என் மலர்
நீங்கள் தேடியது "opposition"
- சாமிபிள்ளை தோட்டம் அருகே மதுபானக்கடை அமைக்கப்பட உள்ளது.
- இதனால் அந்த மதுபானக்கடை திறக்கப்படவில்லை.
புதுச்சேரி:
புதுவை கருவடிகுப்பம் கிழக்கு கடற்கரை சாலை சாமிபிள்ளை தோட்டம் அருகே மதுபானக்கடை அமைக்கப்பட உள்ளது.
குடியிருப்புகளை ஒட்டிய மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் மதுபானக்கடை அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மதுபானக்கடை எதிர்ப்பு போராட்டக்குழு அமைப்பை உருவாக்கி பல போராட்டங்களையும் நடத்தி வந்தனர். இதனால் அந்த மதுபானக்கடை திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் மீண்டும் மதுக்கடையை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலை மதுபானக்கடை அருகே போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு வக்கீல் லெனின்துரை தலைமை வகித்தார். இந்தியகம்யூனிஸ்டு சேதுசெல்வம், சுப்பையா, மார்க்சிஸ்டு சத்யா, காங்கிரஸ் வினோத், மற்றும் பார்த்திபன் உட்பட பலர் பங்கேற்றனர். மதுக்கடையை திறக்க அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.
- இந்து முன்னணி அமைப்பாளர் முருகையன் தலைமையில் 9 பேர் காமராஜ் சிலை முன்பு கூடினர்.
- காதலர் தின வாழ்த்து பேனர் வைக்கப்பட்டிருந்தன.
புதுச்சேரி:
புதுவையில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் காமராஜர் சிலை சந்திப்பில் இன்று போராட்டம் நடத்தினர்.
இந்து முன்னணி அமைப்பாளர் முருகையன் தலைமையில் 9 பேர் காமராஜ் சிலை முன்பு கூடினர். அப்போது எதிரில் உள்ள தனியார் நகைக்கடையில் காதலர் தின வாழ்த்து பேனர் வைக்கப்பட்டிருந்தன. அதன் எதிரே சென்று இந்து முன்னணியினர் கோஷமிட்டனர்.
காதலர் தினத்தை வணிகர்கள் ஊக்கப்படுத்தக்கூடாது என கூறி அவர்கள் கோஷமிட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது காதலர் தின வாழ்த்து அட்டையை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து முருகையன் உட்பட 9 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- மனித நேய மக்கள் கட்சி சார்பில் போராட்டம்
- 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பு
கறம்பக்குடி.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது சுலைமான் தலைமையில் சமீபத்தில் கேரளாவில் வெளியாகியுள்ள தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து சுமார் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் எதிர்ப்பை மீறி இந்த படம் திரையரங்குகளில் வெளியிட்டால் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீரழிந்து விடும் என்றும், ஆகவே படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் முன்னிலையில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.
- பள்ளி இடத்தில் ஊராட்சி அலுவலகம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
- சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் கோவிந்தபுத்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான இடத்தில் தற்போது ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு அளவீடு செய்து உள்ளனர். இதனை அறிந்த அந்த கிராம மக்கள், தற்போதுள்ள நடுநிலைப்பள்ளி எதிர்காலத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியாக மாறும்போது, அதற்கு இடம் தேவைப்படும். எனவே அரசு பள்ளிக்கு சொந்தமான இந்த இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டக்கூடாது என்றும், அதனை வேறு இடத்தில் கட்ட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மனு அளித்துள்ளனர்.இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பள்ளிக்கு சொந்தமான இடத்திலேயே ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு வேலைகள் நடைபெற்று வருவதை அறிந்த அந்த கிராம மக்கள் நேற்று காலை ஒன்று கூடி கோவிந்தபுத்தூர் கிராமத்தில் முத்துவாஞ்சேரி தா.பழுர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன்பேரில், கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பாட்னா கூட்டத்தில் அனைத்து ஊழல்வாதிகளும் கைகோர்த்தனர்
- ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில் இருந்து தப்பிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றாக முயற்சி செய்கின்றன
பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் 5 வந்தே பாரத் ரெயில்களை மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவற்றில் 2 ரெயில்களை மத்திய பிரதேசதிற்கானது.
அதற்கு பிறகு பா.ஜ.க. 'பூத்' ஊழியர்களுடன் உரையாடியபோது, மோடி, எதிர்கட்சிகளை மிகவும் கடுமையாக விமர்சித்தார். இதில் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து விமர்சித்து அவர் கூறியதாவது:-
இப்போதெல்லாம், ஒரு புதிய வார்த்தை பிரபலமாகி இருக்கிறது. அந்த வார்த்தை என்னவென்றால் உத்தரவாதம். இதனை ஊழல் பற்றிய உத்தரவாதம் (எதிர்கட்சிகளின் ஒற்றுமை) என்று மக்களுக்குச் சொல்ல வேண்டியது பா.ஜ.க.வினர்களின் பொறுப்பு. இது 'லட்சம் கோடி ஊழல்' பற்றிய உத்தரவாதம்.
சில நாட்களுக்கு முன் இவர்கள் (எதிர்கட்சிகள்) அனைவரும் கூடிய 'போட்டோ-ஆப்' நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இவர்கள் அனைவரும் சேர்ந்ததிலிருந்தே, குறைந்தது ரூ.20 லட்சம் கோடி ஊழல் நடப்பது உறுதி என்பதை நீங்கள் உணர்வீர்கள். இதில் காங்கிரஸ் மட்டுமே பல லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது.
பாட்னா கூட்டத்தில் அனைத்து ஊழல்வாதிகளும் கைகோர்த்தனர். ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில் இருந்து தப்பிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றாக முயற்சி செய்கின்றன. ஊழல் தலைவர்கள் ஒருவரையொருவர் காப்பாற்ற முயற்சிக்கின்றனர்.
எதிர்க்கட்சிகள் 'உத்தரவாதம்' கொடுப்பதுபோல், அனைவருக்கும் நான் ஒரு 'உத்தரவாதம்' தருகிறேன். அது என்னவென்றால், நான் அவர்களில் (ஊழலில் ஈடுபட்டவர்கள்) யாரையும் விட்டு வைக்க மாட்டேன். ஒவ்வொரு மோசடியாளரையும் நான் கடுமையாக தண்டிப்பேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜூன் 23-ந்தேதி பாட்னாவில் நிதிஷ் குமார் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அந்த எதிர்க்கட்சி கூட்டத்தை மனவில் வைத்து மோடி இவ்வாறு தனது கடுமையனா விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
- குளித்தலை நகர புறவழிச்சாலையில் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்
- அதிகாரியிடம் மனு அளிக்க உள்ளனர்
கரூர்
குளித்தலையில் அண்ணா நகர் பகுதியில் குளித்தலை நூலகம் முதல் ரெயில்வே கேட் வரை செல்லும் நகர புறவழிச்சாலையில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் தற்போது நடைபாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த புறவழிச்சாலையில் நடைபாதை அமைக்கும் இடத்தில் சாலையோரம் பல்வேறு மரங்கள் சமூக ஆர்வலர்கள் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பு நட்டு வளர்க்கப்பட்டு தற்போது இந்த மரங்கள் நன்கு வளர்ந்த நிலையில் உள்ளது.இந்தநிலையில் அந்த பகுதியில் நடைபாதை பணிகள் நடப்பதால் அங்குள்ள மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. மேலும் சில மரங்களில் குறியீடு இடப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று அந்த பகுதிக்கு சென்ற சமூக ஆர்வலர்கள் மற்றும் சில அமைப்புகளை சேர்ந்த நபர்கள் வெட்டப்பட்ட மரத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி பால் ஊற்றி மரங்களை வெட்டாமல் பாதுகாக்க வேண்டும் என தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். மேலும் மரங்களை வெட்டாமல் பணிகள் மேற்கொள்ள அதிகாரியிடம் மனு அளிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு வரவில்லை
- பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் அழைக்கவில்லை
காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ள எதிர்க்கட்சிகள் கூட்டம் கர்நாடகாவில் இன்றும் நாளையும் நடைபெற இருக்கிறது. இதற்காக 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர்கள் கர்நாடக மாநிலம் புறப்பட்ட வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், கர்நாடகாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் ஹெச்.டி. குமாரசாமி கூறுகையில் ''எதிர்க்கட்சிகள் மதசார்பற்ற ஜனதா தளத்தை அவர்களின் ஒரு பகுதியாக கருதவே இல்லை. அதனால், மெகா கூட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் இருக்குமா? என்பதற்கான கேள்விக்கே இடமில்லை'' என்றார்.
பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அழைப்பு வந்ததா? என்ற கேள்விக்கு, ''எங்களை அவர்கள் அழைக்கவில்லை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்'' என்றார்.
- எதிர்க்கட்சிகள் முதல் கூட்டத்தில் 14 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்
- கர்நாடகாவில் நடைபெறும் 2-வது கூட்டத்தில் 24 கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு
மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. கூட்டணி என்றாலும் தனிப்பெரும்பான்மை என்பதால் பா.ஜனதா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இரண்டு முறை தொடர்ந்து மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த முறையும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.
மோடி ஹாட்ரிக் வெற்றி பெற்றால், அது நாட்டிற்கு ஆபத்து எனக் கூறிவரும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலை நடைபெற்று வருகிறது. இதற்கான முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெறுகிறது. அதில் 14 கட்சிகள் இடம் பிடித்திருந்தன. இன்றும், நாளையும் கர்நாடகாவில் நடைபெற இருக்கும் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு போட்டியாக பா.ஜனதா நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை டெல்லியில் நடத்துகிறது. இதில் 30 கட்சிகள் கலந்து கொள்ளும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் பா.ஜனதாவின் இந்த திடீர் கூட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் ''பிரதமர் மோடி, பா.ஜனதா மலைத்துப் போய் உள்ளனர். பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பிறகு, பிரதமர் திடீரென தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து யோசித்துள்ளார்.
அந்த கூட்டணிக்கு மூச்சு கொடுத்து உயிர்கொடுக்க முயற்சிக்கிறார். திடீரென, நாளை டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவே இதுவாகும்'' என்றார்.
- புதுக்கோட்டை பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்
- கர்நாடக முதல்வரிடம், தமிழக முதல்வர் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று குற்றச்சாட்டு
புதுக்கோட்டை,
கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி மேகதாது அணை கட்டப்படும் என்று அறிவித்துள்ளதை கண்டித்தும், இதனை எதிர்க்காத தமிழக தி.மு.க. அரசை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் இயக்கம் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் புதுக்கோட்டையில் பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.பின்னர் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-கர்நாடகாவில் தற்போது ஆட்சி புரியும் காங்கிரஸ் கட்சி தங்களது தேர்தல் அறிக்கையில் காவிரிஆற்றில் மேகதாது இடத்தில் புதிய தடுப்பணை கட்டப்படும் என தெரிவித்துள்ளனர் . அதற்கு தமிழக முதல்வர் கண்டனம்தெரிவிக்காமல் அங்கு சென்று வந்துள்ளார். தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டார். காவிரி விசயத்தை அரசியலாக்க விரும்பவில்லை. தமிழக அமைச்சர் கள் முதல்வருக்கு அழுத்தம் தரவேண்டும். இல்லையெனில் புதுக்கோட் டையில் அமைச்சர் ரகுபதி வீட்டு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கர்நாடகாவில் 2012 பாஜக அரசு அணை கட்டும் பணிகளை ஆரம்பித்த போது அதற்கு தமிழக பாஜக சார்பாக எதிர்ப்பு தெரிவித்தோம் என்றார்.பேட்டியின் போது மாவட்ட பொதுச் செயலாளர் குருஸ்ரீராம், மாவட்ட பார்வையாளர் பழ.செல்வம், மாநில பொதுக்குழு மயில் சுதாகர், தரவு மேலாண்மை மாநில செயலாளர் கார்த்திகேயன், நகரத்தலைவர் சக்திவேல், ஊடகப்பிரிவு தலைவர் கோவேந்திரன், மாவட்ட செயலாளர் சுந்தரவேல், பிரசாத் உட்பட பலர் இருந்தனர்.
- மத்திய அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா எனப் பெயர் வைத்துள்ளது
- நாட்டின் பெயரை வைத்துள்ளதால் பொதுநல மனு
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இரண்டு முறை பிரதமராகிய மோடி, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வகையில் வியூகம் வகுத்து வருகிறார். இந்தமுறை எப்படியாவது பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதனால் மோடிக்கு எதிரான எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக பீகாரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் கர்நாடகாவில் நடைபெற்றது. அப்போது இந்த கூட்டணிக்கு I.N.D.I.A. எனப் பெயர் வைக்கப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனம் கிளம்பியது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் இதற்கு எதிராக பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பொது நல மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, இதுகுறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசு, மத்திய தேர்தல் ஆணையம், பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட நாளில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை
- எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும்போது பிரதமர் மோடி ஊழல், வாரிசு அரசியல் ஆகியவற்றை கையில் எடுப்பார்
மகாத்மா காந்தியால் 1942-ல் தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக வெள்ளையனே வெளியேறு இயக்க தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கிண்டல் செய்யும் வகையில் டுவிட்டரில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-
வெள்ளையனே வெளியேறு இயக்க தினம் அனுசரிக்கப்படும் நாளில், அர்ப்பணித்த போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ், காலனித்துவம் முடிவுக்கு வர இது முக்கிய பங்காற்றியது.
இன்று இந்தியா ஒரே வார்த்தையைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. அது ஊழலே வெளியேறு. வாரிசு அரசியலே வெளியேறு. தங்கள் நலனுக்காக சமாதானம் செய்து கொள்ளும் முடிவே வெளியேறு என்பதுதான்.
இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் என்றாலே ஊழல், வாரிசு அரசியல், சமாதானம் என்பதுதான் என பிரதமர் மோடி அடிக்கடி குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வெள்ளையனே வெளியேறு தினத்தில் எதிர்க்கட்சிகளை கிண்டல் செய்துள்ளார்.
- ஸ்ரீதர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவர், தினமும் அனிதாவிற்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தார்.
- மேலும், தான் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை.
விழுப்புரம்:
புதுவை மாநிலம் திருக்கனூர் பகுதியை சேர்ந்தவர் அனிதா (வயது 28). திருமணமானவர். வீட்டு வேலைகளை கவனித்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக புதிய எண்ணில் இருந்து போன் வந்தது. செல்போனை எடுத்து பேசியபோது, எதிர்தரப்பில் இருந்து ஆண் நபரின் குரல் கேட்டது. அவர் எண்களை தவறாக போட்டதால் தனக்கு போன் வந்ததை உணர்ந்த அனிதா, அவரிடம் அதனைக் கூறி தொடர்பை துண்டித்துள்ளார். இருந்தபோதும் அவர் தினமும் போன் செய்துள்ளார். புதுவை வில்லியனூர் அடுத்த சுல்தான்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவர், தினமும் அனிதாவிற்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தார். இது நட்பாக மாறி நாளடைவில் கள்ள க்காதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து இருவரும் சந்திக்க திட்டமிட்டு, நேற்று ஆரோவில் பகுதியில் உள்ள முந்திரி காட்டில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அனிதா திடீரென மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து கண்விழித்த போது, கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை காணவில்லை. மேலும், தான் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அனிதா, ஸ்ரீதருக்கு போன் செய்துள்ளார். அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பதறிப்போன அனிதா, இது குறித்து கோட்டக்குப்பம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய ஸ்ரீதரை போலீசார் தேடி வருகின்றனர்.