என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Orange Alert"
- மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
திருவனந்தபுரம்:
வங்கக்கடலில் உருவாகி யிருக்கும் "டானா" புயல் தீவிர புயலாக மாறியிருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
"டானா" புயல் காரண மாக கேரள மாநிலத்திலும் மழை பெய்து வருகிறது. மத்திய கிழக்கு அரபிக் கடலில் கர்நாடகா கடற் கரை பகுதியில் புயல் நிலை கொண்டிருப்பதன் காரணமாகவே கேரளாவில் மழை பெய்து வருகிறது.
அங்கு வருகிற 27-ந்தேதி வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
கோட்டயம், எர்ணாகுளம் இடுக்கி, திருச்சூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட்டும், திருவனந்த புரம், கொல்லம், பத்தினம் திட்டா, ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலார்ட்டும் விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த மாவட்டங்களில் மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
- 12-ந்தேதி 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.
- 13-ந்தேதி 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
லட்சத்தீவு மற்றும் அதனை யொட்டிய தென்கிழக்குப் அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இது அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு இருப்பதால் குறிப்பாக தமிழகம், லட்சத்தீவு மற்றும் அரபிக் கடல் போன்ற பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருப்பூர், தஞ்சாவூர், கோவை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,
மேலும் 5 மாவட்டங்களுக்கு 12-ந்தேதி ஆரஞ்சு அலர்ட் விடுத்திருக்கிறது. நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு 12-ந்தேதி கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேமூட்டத்துடன் காணப்படும், பரவலாக மழைக்கு வாய்ப்பு.
13-ந்தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், ஆகிய 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- மத்தியமேற்கு-தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- நாளை முதல் வரும் 11ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யும்.
தெற்கு ஆந்திரா வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு-தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று (06-10-2024)தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழையும், சேலம், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், வட தமிழ்நாட்டிற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாளை முதல் வரும் 11ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சுற்றுலா மையங்களுக்கு செல்ல தடை.
- மலையோர பகுதிகளில் இரவுநேர பயணத்துக்கு தடை.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதனால் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக தினமும் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் பொதுமக்கள் தங்குவதற்காக நிவாரண முகாம்களும் தயாராக வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்தநிலையில் கேரள மாநிலம் முழுவதும் கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் மட்டு மின்றி பல இடங்களில் சாலைகளிலும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழை காரணமாக பல மாவட்டங்ளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
கோழிக்கோடு மாவட் டத்தில் பல இடங்களல் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஆலப்புழா மற்றும் கண்ணூரில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. இடுக்கி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலையோர பகுதிகளில் இரவுநேர பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கோட்டயம் மாவட்டத்தில் சுற்றுலா மையங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மாநிலம் முழுவதும் கனமழை நீடித்து வரும் நிலையில் பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி, கேட்டயம், எர்ணா குளம்ஆகிய மாவட்டங்களிலும், கண்ணூர் மாவட்டத்தில் இரிட்டி தாலுகாவிலும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மலைபபகுதிகளில் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. கனமழை தொடரும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் நடப்பு தென்மேற்கு பருவமழை சீசனில் கேரளாவில் அதிகபட்ச மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள் ளது. 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் சராசரியாக 69.6 மில்லிமீட்டரும், அதிகபட்சமாக கோட்ட யத்தில் 103 மில்லிமீட்டரும் மழை பெய்திருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
- தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
- வயநாடு, இடுக்கி, ஆலப்புழா, பத்தனம்திட்ட ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று, 5 மற்றும் 6-ம் தேதி ஆகிய 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இதேபோல், கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், வயநாடு, இடுக்கி, ஆலப்புழா, பத்தனம்திட்ட ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சுள் எச்சரிக்கையும் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- வங்கக் கடல் பகுதிகளில் 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்
சென்னை:
வட தமிழக-தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நேற்று காலை 5.30 மணிக்கு காற்றழுத்தத் தாழ்வு உருவானது. இது வடகிழக்கு திசையில் நகா்ந்து வருகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும், அதன்பிறகு, மேலும் வலுப்பெற்று மே 25-ந் தேதி புயலாக உருவெடுக்கும். இதுபோல தெற்கு கேரளம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மீதும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்த நிகழ்வுகள் காரணமாக இன்று முதல் மே 28-ந் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருப்பூா், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை யும் பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் நாளை (வெள்ளிக்கிழமை) நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரை இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடா்ச்சியாக மழை பெய்து வரும் காரணத்தால் வெப்பம் சற்று குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி ஈரோட்டில் அதிகபட்சமாக 99.68 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
சென்னையில் நேற்று புறநகா் பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை பெய்தது. அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி பாரன்ஹீட்டையொட்டியே இருக்கும்.
வங்கக் கடலில் புயல் உருவானாலும் அது வடக்கு நோக்கி நகர நகர தமிழகத்தில் வெப்பநிலை உயரும். அதாவது இன்று முதல் மே 26-ந் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, குமரிக் கடல், மன்னாா் வளைகுடா, தென் தமிழக வங்கக் கடல் பகுதிகளில் 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- கேரளாவில் இன்றும் நாளையும் அதி கனமழை பெய்வதற்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 24-ந்தேதி மற்றும் 25-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கேரளாவில் இன்றும் நாளையும் அதி கனமழை பெய்வதற்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
- மலை-கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
திருவனந்தபுரம் நகரில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. திருவனந்தபுரம் சாக்கா தோப்பமுடுக்கு பகுதியை சேர்ந்த விக்ரமன்(வயது82) என்ற முதியவர் தனது வீட்டின் முன் தேங்கியிருந்த தண்ணீரில் இறந்துகிடந்தார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்தாரா? அல்லது மழை தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் மேலும் சில நாட்கள் கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது.
இந்நிலையில் கேரளாவில் 14 மாவட்டங்களில் இன்று முதல் புதன்கிழமை வரை பலத்த மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. இதனால் பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் அதிக அளவு மழை பெய்யும் என்பதால் நகர பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் மலையை ஒட்டிய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட லாம் என்பதால் மலை-கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- கேரளாவில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு அதி கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- கேரளாவில் உள்ள பட்டினம்திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை
கேரளாவில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு அதி கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2 மாவட்டமங்களுக்கு அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படிக், இன்று (மே 14) இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் உள்ள பட்டினம்திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம்,எர்ணாகுளம், மாலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் திருவனந்தபுரம், பட்டினம்திட்டா, கொல்லம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மே 15 ஆம் தேதியும், பட்டினம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, மாலப்புரம் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மே 16 ஆம் தேதியும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து திருவனந்தபுரம், பட்டினம்திட்டா, இடுக்கி, மாலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு மே 17 ஆம் தேதி மற்றும் மீண்டும் திருவனந்தபுரம், கொல்லம், பட்டினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு மே 18 ஆம் தேதியும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- வரும் 12ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
- சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை.
வடதமிழக உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு ஆரெஞ்சு அலர்ட் விடுத்தும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 15 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான ஆரெஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 12ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருபத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதனால், இன்றும், நாளையும் ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் வெப்ப அலை மேலும் தீவிரமடையும் என எச்சரிக்கை.
- தமிழக மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை.
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, மே 4ம் தேதி முதல் மே 6ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வெப்ப அலை மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, பெரம்பலூர், கரூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களுக்கு தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தமிழகத்தில் 27-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
- தாழ்வான பகுதிகள், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் 27-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று (22-ந்தேதி) அநேக இடங்களில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில், சென்னை உள்பட 20 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, வேலூர், சிவகங்கை, திண்டுக்கல், கோவை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்