என் மலர்
நீங்கள் தேடியது "Oorvasi Amirtharaj MLA"
- ஏரல் மற்றும் வாழவல்லான் பகுதிகளில் உறை கிணறுகள் மூலம் எடுக்கப்படும் குடிதண்ணீர் வற்றி போனது.
- வாழவல்லான் தடுப்பணை வரை தண்ணீர் வந்து சேர்ந்தால்தான் இந்தப் பகுதிகளுக்கு எல்லாம் குடிதண்ணீர் வழங்க முடியும்.
தூத்துக்குடி:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சி காரணமாக தற்போது தாமிரபரணி ஆற்றில் மங்கலகுறிச்சியில் உள்ள தடுப்பணையின் கீழ்புறம் உள்ள ஏரல் மற்றும் வாழவல்லான் பகுதிகளில் உறை கிணறுகள் மூலம் எடுக்கப்படும் குடிதண்ணீர் வற்றி போனது. இதனால் இங்குள்ள உறை கிணறுகள் மூலம் குடிநீர் தண்ணீர் எடுக்கப்படும் குடிதண்ணீரை பெற்று வந்த ஏராளமான கிராமங்கள் மற்றும் பேரூராட்சி களுக்கு குடிதண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
தண்ணீர் திறப்பு
இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் (நான்), கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் மூலம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து கடந்த 25-ந் தேதி தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விட தேவையான ஏற்பாடுகளை செய்தேன்.
இந்த தண்ணீரானது மங்கலகுறிச்சி தடுப்பணை வரை வந்ததால் சாயர்புரம், பெருங்குளம் பேரூராட்சி பகுதிகளுக்கும், நட்டாத்தி, திருப்பணி செட்டிகுளம் கிராம பஞ்சாயத்து பகுதிகளுக்கும், திருச்செந்தூர், சாத்தான்குளத்தில் ஒரு சில பகுதிகளுக்கும் படிப்படியாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆனால் மங்கலகுறிச்சி தடுப்பணைக்கு கீழ்புறம் அமைந்துள்ள வாழவல்லான் தடுப்பணை மூலமாக வாழவல்லான், உமரிக்காடு, முக்காணி, அகரம், கொற்கை, பழைய காயல், இடையர்காடு, மாரமங்கலம், கோவங்காடு, கொட்டாரக்குறிச்சி, மஞ்சள் நீர்க்காயல், ஆறுமுகமங்கலம் உள்ளிட்ட 14 கிராம ஊராட்சிகள் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 23 டவுன்ஷிப் பகுதிகளில் வசிக்கும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்க முடியவில்லை.
இது தவிர ஏரல் ஆற்றுப்பகுதியில் இருந்து குடி தண்ணீர் பெற்று வரும் ஏரல் பேரூராட்சி, சிறுத்தொண்ட நல்லூர் மற்றும் சூழவாய்க்கால் கிராம பஞ்சாயத்து பகுதிகளுக்கு குடிதண்ணீர் வழங்குவதில் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மங்கலக்குறிச்சி தடுப்பணையை தாண்டி வாழவல்லான் தடுப்பணை வரை தண்ணீர் வந்து சேர்ந்தால்தான் இந்தப் பகுதிகளுக்கு எல்லாம் குடிதண்ணீர் வழங்க முடியும். எனவே ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து கூடுதலாக 250 கன அடி நீர் திறந்து விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கருமேனி ஆற்றில் சுப்பராயபுரம் அணைக்கட்டுக்கு இடையே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
- அமைச்சர் துரைமுருகனை, ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து மதகுகள் அமைக்க கோரி மனு அளித்தார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் கருமேனி ஆற்றில் சுப்பராயபுரம் அணைக்கட்டுக்கு இடையே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.அதன் இரண்டு கரைகளும் பலப்படுத்தப்படாமலும் மதகுகள் இல்லாமலும் உள்ளதால் வெள்ள நேரங்களில் மழைநீர் அருகில் உள்ள வயல்களில் புகுந்து பயிர்களுக்கு மிகுந்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மழைக்காலங்களில் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் தடுப்பணை கரைகளை பலப்படுத்த வேண்டும். மதகுகள் அமைக்க வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜிடம் முறையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனை, ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து கருமேனி ஆற்றில் கட்டப்பட்டுள்ள சுப்பராயபுரம் தடுப்பணையின் இருகரைகளையும் பலப்படுத்தி மதகுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். அப்போது அவருடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர் உடனிருந்தார்.
- புதிய தார் சாலை அமைக்கும் பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
- ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மங்கலகுறிச்சி வடிகால் வாய்க்காலை சென்று பார்வையிட்டார்.
தூத்துக்குடி:
பண்டாரவிளையில் இருந்து பெருங்குளம் வரை ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கொடியசைத்து வேலையை தொடங்கி வைத்தார்.
ஆக்கிரமிப்பு அகற்றம்
தொடர்ந்து பெருங்குளம் மற்றும் மங்கலகுறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை, நெல் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த வயல்களில் மழைக்காலத்தில் தேங்கும் தண்ணீரை வடியவைப்பதற்காக ஸ்ரீவைகுண்டம் அருகே காடுவெட்டியில் இருந்து சிவராமங்கலம், பொட்டல், மாங்கொட்டாபுரம், பெருங்குளம், மங்கலகுறிச்சி வழியாக வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டு ஆத்தாம்பழம் வடிகால் மடை வழியாக தாமிரபரணி ஆற்றுக்குள் தண்ணீர் செல்கிறது. தற்போது இந்த வாய்க்கால் பெருங்குளம், மங்கலகுறிச்சி மற்றும் ஆத்தாம்பழம் வரை தூர்வாரப்படாமல் அமலை செடிகள் ஆக்கிரமித்து தண்ணீர் செல்வதற்கு தடை ஏற்பட்டுள்ளது.
இதனால் வயல்களில் அதிகப்படியாக தேங்கும் மழை நீர் வடிகால் வாய்க்காலில் செல்லாமல் மங்கலகுறிச்சி பகுதியில் உள்ள வாழை வயலுக்குள் தண்ணீர் சென்று வாழை பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏவிடம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து எம்.எல்.ஏ மங்கலகுறிச்சி வடிகால் வாய்க்காலை சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அவர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு உடனடியாக வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள அமலை செடிகளை ஜே.சி.பி எந்திரம் மூலம் அகற்றிட நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து ஒரிரு நாளில் வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள அமலை செடிகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் மங்கலகுறிச்சி, பெருங்குளம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், மாவட்ட இளை ஞர் காங்கிரஸ் தலைவர் இசைசங்கர், முன்னாள் தலைவர் ஜெயசீலன்துரை, மாநில ஊடக பிரிவு முத்துமணி, ஸ்ரீவைகுண்டம் வட்டார தலைவர்கள் மேற்கு நல்லகண்ணு, வடக்கு சொரிமுத்துபிரதாபன், சாயர்புரம் பேரூராட்சி கவுன்சிலர் பிரவீனா, பெருங்குளம் நகர தி.மு.க. செயலாளர் நவநீத முத்துக்குமார், அவைத்தலைவர் நாகராஜன், சிறுபான்மை பிரிவு சகாயம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- விழாவிற்கு தூத்துக்குடி மின் பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் குருவம்மாள் தலைமை தாங்கினார்.
- ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, 2 மின்மாற்றியை இயக்கி தொடங்கி வைத்தார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே பொத்தகாலன்விளை பகுதியில் 266 பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.94 லட்சத்தில் 63 கே.வி.ஏ. திறன் கொண்ட 2 மின்மாற்றி அமைக்கப்பட்டு இயக்க விழா நடைபெற்றது. தூத்துக்குடி மின் பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் குருவம்மாள் தலைமை தாங்கினார்.
தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி, சாஸ்தாவிநல்லூர் ஊராட்சித் தலைவர் திருக்கல்யாணி, விவசாய நலச்சங்கத் தலைவர் எட்வின் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் கோட்ட செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வரவேற்றார். இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, 2 மின்மாற்றியை இயக்கி தொடங்கி வைத்தார்.
இதில் நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வேணுகோபால், மாநில பொதுக்குழு உறுப்பினர் அந்தோணி சுரேஷ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலர் வர்கீஸ், பேய்குளம் டாக்டர் ரமேஷ் பிரபு. தெற்கு வட்டார காங்கிரஸ் பொதுச் செயலர் ஜேம்ஸ் அகஸ்டின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உதவி செயற் பொறியாளர் ராம்மோகன் நன்றி கூறினார்.
- விழாவிற்கு சாயர்புரம் பேரூராட்சி தலைவி பாக்கியலட்சுமி தலைமை தாங்கினார்.
- சிறப்பு அழைப்பாளராக ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
தூத்துக்குடி:
புளிய நகர் இளைஞர் நற்பணி மன்றம் நடத்திய 3-வது ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி சாயர்புரம் போப் கல்லூரி மைதானத்தில் கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி தொடங்கி கடந்த 18-ந் தேதி வரை ஞாயிற்று க்கிழமைகளில் நடந்தது. இதில் மாவட்ட அளவில் 50 அணிகள் கலந்து கொண்டன.
இறுதிப் போட்டியை தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா புளிய நகர் மகாத்மா காந்தி நினைவு வாசக சாலை யில் நடந்தது. சாயர்புரம் பேரூராட்சி தலைவி பாக்கியலட்சுமி தலைமை தாங்கினார். புளிய நகர் நல்லாசிரியர் ஞானராஜ், சாயர்புரம் நகர காங்கிரஸ் தலைவர் ஜேக்கப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவரும், புளிய நகர் ஊர் தலைவருமான அறவாழி வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
போட்டியில் முதலிடம் பிடித்த புளிய நகர் இளைஞர் நற்பணி மன்ற அணிக்கு பரிசு கோப்பையும், ரொக்க பரிசு ரூ.10ஆயிரமும் வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த வாகைகுளம் மதர் தெரசா என்ஜினீயரிங் கல்லூரி அணிக்கு கோப்பை மற்றும் ரூ. 8 ஆயிரம் ரொக்கமும், 3-வது இடம் பிடித்த புதுக்கோட்டை கே.எல்.சி.சி. அணிக்கு கோப்பை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கமும், 4-வது இடம் பிடித்த நடுவக்குறிச்சி அணிக்கு கோப்பை, ரூ. 2ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும் 5, 6-வது இடம்பிடித்த அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசை சங்கர், முன்னாள் தலைவர் ஜெயசீலன்துரை, சாயர்புரம் நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் மணி, ஊடகப்பிரிவு மரியராஜ், இளைஞர் காங்கிரஸ் பிளஸ்வின், சாயர்புரம் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கண்ணன், இந்திரா, மகிளா காங்கிரஸ் டெய்சி செல்வின், புளிய நகர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.