என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NZvSA"

    • முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது.
    • வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    மவுண்ட் மாங்கனு:

    தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கனுவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, நியூசிலாந்து முதலில் களமிறங்கியது. டேவன் கான்வெ ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். டாம் லாதம் 20 ரன்னில் வெளியேறினார். 39 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்தது.


    அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சதமடித்து அசத்தினர். இந்த ஜோடியை தென் ஆப்பிரிக்கா வீரர்களால் பிரிக்க முடியவில்லை

    இறுதியில், முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. வில்லியம்சன் 112 ரன்னும், ரவீந்திரா 118 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 219 ரன்கள் சேர்த்துள்ளது.

    • கேன் வில்லியம்சன் 118 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
    • ரச்சின் ரவீந்திரா 240 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நேற்று தொடங்கியது. கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா ஆகியோரின் சதங்களால் முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. வில்லியம்சன் 112 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 118 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய கேன் வில்லியம்சன் 118 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஆனால், ரச்சின் ரவீந்திரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 340 பந்தில் 21 பவுண்டரி, ஒரு சிக்சருடன் இரட்டை சதம் அடித்தார். இது அவருக்கு 4-வது டெஸ்ட் போட்டிதான். 4-வது போட்டியிலேயே இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

    தொடர்ந்து விளையாடிய அவர் 240 ரன்னில் ஆட்டமிழந்தார். கிளென் பிளிப்ஸ் 39 ரன்களும், டேரில் மிட்செல் 34 ரன்களும், மேட் ஹென்ரி 9 பந்தில் 27 ரன்களும் அடிக்க நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 144 ஓவர்களில் 511 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் நீல் பிராண்ட் 6 விக்கெட் சாய்த்தார்.

    • கீகன் பீட்டர்சன் 45 ரன்களும், டேவிட் பெடிங்காம் 32 ரன்களும் சேர்த்தனர்.
    • ஹென்ரி, மிட்செல் சான்ட்னெர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மவுங்கானுய்யில் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    ரச்சின் ரவீந்திரா (240), கேன் வில்லியம்சன் (118) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணியின் நீல் பிராண்ட் 6 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 80 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 162 ரன்னில் சுருண்டது.

    கீகன் பீட்டர்சன் 45 ரன்களும், டேவிட் பெடிங்காம் 32 ரன்களும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி சார்பில் மேட் ஹென்ரி, மிட்செல் சான்ட்னெர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். கைல் ஜாமிசன், ரச்சின் ரவீந்திரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ஹென்ரி

    349 ரன்கள் முன்னிலை பெற்றும் நியூசிலாந்து பாலோ-ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.

    • முதல் இன்னிங்சில் செஞ்சுரி அடித்தது போல 2-வது இன்னிங்சில் நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் வில்லியம்சன் சதத்தை (109 ரன்) பதிவு செய்தார்.
    • இரு அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைடெஸ்ட் வருகிற 13-ந் தேதி நடைபெறுகிறது.

    மவுண்ட் மாங்கானு:

    நியூசிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கானுவில் நடைபெற்று வருகிறது.

    நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 511 ரன் குவித்தது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 162 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 529 ரன் இலக்காக இருந்தது.

    முதல் இன்னிங்சில் செஞ்சுரி அடித்தது போல 2-வது இன்னிங்சில் நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் வில்லியம்சன் சதத்தை (109 ரன்) பதிவு செய்தார்.

    இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை விளையாடியது. 73 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 4 விக்கெட்டை இழந்தது.

    5-வது வரிசையில் ஆடிய டேவிட் பெடிங்காம் மட்டுமே நியூசிலாந்து பந்து வீச்சை தாக்குபிடித்து ஆடினார். அவர் 87 ரன்னில் அவுட் ஆனார். அவருடன் இணைந்து நிலைத்து நின்ற பீட்டசன் 16 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 247 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைடெஸ்ட் வருகிற 13-ந் தேதி நடைபெறுகிறது.

    • வில்லியம்சன் 2 இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்தினார்.
    • வில்லியம்சனுடன் ஆட்டநாயகன் விருதை பகிர்ந்து கொள்வீர்களா? என்று ரச்சின் ரவீந்தராவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா இரட்டை சதமும் கனே வில்லியம்சன் சதமும் விளாசினார். இதனை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 162 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    349 ரன்களுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து வில்லியம்சன் சதம் மூலம் 179 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 529 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 247 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இந்த போட்டியில் இரட்டை விளாசிய ரச்சின் ரவீந்திரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் உங்களுக்கு நிகராக இப்போட்டியில் 2 சதங்கள் அடித்த வில்லியம்சனுடன் ஆட்டநாயகன் விருதை பகிர்ந்து கொள்வீர்களா? என்று ரச்சின் ரவீந்தராவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நம்முடைய திறனுக்கு தகுந்தாற்போல் அணியின் வெற்றியில் பங்காற்றுவது நல்ல உணர்வை கொடுக்கிறது. நான் இந்த இன்னிங்சை உயரியதாக மதிப்பிடுவேன். ஏனெனில் வெற்றிக்காக நாங்கள் அங்கே கடினமான பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினோம்.

    ஆட்டநாயகன் விருதை கண்டிப்பாக பகிர மாட்டேன். அவர் 31 சதங்கள் அடித்துள்ளார். எனவே ஒரு சதம் மட்டுமே அடித்துள்ள நான் அதை அவருக்கு கொடுக்கப் போவதில்லை. எந்த நேரத்திலும் அணியின் வெற்றியில் பங்காற்றுவது எப்போதுமே ஸ்பெஷலாகும்.

    என்று ரச்சின் கூறினார். 

    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் டேன் பீட் 5 விக்கெட்டுகளையும், டேன் பீட்டர்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
    • தென் ஆப்பிரிக்கா அணி 31 ரன்களுடன் முன்னிலையில் உள்ளது.

    நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஹேமில்டனில் நேற்று தொடங்கியது.

    முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 220 ரன் எடுத்து இருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 242 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. ருவான் டிஸ்வார்ட் அதிகபட்சமாக 64 ரன் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டும், ரவீந்திரா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 211 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக வில்லியம்சன் 43 ரன்களை எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் டேன் பீட் 5 விக்கெட்டுகளையும், டேன் பீட்டர்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 31 ரன்களுடன் முன்னிலையில் உள்ளது. 

    • தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 242 ரன்னும், 2வது இன்னிங்சில் 235 ரன்னும் எடுத்தது.
    • நியூசிலாந்து வெற்றி பெற 267 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஹாமில்டன்:

    தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 242 ரன்கள் அடித்தது.

    நியூசிலாந்து சார்பில் வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டும், ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் பிட் 5 விக்கெட்டும், டேன் பேட்டர்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 31 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அந்த அணியின் பெடிங்காம் 110 ரன்கள் எடுத்தார்.

    நியூசிலாந்து சார்பில் வில்லியம் ஓ ரூர்க் 5 விக்கெட்டும், கிளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதைத் தொடர்ந்து, 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து 2வது இன்னிங்சில் களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்துள்ளது. டாம் லாதம் 21 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் நியூசிலாந்து வெற்றி பெற 227 ரன்கள் தேவைப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 9 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும் என்பதால் இப்போட்டி பரபரப்பான சூழலை எட்டியுள்ளது.

    • கேன் வில்லியம்சன் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • வில் யங் 60 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் நின்று வெற்றிக்கு உதவினார்.

    நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது.

    முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 242 ரன்னும், நியூசிலாந்து 211 ரன்னும் எடுத்தன. 31 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய தென்ஆப்பிரிக்கா 235 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்துக்கு 267 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    நேற்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 13.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 40 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 4-ம் நாள் ஆட்டம் நடந்தது. டாம் லாதம், வில்லியம்சன் தொடர்ந்து விளையாடினர். அவர்கள் நிதானமாக ஆடினர். ஆனால் டாம் லாதம் 30 ரன்னிலும், அடுத்து களம் வந்த ரவீந்திரா 20 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

    மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் சதம் அடித்தார். அவர் 98-வது டெஸ்டில் தனது 32-வது சதத்தை பூர்த்தி செய்தார். அவரது ஆட்டத்தால் நியூசிலாந்து வெற்றியை நோக்கி சென்றது. அவருக்கு துணையாக விளையாடிய வில் யங் அரைசதம் அடித்தார்.

    இருவரின் சிறப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து 94.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேன் வில்லியம்சன் 133 ரன்களுடனும், வில் யங் 60 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்துள்ளது.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என நியூசிலாந்து கைப்பற்றியது.
    • இதன்மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் நியூசிலாந்து முதல் இடத்திற்கு முன்னேறியது.

    துபாய்:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

    இந்நிலையில், இந்த தொடர் முடிவடைந்ததும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது.

    அதன்படி, புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்து அணி முதல் இடத்திற்கு முன்னேறியது. அந்த அணி 75 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது.

    ஆஸ்திரேலியா (55%) 2வது இடத்திலும், இந்தியா (52.77%) 3வது இடத்திலும், வங்காளதேசம் (50%) 4வது இடத்திலும் உள்ளன.

    பாகிஸ்தான் (36.66%), வெஸ்ட் இண்டீஸ் (33.33%), இங்கிலாந்து (25%), தென் ஆப்பிரிக்கா (25%), இலங்கை (0%) ஆகிய அணிகள் 5 முதல் 9 இடங்களில் உள்ளன.

    • கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 133 ரன்கள் விளாசினார்.
    • கான்வே 97 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.

    மூன்று அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். கடந்த 8-ந்தேதி நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தானை 78 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியிருந்தது.

    லாகூர் கடாபி மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் சான்ட்னெர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தென்ஆப்பிரிக்கா அணியில் போஸ்ச், மிலானி மோங்க்வானா, மேத்யூ பிரீட்ஸ்கீ, முத்துசாமி ஆகியோர் அறிமுகம் ஆகினர். இதில் தொடக்க வீரரான பிரீட்ஸ்கி சிறப்பாக விளையாடி 148 பந்தில் 11 பவுண்டரி, 5 சிக்சருடன் 150 ரன்கள் விளாசினார்.

    அறிமுக போட்டியில் 150 ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். வியான் முல்டர் 64 ரன்களும், ஜேசன் ஸ்மித் 41 ரன்கள் அடிக்க தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், வில் ஓ'ரூர்கே 72 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. வில் யங், டேவன் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வில் யங் 19 ரன்கள் எடுது்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து டேவன் கான்வே உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 18.2 ஓவரில் 100 ரன்களை கடந்த நியூசிலாந்து 30.1 ஓவரில் 200 ரன்களை கடந்தது.

    கான்வே 64 பந்தில் அரைசதமும், கேன் வில்லியம்சன் 44 பந்தில் அரைசதமும் அடித்தனர். தொடர்ந்து இருவரும் சதத்தை நோக்கி சென்றனர்.

     கேன் வில்லியம்சன் 72 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் விளாசினார். மறுமுனையில் கான்வே சதத்தை எட்டுவார் என எதிர்பார்த்த நிலையில் 97 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 9 பவுண்டரி, 1 சிக்சர் இடங்கும். கான்வே- கேன் வில்லியம்சன் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது.

    அடுத்து வந்த டேரில் மிட்செல் 10 ரன்னிலும், டாம் லாதம் ரன்ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.

    என்றாலும் கேன் வில்லியம்சன் கடைசி வரை விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். நியூசிலாந்து 48.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேன் வில்லியம்சன் 133 ரன்னுடனும், பிலிப்ஸ் 28 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    • ரச்சின் ரவீந்திரா 47 பந்தில் அரைசதம் அடித்தார்.
    • நியூசிலாந்து 17.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது அரையிறுதி போட்டி லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் 2-வது இடம் பிடித்த நியூசிலாந்தும், பி பிரிவில் முதல் இடம் பிடித்த தென்ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் வில் யங், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நிதானமாக, அதேநேரம் பந்து பந்துக்கு ரன் என்ற அடிப்படையில் விளையாடினர்.

    என்றாலும் வில் யங்கால் நீண்ட நேரம் நீடிக்க முயடிவில்லை. நியூசிலாந்து ஸ்கோர் 7.5 ஓவரில் 48 ரன்னாக இருக்கும்போது 23 பந்தில் 3 பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து ரச்சின் ரவீந்திரா உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாட, ரச்சின் ரவீந்திரா தனது வழக்கமான பாணியில் விளையாடினார். இதனால் முதல் 10 ஓவரில் நியூசிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் சேர்த்தது.

    ரச்சின் ரவீந்திரா சிறப்பாக விளையாடி 47 பந்தில் அரைசதம் விளாசினார். ரச்சின் ரவீந்திரா- கேன் வில்லியம்சன் ஜோடி 56 பந்தில் 50 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்த 17.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

    25 ஓவர் முடிவில் நியூசிலாந்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. ரச்சின் ரவீந்திரா 80 ரன்னுடனும், கேன் வில்லியம்சன் 39 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். 

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 362 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 312 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    லாகூர்:

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி லாகூரில் நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் சதமடித்து அசத்தினர். டேரில் மிட்சல், கிளென் பிலிப்ஸ் 49 ரன்கள் எடுத்தனர்.

    2வது விக்கெட்டுக்கு ரவீந்திரா-வில்லியம்சன் ஜோடி 164 ரன்கள் குவித்தது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் நிகிடி 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 363 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. கேப்டன் பவுமா 56 ரன்னும், வான் டெர் டுசன் 69 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    கடைசி கட்டத்தில் டேவிட் மில்லர் தனி ஆளாகப் போராடி சதமடித்தார். அவர் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 312 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நியூசிலாந்து சார்பில் மிட்செல் சாண்ட்னர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    துபாயில் வரும் 9-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவுடன் மோதுகிறது.

    ×