search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "organization"

    • ராஜபாளையத்தில் ம.தி.மு.க. அமைப்பு தேர்தல் நடந்தது.
    • வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. அமைப்பு தேர்தல் ராஐபாளையம் திருவள்ளுவர் மன்றத்தில் நடைபெற்றது. ராஜபாளையம் நகரச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் மதியழகன் விருதுநகர் மாவட்ட தேர்தல் அதிகாரி கல்லத்தியானிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

    ராஜபாளையம் நகர அவைத்தலைவராக சேது.இன்பமணி, பொருளாளராக பிச்சைக்கனி, துணைச்செயலாளர்களாக அக்பர் அலி, லிங்கம், பூபதி மற்றும் மாவட்ட பிரதிநிதிகளாக புஷ்பவேல், ஞானசேகரன், குருமூர்த்தி ஆகியோரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இதில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ரகுராமன், மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் குமரேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் கம்மாபட்டி ரவிச்சந்திரன், தலைமை கழக பேச்சாளர் பாண்டுரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு மோகன் குமார–மங்கலம் மருத்துவமனை நுழைவாயில் அருகில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி வேண்டி சேலம் மாவட்டம் மருளையம்பாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மனு அளித்திருந்தார்.
    • இந்த மனுவை மாநகராட்சி ஆணையாளர் முன்னிலையில் மேயர் ராமச்சந்திரன் நேரில் வழங்கினார்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கோட்டம் எண்.29 நாவலர் நெடுஞ்செழியன் சாலை அரசு மோகன் குமார–மங்கலம் மருத்துவமனை நுழைவாயில் அருகில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி வேண்டி சேலம் மாவட்டம் மருளையம்பாளையத்தை சேர்ந்த ஞானம்மாள் என்ற மாற்றுத்திறனாளி மனு அளித்திருந்தார். மனுவினை பரிசீலித்து ஞானம்மாளுக்கு ஆவின் பாலகம் அமைக்க அனுமதி அளித்து அதற்கான ஆணையை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் மேயர் ராமச்சந்திரன் நேரில் வழங்கினார். அப்போது அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும், வாகனங்களுக்கும் எவ்வித இடையூறும் இன்றி ஆவின் பாலகம் அமைத்திட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    அனுமதி ஆணை பெற்ற மாற்றுத்திறனாளி ஞானம்மாள் கூறுகையில், எனக்கு அரசு மருத்துவமனை நுழைவாயில் அருகில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி அளித்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

    • தமிழ்நாடு அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சேர்நதவர்களுக்கு புதிய நலத் திட்டங்களை நடை முறைப்படுத்த வாரிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
    • தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பயிற்சி உதவித்தொகை வழங்குதல் போன்ற புதிய நலத் திட்டங்களில் பயனடைய தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    • தொழில் முனைவோர் அமைப்பு தொடக்க விழா நடந்தது.
    • ராமநாதபுரத்தைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள், தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வேலுமனோகரன் பெண்கள் கல்லூரியில் புத்தொழில் தொழில் முனைவோர் அமைப்பின் தொடக்க விழா நடந்தது.இந்நிகழ்ச்சியில் முதல்வர் காஞ்சனா வரவேற்றார்.

    அழகப்பா பல்கலைக்கழகத்தின் கல்லூரி வளர்ச்சி குழு முதன்மையர் சிவகுமார் இணையம் மூலம் கலந்து கொண்டு தொடக்க உரை ஆற்றினார். கல்லூரி செயலர் சகுந்தலா பார்த்தசாரதி வாழ்த்துரை வழங்கினார். ஆஸ்வா டெக்னாலஜிஸ் நிறுவனர் வானதி அமலன் புத்தொழில் தொடக்கம் குறித்தும், மாணவர்களுக்கு இந்த திட்டம் மூலம் எவ்வாறு பயனுள்ளதாக அமையக்கூடும் என்பது குறித்தும் பேசினார். ''இப்போ பே'' தலைமை நிர்வாக அதிகாரி மோகன் பேசினார். நிகழ்ச்சியில் பேராசிரியர் கிரிஜா நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை புத்தொழில் தொழில் முனைவோர் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அய்யப்பன் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள், தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

    • கவுந்தப்பாடி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு 35-வது பொதுக்குழு கூட்டம் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு 35-வது பொதுக்குழு கூட்டம் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு துணைத்தலைவர் டாக்டர்.அருணாசலம் தலைமை தாங்கினார். உழவர் விவாதக்குழு அமைப்பாளர் வெங்கடாசலபதி வரவேற்றுப்பேசினார். முன்னாள் செயலாளர் ஆசிரியர் விஸ்வநாதன், துணைச்செயலளர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கவுந்தப்பாடி நுகர்வோர் அமைப்பு செயலாளர் விஸ்வநாதன் ஆண்டு அறிக்கை வாசித்தார். பொருளாளர் செல்லமுத்து வரவு-செலவு கணக்கு வாசித்தார். மாநில அளவில் கரும்பு விளைச்சலில் சாதனைபடைத்த அரியப்பம்பாளையம் விவசாயி குமார், வேம்பத்தி விவசாயி ஈஸ்வரன் ஆகியோருக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

    பெங்களூரில் இந்திய அளவில் நடைபெற்ற தட்டு எறியும் போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலயாவில் நடைபெறும் சர்வதேசஅளவிலான தட்டெறிதல் போட்டிக்கு தேர்வு பெற்ற தலைமை காவலர் சரவணக்குமார், சென்னை நேருவிளையாட்டு அரங்கில் இந்திய அளவில் நடைபெற்ற 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 2-ம் பிடித்த சண்முகம் ஆகியோருக்கு பரிசுவழங்கி பாராட்டப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சித்தா டாக்டர் வெங்கடாசலம், ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் பாலசுப்பிரமணியம், சலங்கபாளையம் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் ராமலிங்கம், தலைைமயாசிரியர் வெங்கடேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவரக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் நேற்று சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்கள்.
    சென்னை:

    பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவரக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் நேற்று சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்கள். பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 10 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைபார்க்கிறார்கள். இப்போது நடைமுறையில் உள்ள சி.பி.எஸ். பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவரவேண்டும். 7-வது ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்யவேண்டும்.

    சிறப்பு கால முறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் மற்றும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் சென்னை எழிலகத்தில் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்கள்.

    இந்த உண்ணாவிரதத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மு.சுப்பிரமணியன், அ.மாயவன், க.மீனாட்சிசுந்தரம், இரா.தாஸ், செ.முத்துசாமி, வெங்கடேசன், அன்பரசு, தாமோதரன், சுரேஷ், செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் மற்றும் மோசஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ஒருங்கிணைப்பாளர் தாஸ் கூறுகையில் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில் பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவருவோம் என்றார். அவர் கூறியதை வலியுறுத்துகிறோம். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், முற்றுகை போராட்டம், கோட்டைநோக்கி போராட்டம் என்று பல போராட்டங்கள் நடத்தி உள்ளோம். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே இந்த போராட்டம் அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டம். எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை இந்த உண்ணாவிரதம் நீடிக்கும் என்றார். 
    ×