search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Occupied houses"

    • ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.
    • கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம் ஊராட்சி உள்ளது. இங்கு ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன.

    இந்த நிலங்களில் பலர் உரிய அனுமதி பெற்று வீடு கட்டி கோவிலுக்கு வரி செலுத்தி வசித்து வருகின்ற னர். 25-க்கும் மேற்பட்ட வீடுகள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ளன. இந்த நிலையில் சிலர் கோவிலுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை முறையாக செலுத்தாமலும், கோவில் நிலத்தில் உரிய அனுமதி யின்றியும் கட்டிடம் கட்டி வசித்து வந்ததாக கூறப்படு கிறது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகத்துக்கு தெரியவந்த நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதியின்றி வசித்து வருபவர்கள் தங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் படியும், வரி செலுத்தாத வர்கள் வரி பாக்கியை செலுத்துமாறும் பலமுறை நோட்டீஸ் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதில் தீர்வு ஏற்படாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் இது குறித்து நீதிமன்றம் மூலமாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் அனுமதியின்றி கட்டிடம் கட்டி வசித்து வந்த வீடுகளை, இடித்து அப்புப்புறப்படுத்தும்படி நிலம் மீட்பு தீர்ப்பாணையம் உத்தரவிட்டது.

    இதையடுத்து கோவில் அதிகாரிகள் அனுமதியின்றி கட்டப்பட்ட வீட்டு உரிமையாளர்களிடம் வீட்டை காலி செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.

    இதையடுத்து நேற்று மாலை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனுமதியின்றி கட்டப்பட்ட2 வீடுகளை இடித்து அகற்றுவ தற்காக போலீசாருடன் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த வர்களை வெளியே செல்லும்படி கேட்டுக் கொண்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு வீட்டை காலி செய்வதற்கு மேலும் சில நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டு மென கோரிக்கை வைத்த னர். அதற்கு அதிகாரிகள் கடந்த 2010-ம் ஆண்டே இது குறித்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தீர்ப்பு வழங்கப்பட்ட தாகவும் இனி அவகாசம் தர முடியாது எனவும் தெரி வித்தனர். மேலும் அந்த வீடுகளில் வசித்தவர்கள் கோவில் நிர்வாகத்தை அணுகி உரிய அனுமதி பெற்று மீண்டும் அதே இடத்தில் வீடு கட்டி வசிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

    இதையடுத்து 2 வீடுகளில் வசித்தவர்கள் போலீசார் பாதுகாப்புடன் வெளி யேற்றப்பட்டு அந்த வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப் பட்டன.

    • ஏரி கால்வாய்களில் கட்டியிருந்ததால் நடவடிக்கை
    • அதிகாரிகள் ஆய்வு

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரி அருகே ஏரி கால்வாய் செல்கிறது. இதனை ஆக்கிரமித்து 48 வீடுகள் கட்டப்பட்டதால், அங்கு வெளியேறும் தண்ணீர் மருத்துவமனை மற்றும் சாலைகளில் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது.

    இதனை அகற்றக் கூறி பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் இன்று காலை 7 மணி முதல் ஆக்கிரமிப்புக்கள் அகற்றும் பணியில் வருவாய்த்துறை மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து அகற்றப்பட்டு வரும் வீடுகளில் ஒரு சிலர் தாங்களே அகற்றி கொள்வதாக கூறியதால், அந்த கட்டிடங்களை மட்டும் இடிக்காமல் மற்றவையை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்‌.

    போலீஸ் பாதுகாப்பு

    சம்பவ இடத்தில் வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வாணியம்பாடி தாசில்தார் சம்பத், நகராட்சி ஆணையாளர் மாரிசெல்வி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

    • அரசுக்கு செலுத்த வேண்டிய பங்களிப்புத்தொகைக்கு கடன் உதவி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
    • மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், வீடுகள் இடிக்கும் பணி 2 நாட்களில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் சாயப்பட்டறை வீதி நீர்நிலை புறம்போக்கில் பொதுமக்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு வீடுகளை காலி செய்யச்சொல்லி, நோட்டீஸ் வழங்கினர். இதையடுத்து பொதுமக்கள் வீடுகளை காலி செய்ய போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது. நெருப்பெரிச்சல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டது. மேலும் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய குலுக்கல் முறை நடந்தது. அரசுக்கு செலுத்த வேண்டிய பங்களிப்புத்தொகைக்கு கடன் உதவி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு உரிய தகவல் அளிக்காததால் தொகை செலுத்துவதில் குழப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக இன்று அதிகாரிகளுடன் அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், வீடுகள் இடிக்கும் பணி 2 நாட்களில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×