என் மலர்
நீங்கள் தேடியது "Palai"
- தீபாவளி பண்டிகையையொட்டி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் ராம் ஜவகர் வெளியூர் சென்றுவிட்டார்
- 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் உள்ளிட்டவை திருட்டு
நெல்லை:
பாளை கே.டி.சி. நகர் அருகே உள்ள சீனிவாச நகரை சேர்ந்தவர் ராம் ஜவகர்(வயது 57). இவர் அரசு பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.
நகை திருட்டு
தீபாவளி பண்டிகை யையொட்டி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் ராம் ஜவகர் வெளியூர் சென்றுவிட்டார். நேற்று மீண்டும் அவர்கள் வீடு திரும்பினர்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.உடனே அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.
இதுதொடர்பாக ராம் ஜவகர் ஐகிரவுண்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பாளை மகிழ்ச்சிநகரை சேர்ந்தவர் ராஜ் (55). இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றுவிட்டார். இன்று காலை அவர் வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தது.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும், அங்கு நகை, பணம் இல்லாததால் கொள்ளை சம்பவம் தவிர்க்கப்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேரு யுவகேந்திரா சார்பில் இன்று இந்திய அரசின் தூய்மை இந்தியா 2.0 குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா 2.0 குறித்த புகைப்பட கண்காட்சியும் இடம்பெற்றது.
நெல்லை:
நெல்லை மக்கள் தொடர்பு அலுவலகம் மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் இன்று இந்திய அரசின் தூய்மை இந்தியா 2.0 குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பாளை வ.உ.சி. மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணியை மாநக ராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான கல்லூரி மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர். பேரணியானது வ.உ.சி. மைதானத்தில் தொடங்கி பாளை பஸ் நிலையம் வழியாக தனியார் கல்லூரியில் முடிவடைந்தது. இதில் கள விளம்பர அலுவலர் ஜீனி ஜேக்கப், விளம்பர உதவி அலுவலர் வேல்முருகன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் டேவிட் அப்பாதுரை, மாவட்ட இளையோர் அலுவலர் ஞானச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டன. தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் கவுரவிக்க ப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா 2.0 குறித்த புகைப்பட கண்காட்சியும் இடம்பெற்றது.மேலும் வில்லுப்பாட்டு, கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
- பாளை அருகே உள்ள பாளையஞ்செட்டி குளத்தை சேர்ந்தவர் சுபாஷ்
- சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
நெல்லை:
பாளை அருகே உள்ள பாளையஞ்செட்டி குளத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 32). இவர் சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
காலையில் பார்த்தபோது அதனை காணவில்லை. இது தொடர்பாக பாளை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மோட்டார் சைக்கிளை திருடியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மூர்த்தி குளித்துவிட்டு துணிகளை காய போடுவதற்காக வீட்டின் மாடிக்கு சென்றுள்ளார்.
- அப்போது எதிர்பாராத விதமாக ஈரத்துணி அருகில் சென்று கொண்டிருந்த மின் வயரில் உரசியது.
நெல்லை:
பாளை சமாதானபுரம் மீன்கார காம்பவுண்டில் வசித்து வருபவர் நடராஜன். இவர் பாளை மண்டல அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பாலமூர்த்தி (வயது 21). இவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார்.
இன்று காலை பால மூர்த்தி குளித்துவிட்டு துணிகளை காய போடுவதற்காக வீட்டின் மாடிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஈரத்துணி அருகில் சென்று கொண்டிருந்த மின் வயரில் உரசியது. இதில் பாலமூர்த்தி உடலில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாலமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சமாதானபுரத்தை சேர்ந்த பாலமூர்த்தி பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
- மகாராஜநகரில் உள்ள தலைமை மின் வாரிய அலுவலகத்தை முற்று கையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
பாளை சமாதானபுரத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் பாலமூர்த்தி (வயது 21). இவர் பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் மாடியில் துணிகளை காயவைப்பதற்காக கொடி கயிற்றில் போட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகிய அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் மாண வனின் தந்தை நடராஜன், தாய் பாலம்மாள் தலைமையில் உறவினர்கள் மற்றும் ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் பாளை மகாராஜநகரில் உள்ள தலைமை மின் வாரிய அலுவலகத்தை முற்று கையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறும்போது, எங்களது வீட்டின் மேல்புறம் அதிக திறன் கொண்ட மின்வயர் பாதுகாப்பின்றி செல்கிறது. இதனால் தான் பாலமூர்த்தி மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார்.
நிவாரணம்
எனவே அஜாக்கிரதையாக செயல்பட்ட மின் துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற துணை கமிஷனர் சீனிவாசன் தலை மையிலான போலீசார் அனுமதியின்றி இங்கு போராட்டம் நடத்தக்கூடாது என தெரிவித்தனர்.
கைது
இதனால் போலீ சாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலை கண்ணன், திராவிடர் தமிழர் கட்சி நிர்வாகி திருக்குமரன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
- பாளை பகுதியில் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் டியூசனுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றனர்
- சென்னை சென்ற போலீசார் 24 மணி நேரத்திற்குள் மாணவர்களை மீட்டு வந்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
நெல்லை:
நெல்லை, பாளை பகுதியில் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றனர்.
மாணவர்கள் மாயம்
பின்னர் அவர்கள் டியூசனுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றனர். அவர்கள் இரவில் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்ைல. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பாளை போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் நெல்லை மாநகர துணை கமிஷனர் சீனிவாசன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் பிரதீப் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வாசிவம், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி மற்றும் தலைமை காவலர் நவராஜ் ஆகியோர் காணாமல் போன மாணவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
24 மணிநேரத்தில்
அப்போது மாணவர்கள் சென்னையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை சென்ற போலீசார் 24 மணி நேரத்திற்குள் மாணவர்களை மீட்டு வந்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
போலீசாரின் இந்த விரைவான செயலுக்கு நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் பாராட்டு தெரிவித்தார்.
+2
- கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது.
- சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அதிகாரிகள் துருவிதுருவி விசாரணை நடத்தி வருகின்றனர்
நெல்லை:
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்பட மொத்தம் 45 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அமலாக்கத்துறை சோதனை
இதனையொட்டி நெல்லை மாநகர பகுதியில் அமலாக்கப்பிரிவு போலீசார்அதிரடி சோதனை நடத்தினர். இதற்காக மொத்தம் 2 குழுக்கள் இன்று அதிகாலை நெல்லை வந்தடைந்த நிலையில், அதில் ஒரு குழு மாநகர போலீஸ் அதிகாரிகளிடம் போலீஸ் பாதுகாப்பு கேட்டது.
அதன் அடிப்படையில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் பாதுகாப்பு அமலாக்கப்பிரிவினருக்கு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அந்த குழு டவுன் கல்லணை தெருவில் உள்ள சதாம் உசேன் என்பவர் வீட்டில் அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர்.
பண பரிமாற்றம்
இந்த சோதனையானது இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. சதாம் உசேன் நெல்லையில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். அவரிடம் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அதிகாரிகள் துருவிதுருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த குழுவில் சில அதிகாரிகள் பாளை ஆயுதப்படை பின்புறம் உள்ள பெருமாள்புரம் செயின்ட் பால்ஸ் நகரில் ராஜ்குமார் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் அமலாக்கத்துறை யின் மற்றொரு குழுவானது தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பாளையை சேர்ந்தவர் செய்யது அப்துல்ரகுமான் பாளை மார்க்கெட் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்
- ஊழியர்கள் கடையில் இருந்து வெளியேறி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்
நெல்லை:
பாளையை சேர்ந்தவர் செய்யது அப்துல்ரகுமான். இவர் பாளை மார்க்கெட் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை வழக்கம்போல் கடை திறக்கப்பட்டது.
திடீரென கடையில் இருந்த சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக ஊழியர்கள் கடையில் இருந்து வெளியேறி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு பாளை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் கடையின் மேற்கூரை எரிந்து சேதமாகியது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
- பாளை எம்.கே.பி. நகரை சேர்ந்தவர் சின்னத்துரை. இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் தாக்கி அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம், செல்போனை பறித்துக்கொண்டு சென்றனர்.
நெல்லை:
பாளை எம்.கே.பி. நகரை சேர்ந்தவர் சின்னத்துரை. இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு அங்கிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு நாகர்கோவிலுக்கு சென்றார். வி.எம்.சத்திரம் சோதனைசாவடி அருகே சாலையில் லாரியை நிறுத்தி விட்டு சிறிது நேரம் தூங்கி உள்ளார்.
அப்போது அங்கு 4 மோட்டார் சைக்கிளில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் தாக்கி அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் - செல்போனை பறித்துக்கொண்டு சென்றனர்.
இதுதொடர்பாக அவர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மகும்பலை தேடி வருகின்றனர்.
- பாளை கோட்டூரை சேர்ந்தவர் லட்சுமி காந்தன் கங்கைகொண்டானில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்
- நான்கு வழிச்சாலையில் வந்த போது மோட்டார் சைக்கிளுடன் விழுந்த நிலையில் மயங்கி கிடந்தார்
நெல்லை:
பாளை கோட்டூர் பிள்ளைமார் தெருவை சேர்ந்தவர் லட்சுமி காந்தன் (வயது 32). இவர் கங்கைகொண்டானில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் தனது பெற்றோருடன் லட்சுமி காந்தன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று கம்பெனிக்கு வேலைக்கு சென்ற லட்சுமி காந்தன் மாலையில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். தாழையூத்து அருகே நான்கு வழிச்சாலையில் வந்த போது லட்சுமி காந்தன் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி காந்தன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமி காந்தன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது ஏதேனும் வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெட்டியார்பட்டி அரியநாயகிபுரம் கால்டுவெல் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 61). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்.
- கோவிலை நிர்வகிப்பது, வரவு செலவு கணக்குகளை பார்ப்பது தொடர்பாக வேல்முருகனுக்கும், சிலருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.
நெல்லை:
ரெட்டியார்பட்டி அரியநாயகிபுரம் கால்டுவெல் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 61). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவர் நேற்று இரவு பாளை அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்ததும் பாளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேல்முருகனுக்கு குலதெய்வ கோவில் பாளை கோட்டூர் ரோட்டில் உள்ளதாக தெரிகிறது.
இந்த கோவிலை நிர்வகிப்பது, வரவு செலவு கணக்குகளை பார்ப்பது தொடர்பாக வேல்முருகனுக்கும், சிலருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.
இதன் காரணமாக மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாளை கக்கன்நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து. ஓய்வு பெற்ற அரசு அதிகாரி
- பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.
நெல்லை:
பாளை கக்கன்நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 65). ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.
பூட்டு உடைப்பு
இவர் கடந்த 13-ந் தேதி குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றார். பின்னர் நேற்று மாலை அவர் வீடு திரும்பினர்.
அப்போது அவரது வீட்டின் பின் பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பேச்சிமுத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து அவர் பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.