என் மலர்
நீங்கள் தேடியது "NZvSL"
- முதலில் ஆடிய இலங்கை 196 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய நியூசிலாந்தும் 196 ரன்கள் எடுக்க போட்டி டை ஆனது.
ஆக்லாந்து:
இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றது நியூசிலாந்து.
இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. அசலங்கா 67 ரன்னில் அவுட்டானார். குசல் பெரேரா அரை சதமடித்து 53 ரன்னில் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. மார்க் சாம்பன் 33 ரன்னும், டாம் லதாம் 27 ரன்னும் எடுத்தனர். அதிரடியாக ஆடிய டேரில் மிட்செல் அரை சதம் அடித்து அசத்து 66 ரன்கள் விளாசினார்.
இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.
வெற்றியாளரை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய நியூசிலாந்து 2 விக்கெட்டுக்கு 8 ரன் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 6 பந்தில் 9 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை 3 பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்து சூப்பர் ஓவரில் இலங்கை வெற்றி பெற்றது. அசலங்கா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது.
- முதலில் விளையாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 141 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
- 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் வருகிற 8-ந்தேதி நடக்கிறது.
டுனிடின்:
நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி டுனிடினில் இன்று நடந்தது. முதலில் விளையாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 141 ரன்னில் ஆல்அவுட் ஆனது. தனஞ்செய டி சில்வா அதிக பட்சமாக 20 பந்தில் 37 ரன் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் ஆடம் மிலின் 5 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிம் செய்பெர்ட் 43 பந்தில் 79 ரன் (3 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார்.
முதல் போட்டியில் இலங்கை சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் வருகிற 8-ந்தேதி நடக்கிறது.
- இலங்கை அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்த போட்டியில் பெண் நடுவராக கிம் காட்டன் செயல்பட்டார்.
டுனிடின்:
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரிலும் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. 2-வது ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து இரு அணிகளும் டி20 போட்டியில் மோதி வருகின்றனர். முதல் போட்டியில் இலங்கை சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று இருந்தது. இந்நிலையில் 2-வது போட்டி இன்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பெண் நடுவராக கிம் காட்டன் செயல்பட்டார். இரு ஆடவர் அணிகளுக்கு இடையேயான சர்வதேச போட்டியில் நடுவராக பணியாற்றிய முதல் பெண் நடுவர் என்ற வரலாற்று சாதனையை இவர் படைத்துள்ளார்.
அவர் வெய்ன் நைட்ஸுடன் கள நடுவராக பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நியூசிலாந்து வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது.
- இந்த வெற்றி மூலம் மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
குயின்ஸ்டவுன்:
நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று குயின்ஸ் டவுனில் நடந்தது.
டாஸ் ஜெயித்து நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. குசல் மென்டிஸ் 48 பந்தில் 73 ரன்கள் எடுத்தார். குசல் பெரைரா 33 ரன்னும், நிசாங்கா 25 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டிம் செய்பர்ட் சிறப்பாக விளையாடினார். அவர் 48 பந்தில் 88 ரன்கள் எடுத்தார்.
இதில் 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும். கேப்டன் டாம் லதாம் 31 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது.
குமாரா வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்து சாப்மேன், அடுத்த பந்தில் அவுட் ஆனார். 3-வது பந்தில் ஜேமி நிசமும் (ரன் அவுட்), மிட்செல்லும் கேட்ச்) அவுட் ஆனார்கள். அடுத்த இரண்டு பந்துகளில் 3 ரன்கள் எடுக்கப்பட்டது.
நியூசிலாந்து 19.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- நியூசிலாந்து இன்றைய போட்டியில் வெற்றி பெற்று ரன்ரேட்டை அதிகரித்து வைப்பது அவசியம்.
- இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை இழந்ததால், நெருக்கடியின்றி விளையாடும்.
இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நியூசிலாந்து தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை துவம்சம் செய்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, முதல் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று வீறுநடை போட்டது. இதனால் மீதமுள்ள ஐந்து போட்டிகளில் குறைந்தபட்சம் இரண்டு போட்டிகளிலாவது வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் என முக்கியமான அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. இதனால் அரையிறுதிக்கு முன்னேறுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
தற்போது நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் 8 போட்டிகள் முடிவில் தலா நான்கில் வெற்றி பெற்றுள்ளன. கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்று, அதிக ரன்ரேட் வைத்திருந்தால்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில்தான் நியூசிலாந்து இன்று இலங்கையை எதிர்கொள்கிறது. இந்த போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. பெங்களூரு மைதானம் ரன் குவிக்க சாதகமானது. இதனால்தான் கடந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து 400 ரன்களுக்கு மேல் குவித்தது. இருந்தபோதிலும், பாகிஸ்தானின் தொடக்க வீரர் பஹர் ஜமான் அதிரடியாக விளையாடி சதம அடிக்க, மழை குறுக்கீட்டால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இன்று சிறப்பாக விளையாடி வெற்றிக்காக முயற்சிக்கும். பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே விளையாடியது. இதனால் இன்று மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்லலாம்.
இன்றைய ஆட்டம் முடிந்த பின்னர்தான் பாகிஸ்தான் கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்த்து 11-ந்தேதி விளையாட இருக்கிறது. இன்று நியூசிலாந்து வெற்றி பெற்றாலும் கூட, இங்கிலாந்துக்கு எதிராக ரன்ரேட் அடிப்படையில் இலக்கு நிர்ணயிக்க வாய்ப்ப உள்ளது. இதனால் நியூசிலாந்து வெற்றி பெறுவதுடன் ரன்ரேட்டை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை அணி 8 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இதனால் வெற்றி, தோல்வி அந்த அணிக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. புள்ளிகள் பட்டியலில் எந்த இடம் என்பதை மட்டுமே நிர்ணயிக்கும். இதனால் நெருக்கடி இன்றி இலங்கை வீரர்கள் விளையாடுவார்கள். நியூசிலாந்துக்கு இது முக்கியமான போட்டி என்பதால் வெற்றிக்காக விளையாடுவார்கள். இதனால் அந்த அணியின் ரன் குவிப்பு தொடர வாய்ப்புள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று ரசிகர்கள் ரன் குவிப்பை காணலாம்.
- இந்த 2 தொடர்களில் இருந்தும் வில்லியம்சன் மற்றும் கான்வே விலகியுள்ளனர்.
- இலங்கைக்கு எதிரான தொடரில் அதிரடி ஆட்டக்காரர் ஜேக்கப் அறிமுகமாகி உள்ளார்.
இலங்கை அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 தொடர்களில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டி20 தொடரும் அதன்பிறகு ஒருநாள் தொடரும் நடக்கவுள்ளது.
டி20 தொடர் வருகிற 28-ந் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 2-ந் தேதி முடிகிறது. ஒருநாள் தொடர் ஜனவரி 5-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி முடிவடைகிறது.
இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக மிட்செல் சாட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த 2 தொடர்களில் இருந்தும் வில்லியம்சன் மற்றும் கான்வே விலகியுள்ளனர்.
இந்த தொடரில் அதிரடி ஆட்டக்காரர் ஜேக்கப் அறிமுகமாகி உள்ளார். இவர் இரு தொடர்களிலும் நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளார்.
நியூசிலாந்து டி20 அணி விவரம்:-
மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபௌல்க்ஸ், மிட்ச் ஹே, மாட் ஹென்றி, பெவோன் ஜேக்கப்ஸ், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் ராபின்சன், நாதன் ஸ்மித்
நியூசிலாந்து ஒருநாள் அணி விவரம்:-
மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, மிட்ச் ஹே, மாட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, வில் யங், நாதன் ஸ்மித்.
- இலங்கை அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 தொடர்களில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது. நியமிக்கப்பட்டுள்ளார்.
- இலங்கை அணியின் கேப்டனாக சரித் அசலங்கா
இலங்கை அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 தொடர்களில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டி20 தொடரும் அதன்பிறகு ஒருநாள் தொடரும் நடக்கவுள்ளது.
இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியில் முக்கிய வீரர்களாக பார்க்கப்படும் வில்லியம்சன் மற்றும் கான்வே இந்த தொடரில் இருந்து விலகி உள்ளனர்.
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி விவரம்:
சரித் அசலங்கா (C), பாதும் நிசங்கா, அவிஷ்க பெர்னாண்டோ, நிஷான் மதுஷ்கா, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நுவனிது பெர்னாண்டோ, துனித் வெல்லலகே, வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷனா, ஜெஃப்ரி வாண்டர்சே, சமிது விக்கிரமசிங்க, அசித்த பெர்னாண்டோ, முகமது ஷிராஸ், லஹிரு குமார, எஷான் மலிங்கா
- பதும் நிசங்கா, குசல் மெண்டீஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் குவித்தது.
- ஒரு கட்டத்தில் இலங்கை அணி 17 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 144 ரன்கள் குவித்திருந்தது.
மவுண்ட் மவுங்கானுய்:
இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் டி20 போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்றது.
இதில் வென்ற இலங்கை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் ராபின்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களம் இறங்கினர். இதில் ராபின்சன் 11 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து மார்க் சாம்ப்மென் 15, க்ளென் பிலிப்ஸ் 8, மிட்செல் ஹே 0 என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் நியூசிலாந்து 65 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து டேரில் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் டேரில் மிட்செல் 62 ரன்னிலும், மைக்கேல் பிரேஸ்வெல் 59 ரன்னிலும் அவுட் ஆனார். இறுதியில் நியூசிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை தரப்பில் பினுரு பெர்னாண்டோ, மகேஷ் தீக்சனா, வனிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா, குசல் மெண்டீஸ் களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் குவித்தது. குசல் மெண்டீஸ் 46 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து வந்த குசல் பெரேரா 0, கமிந்து மெண்டீஸ் 0, அசலங்கா 3, ராஜபக்சா 8 என வெளியேறினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிசங்கா 90 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒரு கட்டத்தில் இலங்கை அணி 17 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 144 ரன்கள் குவித்திருந்தது. கடைசி 3 ஓவரில் 28 ரன்கள் மட்டுமே தேவை பட்ட நிலையில் அடுத்து 20 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் நியூசிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டும் ஜகாரி ஃபௌல்க்ஸ், மட் ஹென்றி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- 27 பந்தில் அரைசதம் கடந்தார்.
- 44 பந்தில் 13 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் அடித்தார்.
நியூசிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டில் நியூசிலாந்தில் உள்ள நெல்சனில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான பதும் நிஷாங்கா 14 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த குசால் பெரேரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்துகளை சிக்சருக்கும பவுண்டரிக்கும் பறக்கவிட்டார். இதனால் இலங்கை அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
27 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்த நிலையில், 44 பந்தில் 13 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய குசால் பெரேரா 46 பந்தில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. இலங்கை கேப்டன் சரித் அசலங்கா 26 பந்தில் 46 ரன்கள் விளாசினார்.
- இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 218 ரன்கள் குவித்தது.
- நியூசிலாந்து 20 ஓவரில் 211 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.
நியூசிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நியூசிலாந்து தொடரை கைப்பற்றியது.
இன்று 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை குசால் பெரேரா (101), சரித் அசலங்கா (46) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.
பின்னர் 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து களம் இறங்கியது.
தொடக்க வீரர்களாக டிம் ராபின்சன், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ராபின்சன் 21 பந்தில் 37 ரன்கள் விளாசினார். ரச்சின் ரவீந்திரா 39 பந்தில் 69 ரன்கள் குவித்தார். இருவரும் களத்தில் இருக்கும்போது நியூசிலாந்து வெற்றி பெறுவதுபோல் இருந்தது.
அடுத்து வந்த சாப்மேன் 9 ரன்னிலும், பிளிப்ஸ் 6 ரன்னிலும் ஆட்மிழந்தனர். ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழக்கும்போது 12.2 ஓவரில் 129 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின் நியூசிலாந்து அணியால் ரன் குவிக்க இயலவில்லை. டேரில் மிட்செல் மட்டும் 17 பந்தில் 35 ரன்கள் அடித்தார். கடைசி 2 ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரில் 14 ரன்கள் சேர்த்தது நியூசிலாந்து. இதனால் கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரிலும் 14 ரன்கள் மட்டுமே அடித்தது.
இதனால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த இலங்கை 218 ரன்கள் அடித்தும் 7 ரன்களில் ஆறுதல் வெற்றியை பெற்றது.
46 பந்தில் 101 ரன்கள் குவித்த குசால் பெரேரா ஆட்ட நாயகன் விருதை பெற்றார். நியூசிலாந்து ஜேக்கப் டஃபி தொடர் நாயகன் விருதை வென்றார்.
- இலங்கை 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.
- நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
நியூசிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையில் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த இலங்கை 218 ரன்கள் அடித்தும் 7 ரன்களில் ஆறுதல் வெற்றியை பெற்றது.
46 பந்தில் 101 ரன்கள் குவித்த குசால் பெரேரா ஆட்ட நாயகன் விருதை பெற்றார். நியூசிலாந்து ஜேக்கப் டஃபி தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் 2025-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பதிவு செய்த அணியாக இலங்கை சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டின் முதல் சதத்தை இலங்கை அணியின் குசல் பெர்ரோ பதிவு செய்துள்ளார்.
- முதலில் பேட் செய்த இலங்கை அணி 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- நியூசிலாந்தின் மேட் ஹென்றி 4 விக்கெட்டும், ஜேக்கப் டுபி, நாதன் ஸ்மித் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
வெல்லிங்டன்:
இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அவிஷ்கா பெர்னண்டோ 56 ரன் எடுத்தார்.
நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டும், ஜேக்கப் டுபி, நாதன் ஸ்மித் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா - வில் யங் களமிறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்த நிலையில் ரச்சின் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய சாப்மேன் நிதானமாக விளையாடினார். வில் யங் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தார்.
இறுதியில், நியூசிலாந்து அணி 26.2 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வில் யங் 90 ரன்னும், சாப்மேன் 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆட்ட நாயகனாக மேட் ஹென்றி தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.