என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ophthalmology"
- தனக்கு கண் பார்வை பிரச்சினை இருப்பதாகவும், அதற்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார்.
- சிறுமியிடம் உனது தங்கையை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கனிமொழி எம்.பி. அறிவுரை கூறினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டாரத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி. கடந்த மாதம் 27-ல் பார்வையிட்டார். அப்போது, திருச்செந்தூர் அருகே மேலாத்தூர் சொக்கப் பழங்கரை கிராமத்தில் கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியை கண்ட கனிமொழி எம்.பி, அந்த சிறுமியின் அருகே சென்று கண் பார்வை குறைபாடு குறித்து விசாரித்தார். அதற்கு அந்த சிறுமி, தனது பெயர் ரேவதி என்றும் 7-ம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறினார். மேலும் தனக்கு கண் பார்வை பிரச்சினை இருப்பதாகவும், அதற்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு உடனடியாக சரி செய்து விடலாம் என சிறுமிக்கு கனிமொழி எம்.பி. நம்பிக்கையும், ஊக்கமும் அளித்தார்.
தொடர்ந்து, கனிமொழி எம்.பி.யின் ஏற்பாட்டில் அந்த சிறுமிக்கு நெல்லையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் கடந்த 6-ந் தேதி காலை கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மாலை வீடு திரும்பினார். அதைத் தொடர்ந்து, ஏரல் தாசில்தார் கோபால கிருஷணன் சொக்கப்பழங்கரை கிராமத்துக்கு சென்று சிறுமி ரேவதியை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், கனிமொழி எம்.பி.யும் சிறுமி ரேவதியிடம் தொலைபேசியில் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். அப்போது அந்த சிறுமிகண் அறுவை சிகிச்சைக்கு உதவியதற்கு நன்றி கூறியதுடன், தான் வளர்ந்த பிறகு மருத்துவராக பணியாற்றுவேன் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் கனிமொழி எம்.பி.யை தனது தாய், தங்கையுடன் நேரில் சந்தித்த சிறுமி ரேவதி அவருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது சிறுமியிடம் உனது தங்கையை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கனிமொழி எம்.பி. அறிவுரை கூறினார்.
- புற்றுநோய் பெண்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.
- ரத்தப் பரிசோதனை மூலம் கொழுப்பின் அளவை கண்டறியலாம்.
குடும்ப நலன் நாடும் பெண்கள் தங்கள் நலனில் போதிய அக்கறை கொள்ளாததால் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒருசில பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் பெரிய அளவிலான ஆபத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். அதற்கு செய்ய வேண்டிய சில பரிசோதனைகள் குறித்து பார்ப்போம்..
புற்றுநோய்
உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் புற்றுநோய் பெண்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. அதிலும் பல பெண்கள் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இளம் வயது பெண்கள் கூட இந்த புற்றுநோயால் அவதிக்குள்ளாகிறார்கள். அதனால் 20 வயதை கடந்த பெண்கள் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
மார்பக புற்றுநோயும் வயது வித்தியாசமின்றி பாதிப்பை ஏற்படுத்துவதால் அதற்குரிய பரிசோதனையையும் அவசியம் மேற்கொள்ள வேண்டும். 40 வயதை கடந்த பெண்கள் மார்பக புற்றுநோய்க்கான மேமோகிராம் சோதனையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்து கொள்வது நல்லது.
கொழுப்பு பரிசோதனை
ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகம் சேர்ந்தால், பல்வேறு வகையான பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால் குறிப்பிட்ட காலகட்டத்தில் கொழுப்பு அளவை கண்டறிய வேண்டியது அவசியமானது. சாதாரண ரத்தப் பரிசோதனை மூலமே கொழுப்பின் அளவை கண்டறிந்துவிடலாம். அதனால் 5 ஆண்டு களுக்கு ஒருமுறையாவது கொழுப்பு பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது. 20 வயதை கடந்த பெண்கள் இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.
தைராய்டு பரிசோதனை
கழுத்து பகுதியில் அமைந்திருக்கும் தைராய்டு சுரப்பியின் முக்கியமான பணி, தைராக்சின் என்ற ஹார்மோனை சுரப்பதுதான். இந்த ஹார்மோன் சுரப்பு அதிகமானால் ஹைப்பர் தைராய்டிசம், குறைந்தால் ஹைப்போ தைராய்டிசம் என்ற பாதிப்பு உண்டாகும். ஆரம்ப நிலையிலேயே தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றத்தை கண்டறிந்தால் மருந்துகளின் மூலம் குணப்படுத்திவிட முடியும்.
கழுத்தில் வீக்கம் அல்லது கட்டி இருந்தால் அது பெரும்பாலும் தைராய்டு கட்டியாக இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்வதன் மூலமே கண்டறிய முடியும். ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்துவிட்டால் நோய் பாதிப்பின் வீரியத்தை கட்டுப்படுத்திவிடலாம்.
கண்பார்வை பரிசோதனை
பெண்கள் பலரும் கண் பார்வை பரிசோதனை மேற்கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. அதன் அவசியத்தை புரிந்து கொள்வதுமில்லை. கண் பார்வையில் சிறு குறைபாடு தென்படும்போதே கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்திவிடுகிறார்கள்.
நாளடைவில் கண் பார்வை குறைபாடு பிரச்சினை அதிகரிக்க தொடங்கிவிடுகிறது. ஆண்டுக்கு ஒருமுறையாவது கண் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. கண்ணாடி அணியுமாறு மருத்துவர் பரிந்துரைத்த நபர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
எலும்பு அடர்த்தி சோதனை
எலும்புகள் பலவீனம் அடைந்தால் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். எலும்புகளின் அடர்த்தியில் மாறுபாடு ஏற்படும்போது கடுமையான விளைவுகளை அனுபவிக்க நேரிடும். எலும்பின் அடர்த்தியை முன்கூட்டியே பரிசோதனை செய்து அறிந்து கொண்டால் இந்த நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.
பெண்கள் 5 வருடங்களுக்கு ஒருமுறை இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. அதிலும் 65 வயதை கடந்த பெண்கள் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாதவிடாய் நிற்கும் காலகட்டமான மெனோபாஸ் சமயத்தில் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்.
- நல்ல தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
- சென்னையில் தினமும் சராசரியாக 80 பேருக்கு தொற்று ஏற்படுகிறது. உள்நோயாளியாக பெரிய அளவில் யாரும் சேரவில்லை.
சென்னை:
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று எழும்பூர் சி.டி.நாயகம் பள்ளியில் மெட்ராஸ் ஐ பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார்.
பருவமழைக்கு முன்பு கண் நோய் வருவது இயல்புதான். அதே நேரம் இயல்பைவிட குறைக்கும் நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.
சென்னையில் பள்ளிகளில் படிக்கும் 12 லட்சம் குழந்தைகளுக்கும் இன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் மெட்ராஸ் ஐ கண் பரிசோதனை நடத்தப்படும்.
நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். நல்ல தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
தொற்று ஏற்பட்டவர்கள் மற்றவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். கடந்த 2 மாதங்களாக குஜராத், கோவா, ராஜஸ்தான் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பரவி வருகிறது. இதற்காக அச்சப்பட தேவையில்லை.
சென்னையில் தினமும் சராசரியாக 80 பேருக்கு தொற்று ஏற்படுகிறது. உள்நோயாளியாக பெரிய அளவில் யாரும் சேரவில்லை.
தமிழகத்தில் ஜனவரி முதல் தற்போது வரை 4 ஆயிரத்து 48 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். மழைக் காலங்களில் டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவுவது வழக்கமானது. மேலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
திருவாரூரில் இறந்த மருத்துவருக்கு டெங்கு, டைபாய்டு காய்ச்சல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து பரவும் நிபா வைரஸ் தமிழகத்துக்குள் பரவி விடாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் பாதிப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரோட்டரி சங்க தலைவர் ஐஸ்வர்யா ரவிசேகர்தலைமையில் மாபெரும் கண் சிகிச்சை முகாம் இன்று காலை நடந்தது.
- மண்டல உதவி ஆளுநர் காமரா ஜ்முகாமை தொடங்கி வைத்தார்
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டையில் பண்ருட்டி ரோட்டரி சங்க தலைவர் ஐஸ்வர்யா ரவிசேகர்தலைமையில் மாபெரும் கண் சிகிச்சை முகாம் இன்று காலை நடந்தது. ஊராட்சி மன்றதலைவர் ஆறுமுகம், தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.செயலாளர் சதாசிவம் வரவேற்றார்.மண்டல உதவி ஆளுநர் காமரா ஜ்முகாமை தொடங்கி வைத்தார்.பண்ருட்டி ஜெயம் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் புதுவை அரவிந்த் கண்மருத்துவமனை இணைந்துநடத்திய இந்த முகாமில் புதுவை அரவிந்த் கண் மருத்துவ மனை மருத்துவர்கள் கலந்துகொண்டு சிகிச்சைஅளித்தனர். இதில் எஸ்.வி. ஜூவல்லர்ஸ் அதிபர் அருள்,முந்திரி ஏற்றுமதியாளர் பாரதிதாசன் நளபாகம் ராஜா,பூக்கடை பாலமுருகன் காய்கனி சங்கம் சக்திவேல் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்