என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Obligation"
- இந்தியா நிலவுக்கு சென்றிருக்கிறது. இன்றைக்கு சூரியனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
- பொருளாதார வளர்ச்சி, சமூக அந்தஸ்து ஆகியவற்றுக்கு அங்கீகாரம் அளிப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.
கும்பகோணம்:
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த ஒழுகச்சேரி கிராமத்தில் தமிழ் சேவா சங்கம் சார்பில் சிவகுலத்தார் பண்பாட்டு கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். முன்னதாக அவருக்கு அணைக்கரையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வரவேற்பு அளித்தார்.
அப்போது கவர்னர், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக 100-க்கும் மேற்பட்ட நாதஸ்வர, தவில் கலைஞர்களின் இன்னிசையுடன் கவர்னருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மனக்குன்னம் காமாட்சி அம்மன் உடனாகிய கைலாசநாதர் கோவில் குடமுழுக்கு விழாவில் கவர்னர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் சிதம்பரநாதபுரம் மாணிக்க நாச்சியார் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார். அப்போது கிராமமக்கள் கவர்னருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.
தொடர்ந்து, ஒழுகச்சேரியில் சோகோ நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தலைமையில் சிவகுலத்தார் பண்பாட்டு கலை நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியை கவர்னர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பாரத நாடு மன்னர்களால் உருவாக்கப்பட வில்லை. ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது.
தர்மத்தின் அடிப்படையில் கலாசாரம், அதை சார்ந்த சம்பிரதாயங்கள் ஆயிரம் இருந்தாலும் வழி ஒன்று தான்.
கன்னியாகுமரியில் இருந்து இமயமலை வரை இந்த நாடு ஒன்றுபட்ட குடும்பமாக திகழ்கிறது. இந்து தர்மத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த நாட்டில் யாரும் புறக்கணிக்கப்பட்டவர்கள் கிடையாது.
வெவ்வேறு மதம், இனமாக இருந்தாலும் அனைவரும் தர்மத்தின் அடிப்படையில் ஒன்றுபட்டவர்கள்.
இதனை பொறுத்தே இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்கு பிறகு சாலை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளில் முனைப்பு காட்டினோம்.
ஆனால் தொடர்ந்து கலாசார மறுமலர்ச்சிக்கு எந்தவித முன்னெடுப்பும் செய்யப்படவில்லை.
தற்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசால் நம் நாடு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்தியாவில் மதத்தின் பெயரில் வேறுபாடு இல்லை. அனைவரும் சமம். எந்த ஒரு தீண்டாமையும் எந்த ஒரு பாகுபாடும் கிடையாது. நாம் அனைவரும் ஒரே குடும்பம். இந்தியா நிலவுக்கு சென்றிருக்கிறது. இன்றைக்கு சூரியனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பல தரப்பட்ட முறையில் வளர்ந்து கொண்டி ருக்கும் நாட்டில் தீண்டாமை ஏற்புடைய தல்ல.
அனைவரும் ஒரே நம்பிக்கை ஒரே குடும்பமாக வாழ வேண்டியது கட்டாயம்.
அனைத்து சமுதாயத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகளை சமமாக நடத்துவதோடு மரியாதை கொடுப்பது கடமையாகும்.
அவர்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக அந்தஸ்து ஆகியவற்றுக்கு அங்கீகாரம் அளிப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கவர்னர் ஒழுகச்சேரியில் சோகோ நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது சிவராமபுரம் வாயுசித்த ராமானுஜ ஜீயர் சுவாமிகள் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பொன்னாடை அணிவித்தார்.
விழா அரங்கில் கவர்னர் முன்னிலையில் பரதநாட்டியம், சிவ குலத்தார் பண்பாட்டு கலாசார நாடகம், பறையாட்டம், நாதஸ்வரம், தவில், சிவவாத்திய கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
இதில் தமிழ் சேவா சங்க அறங்காவலர் ஞான சரவணவேல், ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
முன்னதாக தமிழ்நாடு பறையர் பேரியக்கத்தை சேர்ந்த சிவகுரு அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியை தமிழ் சேவா சங்க மாநில அமைப்பாளர் பாவேந்தன் தொகுத்து வழங்கினார்.
முடிவில் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.
- 100 வயதுடைய வாக்காளர்களிடம் வீட்டிற்கு சென்று வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.
- ஜனநாயக கடமை நிறைவேற்றுவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த குடிமக்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-
அக்டோபர் 1-ந்தேதி உலகம் முழுவதும் முதியோர் தினமா ககொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் மூத்த குடிமக்களின்பங்களிப்பை அங்கீகரிக்கவும், இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், முதியோர் தின நிகழ்வை கொண்டாட அறிவுறுத்தியது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்டோர் 17,911 வாக்காளர்கள் உள்ளனர். இந்த மூத்த குடிமக்கள் (80 வயதுக்கு மேற்பட்ட) ஜனநாயக செயல்பாட்டில் தங்களது பங்களிப்பை அளிப்பதற்காகவும் நம் நாட்டின் ஜனநாயக செயல்பா டுகளில் இடையராத பங்கேற்பதில் உள்ள ஆர்வத்தின் மூலமாகவும், நாட்டின்இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதை முன்னிட்டு, மூத்த குடிமக்களை கவுரவிக்கும், விதமாக தலைமை தேர்தல் ஆணையரின் ஆங்கிலம் மற்றும் வட்டார மொழி கடிதத்தினை மூத்த வாக்காளர்களுக்கு வழங்கி, பொன்னாடை அணிவித்து இன்று கௌரவப்படுத்தப்பட்டன.
மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து மூத்த குடிமக்கள் கௌரவிக்கும் வகையில்அ ந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் 80 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 100 வயதுடைய வாக்காளர்களிடம் வீட்டிற்கு சென்று வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது. இந்நிகழ்வின் முக்கிய நோக்கமே இளம் வாக்காளர்களை அவர்களது கடமைகளை நிறைவேற்றுவதற்கும், ஊக்கப்படுத்தவும், மூத்த குடிமக்களின் தேர்தல் பங்களிப்பினை கவுரவபடுத்திடவும், நம் தேசத்திற்கான ஜனநாயக கடமை நிறைவேற்றுவதற்காகவும், இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார். அப்போது தேர்தல் தாசில்தார் பாலகுரு, கள்ளக்குறிச்சி தாசில்தார்ச த்தியநாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் 4 சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட மூத்த குடிமக்கள் பலரும் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்