக தேர்வானார்.
நான்காவது போட்டியில் டாலர் - சி.ஆர்., டைகர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டாலர் அணி, 61 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. அசால்டாக ஆடிய சி.ஆர்., டைகர் 8.2 ஓவரில் 62 ரன்னுடன் வெற்றிபெற்றது. 3 ஓவர் பந்து வீசி 3பேரை வீழ்த்திய சி.ஆர்., வீரர் சங்கரநாராயணன் ஆட்டநாயகனாக தேர்வானார்.அடுத்த சுற்று லீக் போட்டி வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்