search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nursing student"

    • தண்டவாளத்தில் நர்சிங் மாணவி தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • சம்பவத்தில் மாணவி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    கேரளம் மாநிலம் கண்ணூர் மாவட்டத்தின் ரெயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்று தண்டவாளத்தில் நர்சிங் மாணவி தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கண்ணூரில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

    அதில், நர்சிங் மாணவி நடைமேடையில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார். அதற்குள் ரெயில் கிளம்பியது. இதை கவனித்த மாணவி சற்றும் பதற்றப்படாமல் நடந்து சென்று ஓடும் ரெயிலில் ஏற முற்பட்டார்.

    ரெயில் பெட்டி கதவின் பிடியை பிடித்து படியில் கால் வைக்க முயன்றபோது கால் இடறி தண்டவாளத்திற்குள் விழுந்தார்.

    இதைக் கண்ட சக பயணிகள் கூச்சலிட்டனர். உடனடியாக அபாய சங்கிலி இழுத்து ரெயில் நிறுத்தப்பட்டது. பின்னர், தண்டவாளத்தில் சிக்கியிருந்த மாணவியை மீட்டனர்.

    இந்த சம்பவத்தில் மாணவி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    • அறுவை சிகிச்சை முடிந்து 3 நாட்கள் ஆன பிறகு சாதாரண நிலைக்கு சிகிச்சை பெற்று இருந்துள்ளார்.
    • வருகின்ற நோயாளிகளின் உயிருக்கு பாதுகாப்பில்லை.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் சோளக்கொட்டாய் அடுத்த லலாகொட்டாய் பகுதியை சார்ந்த தங்கராஜ். இவரது மகள் காயத்ரி. இவர் தருமபுரி அடுத்த நல்லம்பள்ளியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத நிலையில் தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அங்கு காயத்ரி உடல் நிலையை சரி செய்து மருத்துவர் ஸ்கேன் செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து ஸ்கேன் செய்து பார்த்ததில் ஒட்டுக்குடல் இருப்பது தெரியவந்துள்ளது.

    தொடர்ந்து இதற்கான அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தி, ரூ.50,000 செலவாகும் என தெரிவித்துள்ளார். அப்பொழுது அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து அறுவை சிகிச்சை முடிந்து 3 நாட்கள் ஆன பிறகு சாதாரண நிலைக்கு சிகிச்சை பெற்று இருந்துள்ளார். இதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்லலாம் என மருத்துவர் அறிவுறுத்தி உள்ளார்.

    அப்பொழுது காயத்ரிக்கு தடுப்பூசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தடுப்பு ஊசி போட்ட பின் காயத்ரி திடீரென மயக்கம் அடைந்துள்ளார். இதனைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனையில் உள்ள மருத்துவரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மருத்துவர் காயத்ரியை பரிசோதித்த பின்னர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

    தொடர்ந்து 2 நாட்களுக்குப் பிறகு சேலம் தனியார் மருத்துவமனையில் காயத்ரியின் உடல்நிலை மோசமான நிலையில் சுயநினைவின்றி இருப்பதால் வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் மூளை, தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், மற்ற உடலுறுப்புகள் எந்தவித குறைபாடுகள் இல்லாமல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காயத்ரியின் பெற்றோர், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒட்டுக்குடல் சிகிச்சைக்காக வந்த காயத்ரிக்கு, தனியார் மருத்துவமனையில் மருத்துவர் கொடுத்த தவறான சிகிச்சையால் தற்பொழுது சுயநினைவின்றி இருந்து வருகிறார். இந்த மருத்துவமனையின் தரம் மிகவும் மோசமானதாக உள்ளது. வருகின்ற நோயாளிகளின் உயிருக்கு பாதுகாப்பில்லை.

    எனவே காயத்ரியின் இந்த நிலைக்கு காரணமான மருத்துவமனை மீதும் மற்றும் மருத்துவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய தருமபுரி நகர காவல் நிலையத்தில் காயத்ரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் இது போன்ற சம்பவ இனி நடைபெறாத வண்ணம் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும், மருத்துவரின் பதிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • யசோதா அறையின் கழிவறைக்கு சென்று தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    ஈரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் பாப்பம்பட்டி எஸ்.கே.சி.நகர், 5-வது சாலையை சேர்ந்தவர் காளியப்பன் (54). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார். இளைய மகள் யசோதா (19) மேற்கு குமரலிங்கத்தில் உள்ள கல்லூரியில் செவிலியர் பாடப்பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    தற்போது ஒரு வருட பயிற்சிக்காக யசோதா ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி எடுத்து வந்தார். இதற்காக மருத்துவமனை அருகே உள்ள அறையில் வாடகைக்கு தங்கி இருந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று யசோதா தான் தங்கி இருந்த அறையின் கழிவறைக்கு சென்று திடீ ரென தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே யசோதா இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனை போலீசார் வழக்கு பதிவு செய்து யசோதா எந்த காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • வெளியே சென்ற நர்சிங் மாணவி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி ஜே.கே.பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் மகள் உமா(17). இவர் பி.தருமத்துப்பட்டியில் உள்ள டிரஸ்டு மூலம் நர்சிங் முதலாமாண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று டிரஸ்டுக்கு செல்வதாக கூறிச்சென்றார்.

    ஆனால் அவர் அங்கு செல்லவில்லை என நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்திலும் தேடிபார்த்தும் கிடைக்காததால் போடி நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • அஸ்வினி அதே பகுதியில் உள்ள தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில் டிப்ளமோ படித்து வருகிறார்.
    • சம்பவத்தன்று பயிற்சி மையத்திற்கு சென்ற வர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அம்மன் கொள்ளை மேடு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் தியாகதுருகம் செல்வா நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் அஸ்வினி (20) இவர் இதே பகுதியில் உள்ள தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில் டிப்ளமோ படித்து வருகிறார். இந்நிலையில் சம்ப வத்தன்று பயிற்சி மையத்திற்கு சென்ற வர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இவரது தந்தை நடராஜன் தியாகதுருகம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • நர்சிங் மாணவி உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் முள்ளிவேல் நகரை சேர்ந்தவர் சங்கீதா. இவரது மகள் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து நர்சிங் மாணவியை தேடி வருகின்றனர்.

    டி.கே.எஸ்.பி. நகரைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 45). இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று கோவில்பட்டி சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார் அதன் பின் அவர் எங்கு சென்றார் என்பது குறித்து தெரியவில்லை இது குறித்து அவரது மனைவி மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள காரியாபட்டியை சேர்ந்தவர் மணி (வயது 60). இவர் அடிக்கடி வெளியூரில் வசிக்கும் தனது மகன், மகள்களை பார்த்து வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் வெளியூரில் வசிக்கும் தனது பிள்ளைகளை பார்த்து வருவதாக கூறிச் சென்ற மணி அதன்பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மணியின் மனைவி பேச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கனிகா தனியார் கல்லூரியில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • மனமுடைந்த கனிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்திரம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த வர் திருமலைகுமார். இவரது மனைவி சந்தனமாரி. இவர் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் கனிகா(வயது 20).

    தற்கொலை

    இவர் பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கனிகா அடிக்கடி செல்போனில் பேசிக்கொ ண்டே இருந்ததாகவும், அதனை அவரது தாயார் கண்டித்த தாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கனிகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொ ண்டார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாவூர்சத்திரம் போலீசார், கனிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள எஸ்.தோப்பூரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் கீர்த்தனா (வயது 20). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது பெருநாழியை சேர்ந்த அப்துல்ரகுமான் என்பவரும், கீர்த்தனாவும் காதலித்ததாக கூறப்படு கிறது. இதனை பெற்றோர் கண்டித்தனர்.

    இதனால் விரக்தி அடைந்த கீர்த்தனா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார். குடும்பத்தினர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றினர். பின்னர் அருப்பு க்கோட்டை போலீசார் கீர்த்தனா-அப்துல்ரகுமானை அழைத்து அறிவுரை கூறி னர். ஆனாலும் 2 பேரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்துல்ரகுமான் தனது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் வேறொரு பெண்ணை காதலிப்பதாக தெரிவித்திருந்தார்.

    இதனால் கீர்த்தனா யாருடனும் பேசாமல் விரக்தி யுடன் காணப்பட்டார். பெற்றோரும் மகளை சமரசம் செய்தனர். ஆனா லும் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கீர்த்தனா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த காரியா பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக சுந்தரமூர்த்தி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நர்சிங் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் தற்கொலை செய்தனர்.
    • சிந்துப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜன். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள் கிருத்திகா (வயது 17). இவர் விடத்தகுளத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி இருந்து திருமங்கலத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.

    சில மாதங்களாக கிருத்திகாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த கிருத்திகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிந்துப்பட்டி அருகே உள்ள நாட்டார் மங்கலத்தைச் சேர்ந்தவர் பூமிராஜன். இவரது மனைவி கலா ராணி (வயது 45). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்- மனைவியிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.

    இதனால் வாழ்க்கை விரக்தி அடைந்த கலாராணி சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கினார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராதிகா மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்ததால் போலீசார் மற்றும் என்.ஐ. ஏ அதிகாரிகள் ராதிகாவின் பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.
    • தகவல் அறிந்த ராதிகா போலீசாருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், பெடபயலு பகுதியை சேர்ந்தவர் ராதிகா (வயது 20). இவர் அங்குள்ள நர்சிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் ராதிகா கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார். அவரது பெற்றோர் தங்களது மகளை உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் தேடினர். ஆனால் ராதிகாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து மகள் காணாமல் போனது குறித்து பெடபயலு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் ராதிகா மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தது தெரியவந்தது. ராதிகா மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்ததால் போலீசார் மற்றும் என்.ஐ. ஏ அதிகாரிகள் ராதிகாவின் பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.

    இந்த தகவல் அறிந்த ராதிகா போலீசாருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு 20 வயதானதால் நான் மேஜர். எனக்கு என்ன வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிக்க முடியும். இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண் உரிமையை காப்பாற்றவே மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து இருக்கிறேன். பள்ளியில் படிக்கும் போது சைதன்யா மகிளா சங்கத்தில் சேர்ந்தேன். அப்போது மாவோயிஸ்ட் இயக்கத்தின் சித்தாந்தம் எனக்கு பிடித்து போகவே அந்த இயக்கத்தில் சேர்ந்து இருக்கிறேன். என்னை யாரும் கட்டாயப்படுத்தி சேர்க்கவில்லை.

    எனவே போலீசார் மற்றும் என்.ஐ.ஏ அதிகாரிகள் என்னுடைய பெற்றோரை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும் என கடிதத்தில் கூறியுள்ளார்.

    • நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த மாணவி தனது காதலனுடன் மாயமானார்.
    • போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி அருகில் உள்ள கெங்குவார்பட்டி ஸ்ரீராம்நகரை சேர்ந்த சரவணன் மகள் சரண்யா என்ற லோகநாயகி(20). இவர் ஒட்டன்சத்திரத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    அப்போது நிலக்கோட்டை வெரியப்பன்பட்டியை சேர்ந்த வீரக்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் பேசிபழகி வந்துள்ளார். இதனை அவரது தாய் சந்தனலட்சுமி கண்டித்து வந்துள்ளார். சம்பவத்தன்று சரண்யா வத்தலக்குண்டு சென்று வருவதாக கூறிச்சென்றவர் மாயமானார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தனது மகனை வீரக்குமார்தான் கடத்திச்சென்றிருக்ககூடும் என்று அவரது தாய் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    ராக்கிங் கொடுமையால் நர்சிங் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம் சிங்கம்பிள்ளை பட்டியை சேர்ந்த பானுப்ரியா (18) என்ற மாணவியும் விடுதியில் தங்கி நர்சிங் படித்து வருகிறார்.

    முதலாம் ஆண்டு மாணவியான இவரை அதே விடுதியில் தங்கி படித்து வரும் சக மாணவிகள் 2 பேர் ராக்கிங் செய்து வந்துள்ளனர். சாதி பெயரை சொல்லி இருவரும் அடிக்கடி கிண்டல் செய்து வந்துள்ளனர்.

    இதனால் மனம் உடைந்த மாணவி பானுப்ரியா தூக்க மாத்திரைகளை போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ராக்கிங் தொடர்பாக விடுதி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    ×