search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "opens"

    • உடன்குடி தேர்வு நிலைபேரூராட்சியின் 4- வது வார்டு சந்தையடித் தெரு சந்திப்பு பகுதியில் வாகன ஓட்டிகள், பக்தர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வழிகாட்டி போர்டு அமைக்கப்பட்டது
    • உடன்குடி பேரூராட்சி தலைவி ஹூமைரா அஸ்ஸாப்அலி பாத்திமா திறந்த வைத்தார்.

    உடன்குடி:

    உடன்குடி தேர்வு நிலைபேரூராட்சியின் 4- வது வார்டு சந்தையடித் தெரு சந்திப்பு பகுதில் வாகன ஓட்டிகள், பக்தர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வழிகாட்டி போர்டு அமைக்கப்பட்டது.

    உடன்குடி பேரூராட்சி தலைவி ஹூமைரா அஸ்ஸாப்அலி பாத்திமா திறந்த வைத்தார். 4- வது வார்டு உறுப்பினர் பஷீர் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக வணிகர் சங்க தலைவர் அம்பு ரோஸ் கலந்து கொண்டார்.

    இதற்கான ஏற்பாடுகளை கலில் ரகுமான் செய்திருந்தார். தொடர்ந்து பேரூராட்சி தலைவி தசரா திருவிழாவை ஒட்டி 18 வார்டு பகுதிகளிலும் துப்புரவு பணி எப்படி நடக்கிறது? என்று சுற்றிப் பார்த்தார். இவருடன் அந்தந்த பகுதியிலுள்ள வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.58 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சென்னிமலை முருகன் கோவில் புதிய அன்னதான கூடம் திறக்கப்பட்டது.
    • அன்னதான கூடத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலில் புதிதாக ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதான கூடத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதை தொடர்ந்து சென்னிமலை முருகன் கோவில் புதிய அன்னதான கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகளை தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவாச்சாரியார் தலைமையில் அர்ச்சகர்கள் செய்தனர்.

    இதில் இந்து அறநிலையத்துறை ஈரோடு மாவட்ட ஆணையர் பரஞ்ஜோதி, செயல் அலுவலர் அருள்குமார், மாவட்ட கவுன்சிலர் தமிழ்செல்வம், சென்னிமலை யூனியன் சேர்மேன் காயத்திரி இளங்கோ, சென்னிமலை வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் செங்கோட்டையன், சென்னிமலை பேரூர் செயலாளர் ராமசாமி, சென்னிமலை டவுன் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீதேவி அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நேற்று மதியம் முதல் புதிய அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×