search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Olympic Games"

    • பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.
    • வீரர்கள் அணிவகுப்பு அலங்கரிக்கப்பட்ட படகில் நடக்கிறது.

    பிரான்ஸ்:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2021-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கி யோவில் ஒலிம்பிக் போட்டி நடந்தது.

    33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 11-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடக்கிறது.

    இந்தப் போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 32 விளையாட்டுகள் 46 பந்தயங்களில் நடக்கிறது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், குத்துச் சண்டை, குதிரையேற்றம், ஆக்கி, கோல்ப், ஜூடோ, துடுப்பு படகு, பாய்மர படகு, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய 16 விளையாட்டுகளில் 70 வீரர்களும், 47 வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள்.

    ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா கோலாகல மாக நடக்கிறது. இதற்காக பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தொடக்க விழா பாரீசின் புகழ் பெற்ற சென் நதி கரையில் நடத்தப்படுகிறது. வீரர்கள் அணிவகுப்பு அலங்கரிக்கப்பட்ட படகில் நடக்கிறது.

    படகு அணிவகுப்பு சென் நதியில் ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் தொடங்கி 6 கிலோமீட்டர் தூரம் சென்று பான்ட் டி லெனா பாலத்தில் நிறைவடைகிறது. வீரர்கள் தங்களது பாரம்பரிய உடையில் தேசிய கொடியுடன் படகில் அணிவகுத்து நிற்பார்கள்.

    இந்திய அணிக்கு டேபிள் டென்னிஸ் வீரர் தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இருவரும் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்கள்.

    இறுதியில் உலக அதிசயமான ஈபிள் கோபுரத்தின் எதிரில் உள்ள டிரோ கேட்ரோ பகுதியில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படுகிறது. பின்னர் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஒலிம்பிக் தொடக்க விழா 3 மணி நேரம் நடைபெறுகிறது.

    இதில் 3 லட்சம் ரசிகர்கள் கலந்து கொள்கிறார்கள். ஒலிம்பிக் போட்டியையொட்டி பாரீசில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தொடக்க விழா இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு தொடங்குகிறது.

    • ஒலிம்பிக்போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.
    • 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்படுகிறது.

    பாரீஸ்:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.

    கி.மு.776-ம் ஆண்டு முதலாவது ஒலிம்பிக் போட்டி கிரேக்க நாட்டில் உள்ள ஒலிம்பியா நகரில் நடந்தது. பின்னர் கிரேக்க மன்னர் தியோடோசியஸ் இநத ஒலிம்பிக் போட்டிக்கு தடை விதித்தார்.

    நவீன ஒலிம்பிக் போட்டி 1896-ம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டது. கிரீஸ் தலைநகர் ஏதென்சில் முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டி நடந்தது. அதில் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோடை கால ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    முதல் உலகப்போர் காரணமாக 1916-ம் ஆண்டும், 2-வது உலகப் போர் காரணமாக 1940 மற்றும் 1944-ம் ஆண்டும் ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை.

    கடைசியாக 2021-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடந்தது. 2020-ம் ஆண்டு நடைபெற இருந்த போட்டி கொரோனா தொற்று காரணமாக ஒரு ஆண்டு தள்ளி வைக்கப் பட்டது. கொரோனா பாதிப்பால் ரசிகர்கள் யாருமே அனுமதிக்கப்படாமல் இந்த போட்டி நடத்தப்பட்டது.

    இந்த ஆண்டுக்கான 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்படுகிறது. இந்த ஒலிம்பிக் திருவிழா நாளை (26-ந் தேதி) கோலாகலமாக தொடங்கு கிறது. ஆகஸ்ட் 11-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடக்கிறது. 3-வது முறை யாக பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதற்கு முன்பு 1900, 1924 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றது.

    இந்தப் போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். முதல் முறையில் வீரர்கள், வீராங் கனைகள் சம அளவில் கலந்து கொள்கிறார்கள். 32 விளையாட்டில் 46 பந்தயத்தில் 324 வகை பிரிவில் போட்டி நடைபெறுகிறது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா சீனா இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா 592 பேரையும், சீனா 388 பேரையும் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பி வைத்துள்ளது. ஜப்பான், இங்கிலாந்து, தென் கொரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள். பதக்கங்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    100 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதால் பிரான்ஸ் இந்த முறை அதிகமான பதக்கங்களை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் ஆக மொத்தம் 113 பதக்கத்தை குவித்து முதல் இடத்தை பிடித்தது. சீனா 38 தங்கம், 32 வெள்ளி, 19 வெண்கலம் ஆக மொத்தம் 89 பதக்கத்துடன் 2-வது இடத்தையும், ஜப்பான் 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் மொத்தம் 58 பதக்கத்துடன் 3-வது இடத்தையும் பிடித்தன.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், ஆக்கி, கோல்ப், ஜூடோ, துடுப்பு படகு, பாய்மர படகு, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய 16 விளையாட்டுகளில் 70 வீரர்களும், 47 வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள்.

    இதில் தடகளம் (நீரஜ் சோப்ரா) , பேட்மின்டன் (பி.வி. சிந்து, சாத்விக்-சிராக் ஜோடி) , பளு தூக்குதல் (மீராபாய், சானு), குத்துச்சண்டை (லவ்லினா), ஆக்கி, துப்பாக்கி சுடுதல் ஆகிய விளையாட்டுக்களில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்க மும், மீரா பாய் சானு (பளு தூக்குதல்) ரவி குமார் தகியா (மல்யுத்தம்), பி.வி.சிந்து, லவ்லினா, பஜ்ரங் புனியா மற்றும் இந்திய ஆக்கி அணியினர் வெண்கல பதக்கம் வென்றனர். இந்தப் போட்டியில் தான் இந்தியா அதிகபட்சமாக 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 7 பதக்கம் பெற்றது. பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இரட்டை இலக்க பதக்க ஆர்வத்துடன் இருக்கிறது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் குறிக்கோள் "எல்லோருக்கும் வாய்ப்பு" என்பதாகும்.

    • ஒலிம்பிக் போட்டி பாரீசில் வருகிற 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது.
    • 117 இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலை நகர் பாரீசில் வருகிற 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த போட்டியில் 117 இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் 30 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தொடக்க விழாவில் 45 ஆயிரம் பேர் வரை பாதுகாப்புக்கு அமர்த்தப்படுவார்கள்.

    மேலும் 18 ஆயிரம் ராணுவ வீரர்களும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்கள்.

    இதற்கிடையே ஒலிம்பிக் போட்டி பாதுகாப்பு பணிக்காக இந்திய மோப்ப நாய்கள் பாரீஸ் சென்று உள்ளன.

    10 சிறப்பு பயிற்சி பெற்ற சிறப்பு கமெண்டர்கள் சி.ஆர்.பி.எப்.பின் மோப்ப நாய்களுடன் அங்கு சென் றுள்ளனர். இந்த மோப்ப நாய்கள் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் பல்வேறு மைதானத்தில் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்படும்.

    இந்தியா-பிரான்ஸ் இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த மோப்ப நாய்கள் பெல்ஜியம் மாலினோஸ் இனத்தை சேர்ந்தவையாகும். சந்தேகத்துக்குரிய மனிதனின் இருப்பிடம், குண்டுகளை துல்லியமாக கண்டறிதல் போன்றவற்றில் இந்த வகை நாய்கள் மிகவும் சிறப்பாக செயல்படும்.

    • பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம் பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் நேற்று ஏற்றப்பட்டது.
    • வழக்கமாக சூரியஒளியை குவிலென்சின் மையத்தில் விழச் செய்து, அதில் இருந்து உருவாகும் வெப்பத்தில் இருந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படும்.

    ஏதென்ஸ்:

    33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடக்கிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இதில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    போட்டிக்கான 'கவுண்டவுன்' தொடங்குவதை குறிக்கும் வகையில் ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படுவது நெடுங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஒலிம்பியாவில் நேற்று நடந்தது.

    வழக்கமாக சூரியஒளியை குவிலென்சின் மையத்தில் விழச் செய்து, அதில் இருந்து உருவாகும் வெப்பத்தில் இருந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படும். ஆனால் நேற்று ஒலிம்பியாவில் மேகமூட்டமான சீதோஷ்ண நிலை நிலவியதால் சூரியஒளியை பார்க்க முடியவில்லை. வானிலை மாற்றம் குறித்து முன்கூட்டியே கணிக்கப்பட்டு இருந்ததால் அதற்குஏற்ப மாற்று ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.

    இதன்படி கிரேக்கத்தின் பாரம்பரிய உடையணிந்த நடிகை மேரி மினா சூரிய கடவுளை நோக்கி வணங்கி விட்டு அங்கு சிறிய பானையில் எரிந்து கொண்டிருந்த ஜூவாலையில் தீபத்தை ஏற்றினார். சிறிது நேரத்தில் மேகக்கூட்டம் கலைந்து சூரிய ஒளியும் பளிச்சிட்டது.

    அதன் பிறகு ஒலிம்பிக் சாம்பியனான கிரீஸ் துடுப்பு படகு வீரர் ஸ்டீபனோஸ் நிடோஸ்கோஸ் முதல் நபராகவும், அதைத் தொடர்ந்து பிரான்ஸ் நீச்சல் வீராங்கனை லாரே மனவ்டோவும் சிறிது தூரம் தீபத்தை தொடர் ஓட்டமாக எடுத்துச் சென்றனர். கிரீஸ் நாடு முழுவதும் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் தீபம் பயணிக்கிறது. அது முடிந்து வருகிற 26-ந்தேதி பாரீஸ் ஒலிம்பிக் கமிட்டியிடம் தீபம் ஒப்படைக்கப்படுகிறது. 

    பின்னர் ஒலிம்பிக் தீபம் பிரான்சுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு 400 நகரங்களில் தொடர் ஓட்டம் நடைபெறுகிறது. இங்கு ஏறக்குறைய 10 ஆயிரம் பேரின் கைகளில் தீபம் தவழ இருக்கிறது. இறுதியில் தொடக்க விழா நடைபெறும் பாரீசுக்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள மெகா கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டதும் போட்டி தொடங்கும்.

    ஒலிம்பிக் தீபம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேச் பேசுகையில், 'ஒலிம்பிக் மட்டுமே ஒட்டுமொத்த உலகத்தையும் இந்த அமைதியான போட்டியில் ஒன்றிைணக்கிறது. வீரர், வீராங்கனைகள் முடிந்த அளவுக்கு கடும் சவாலுடன் மோதிக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் நாம் அனைவரும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் ஒரே குடைக்குள் வாழ்கிறோம் என்பதையும் உணர்த்துகிறார்கள்' என்றார்.

    மேலும் அவர், 'இது ஒரு கடினமான காலக்கட்டம். அதிகரித்து வரும் போர், மோதல்கள் மற்றும் நாள்தோறும் எதிர்கொள்ளும் வெறுப்பு, எதிர்மறை செய்திகளால் மக்கள் சலிப்படைந்துள்ளனர். நம்மை ஏதாவது ஒன்று ஒன்றிணைத்து விடாதா என்று ஏங்குகிறோம். இன்று ஏற்றப்பட்டுள்ள ஒலிம்பிக் சுடர் அந்த நம்பிக்கையின் சின்னமாக தெரிகிறது' என்றும் குறிப்பிட்டார்.

    • இரட்டையர் டென்னிஸ் விளையாட்டில் பல உயரங்களை தொட்டவர், சானியா
    • 2010ல் சானியா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை மணம் முடித்தார்

    மும்பையில் பிறந்து ஐதராபாத்தில் வளர்ந்து, இந்திய பெண்கள் டென்னிஸ் விளையாட்டில் ஒலிம்பிக்ஸ் உள்ளிட்ட பல போட்டிகளில் பல சாதனைகள் புரிந்தவர், சானியா மிர்சா (Sania Mirza).

    குறிப்பாக, இரட்டையர் டென்னிஸ் ஆட்டத்தில் பல உயரங்களை தொட்டவர், சானியா.

    தனது 6-வது வயதில் டென்னிஸ் விளையாட தொடங்கிய சானியா, 17 வயதிலிருந்து தொழில்முறை டென்னிஸ் வீராங்கனையாக மாறினார்.

    2010ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.


    ஆனால், 2022 ஆண்டில் இருந்தே சானியா-சோயிப் ஜோடிக்குள் கருத்து வேற்றுமை நிலவுவதாகவும், இருவரும் பிரிய உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளிவந்தன.

    2023ல் சோயிப் மாலிக், "ஒரு சூப்பர் பெண்மணிக்கு கணவன்" என மனைவியை குறித்து அதுநாள் வரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த பகுதியை நீக்கினார்.

    இந்நிலையில், தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் சமூக வலைதள கணக்கில் சானியா மிர்சா கவிதை வடிவில் சில மறைமுக கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

    அப்பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    திருமணம் கடினமானது.

    விவாகரத்து கடினமானது.

    உங்களுக்கு எந்த "கடினம்" விருப்பமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

    இவ்வாறு சானியா பதிவிட்டுள்ளார்.

    மேலும் அந்த நீண்ட பதிவில், எடை குறைப்பு, சிக்கனமாக வாழ்தல், பிறருடன் உரையாடுவது உள்ளிட்ட விஷயங்களை குறித்தும் இதே போல் பதிவிட்டுள்ள சானியா, இறுதியாக, "வாழ்க்கை சுலபமாக இருக்கவே இருக்காது. எப்போதுமே கடினமாகத்தான் இருக்கும். ஆனால், நாம் நமக்கு எந்த "கடினம்" விருப்பமோ அதனை தேர்வு செய்ய முடியும். அதை அறிவுபூர்வமாக தேர்வு செய்யுங்கள்" என முடித்துள்ளார்.

    கணவர் சோயிப் மாலிக் உடனான பல புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து நீக்கி விட்டது குறிப்பிடத்தக்கது.

    ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்திய வீராங்கனை மனு பாகர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
    ரஷியாவில் உள்ள முனிச்சில் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் போட்டி நடைபெற்றது.

    இதில் இந்திய வீராங்கனை மனு பாகர் நான்காவது இடத்தை பிடித்தார். இதன்மூலம் அடுத்த வருடம் ஜப்பானில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    இவருடன் தற்போது 7 முறை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
    கபடி ஆட்டம் விரைவில் ஒலிம்பிக் போட்டியில் இடம் பெறும் என்று மத்திய விளையாட்டு துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #RajyavardhanSingh
    புதுடெல்லி:

    டெல்லி மேல்-சபையில் நேற்று மத்திய விளையாட்டு துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரத்தோர் பேசுகையில், ‘பலம், திறமை, வேகம், சிந்திக்கும் ஆற்றல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படக்கூடிய கபடி ஆட்டம் தற்போது 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் விளையாடப்பட்டு வருகிறது. மிகவும் குறைந்த விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தும் இந்த போட்டியை நிச்சயம் உலகம் ஏற்றுக்கொள்ளும். இறுதியாக கபடி ஆட்டம் விரைவில் ஒலிம்பிக் போட்டியில் இடம் பெறும் என்று நம்புகிறேன். மாநில விளையாட்டு சங்கங்கள் அனைத்தும் தேசிய விளையாட்டு கொள்கையை ஏற்று அதன்படி வெளிப்படையாக தேர்தல் மற்றும் நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார். #RajyavardhanSingh
    ×