என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ootty"
- கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- செல்போன் சிக்னல் குஞ்சப்பனை பகுதியை காட்டியது.
அரவேணு,
கோத்தகிரி தெங்கரை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்.
இவர் சம்பவத்தன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து பஸ்சில் கோத்தகிரிக்கு வந்தார்.
அப்போது அவரின் செல்போன் மாயமானது.
இதுதொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அவர்கள் டிராக்கர் டிவைஸ் நவீன கருவி உதவியுடன் கண்காணித்தனர்.
இதில் அந்த செல்போன் சிக்னல் குஞ்சப்பனை பகுதியை காட்டியது.
போலீசார் உடனடியாக அங்கு சென்று பாஸ்கரின் செல்போனை மீடடு ஒப்படைத்தனர்.
- காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம மக்கள் இணைந்து அனைவரும் பயன் பெரும் வண்ணம் நூலகம் தொடங்கப்பட்டது.
- நூலகம் மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் கேத்தி பேருராட்சிக்கு உட்பட்ட சோகத்துரை சக்கலட்டி கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம மக்கள் இணைந்து அனைவரும் பயன் பெரும் வண்ணம் நூலகம் தொடங்கப்பட்டது. முன்னதாக சக்கலட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் ஊர் தலைவர் ராஜி, சிவயோகி, சிவக்குமார், பேருராட்சி வார்டு உறுப்பினர் நிரோஷா, ஆசிரியர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று பேசினர். இந்த நூலகம் மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
- நீலகிரி ஊட்டிமலை ெரயில் என்ஜின்களை தெற்கு ரெயில்ேவ பொது மேலாளர் பி.ஜி.மல்லையா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- தமிழகத்தில் பாரத் கவுரவ் திட்டத்தில் ஏற்கனவே 5 ெரயில்கள் இயங்குகின்றன.
ஊட்டி
திருச்சி பொன்மலை ெரயில்வே பணிமனையில் புதிதாக கட்டமைக்கப்பட்ட 66-வது டீசல் என்ஜின் மற்றும் நீலகிரி ஊட்டிமலை ரெ யில் என்ஜின்களை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. பொன்மலை பணிமனை 100 வருட வரலாற்று சிறப்பு பெற்றுள்ள நிலையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
அந்த வகையில் அதிவேக டீசலால் இயக்கப்படும் ஊட்டி மலை ெரயில் என்ஜின் திருச்சி பொன்மலை ெரயில்வே பணிமனையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இன்ஜினை, உருவாக்க பாடுபட்ட தொழிலாளர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
'வந்தே பாரத் திட்டம்' தமிழகத்திற்கு வர கொஞ்சம் காலம் ஆகும். அவற்றுக்கு பயன்படும் சில ரயில் பெட்டிகள் தொகுப்பு (ரேக்ஸ்கள்) நடப்பு நிதியாண்டில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் பாரத் கவுரவ் திட்டத்தில் ஏற்கனவே 5 ெரயில்கள் இயங்குகின்றன. கூடுதலாக ஒரு ெரயில் இந்த மாதத்திலும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில்,3 ரயில்களும் இயக்கப்படும். இத்திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், பல்வேறு இடங்கள் தேர்வு செய்ப்பட்டுள்ளன என்றார் அவர்.
நிகழ்வில் பணிமனை முதன்மை பொதுமேலாளர் ஷியாம்தார் ராம், துணைப் பொதுமேலாளர் டிஎல் கணேஷ், உள்ளிட்ட ரயில்வே பணிமனை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
- ரெயில்வே உயா்அதிகாரிகளுடன் ஊட்டி வந்து கொண்டிருந்த சிறப்பு ரெயில் அரை மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது.
- பா்லியாறு பகுதியின் மலைப் பாதையில் உள்ள ெரயில்வே தண்டவாளத்தில் காட்டெருமை விழுந்தது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ெரயில் பாதையில் யானை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.
இந்நிலையில், பா்லியாறு பகுதியின் மலைப் பாதையில் உள்ள ெரயில்வே தண்டவாளத்தில் காட்டெருமை விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக ெரயில்வே துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற வனத்துறை மற்றும் ெரயில்வே துறையினா், அந்த காட்டெருமையை மீட்டனா். பின்னர் காட்டெருமைக்கு கால்நடை டாக்டர்கள் உதவியுடன் சிகிச்சை அளித்து கொண்டிருந்தனர்.
ஆனால் சிறிது நேரத்தில் காட்டெருமை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டது. இதையடுத்து காட்டெருமையை வனத் துறையினா் அங்கேயே குழி தோண்டி புதைத்தனா்.
இந்தச் சம்பவத்தால், மேட்டுப்பாளையத்தில் இருந்து ெரயில்வே உயா்அதிகாரிகளுடன் ஊட்டி வந்து கொண்டிருந்த சிறப்பு ெரயில் அரை மணி நேரம் தாமதமாக ஊட்டிக்கு வந்து சேர்ந்தது.
- ராசாவுக்கு ,எதிராக பாஜக மகளிர் அணியினர் எதிர்ப்பு குரல் எழுப்பினர்
- ராஜாவை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும்.
ஊட்டி
ஊட்டியில் மாவட்ட பாஜக சார்பில் ராசாவின் மதப்போக்கு பிரிவினையை கைவிடக்கோரி மண்டல் தலைவர் பிரவீன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது
மாவட்டத் தலைவர் மோகன்ராஜ்கௌடா , மாவட்ட பொதுச் செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட செயலாளர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
நகர நிர்வாகிகள் பொதுச்செயலாளர்கள் சுரேஷ்குமார் ,ராஜேந்திரன், நகர துணைத் தலைவர் சுதாகர் ,ஹரி கிஷன் ,மணி ஸ்மூத்லி, நகர மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ,தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்,
ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராசாவுக்கு ,எதிராக பாஜக மகளிர் அணியினர் எதிர்ப்பு குரல் எழுப்பினர்
நீலகிரி மாவட்டத்தில் ராசா ஒரு இந்து வீட்டிலேயு கூட ஓட்டு கேட்க முடியாது. அவரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் உதகை நகர பாஜக நிர்வாகிகள் கூறினர்
- 2022-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பிராந்திய அளவிலான ஹாக்கி போட்டியை நடத்தியது,
- சிறப்பான வெற்றியை பெற்று தந்த அனைத்து அனைத்து வீரர்களையும் பாராட்டினர்.
ஊட்டி
புதுடெல்லியில் உள்ள இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்கான கவுன்சில் 2022-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பிராந்திய அளவிலான ஹாக்கி போட்டியை நடத்தியது,
இதன் இறுதி போட்டியில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கிரெசென்ட் பள்ளி ஹாக்கி வீரர்கள் கலந்துகொண்டு 3 பிரிவுகளில் சாதனை படைத்துள்ளனர். 14 வயதுக்குட்பட்ட பிரிவில் கிரெசென்ட் பள்ளி மாணவர்கள் 6-1 என்ற கோல் கணக்கில் பிருந்தாவன் பப்ளிக் பள்ளியையும், 19 வயதுக்குட்பட்ட பிரிவில் கிரசன்ட் பள்ளி ஹோலி இன்னசென்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியை 2-1 கோல் கணக்கில் வீழ்த்தியது.
17 வயதுக்குட்பட்ட பிரிவில் பிந்தவன் பப்ளிக் பள்ளியிடம் கிரசன்ட் பள்ளி 1 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்து இரண்டாம் இடத்தை பிடித்தது.
தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் கலந்துகொண்டு பள்ளிக்கு சிறப்பான வெற்றியை பெற்று தந்த அனைத்து அனைத்து வீரர்களையும் பள்ளியின் சார்பாக பள்ளி தாளாளர் உமர்பாருக் மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
- மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
- அ.தி.மு.க சார்பில் குன்னூரில் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஊட்டி
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் தி.மு.க அரசைக் கண்டித்தும் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க சார்பில் குன்னூரில் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு ,கூடலூர்சட்டமன்ற உறுப்பினர் பொன்ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் குன்னூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பேரட்டிராஜி, குன்னூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஹேம்சந்த், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, பாசறை மாவட்ட செயலாறர் அக்கீம்பாபு, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி நகரசெயலாளர் நொண்டிமேடு கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மாணவா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை அமைச்சா் கா.ராமசந்திரன் தொடங்கி வைத்தார்.
- 63 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் பயிலும் 3,415 மாணவா்கள் பயன்பெறுவா்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம், ஸ்ரீமதுரை ஊராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை அமைச்சா் கா.ராமசந்திரன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
காலை உணவு திட்டத்தால் நீலகிரி மாவட்டத்தில் 63 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் பயிலும் 3,415 மாணவா்கள் பயன்பெறுவா். மேலும் மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருவதால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாது.
மேலும், பள்ளிகளில் மாணவா்களின் வருகை அதிகரிக்கும், வேலைக்குச் செல்லும் தாய்மாா்களின் பணிச் சுமையும் குறையும் என்பது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தாா். மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் ஜாகிா் உசேன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், நோ்முக உதவியாளா் கோல்டி சாராள், கோட்டாட்சியா் சரவணக்கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.திராவிடமணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்ரீதரன், மோகன் குமாரமங்கலம், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கீா்த்தனா, காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா்,கூடலூர் நகராட்சி தலைவர் பரிமளா ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவா் சுனில், நெலாக்கோட்டை ஊராட்சித் தலைவா் டொ்மிளா, மசினகுடி ஊராட்சித் தலைவா் மாதேவி,கூடலூர் நகர செயலாளர் இளஞ்செழியன்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
- கூட்டுறவு பயிற்சி மாணவர்களுக்கு கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான புத்தகங்களை வழங்கப்பட்டது.
- 2022-23-ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி தொடக்கவிழா நடந்தது
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய கிளையில் 2022-23-ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி தொடக்கவிழா நடந்தது. விழாவில் கூட்டுறவு சங்கங்களின் நீலகிரி மண்டல இணைப்பதிவாளர்(முழு கூடுதல் பொறுப்பு) டி.பிரபு கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பட்டய பயிற்சியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கூட்டுறவு பயிற்சி மாணவர்களுக்கு கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான புத்தகங்களை வழங்கினார். இதில் கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் துணைப்பதிவாளரும், முதல்வருமான கிருஷ்ணன், துணைப்பதிவாளர் சரவணன், நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான முத்து சிதம்பரம், குன்னூர் கூட்டுறவு நகர வங்கி துணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குனர் குமாரசுந்தரம், கோவை துணைப்பதிவாளர் கே.ஆர்.ராஜேந்திரன், விரிவுரையாளர்கள், கூட்டுறவு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- அண்ணாவின் சிலைக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
ஊட்டி
பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் மற்றும் தி.மு.க முப்பெரும் விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில், மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் ஆலோசனைக்கிணங்க, ஊட்டி கலைஞர் அறிவாலய முகப்பில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் தலைமையில் மாலை அணிவித்தும், கட்சி கொடியேற்றி ெபாதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் முன்னாள் ஊட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் தொரை, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் எல்கில் ரவி, காந்தல் ரவி, செல்வராஜ், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், ஊட்டி நகர பொருளாளர் அணில்குமார், ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், ரகுபதி, விஷ்னுபிரபு, கஜேந்திரன், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் அந்தோனி மேத்யூஸ், எல்.பி.எப் ஜெயராமன், மார்கெட் ரவி, ராமன், தியாகு, ஜெகதீஷ், மத்தீன், குண்டன், குரூஸ், மாதன், சங்கர், இலியாஸ், பொன்சிசெல்வம், ராஜம்மா, ராஜ்குமார், பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நீலகிரி சாலைகளில் பயணிக்க அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- வெளிமாநில, வெளி மாவட்ட வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
ஊட்டி
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் வாகன ஓட்டுனர்களும், வெளி மாநில வாகன ஓட்டுனர்களும் மிகவும் ஆசையுடன் வாகனங்களை இயக்குவதற்கு முக்கிய காரணமே இயற்கை எழில் சூழ்ந்த காடுகளுக்கு நடுவே உள்ள சாலையில் இதமான சூழ்நிலையில் செல்வததால் தான்.
இதன் காரணமாக நீலகிரி சாலைகளில் பயணிக்க அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத்தலமான முதுமலைக்கு ஊட்டியில் இருந்து கல்லட்டி சாலை வழியாக செல்லாம். இந்த சாலையானது 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலை வளைவு பாதையாகும்.
இந்த சாலையில் பல்வேறு ஆபத்துகளும், தொடர் விபத்துகளும் நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட சென்னையில் இருந்து சுற்றுலா வந்த பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
தொடர் விபத்துக்களால் அந்த சாலையில் வெளிமாநில, வெளி மாவட்ட வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
கல்லட்டி மலைப்பா தையில் உள்ள மிகப்பெரிய இறங்கு முகமான பாதையில் வாகனத்தை இயக்குபவர்கள் இருபுறமும் இயக்கும் வகையில் அந்த சாலை இருந்தது.
அந்த பகுதியில் சிலர் வேகமாக வாகனங்களை இயக்குவதால் பாதுகாப்பு கருதி அந்த சாலையின் இடையே கீழ் இறங்கும் வாகனங்கள் ஸ்பீட் பிரேக்கர் என்று சொல்லக்கூடிய வேகக்கட்டுப்பாட்டு கோடுகளை தாண்டி மெதுவாக செல்லும் வகையிலும், மேல் நோக்கி வரும் வாகனங்கள் எந்தவித தடையும் இன்றி மேலேறி வரும் விதமாக சாலைகளின் நடுவே தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது இனிவரும் காலங்களில் வேகமான பயணம் இந்த சாலைகளில் இல்லாமல் மிதமான வேகம் உயிர் பாதுகாப்பு என்பதை வலியுறுத்தும். இது போன்ற செயல்பாடுகள் அனைத்து தரப்பினரினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
- புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 300 மாணவிகளுக்கு ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
- "புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1,000 ஊக்கத்தொகை கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகவும் உதவியாக உள்ளது.
ஊட்டி
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் புதுமைப்பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 5-ந் தேதி தொடங்கி வைத்தார்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயர்க்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கக் கூடிய ஒரு மகத்தான திட்டம் இத்திட்டமாகும்.
நீலகிரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 300 மாணவிகளுக்கு ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் முதற்கட்டமாக அரசு கலைக்கல்லூரி ஊட்டி மற்றும் கூடலூர், அரசு செவிலியர் பயிற்சி பள்ளி, ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மாணவிகள் என மொத்தம் 163 கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டப் பைகளுடன் வங்கி பற்று அட்டைகளை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.
புதுமைப்பெண்கள் திட்டத்தில் பயன் அடைந்த மாணவிகள் கூறியதாவது:-
மாணவி சுகாஷிணி:
எனது சொந்த ஊர் சேலம் மாவட்டம். நான் 6 -ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சேலம் ஆட்டயம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்தேன்.அதன் பின்னர் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ படிப்பதற்கான இடம் கிடைத்து முதலாம் ஆண்டு படித்து வருகிறேன்.
எனக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி திட்டம் "புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1,000 ஊக்கத்தொகை கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகவும் உதவியாக உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
. இது போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வரும், அவருக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவி ஆர்.வர்சினி:
நான் 6-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். தற்பொழுது பிஎஸ்சி கணிதம் இரண்டாம் ஆண்டு ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகிறேன். நான் அரசு பள்ளியில் படித்த காரணத்தினால் எனக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1,000 ஊக்கத்தொகை கிடைத்தது. இத்திட்டத்தின் மூலம் மாணவிகள் உயர்கல்வி கற்கும் எண்ணிக்கை அதிகமாகும்.
எனது தோழிகளுக்கும் இத்திட்டத்தினை பற்றி எடுத்துக் கூறி உயர்கல்வி கற்க ஊக்கப்படுத்துவேன். பெண்கள் கல்வித்தரத்தினை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு பள்ளிகளில் பயில்வது வறுமையின் அடையாளம் அல்ல. பெருமையின் அடையாளம் என்பதனை உணர்த்தும் வகையில், அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி கற்கும் கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கிய, முதல்-அமைச்சருக்கு நீலகிரி மாவட்ட கல்லூரி மாணவிகள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்