search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palace"

    • நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
    • பங்களா மாணவர்களால் சூறையாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தது நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இதையடுத்து வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. ஷேக் ஹசீனா மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


    இந்த நிலையில் ஷேக் ஹசீனாவின் உத்தியோகபூர்வ இல்லமான அரண்மனை அருங்காட்சியகமாக மாற்றப்படுவதாக இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, ஷேக் ஹசீனாவின் தவறான ஆட்சி மற்றும் மக்கள் அவரை ஆட்சியில் இருந்து அகற்றியபோது ஏற்பட்ட கோபத்தின் நினைவுகள் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் என்றார்.


    போராட்டத்தின்போது ஷேக் ஹசீனாவின் பங்களா மாணவர்களால் சூறையாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உதய்பூர் அரண்மனைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை புரிந்தார்.
    • ஜனாதிபதியின் அரண்மனை வருகையை மேவார் அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் விமர்சித்துள்ளனர்.

    அக்டோபர் 3 அன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்குச் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, மோகன்லால் சுகாடியா பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் உதய்பூர் அரண்மனைக்கு வருகை புரிந்தார்.

    அப்போது அரச குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் லக்ஷ்யராஜ் சிங் மேவார் மற்றும் அவரது மனைவி நிவ்ரிதி குமாரி, ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்று அரண்மனையின் வரலாறு மற்றும் மரபுகளை விளக்கினர். ராஜஸ்தான் கவர்னர் ஹரிபாவ் பாக்டே, துணை முதல்வர் பிரேம் சந்த் பைர்வா ஆகியோரும் ஜனாதிபதியுடன் உடன் இருந்தனர்.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அரண்மனை வருகையை மேவார் அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜ்சமந்த் தொகுதி எம்பி மஹிமா குமாரி மேவார் மற்றும் அவரது கணவரும் நாத்வாரா எம்எல்ஏ விஸ்வராஜ் சிங் மேவார் ஆகிய 2 பாஜக பிரதிநிதிகளும் திரவுபதி முர்முவின் அரண்மனை வருகையை விமர்சித்துள்ளனர்.

    அரண்மனையின் சொத்து தகராறு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அரண்மனைக்கு ஜனாதிபதி வந்தது முறையல்ல என்று அவர்கள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக பேசிய மஹிமா குமாரி மேவார், "அரண்மனையின் சொத்து தகராறு தொடர்பாக ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு முன்கூட்டியே தெரிவித்து அவரது வருகையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினேன். ஆனாலும் அவர் அரண்மனைக்கு வருகை புரிந்தார். இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க உதய்பூர் மாவட்ட ஆட்சியரைதொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை" என்று தெரிவித்தார்.

    ஜனாதிபதியின் வருகை தனிப்பட்ட முறையிலானது என்றும் இதில் மாவட்ட நிர்வாகம் தலையிடவில்லை என்றும் உதய்பூர் ஆட்சியர் அரவிந்த் குமார் போஸ்வால் விளக்கம் அளித்தார்.

    • அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளவைகள் குறித்து கலெக்டர் எடுத்து கூறினார்.
    • தஞ்சாவூர் அரண்மனை, பூம்புகார் விற்பனை நிலையம் ஆகியவற்றிலும் ஆய்வு நடத்தினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

    நில அளவீட்டு துறை காட்சியறை, கைவினைப் பொருட்கள் காட்சியறை, ராஜாளி பூங்கா உள்ளிட்ட பலவற்றை ஆய்வு செய்தார். அவருக்கு அருங்காட்சி யகத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து விதமான அம்சங்கள் குறித்தும் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் எடுத்துக் கூறினார்.

    மேலும் அருங்காட்சி யத்தை தினமும் வரும் சுற்றுலா பயணிகள் , பொதுமக்கள் எண்ணிக்கை குறித்தும் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன், தஞ்சாவூர் அரண்மனை, பூம்புகார் விற்பனை நிலையம், தமிழ்நாடு ஓட்டல் ஆகியவற்றில் ஆய்வு நடத்தினார்.

    இந்த ஆய்வின் போது சுற்றுலா வளர்ச்சி மேலாண் இயக்குனர் கீதா, துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், வருவாய் கோட்டாட்சியர் பழனிவேல், மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தாசில்தார் சக்திவேல், அருங்காட்சியக நிர்வாக அலுவலர் குருமூர்த்தி, ஒன்றிய செயலாளர் முரசொலி, பொறியாளர் முத்துக்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×