search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "oil waste"

    • கொசஸ்தலை ஆறு மற்றும் அடையாத்தி காடுகளில் உள்ள ஏராளமான பறவைகளும் பாதிக்கப்பட்டன.
    • உடல் முழுவதும் பாதிக்கப்பட்ட 6 கூழைக் கடா பறவைகள் மீட்கப்பட்டு கிண்டி பூங்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    திருவொற்றியூர்:

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையின் போது கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது மணலியில் உள்ள தனியார் ஆயில் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய எண்ணெய்கழிவு பக்கிங்காம் கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆற்றில் கலந்து முகத்துவாரத்தில் கடலில் பரவியது. மேலும் வெள்ளத்தின் போது வீடுகளிலும் படிந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    இந்த எண்ணெய்கழிவால் கொசஸ்தலை ஆறு மற்றும் அடையாத்தி காடுகளில் உள்ள ஏராளமான பறவைகளும் பாதிக்கப்பட்டன. அதன் இறக்கைகளில் எண்ணெய் படர்ந்து பறக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

    அதனை வனத்துறையி னர் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் மீட்டு சிகிச்சை அளித்தனர். பறவைகளின் இறக்கைகளில் இருந்த எண்ணெய்கள் 'பிரஷ்' மூலம் அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்டன.

    இதற்கிடையில் எண்ணெய் கழிவால் உடல் முழுவதும் பாதிக்கப்பட்ட 6 கூழைக் கடா பறவைகள் மீட்கப்பட்டு கிண்டி பூங்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது முழுவதும் நல்ல நிலையில் உள்ள அந்த பறவைகள் காட்டு பகுதியில் விடுவிக்கப்பட்டு உள்ளது.

    எண்ணூர் கடல் பகுதி மற்றும் முகத்துவார பகுதிகளில் எண்ணெய்கழிவின் பாதிப்பு தற்போது குறைந்து இருந்தாலும் மேலும் பல பறவைகள் பாதிக்கப்பட்டு காட்டுப்ப குதி மற்றும் நீர்நிலையில் இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதையடுத்து கொசஸ் தலை ஆற்று பகுதியில் மேலும் ஒரு வாரத்திற்கு கண்காணிப்பு மற்றும் பறவைகள் மீட்பு பணிகள் நடைபெறும் என்று மீட்பு குழுவினர் தெரிவித்து உள்ளனர். இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் கூறும்போது, சுமார் 20-க்கும் மேற்பட்ட கூழைக்கடா பறவைகள் எண்ணெய்கழி வில் கடுமையாக பாதிக்கப்பட்டன. அவை மீட்கப்பட்டு விடுவிக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளன. கடந்த வாரத்தில் எங்கள் குழுவினர் பாதிக்கப்பட்ட 11 பறவைகளை நேப்பியர் பாலம் மற்றும் அடையாறு ஆற்று ஓரத்தில் கண்டனர்.

    இதன் பின்னர் பாதிக்கப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. எனினும் பறவைகள் கண்காணிப்பு மேலும் ஒரு வாரத்திற்கு இருக்கும் என்றார்.

    • மண் பரிசோதனை செய்து நச்சுத்தன்மையை கணக்கிட வேண்டும்.
    • பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் உதவிகளுக்கு சுற்றுச்சூழல் அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

    எண்ணெய் கழிவு கலந்த பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க சில பரிசோதனைகளை மேற்கொள்வது முக்கியமானதாகும். எண்ணெய் படிந்த பகுதி மற்றும் எண்ணெய்யால் பாதிக்கப்பட்ட தாவரங்களை எடுத்து பரிசோதிக்க வேண்டும். மேலும் எண்ணெய் ஓடிய பகுதியில் மண் பரிசோதனை செய்து நச்சுத்தன்மையை கணக்கிட வேண்டும்.

    நிலத்தின் உள்பகுதியில் நீண்ட தூரம் எண்ணெய் ஊடுருவி இருக்கலாம் என கருதினால் நிலத்தடி நீர் சோதனையும் மேற்கொள்ள வேண்டும். இது போன்ற பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம் எண்ணெய் கசிவின் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

    இது தவிர பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் உதவிகளுக்கு சுற்றுச்சூழல் அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

    • எண்ணெய் கழிவுகள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் முகத்துவார பகுதியில் வசித்து வந்த பறவைகளையும் முடக்கி போட்டுள்ளது.
    • எண்ணெய் பிசுபிசுப்புடன் கருமை நிறத்தில் காணப்படும் பறவைகளால் உயரமாக பறக்க முடிவதில்லை.

    சென்னை:

    சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் புயல் வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகள் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக எண்ணூர் முகத்துவார பகுதிகளில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எண்ணெய் கழிவுகள் தேங்கி மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக முடக்கி போட்டுள்ளன.

    கடந்த 10-ந் தேதி முதல் எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பகுதிகளில் தேங்கியுள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த இந்த பணிகள் முடிவுக்கு வந்து உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    தமிழக அரசின் சுற்றுச் சூழல் துணை செயலாளர் சுப்ரியா சாகு, எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் தேங்கிய பகுதிகளை நேற்று பார்வையிட்டார். பின்னர் ரெட்டுக்குப்பம் பகுதியில் நடை பெற்ற ஆய்வுக் கூட் டத்திலும் அவர் கலந்து கொண்டார்.

    பின்னர் சுப்ரியா சாகு இதை தொடர்ந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் எண்ணூர் எண்ணெய் கழிவுகள் அகற்றும் பணி நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்து உள்ளார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

    எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் 4 பகுதிகளாக பிரித்து மேற்கொள்ளப்பட்டன. இந்த பணியை உள்ளூர் மீனவ மக்களின் துணையுடன் சுமார் 900 பேர் மேற்கொண்டனர். தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையிலான மாநில குழுவினர் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்றது.

    128 படகுகள், 7 ஜே.சி.பி., 2 டிராக்டர்கள், 8 கல்லி சக்கர்ஸ், 6 பொக்லைன்கள், 3 ஹைட்ராக்ரான்கள், 4 பிக்கப் டிரக்குகள், 8 ஆயில் பூமர்கள், 6 ஆயில் ஸ்கிம்மர்கள் மற்றும் 15 டிப்பர்கள் இந்த பணியில் பயன்படுத்தப்பட்டன. மொத்தமாக 105.82 கிலோ லிட்டர் எண்ணெய் படர்ந்த நீர் மற்றும் 393.5 டன் எண்ணெய் கசடு அகற்றப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    இப்படி எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டிருப்பதாக சுற்றுச் சூழல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அப்பகுதி மீனவர்கள் தாங்கள் பயன்படுத்தும் முகத்துவார பகுதிகளில் சிறிய அளவில் தேங்கி காணப்படும் எண்ணெய் கழிவுகளை தொடர்ந்து தாங்களாகவே அகற்றி வருகிறார்கள்.

    எண்ணெய் கழிவுகள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் முகத்துவார பகுதியில் வசித்து வந்த பறவைகளையும் முடக்கி போட்டுள்ளது. எண்ணூர் முகத்துவார பகுதியில் வெள்ளை நிறத்தில் காணப்படும் பெலிக்கான் பறவைகள் ஏராளமாக காணப்படும். இவைகள் தவிர மேலும் பல்வேறு வகையான பறவை இனங்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

    எண்ணூர் முகத்துவார பகுதியில் உள்ள அவை யாத்தி காடுகள் மற்றும் பறவையினங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வனத்துறையினரும், பறவைகள் நல ஆர்வலர்களும் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த ஆய்வின் போது அவர்கள் கண்ட காட்சிகள் பரிதாபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. வெள்ளை வெளேர் என காட்சி அளிக்கும் பெலிக் கான் பறவைகள் உள்பட பல்வேறு பறவை இனங்கள் தங்களது தோற்றத்தை இழந்து எண்ணெய் தோய்ந்த உடலுடன் பொலிவிழந்து காணப்பட்டன.

    இதே போன்று 50-க்கும் மேற்பட்ட பறவைகளை வனத்துறையினரும், சுற்றுச்சூழல் துறையினரும் கண்டறிந்து உள்ளனர்.

    பறவைகளின் உடலில் ஒட்டியுள்ள எண்ணெய் கழிவுகள் 2 வாரங்களுக்கு மேலாகிவிட்டதால் உடலோடு உடலாக ஒட்டி காணப்படுகிறது. இப்படி எண்ணெய் பிசுபிசுப்புடன் கருமை நிறத்தில் காணப்படும் பறவைகளால் உயரமாக பறக்க முடிவதில்லை. தாழ்வாகவே பறந்து செல்கின்றன.

    எண்ணூர் முகத்துவார பகுதியில் தேங்கிய எண்ணெய் கழிவுகளால் ஏராளமான மீனவர்களும், கடல் வாழ் உயிரினங்களும் செத்து மடிந்தன.

    இப்படி விஷமாகிப் போன மீன்களை ஏதும் அறியாத பறவை இனங்கள் சாப்பிட்டுள்ளன. பின்னர் அந்த மீன் உணவுகள் ஒத்துப் போகாமல் பறவைகள் வாந்தியும் எடுத்துள்ளன. இந்த காட்சிகளையும் வனத் துறையினர் நேரில் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    எண்ணெய் கழிவுகளால் உடலில் ஏற்பட்ட பாதிப்பு, விஷமாகிப் போன மீன்களால் உடல்நிலை பாதிப்பு என பறவை இனங்கள் உயிருக்கு போராடும் நிலையில் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே அவை யாத்தி காடுகளில் தேங்கி உள்ள எண்ணெய் கழிவுகளையும் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பணிகளை அதிகாரிகள் இன்று தொடங்கியுள்ளனர்.

    • எண்ணூர் கடலில் எண்ணெய் கழிவு கலந்து கடும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேலை வாய்ப்பு மற்றும் நிவாரண உதவி வழங்க வேண்டும்

    பொன்னேரி:

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எண்ணூர் கடலில் எண்ணெய் கழிவு கலந்து கடும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதற்கிடையே இந்த எண்ணெய் கழிவு பழவேற்காடு வைரவன் குப்பம் கடற்கரை பகுதிக்கும் பரவியதால் மீன்கள் செத்து கரை ஒதுங்கின. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. தாசில்தார் மதிவாணன். மீன்வளத்துறை அதிகாரி கங்காதரன், சுற்றுச்சூழல் அதிகாரி லிவிங்ஸ்டன் ஆகியோர் நேரில் பழவேற்காடு கடற்கரை மற்றும் ஏரிகளில் படர்ந்துள்ள எண்ணெய் படலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் கடல் நீரை சேகரித்து பரிசோதனைக்கும் அனுப்பி உள்ளனர்.

    ஏற்கனவே மிச்சாங் புயல் காரணமாக கடலுக்குள் செல்லாமல் இருந்த மீனவர்கள் தற்போது கடலில் எண்ணெய் கழிவு கலப்பால் 20நாட்களாக வாழ்வாதாரம் பாதித்து தவித்து வருகிறார்கள். இந்தநிலையில் பழவேற்காடு லைட் ஹவுஸ் ஊராட்சி, கோட்டைக்குப்பம் ஊராட்சி, தாங்கல் பெரும்புலம் ஊராட்சி அவுரிவாக்கம் ஊராட்சி, பழவேற்காடு ஊராட்சி ஆகிய ஊராட்சி மீனவர் கிராமங்களின் கூட்டமைப்பு சார்பில் 33 கிராம மீனவர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதைத்தொடர்ந்து 33 மீனவ கிராம பிரதிநிதிகள் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கரிடம் நிவாரண உதவி கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில், பழவேற்காடு கடலில் கலந்துள்ள எண்ணெய் கழிவினால் மீன்கள், இறால்கள் நண்டுகள் உற்பத்தி வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேலை வாய்ப்பு மற்றும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

    • கடல் சிப்பிகளை சேகரிக்க சென்ற பெண்கள் தார் உருண்டைகள் கரை ஒதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
    • தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த இடங்களில் தண்ணீரை சோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர்.

    சென்னை:

    மிச்சாங் புயல் மழையின் போது எண்ணெய் கழிவுகள் கொசஸ்தலை ஆற்று நீரிலும், மழை வெள்ளத்திலும் கலந்ததால் எண்ணூர், மணலி திருவொற்றியூர் பகுதிகளை சேர்ந்த மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணெய் கழிவுகள் எண்ணூரில் இருந்து 26 கி.மீ.தொலைவில் உள்ள பறவைகள் சரணாலயமான பழவேற்காடு ஏரியிலும் பரவியுள்ளன.

    இதனால் பழவேற்காடு ஏரி அருகே உள்ள பல கடற்கரை கிராமங்களில் கடந்த 2 நாட்களாக தார் உருண்டைகள் கரை ஒதுங்கி வருகின்றன. கடற்கரை பகுதியில் கடல் சிப்பிகளை சேகரிக்க சென்ற பெண்கள் தார் உருண்டைகள் கரை ஒதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பழவேற்காடு அருகேயுள்ள கோரைக் குப்பம், வைரவன் குப்பம், அரங்கக் குப்பம், கூனங் குப்பம், பழைய சாத்தங்குப்பம் மற்றும் பழவேற்காடு மீன் மார்க்கெட் பகுதிகளிலும் தார் உருண்டைகள் காணப்படுகின்றன. இந்த தார் உருண்டைகள் அதிக அளவில் உள்ளன. மேலும் பழவேற்காடு ஏரிப்பகுதியிலும் சில இடங்களில் எண்ணெய் கழிவுகள் மிதந்துள்ளன.

    இதையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த இடங்களில் தண்ணீரை சோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர். மேலும் தார் உருண்டைகளையும் சோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் முடிவு இன்று வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படு கிறது. மேலும் அதிகாரிகளும் இந்த பகுதிகளை பார்வையிட்டு வருகிறார்கள்.

    மேலும் பழவேற்காடு ஏரியில் உள்ள பறவைகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பே வடக்கே சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு சென்றுவிட்டன. மேலும் இந்த பகுதியில் சுமார் 2500-க்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதந்துள்ளன.

    இதுகுறித்து மீனவர் சங்கத்தினர் கூறுகையில், 'பழவேற்காடு ஏரிக்கு நீர் வருவதை கண்காணித்து எண்ணெய் பரவாமல் தடுக்க வேண்டும். கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வரத்து குறைந்து ஏரி தூர்ந்து வருகிறது. எனவே ஏரியை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

    • மழைநீருடன் கச்சா எண்ணை கழிவுகளும் கலந்ததால் முகத்துவார பகுதியில் மீன்கள் செத்து மிதந்தன.
    • காசிமேடு மீன்பிடி துறைமுகம் வரை கடலில் சுமார் 20 கிலோ மீட்டர் வரை எண்ணை கசிவு படர்ந்துள்ளது.

    திருவொற்றியூர்:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அனைத்து இடங்களும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. கனமழையின் காரணமாக புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் எண்ணூர் முகத்துவாரத்தில் கலந்தது. அப்போது மழைநீருடன் கச்சா எண்ணை கழிவுகளும் கலந்ததால் முகத்துவார பகுதியில் மீன்கள் செத்து மிதந்தன. மேலும் எண்ணை படலங்கள் அருகில் உள்ள குடியிருப்புகளிலும் படர்ந்து இருந்தது. இதேபோல் எண்ணூர் முகத்துவார பகுதியிலும் அதிக அளவு எண்ணை கழிவுகள் கடலில் கலந்து படர்ந்து உள்ளன. இதனால் கடல் நீர் மாசுபடுவதோடு சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதோடு கச்சா எண்ணை படலம் தொடர்பாக உண்மை நிலையை கண்டறிய 9 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கொசஸ்தலை ஆற்று முகத்துவாரத்தில் இருந்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் வரை கடலில் சுமார் 20 கிலோ மீட்டர் வரை எண்ணை கசிவு படர்ந்துள்ளது.

    இந்த பகுதி மீன்பிடி தொழில் அதிக அளவில் நடைபெறும் என்பதால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து கடலில் பரவி உள்ள எண்ணை கழிவுகள் மேலும் பரவுவதை தடுக்க கடலோர காவல் படை ஹெலிகாப்டர் மூலம் ஆயில் ஸ்லிட் டிசால்வன்ட் (ஓ.எஸ்.டி) என்னும் எண்ணெய் கரைப்பானை கடலில் தெளித்தனர்.


    இதுதொடர்பாக கடலோர காவல்படை சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில், மிச்சாங் புயலுக்கு பின் ஏற்பட்ட வெள்ளத்தில் எண்ணெய் கசிவு கலந்தது குறித்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து வருகிறது. கொசஸ்தலை ஆற்று முகத்துவாரத்தில் இருந்து காசிமேடு துறைமுகம் வரை சுமார் 20 கி.மீட்டர்வரை எண்ணெய் கசிவு படர்ந்து உள்ளது. இந்த கழிவுகள் மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் ஆயில் ஸ்லிட் டிசால்வன்ட் எனும் எண்ணெய் கரைப்பான் நேற்று தெளிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே இன்று பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ள 9 பேர் கொண்ட குழுவினர் எண்ணூரில் எண்ணை படர்ந்துள்ள பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×