என் மலர்
நீங்கள் தேடியது "Palai"
- டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு நாளை மறுநாள் 19-ந் தேதி நடைபெற உள்ளது.
- குரூப்-1 தேர்வுகளை 10,698 பேர் எழுத உள்ளனர். குரூப்-1 தேர்வையொட்டி தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலையில் 12 சுற்றுக்குழு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை:
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு நாளை மறுநாள் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நெல்லை, பாளை வட்டங்களில் ராணி அண்ணா அரசு கல்லூரி, பேட்டை காமராஜர் மேல்நிலைப்பள்ளி, வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி, நெல்லை சட்டக்கல்லூரி, சந்திப்பு ம.தி.தா இந்து மேல்நிலைப்பள்ளி, அரசு பொறியியல் கல்லூரி, ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, முன்னீர்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 28 இடங்களில் 36 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
குரூப்-1 தேர்வுகளை 10,698 பேர் எழுத உள்ளனர். குரூப்-1 தேர்வையொட்டி தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலையில் 12 சுற்றுக்குழு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேர்வுகளை பதிவு செய்ய 38 வீடியோ கிராபர்கள் நியமிக்கப்பட்டு, தேர்தலை கண்காணிக்க 36 ஆய்வு அலுவலர்கள், சப்-கலெக்டர் நிலையில் 6 பறக்கும்படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்னர்.
மேலும் 19-ந் தேதி தேர்வு நடைபெறும் போது தேர்வு மையங்களில் தடை இல்லா மின்சாரம், பேருந்து வசதி ஆகியவற்றை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு அறையினுள் தேர்வர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
- தனியார் பள்ளி ஒன்றில் மேலப்பாளையத்தை சேர்ந்த 6 சிறுவர்கள் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சத்து மாத்திரைகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது
நெல்லை:
பாளை பஸ் நிலைய பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் மேலப்பாளையத்தை சேர்ந்த 6 சிறுவர்கள் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் ஒரே ஆட்டோவில் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்புவது வழக்கம்
சத்து மாத்திரைகள்
நேற்று முன்தினம் அவர்கள் 6 பேரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனர். அப்போது 8, 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சத்து மாத்திரைகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலப்பாளையத்தை சேர்ந்த 6 சிறுவர்களும் அந்த மாத்திரைகளை வாங்கியு ள்ளனர். அதனை அவர்கள் சாப்பிடாமல் பாக்கெட்டி லேயே வைத்துள்ளனர். மாலையில் அவர்கள் வீடு திரும்புவதற்காக ஆட்டோ வுக்கு காத்திருந்தனர்.
தண்ணீரில் கலக்கி குடித்தார்
விளையாட்டாக தாங்கள் வைத்திருந்த மாத்திரைகளை தண்ணீர் கலக்கி அதனை சக மாணவருக்கு கொடுத் துள்ளனர். அதனை அந்த மாணவரும் விளையாட்டாக வாங்கி குடித்துள்ளார்.
அதன் பின்னர் அனைவரும் ஆட்டோவில் வீடு திரும்பிவிட்டனர். இந்நிலையில் மறுநாள் அதாவது நேற்று காலை மாத்திரைகளை கலக்கி குடித்த அந்த மாணவனுக்கு திடீர் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் உடனடியாக அவனை பாளையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எச்சரிக்கை
இது தொடர்பாக மாணவரிடம் அவரது பெற்றோர் விசாரித்ததில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்தது. இதையடுத்து இந்த தகவல் பள்ளி நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பந்தப்பட்ட மாணவர்களை பள்ளி நிர்வாகம் நேரில் அழைத்து அவர்களது பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர்.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பள்ளிகளில் குழந்தைகளுக்கு இதுபோன்ற சத்து மாத்திரைகள் கொடுப்பது குறித்து முன்கூட்டியே அவர்களது பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவித்தால்தான் குழந்தைகளை கண்காணித்து அவர்கள் மாத்திரைகளை கொடுப்பார்கள். சம்பந்த ப்பட்ட பள்ளி நிர்வாகமும் மாணவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.
மாத்திரைகள் சாப்பி டுவது குறித்தும் அதிக அளவு மாத்திரை சாப்பிடும்போது ஏற்படும் விபரீதம் குறித்தும் சுகாதார துறையினர் மாண வர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றனர்.
- தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
- கார் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் புறப்பட்டு சென்றார். வழியில் பாளை கே.டி.சி.நகரில் அவருக்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நெல்லை:
தி.மு.க. மாநில இளை ஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் கார் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் புறப்பட்டு சென்றார். வழியில் பாளை கே.டி.சி.நகரில் அவருக்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், துணை செயலாளர் சுதா மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், அண்டன் செல்லத்துரை, கோபி என்ற நமச்சிவாயம்,
கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, இளைஞரணி ஆறுமுகராஜா, தி.மு.க. இளைஞரணி செயலளர் வில்சன் மணிதுரை, மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், பாளை யூனியன் சேர்மன் கே.எஸ்.தங்கபாண்டியன், பொரு ளாளர் வண்ணை சேகர், நிர்வாகிகள் மணிகண்டன், மேகை செல்வன், சிவா, வினோத், சங்கர், மைதீன், வக்கீல் அருள் மாணிக்கம், கவுன்சிலர்கள் பவுல்ராஜ், ரவீந்தர், உலகநாதன், கிட்டு மற்றும் மணி, மாநகர இளை ஞரணி துணை அமைப்பாளர் மாயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
+2
- பொருநை இலக்கிய திருவிழா நெல்லையில் வருகிற 26,27-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
- பாளை வ.உ.சி. மைதானத்தில் தொடங்கிய பேரணி திருவனந்தபுரம் சாலை, மேடை போலீஸ் நிலையம் வழியாக மீண்டும் மைதானத்திற்கு வந்தடைந்தது.
நெல்லை:
பொருநை இலக்கிய திருவிழா நெல்லையில் வருகிற 26,27-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதையொட்டி பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி பாளை வ.உ.சி. மைதானத்தில் இன்று நடைபெற்றது.
அதற்கு கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். அப்துல்வகாப் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் மேயர் சரவணன், கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, துணைமேயர் ராஜூ, உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வன், ஒருங்கி ணைப்பாளர் சபேசன் மற்றும் பள்ளி கல்வித்துறையினர் கலந்து கொண்டனர்.
பேரணியில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பாளை வ.உ.சி. மைதானத்தில் தொடங்கிய பேரணி திருவனந்தபுரம் சாலை, மேடை போலீஸ் நிலையம் வழியாக மீண்டும் மைதானத்திற்கு வந்தடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய 5 வகை நிலங்களை குறிக்கும் வகையில் மக்களின் வாழ்வியல், நாகரீகம், தொழில் உள்ளிட்டவைகளை விளக்கும் வகையில் வேட மணிந்து பங்கேற்றுள்ளனர்.
- பாளை ஐகிரவுண்டு அண்ணாநகர் பகுதியில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது
- சாமி கும்பிட வந்தவர்கள் அங்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைக்க முயற்சி செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
நெல்லை:
பாளை ஐகிரவுண்டு அண்ணாநகர் பகுதியில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று இரவு வழக்கம் போல் பூஜையை முடித்துக் கொண்டு பூசாரி வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் அங்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைக்க முயற்சி செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கோவில் பூசாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவம் குறித்து ஐகிரவுண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவ- மாணவி களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
- விளையாட்டுப் போட்டிகளில் நீளம் தாண்டுதல், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எரிதல் போட்டிகள் இன்று நடைபெற்றது.
நெல்லை:
பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவ- மாணவி களுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, உதவி கலெக்டர் பயிற்சி கோகுல் முன்னிலையில் இன்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பள்ளியில் பயிலும் 210 மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொள்ளும் விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த விளையாட்டுப் போட்டி களில் மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கான நீளம் தாண்டுதல், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எரிதல் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் மாணவ- மாணவிகளுக்கு குறிப்பிட்ட பொருட்களை சேகரித்தல் போன்ற போட்டிகள் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதல் மற்றும் 2-ம் இடம்பிடிக்கும் மாணவ- மாணவிகள் வருகிற 1-ந் தேதி சென்னையில் நடை பெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
சென்னையில் நடைபெறும் போட்டி களில் வெற்றி பெறுபவ ர்களுக்கு 3-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் சென்னையில் அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு நல அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி, முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் மற்றும் சிறப்பு பள்ளி தாளாளர்கள், தலைமை ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ-மாணவிகள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
- வணிகவரித் துறையினால் கடந்த மார்ச் மாதத்தில் சில்லரைக் கடைகளில் ஆய்வு செய்வது சம்பந்தமாகவும், டெஸ்ட் பர்ச்சேஸ் செய்வது சம்பந்தமாகவும் அறிவிப்புகள் வெளியானது.
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமையங்களில் உள்ள மாவட்ட வணிகவரித்துறை அலுவலகங்களில் இன்று மனு கொடுக்கப்பட்டது.
நெல்லை:
வணிகவரித் துறையினால் கடந்த மார்ச் மாதத்தில் சில்லரைக் கடைகளில் ஆய்வு செய்வது சம்பந்தமாகவும், டெஸ்ட் பர்ச்சேஸ் செய்வது சம்பந்தமாகவும் அறிவிப்புகள் வெளியானது. இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழக அனைத்து வணிகர்களின் சார்பாக, தனது கருத்துக்களையும், எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தது.
மீண்டும் டெஸ்ட் பர்ச்சேஸ் சம்பந்தமான வணிகவரித் துறையின் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் வணிகவரித் துறை அதிகாரிகள் சில்லரை வணிகம் செய்யும் வணிகர்களிடம் பொருட்கள் வாங்கி அதை டெஸ்ட் பர்ச்சேஸ் என குறிப்பிட்டு அதற்கு அபராதமாக ரூ.20,000 வரை வசூலிப்பதாக புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.
அனைத்து சில்லரைக் கடைக்காரர்களும் தாங்கள் பொருட்களை வாங்கும்போது, அதற்கான வரி செலுத்தியே பொருட்களை வாங்கி வந்து, அதை பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் அப்பொருட்கள் ஏற்கனவே வரி விதிப்புக்கு உட்பட்டது. ஆனாலும் வணிக வரித்துறை அதிகாரிகள், சில்லரை கடைகளில் டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற பெயரில், பொருட்களை வாங்கி, அதற்கு ரசீது அளிக்கப்படவில்லை என்று கூறி அபராதம் விதிக்கும் முறை ஏற்புடையது அல்ல.
இது சில்லரை வணிகத்தை கேள்விக்குறியாக்கும் செயலாகும். எனவே, 6 மாதங்கள் டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை நிறுத்தி வைத்து, வணிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன்பிறகே படிப்படியாக செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனக்கூறி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமையங்களில் உள்ள மாவட்ட வணிகவரித்துறை அலுவலகங்களில் இன்று மனு கொடுக்கப்பட்டது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் நாடார் தலைமையில் பேரமைப்பு நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் பாளை ஆயுதப்படை சாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் இன்று மனு கொடுத்தனர்.
இதில் வடக்கு மாவட்ட செயலாளர் நயன்சிங், பொருளாளர் அசோகன் நாடார், கூடுதல் செயலாளர் விநாயகம், கவுரவ ஆலோசகர் பன்னீர்செல்வம், தொகுதி செயலாளர் கருப்பசாமி, முக்கூடல் சங்க தலைவர் பூமி பாலக பெருமாள், பாளை தொழில் வர்த்தக சங்க செயலாளர் சோமு, மாவட்ட இணைச்செயலாளர் சாலமோன், மாவட்ட துணைச்செயலாளர் ஸ்டீபன் பிரேம்குமார் , மாவட்ட பொருப்பாளர் பெரிய பெருமாள், செய்தி தொடர்பாளர் பகவதி ராஜன் மற்றும் சங்க நிரிவாகிகள், வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- தமிழக அரசு பள்ளிக் கல்விதுறை சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு கலை இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
- மாவட்ட அளவிலான கலை இலக்கிய திருவிழா இன்று பாளை தனியார் பள்ளியில் நடத்தப்பட்டது.
நெல்லை:
தமிழக அரசு பள்ளிக் கல்விதுறை சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் சார்பில் மாணவ-மாணவி களுக்கு கலை இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்திலும் மாணவ-மாணவிகளின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கலை இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி பள்ளிகளுக்குள் கலை இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வட்டார அளவில் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து போட்டிகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் மாவட்ட அளவிலான கலை இலக்கிய திருவிழா இன்று பாளை தனியார் பள்ளியில் நடத்தப்பட்டது.
அதனை அப்துல்வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கரகாட்டம், நடனம், பாடல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இன்று முதல் நாளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவ ர்களுக்கு நடத்தப்பட்டது. நாளை 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும், நாளை மறுநாள் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது.
- வியாபாரிகள் குறுக்கீடு இல்லாமல் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் உழவர் சந்தை திட்டம் தொடங்கப்பட்டது.
- விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை நேரடியாக விற்பனை செய்யும் பொருட்டு 16 கடைகள் அமைக்கப்பட்டது.
நெல்லை:
விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட வேளாண் விளைப் பொருட்களை இடைத்தரகர்கள், வியாபாரிகள் குறுக்கீடு இல்லாமல் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் உழவர் சந்தை திட்டம் தொடங்கப்பட்டது.
புதிய உழவர் சந்தை
நெல்லை மாவட்டத்தில் பாளை மகாராஜாநகர், மேலப்பாளையம், டவுன் கண்டிகைபேரி மற்றும் அம்பை ஆகிய 4 இடங்களில் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், மேலும் ஒரு உழவர்சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
பாளை என்.ஜி.ஓ. ஏ. காலனியில் ரூ.50 லட்சம் மதிப்பில் 5-வது உழவர்சந்தை அமைக்க திட்டமிடப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை நேரடியாக விற்பனை செய்யும் பொருட்டு 16 கடைகள் அமைக்கப்பட்டது.
பணிகள் முடிவு
மேலும் விவசாயிகள் தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஒரு குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணிகள் முடிக்கப்பட்டு, சி.சி.டி.வி. காமிராக்களும் அமைக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாரானது.
சமீபத்தில் நெல்லையில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாவட்டத்தில் முடிவடைந்த பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை திறந்து வைத்தார். அப்போது என்.ஜி.ஓ. ஏ. காலனி புதிய உழவர்சந்தையும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது திறக்கப்படவில்லை.
திறப்பு விழா
இந்நிலையில் அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காெணாலி வாயிலாக இன்று திறந்து வைத்தார். உழவர் சந்தையில் நடந்த விழாவில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் எம்.பி. விஜிலாசத்யானந்த், கவுன்சிலர் கருப்பசாமி கோட்டையப்பன் ஆகியோர் கலந்து கொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.
இதன்மூலம் ரெட்டியார் பட்டி, இட்டேரி, பருத்திப்பாடு, தருவை, முத்தூர், கருங்குளம், முன்னீர்பள்ளம், டக்கரம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது பொருட்களை நேரடியாக விற்பனை செய்து பயன்பெறலாம்.
மேலும் இந்த புதிய உழவர் சந்தையால் என்.ஜி.ஓ. 'ஏ', 'பி' காலனி, ரெட்டியார்பட்டி, திருமால்நகர், பொதிகைநகர், பெருமாள்புரம் பகுதி பொதுமக்கள் குறைந்த விலையில் காய்கறி, பழங்களை வாங்கலாம்.
- மாவட்டம் முழுவதும் இருந்து வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
- கடைசி நாளான இன்று பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடைபெற்றது.
நெல்லை:
தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட அளவிலான போட்டி
முதற்கட்டமாக பள்ளி அளவிலும், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வட்டார அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நேற்று முன்தினம் பாளை தனியார் பள்ளியில் தொடங்கியது.
முதல் நாளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 2-ம் நாளான நேற்று 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
2 ஆயிரம் பேர்
இதில் மாவட்டம் முழுவதும் இருந்து வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு குழு நடனம், இசைகருவிகள் இசைத்தல், காய்கறிகளில் கலைபொருட்கள், மணல்சிற்பம், தனிநடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
70 பள்ளிகள்
இந்நிலையில் கடைசி நாளான இன்று பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 70 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு பேச்சுப்போட்டி, நாடகம், நாட்டியம் உள்ளிட்ட 59 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
மாநில அளவிலான போட்டி
இதில் வெற்றிபெறும் மாணவ-மாணவிகள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கலை இலக்கிய திருவிழா போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள்.
- பாளை வி.எம்.சத்திரம் மேற்குத்தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி மருந்து கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்
- பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஜெயலட்சுமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது
நெல்லை:
பாளை வி.எம்.சத்திரம் மேற்குத்தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 56). இவர் மருந்து கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
வாகனம் மோதியது
இந்நிலையில் நேற்று மாலை அங்குள்ள ஒரு கோவிலுக்கு சென்ற ஜெயலட்சுமி வி.எம்.சித்திரம் பஜார் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஜெயலட்சுமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப் -இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் தனலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார். ஜெயலட்சுமி மீது மோதிய வாகனம் எது? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாளை சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் மிஷன் மருத்துவமனை சார்பில் கிறிஸ்துமஸ் மிஷன் கேரல்ஸ் நிகழ்ச்சி நடந்தது
- விக்டர் கிறிஸ்துமஸ் பாடல்களை தொகுத்து வழங்கினார்.
நெல்லை:
பாளை சி.எஸ்.ஐ. ஜெய ராஜ் அன்னபாக்கியம் மிஷன் மருத்துவமனை மற்றும் சி.எஸ்.ஐ. பெல்பின்ஸ் இந்தி ராணி செல்லத்துரை மிஷன் மருத்துவமனை சார்பில் கிறிஸ்துமஸ் மிஷன் கேரல்ஸ் நிகழ்ச்சி பாளை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. இதில் சி.எஸ்.ஐ. திருமண்டல பேராயர் பர்னபாஸ், திருமண்டல லே செயலர் டாக்டர் டி.எஸ். ஜெயசிங் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
பேராயர் பர்னபாஸ் நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். சி.எஸ்.ஐ. பெல் பின்ஸ் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ஜெயம் ஜூலியட் வரவேற்றார். விக்டர் கிறிஸ்துமஸ் பாடல்களை தொகுத்து வழங்கினார். விழாவில் திருமண்டல பொருளாளர் மனோகர், பாளை பெல்பின்ஸ் உரிமையாளர் குணசிங் செல்லத்துரை, திருமண்டல மருத்துவ காரியதரிசி செல்வராஜ், ஜேக்கப், கரிசல் டேவிட் சாலமோன், ஜெயகர், ஜேசு ஜெகன், நெல்சன், நொபுளி, திருமண்டல கண்காணிப்பாளர் கருணா கரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஜெயராஜ் அன்னபாக்கியம் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் பால் ராபின்சன் நன்றி கூறி னார். ஏற்பாடுகளை மருத்துவ மனைகளின் மேலாளர்கள் மெல்டன், ஜோசப் ஆகியோர் செய்திருந்தனர்.