என் மலர்
நீங்கள் தேடியது "OBC"
- குஜராத் மாநிலத்தில், ஓபிசி இடஒதுக்கீடு பெறும் இஸ்லாமிய சமூகத்தினரின் பட்டியல் இது.
- தேர்தல் தோல்விக்கு பயந்து, இப்போது என்னை சிறைக்கு அனுப்பப் போவதாக பிரதமர் வெளிப்படையாக மிரட்டுகிறார்.
எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை இந்தியா கூட்டணி முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடும் என்று பிரதமர் மோடி பேசிவரும் நிலையில், குஜராத் அரசும் முஸ்லிம்களுக்கு ஓபிசி இடஒதுக்கீடு கொடுத்து வருகிறது ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடிக்கு இரண்டு பக்க கடிதம் ஒன்றை தேஜஸ்வி யாதவ் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் குஜராத்தில் ஓபிசி முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு பட்டியலை இணைந்துள்ளார்.
அக்கடிதத்தில், "குஜராத் மாநிலத்தில், ஓபிசி இடஒதுக்கீடு பெறும் இஸ்லாமிய சமூகத்தினரின் பட்டியல் இது. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள தகவல், குஜராத்தில் 13 ஆண்டுகள் முதல்வராக இருந்து, தற்போது பிரதமராக இருக்கும் மோடிக்கு தெரியாதா?
தனியார் துறையில் இடஒதுக்கீடு விவகாரத்தையும் பிரதமர் புறக்கணித்துள்ளார். பீகாரில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் படி இடஒதுக்கீட்டை அதிகரிக்க பலமுறை கோரிக்கை வைத்தும் பிரதமர் அதனை நிராகரித்தார்.
அரசியலமைப்பின் 15 மற்றும் 16 வது பிரிவின் கீழ் அரசு வேலைகளில் மட்டுமே இடஒதுக்கீடு கிடைக்கும், ஆனால் பாஜக அரசு ரயில்வே, ராணுவம் மற்றும் பிற அரசு துறைகளில் இருந்து அரசு வேலைகளை நீக்கியதன் மூலம் இடஒதுக்கீடு மறைமுகமாக ரத்து செய்யப்பட்டு வருகிறது.
எருமைமாட்டை பறித்து விடுவார்கள், தாலியை பறித்துவிடுவார்கள் என்று பேசிய மோடி இப்போது முஜ்ரா நடனத்தை பற்றி பேசுகிறார். இந்த நாட்டின் பிரதமரின் மொழி இப்படித்தான் இருக்க வேண்டுமா? நீங்கள் யோசித்து முடிவு செய்யுங்கள்.
தேர்தல் தோல்விக்கு பயந்து, இப்போது என்னை சிறைக்கு அனுப்பப் போவதாக பிரதமர் பேசுகிறார். மத்திய விசாரணை அமைப்புகள் மோடியின் விருப்பப்படி செயல்படுகின்றன என்பதற்கு உங்களது பேச்சே ஆதாரமாகும்" என்று எழுதியுள்ளார்.
- ஓபிசிகளுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரசின் துரோகத்தை நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது.
- மேற்கு வங்காள ஓபிசிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் துரோகம் செய்துள்ளது.
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலம் பராசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-
ஓபிசிகளுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரசின் துரோகத்தை நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது. சமரச அரசியல் மற்றும் வாக்கு ஜிஹாத் வசதிக்காக ஓபிசி இளைஞர்களின் உரிமைகளை அந்த கட்சி பறித்து விட்டது. மேற்கு வங்காள ஓபிசிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் துரோகம் செய்துள்ளது.
துரோகத்தையும், பொய்களையும் வெளிப்படுத்துபவர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பிடிக்காது என்பதற்கு நீதிமன்ற உத்தரவை எதிர்ப்பது சிறந்த சாட்சி. நீதித்துறையை இந்த கட்சியால் எப்படி கேள்வி கேட்க முடிகிறது என்று நான் வியப்படைகிறேன். நீதித்துறை மற்றும் நம்முடைய அரசியலமைப்பு மீது அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லையா? அவர்கள் நீதிபதிகளை தாக்கும் முறை இதுவரை இல்லாததாகும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- ஓபிசி கிரீமி லேயர் வருமான உச்சவரம்பு வருடத்துக்கு ரூ.8 லட்சம் எனவும் அதிகரிகரிக்கப்பட்டுள்ளது.
- அரியானாவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அரசின் இந்த முடிவை முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கமுடிகிறது.
அரியானா மாநிலத்தில் அரசுப் பணிகளில் சேர்வதற்கான ஓபிசி இட ஒதுக்கீட்டை ஆளும் பாஜக அரசு அதிரடியாக அதிகரித்துள்ளது. குரூப் A மற்றும் குரூப் B பணிகளில் சேர்வதற்கான இடஒதுக்கீடு 15 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓபிசி கிரீமி லேயர் வருமான உச்சவரம்பு வருடத்துக்கு ரூ.8 லட்சம் எனவும் அதிகரிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஓபிசி பிரிவினரின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்த்தவர்கள் குரூப் A மற்றும் B பணிகளில் பின்தங்கியுள்ள நிலையில் அவர்களுக்கென மாநிலம் முழுவதும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்றும் அரியானா அரசு அறிவித்துள்ளது.

இந்த வருட இறுதியில் அரியானாவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அரசின் இந்த முடிவை முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கமுடிகிறது. மாநிலத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரித்து முன்னேற்றப் பணிகளில் கவனம் செலுத்தி, ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெண்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருந்துவருவதால் தாங்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்போம் என்று முதல்வர் சைனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னதாக புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டங்களில் அரியானா விவசாயிகள் அதிகளவில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- 1950-ம் ஆண்டு ஓபிசி பிரிவனருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக காகா கலேகர் கமிஷன் அமைக்கப்பட்டது.
- 1980-ல் இந்திரா காந்தி மண்டல் கமிஷன் அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டார்.
அரியானா மாநிலத்தில் இந்த வருடத்தின் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சி எப்போதுமே பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்களுக்கு எதிரானது எனக் கூறினார்.
இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-
1950-ம் ஆண்டு ஓபிசி பிரிவனருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக காகா கலேகர் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் வழங்கிய பரிந்துரைகள் பல வருடங்களாக அமல்படுத்தப்படாமல் இருந்தது.
1980-ல் இந்திரா காந்தி மண்டல் கமிஷன் அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டார். 1990-ல் மண்டல் கமிஷன் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டபோது ராஜிவ் காந்தி ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இரண்டரை மணி நேரம் பேசினார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கியது. அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் கர்நாடகாவில் நடந்தது போன்று நடந்திருந்திருக்கும்.
அரியானாவில் முஸ்லிம் இடஒதுக்கீட்டிற்கு அனுமதிக்கமாட்டோம் என்பதை உறுதியாக உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட் அமைக்கும்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
- லேட்டரல் என்ட்ரி முறையில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
- லேட்டரல் என்ட்ரி முறைக்கு ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் போன்ற முக்கிய பதவிகளை ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற யுபிஎஸ்சியில் தேர்ச்சி பெற்றவர்களையும், குரூப் ஏ சேவை அதிகாரிகள் மூலமே நிரப்பப்பட்டு வந்தன.
ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் லேட்டரல் என்ட்ரி என்ற அரசுப் பணியில் அல்லாத துறை சார்ந்த வல்லுநர்களை கொண்டு மத்திய அமைச்சகத்தின் முக்கிய பதவிகளில் நியமனம் செய்யும் முறையை பாஜக அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், லேட்டரல் என்ட்ரி முறையில் மத்திய அமைச்சகங்களில் காலியாகவுள்ள 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் / துணைச் செயலாளர்கள் பதவிகளை நிரப்புவதற்கான விளம்பரத்தை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், "லேட்டரல் என்ட்ரி என்பது தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகள் மீதான தாக்குதல் ஆகும். பாஜகவின் திரிக்கப்பட்ட ராம ராஜ்ஜியம், அரசியலமைப்பை அழிக்கவும், தாழ்த்தப்பட்டோரிடம் இருந்து இடஒதுக்கீட்டை பறிக்கவும் முயல்கிறது" என பதிவிட்டுள்ளார்.