என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "O.Pannirselvam"

    • முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது அணி சார்பில் தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கான பட்டி யலை வெளியிட்டுள்ளார்
    • மாவட்ட அவைத்தலைவராக சண்முகசுந்தரம், மாவட்ட இணைச் செயலாளராக பார்வதி, துணைச்செயலாளராக ராஜா ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

    தூத்துக்குடி:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது அணி சார்பில் தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கான பட்டி யலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-

    தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு புதிய பொறுப்பாளர்கள் இன்று முதல் நியமிக்கப்படு கிறார்கள். அதன்படி மாவட்ட அவைத்தலைவராக சண்முகசுந்தரம், மாவட்ட இணைச் செயலாளராக பார்வதி, துணைச்செயலாளராக ராஜா ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

    ஒன்றிய செயலாளர்கள்

    ராஜ்மோகன் ( சாத்தான் குளம்), முருகையா பாண்டியன் (கருங்குளம்), நல்லக்கண்ணு (ஸ்ரீவை குண்டம் மேற்கு), சரவணன் (ஸ்ரீவைகுண்டம் கிழக்கு), முத்துராம கிருஷ்ணன் (ஆழ்வார் திருநகரி மேற்கு)

    பேரூர் செயலாளர்கள்

    செந்தில் பெருமாள் (ஸ்ரீவைகுண்டம்) , பரம சிவன் (பெருங்குளம்), சின்னத்துரை (ஏரல்), ரமேஸ்குமார் (சாயர் புரம்), பிரியதர்ஷன் (ஆழ்வார்திருநகரி பேரூர்) , செல்லத்துரை (சாத்தான்குளம்). ஸ்ரீவை குண்டம் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர்- ஞானேஸ்வரன், ஸ்ரீவை குண்டம் தொகுதி அமைப்பாளர்- முருகன், இணை அமைப்பாளர் கொம்பையா.

    காயல்பட்டினம் நகர செயலாளர்- காதர் சாகிபு, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர்- சிலுவை ரஜித், ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் பெருமாள், உடன்குடி ஒன்றிய செயலாளர் அமிர்தா மகேந்திரன், தென்திருப்பேரை பேரூர் செயலாளர்- பெருமாள், நாசரேத் பேரூர் செயலாளர் சாது இம்மானுவேல், ஆத்தூர் பேரூர் செயலாளர்- ராஜா, கானம் பேரூர் செயலாளர்- சூசை அண்டோ, ஆறுமுகநேரி பேரூர் செயலாளர்- சின்னத்துரை, உடன்குடி பேரூர் செயலாளர் வீரக்குமார் ஆகியோர் நியமனம் செய்யபட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கஞ்சா, லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.
    • விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேட்டில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், மாநில பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் போலீஸ் உயர் அதிகாரிகளே பாலியல் வழக்கில் சிக்கி சிறையில் இருக்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா ஆட்சியிலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் குறைந்த அளவே குற்றங்கள் நடைபெற்றது.

    திண்டுக்கல் பஸ்நிலையத்தில் கஞ்சா, லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இது முதலமைச்சருக்கு தெரிந்தபோதும் போலீசார் கண்டுகொள்ளக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

    ஓ.பி.எஸ். ராமநாதபுரத்திலும், டி.டி.வி.தினகரன் தேனியிலும் பாராளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வி உள்ளனர். இதிலிருந்து அவர்களது பலம் வெளிப்பட்டுள்ளது. இருவரும் மண் குதிரைகளாகி விட்டனர். அவர்களை நம்பி செல்பவர்கள் ஆற்றில் மூழ்க வேண்டியதுதான். விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×