என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Online Order"
- டெலிவரி பாய் செப். 23-ந்தேதி கஜனனுக்கு ஐபோனை டெலிவரி செய்யச் சென்றார்.
- அவரது உடலை ஒரு சாக்கு பையில் வைத்து இந்திரா கால்வாயில் வீசி உள்ளனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த டெலிவரி மேன் (35) ஒருவர் ஐபோனை டெலிவரி செய்யச் சென்றபோது இருவரால் கொல்லப்பட்டார். ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஐபோனுக்காக அவரை கொலை செய்த அவர்கள், இந்திரா கால்வாயில் அவரது உடலை வீசி உள்ளனர்.
இது சம்பவம் தொடர்பாக துணை போலீஸ் கமிஷனர் ஷஷாங்க் சிங் கூறுகையில்,
சின்ஹாட்டைச் சேர்ந்த கஜனன், பிளிப்கார்ட்டில் இருந்து சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான ஐபோனை ஆர்டர் செய்துள்ளார். மேலும் கேஷ் ஆன் டெலிவரி (COD) கட்டண விருப்பத்தை அவர் தேர்வு செய்துள்ளார்.
பாரத் சாஹு என்ற அந்த டெலிவரி பாய் செப். 23-ந்தேதி கஜனனுக்கு ஐபோனை டெலிவரி செய்யச் சென்றார்.
அப்போது சாஹுவை கஜனனும் அவரது நண்பரும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். அவரது உடலை ஒரு சாக்கு பையில் வைத்து இந்திரா கால்வாயில் வீசி உள்ளனர்.
சாஹு இரண்டு நாட்களாக வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் செப். 25 அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சாஹுவின் செல்போன் அழைப்பு விவரங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவனது இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சியில், போலீசார் கஜனனின் எண்ணை கண்டுபிடித்து, அவரது நண்பர் ஆகாஷை தொடர்பு கொண்டனர்.
போலீஸ் விசாரணையில், ஆகாஷ் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், உடலை தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படையின் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
- ஜெய் ஆர்டரை ரத்து செய்து பணத்தை திரும்ப பெற்றுள்ளார்.
- இது மிகவும் சிறப்பான பிரஷர் குக்கராக இருக்க வேண்டும் என்று ஜெய் தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களை ஒரே நாளில் டெலிவரி செய்வது வழக்கமாகி வரும் உலகில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்ட ஆர்டரை சமீபத்தில் பெற்றதாக ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜெய் என்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமேசானில் இருந்து பிரஷர் குக்கரை ஆர்டர் செய்துள்ளார். பின்னர் அவர் ஆர்டரை ரத்து செய்து பணத்தை திரும்ப பெற்றுள்ளார்.
ஆர்டரை ரத்து செய்த போதிலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்டர் செய்த பொருள் அவரது வீட்டுக்கு வந்துள்ளது.
இதையடுத்து அவர், "2 ஆண்டுகளுக்குப் பிறகு எனது ஆர்டரை வழங்கியதற்கு நன்றி அமேசான்" என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், பிரஷர் குக்கர் அக்டோபர் 1, 2022 அன்று ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 28, 2024 அன்று ஆர்டரை பெற்றுள்ளார்.
இது மிகவும் சிறப்பான பிரஷர் குக்கராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Thank you Amazon for delivering my order after 2 years. The cook is elated after the prolonged wait, must be a very special pressure cooker! ? pic.twitter.com/TA8fszlvKK
— Jay (@thetrickytrade) August 29, 2024
- தாய் இனிப்பு செய்வதற்காக பயன்படுத்தும் அச்சு ஒன்றை ஆர்டர் செய்திருந்த நிலையில், அவருக்கு 3 நிமிடங்களில் அந்த பொருள் வழங்கப்பட்டுள்ளது.
- ஸ்ரீவஸ்தவாவின் பதிவு வைரலான நிலையில், பயனர்கள் பலரும் 3 நிமிடங்களில் ஆர்டரை பெறுவது சாத்தியமில்லை என பதிவிட்டனர்.
லக்னோவை சேர்ந்த ஸ்ரீவஸ்தவா என்ற பயனர் எக்ஸ் தளத்தில் பிளிங்கிட் நிறுவனத்தின் சேவையை பாராட்டி ஒரு பதிவு செய்திருந்தார். ஆன்-லைன் மூலம் பொருட்களை வினியோகிக்கும் பிளிங்கிட்டில் ஸ்ரீவஸ்தவா தனது தாய் இனிப்பு செய்வதற்காக பயன்படுத்தும் அச்சு ஒன்றை ஆர்டர் செய்திருந்த நிலையில், அவருக்கு 3 நிமிடங்களில் அந்த பொருள் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக அந்த நிறுவனத்தின் சேவையை பாராட்டி இருந்தார். அதில் எனது அம்மா, குஜியா (வட இந்தியாவில் பிரபலமான இனிப்பு) செய்ய பயன்படுத்தும் அச்சு உடைந்திருந்தது. அதை மாற்றுவதற்காக பிளிங்கிட்டில் ஆர்டர் செய்திருந்தேன். 3 நிமிடங்களில் அதனை வினியோகம் செய்ததற்கு பாராட்டுக்கள் என குறிப்பிட்டிருந்தார்.
அவரது பதிவுக்கு பிளிங்கிட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அல்பிந்தர் திண்ட்சா பதில் அளித்து, 'உங்கள் பார்வையை மாற்ற முடிந்ததில் மகிழ்ச்சி. உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய ஹோலி' என்று பதிவிட்டார். ஸ்ரீவஸ்தவாவின் பதிவு வைரலான நிலையில், பயனர்கள் பலரும் 3 நிமிடங்களில் ஆர்டரை பெறுவது சாத்தியமில்லை என பதிவிட்டனர்.
APPRECIATION POST
— Tanay Srivastava (@SinAyByCosAy) March 22, 2024
Mom's Gujia mould broke. Couldn't go to get one immediately.
Ordered from @letsblinkit
It arrived in 3 freakin minutes?
This is some level of operational excellence @albinder
Two years back I believed Blinkit is weak operationally
Perspective changed?? pic.twitter.com/VDVRLbMFrD
- மும்பையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் இந்த ஆண்டு ரூ.42.3 லட்சத்துக்கு உணவுகளை ஆர்டர் செய்து முதலிடத்தில் உள்ளார்.
- சைவ உணவுகளில் நவராத்திரியின் போது 9 நாட்களிலும் மசாலா தோசையே முதலிடத்தை தட்டிச்சென்றது.
சென்னை:
இந்தியா முழுவதும் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் உணவுகளில் முதலிடத்தை பிடிக்கும் உணவு எது என்பதை பிரபல தனியார் உணவு டெலிவரி நிறுவனம் வருடந்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி தொடர்ந்து 8-வது ஆண்டாக வீடுகளுக்கு டெலிவரி செய்யும் உணவுகளில் தொடர்ந்து பிரியாணி முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறது.
இதுகுறித்து தனியார் உணவு டெலிவரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்த ஆண்டு வீடு தேடி வரும் உணவுகளில் பிரியாணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 8-வது ஆண்டாக பிரியாணியே தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இந்த ஆண்டில் ஒரு வினாடிக்கு 2.5 பிரியாணி ஆர்டர்கள் பெறப்பட்டு உள்ளன. ஒவ்வொரு 5.5 சிக்கன் பிரியாணிக்கும் ஒரு வெஜ் பிரியாணி வீதம் ஆர்டர் பெறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி மட்டும் 4.30 லட்சம் பிரியாணிகள் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்பட்டன.
மேலும் 6 பிரியாணிகளில் ஒரு பிரியாணி ஐதராபாத்தில் இருந்து ஆர்டர் பெறப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஐதராபாத் மக்களின் பிரியாணி மீதான மோகம் குறையவில்லை என்பது தெரிகிறது.
உலக கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்ற கடந்த நவம்பர் 19-ந்தேதி நிமிடத்துக்கு 188 பீட்சாக்கள் ஆர்டர் பெறப்பட்டு உள்ளன. அதிகபட்ச பீட்சா ஆர்டர்கள் சென்னை, புதுடெல்லி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து பெறப்பட்டு உள்ளன.
மும்பையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் இந்த ஆண்டு ரூ.42.3 லட்சத்துக்கு உணவுகளை ஆர்டர் செய்து முதலிடத்தில் உள்ளார்.
துர்கா பூஜையின் போது இதுவரை முதலிடத்தில் இருந்த ரசகுல்லாவை குலோப் ஜாமூன் முந்தியது. அன்று மட்டும் 77 லட்சத்துக்கும் அதிகமான குலோப் ஜாமூன்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளன.
சைவ உணவுகளில் நவராத்திரியின் போது 9 நாட்களிலும் மசாலா தோசையே முதலிடத்தை தட்டிச்சென்றது.
பெங்களூரில் அதிக அளவில் கேக்குகள் ஆர்டர் பெறப்பட்டுள்ளன. சாக்லெட் கேக் மட்டும் 85 லட்சம் ஆர்டர் பெறப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. டெலிவரி நிறுவன ஊழியர்கள் உணவு டெலிவரிக்காக இந்த ஆண்டில் மட்டும் ஒட்டு மொத்தமாக 16.64 கோடி கி.மீ. தூரம் பயணித்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- ஐஸ்வர்யா கஜூரியா என்ற இளம்பெண் ஆன்லைனில் ஷாப்பிங் இணையதளம் ஒன்றில் ‘பிரேஸ்லெட்’ ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.
- ஏராளமான பயனர்கள் தங்களுக்கும் இதுபோன்று நேர்ந்த அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
உணவு பொருட்கள் முதல் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஆடம்பர பொருட்கள் வரை எல்லாவற்றையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனாலும் சில நேரங்களில் ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதிலாக வேறு பொருட்கள் வந்துவிடுகிறது. அதுபோன்று ஒரு சம்பவம் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா கஜூரியா என்ற இளம்பெண் ஆன்லைனில் ஷாப்பிங் இணையதளம் ஒன்றில் 'பிரேஸ்லெட்' ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அதற்கு பதிலாக அவருக்கு வெற்று ஜாடி வந்துள்ளது. இதுதொடர்பான வீடியோவை அவர் பகிர்ந்ததும், அதனை 3.32 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மேலும் ஏராளமான பயனர்கள் தங்களுக்கும் இதுபோன்று நேர்ந்த அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்