என் மலர்
நீங்கள் தேடியது "Padma Awardees"
- ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 105 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
- பத்ம விருது பெற்றவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.25,000 மதிப்பூதியம் அளிக்கப்பட உள்ளது.
புவனேஸ்வர்:
கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, பொறியியல், சமூகப்பணி, பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை மற்றும் சாதனைகளுக்காக மத்திய அரசின் சார்பில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 90 பேர் பத்ம ஸ்ரீ, 11 பேர் பத்ம பூஷண் மற்றும் 4 பேர் பத்ம விபூஷண் என மொத்தம் 105 பேர் பத்ம விருதுகளைப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், பத்ம விருது பெற்றவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. இந்த நிதி அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தெலுங்கானா அரசு பத்ம விருது பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஒடிசா மாநிலத்தில் 50க்கும் மேற்பட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
- பத்ம விருது பெற்றவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.30,000 மதிப்பூதியம் அளிக்கப்படுகிறது.
புவனேஸ்வர்:
கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, பொறியியல், சமூகப்பணி, பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை மற்றும் சாதனைகளுக்காக மத்திய அரசின் சார்பில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ஒடிசா மாநிலத்தில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் என மொத்தம் 55 பேர் பத்ம விருதுகளைப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், பத்ம விருது பெற்றவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 30,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. இந்த நிதியால் அரசுக்கு 2 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் எனவும் தெரிவித்துள்ளது.
- நடிகர் அஜித்குமார், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்ட பலர் பத்ம விருது பெற்றுள்ளனர்.
- பத்ம விருது பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் விருதுகளை 139 பேருக்கு மத்திய அரசு நேற்று அறிவித்தது.
இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித்குமார், கிரிக்கெட் வீரர் அஸ்வின், சமையல் கலைஞர் செப் தாமு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பத்ம விருது பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட பத்ம விருது பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாட்டில் இருந்து பத்ம பூஷண் விருதுக்குத் தேர்வாகியுள்ள நடிகர் அஜித்குமார், நல்லி குப்புசாமி, ஷோபனா சந்திரகுமார் ஆகியோருக்கும், பத்ம ஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் அஸ்வின், குருவாயூர் துரை, தாமோதரன், லட்சுமிபதி ராமசுப்பையர், எ.டி.ஸ்ரீனிவாஸ், புரிசை கண்ணப்ப சம்பந்தன், ஆர்.ஜி. சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி.விஸ்வநாதன், வேலு ஆசான் ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
தத்தமது துறைகளில் தாங்கள் மென்மேலும் உயரங்களை அடையவேண்டும், தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கவேண்டும் என வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் 19 பேருக்கு அறிவிக்கப்பட்டது.
- இதில் தெலுங்கு திரைப்பட நடிகர் பாலகிருஷ்ணாவும் ஒருவர் ஆவார்.
புதுடெல்லி:
இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது.
அதில் 7 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 113 பேருக்கு பத்ம ஸ்ரீ உள்பட மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த அஜித்குமார், நடிகை சோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெலுங்கு திரைப்பட நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணாவுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த சமையல்கலை அறிஞர் செஃப் தாமுவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விருது பெற்றவர்களை பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.