search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pa Sivanthi Aditanar"

    • சிறப்பு விருந்தினராக இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்திர பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    சென்னை:

    சென்னையை அடுத்த புழலில் ஸ்ரீ நல்லழகு நாடார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து பள்ளி வளாகத்தில் பத்மஸ்ரீ டாக்டர்.பா. சிவந்தி ஆதித்தனாரின் 88 - வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    சென்னை வாழ் நாடார்கள் சங்க துணை தலைவர் கரு.சி. சின்னத்துரை நாடார் தலைமையில் டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக பாலிடெக்னிக் கல்லூரியின் செயலரும் பள்ளியின் நிர்வாக அதிகாரியுமான எஸ். கோவிந்தசாமி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்திர பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    விழாவில் சென்னை வாழ் நாடார்கள் சங்கத்தின் செயலாளர்கள் செல்லத்துரை, எல். சி. மனோகரன், பாலிடெக்னிக் கமிட்டி உறுப்பினர்கள் எஸ். எஸ். பாண்டியன், நாகராஜன், செல்வகுமார், அட்மிஷன் கமிட்டி உறுப்பினர் சிவாஜி, புழல் சங்கம், செங்குன்றம் வட்டார நாடார் ஐக்கிய சங்கம், செங்குன்றம் வட்டார நாடார் இளைஞர் அணி, காந்தி நகர் நாடார் சங்கம், செங்குன்றம் சுற்று வட்டார நாடார்கள் முன்னேற்ற சங்கம், சூளைமேடு நாடார் சங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், கல்லூரி மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டி, கவிதை போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோருடன் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
    • உங்கள் பள்ளி வெள்ளி விழா நடைபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே வருகிறேன்.

    சென்னை:

    சென்னை மணலியில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 40 பேர் இன்று ஆர்.எஸ்.பி. மற்றும் பேண்டு வாத்தியக் குழு சீருடையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

    அவர்களுடன் பள்ளி தலைமை ஆசிரியை ஜெக ஜோதி, உதவி தலைமை ஆசிரியை சித்ரா ஜெயசீலி, ஆசிரியைகள் ஷீஜா, சுஜாதா, கல்விக்குழு உறுப்பினர் காளியப்பன், மணலி எம்.பாலா, செல்வராஜ சோழன் ஆகியோரும், மாணவிகளுடன் வந்து மரியாதை செலுத்தினார்கள்.

    பின்னர் 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோருக்கு மாணவிகள் இனிப்பு வழங்கினார்கள். பின்னர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோருடன் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    அப்போது 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனுடன் ஆசிரியைகளும் மாணவிகளும் கலந்துரையாடினார்கள். அப்போது 'அய்யா பா.சிவந்தி ஆதித்தனார் தொடங்கி வைத்த மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வெள்ளி விழா கொண்டாட இருக்கிறது.

    இந்த நேரத்தில் பள்ளிக்கு நீங்கள் வருகை தந்தால் பெருமையாக இருக்கும். 1999-ம் ஆண்டு பள்ளியை அய்யா பா.சிவந்தி ஆதித்தனார் திறந்து வைத்த போது இந்த பள்ளி மென்மேலும் வளர்ச்சிப் பெற்று கல்லூரியாக மாற வேண்டும் என்று விரும்பினார். அதற்கான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். நீங்களும் மனது வைத்தால் அது விரைவில் நிறைவேறும்' என்று தெரிவித்தனர்.

    இதற்கு பதில் அளித்த சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், "உங்கள் பள்ளி வெள்ளி விழா நடைபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே வருகிறேன். அப்போது பள்ளி மைதானம் மற்றும் விளையாட்டுகளுக்கு தேவையான உதவிகளை செய்து தருகிறேன்" என்று உறுதி அளித்தார்.

    • ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில் மணி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘இ நூலகத்தை’ அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
    • நாம் இந்தியர் கட்சி சார்பாக மாநில பொருளாளர் பேரூரணி ஜெயகணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருச்செந்தூர்:

    பத்திரிகை, கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, பொதுசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனைகள் படைத்து, முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டினத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பில் மணி மண்டபம் திறக்கப்பட்டது.

    மேலும் அவரது பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 24-ந் தேதி ஆண்டு தோறும் அரசு விழாவாக கொண்டா டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் இன்று அவரது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

    அரசு சார்பில் மணிமண்டபத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ., தி.மு.க. மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில் மணி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 'இ நூலகத்தை' அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

    இதில் ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் மேலாளர் வெங்கட் ராமராஜன், கல்லூரி நிறுவன செயலாளர் நாராயணராஜன், ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    காயாமொழி ஊர் பொது மக்கள் சார்பாக ஓய்வு பெற்ற கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் பால சுப்பிரமணிய ஆதித்தன் தலைமையில் வரதராஜ ஆதித்தன், ராஜன் ஆதித்தன், ராமகிருஷ்ணன் ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தொழில் அதிபர் தண்டு பத்து ஜெயராமன் மகன்களான ரகுராம், சிவராமன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நாம் இந்தியர் கட்சி சார்பாக மாநில பொருளாளர் பேரூரணி ஜெயகணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் மாநில தொழிற் சங்க தலைவர் சரவண குமார், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் உடையார், தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், துணை செயலாளர் சின்னத்துரை, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், வேல்சாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுரேஷ் பெருமாள், துணை செயலாளர் பால முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு 10-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். #SivanthiAditanar
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூரில் அரசு சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று கடந்த ஆண்டு தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதைத்தொடர்ந்து திருச்செந்தூரில் தூத்துக்குடி பிரதான சாலையில் உள்ள ஆதித்தனார் கல்லூரி அருகே சிவந்தி அகாடமி வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) காணொலி காட்சி மூலம் மணிமண்டபம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதையொட்டி நேற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி திருச்செந்தூரில் மணிமண்டபம் கட்டப்படும் இடத்தை நேரில் ஆய்வு செய்தார். மேலும் மாதிரி வரைபடத்தையும் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் நடந்த விழாவில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் கட்டப்படும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இதையொட்டி கடந்த ஆகஸ்டு 21-ந் தேதி ரூ.1 கோடியே 34 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டில் உடனடியாக மணிமண்டபம் கட்டப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து வருகிற 10-ந்தேதி காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். திருச்செந்தூரில் நடைபெறும் நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோவிந்தராசு, தாசில்தார் தில்லைபாண்டி, மண்டல துணை தாசில்தார் கோமதி சங்கர், தூத்துக்குடி பொதுப்பணி துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) சுகுமார், இளநிலை பொறியாளர் கணேசன், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன், ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன், திருச்செந்தூர் வருவாய் ஆய்வாளர் மாரியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் செல்வலிங்கம், திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (பஞ்சாயத்து) மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  #SivanthiAditanar
    ×