என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "palanisamy"
- எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றபோது அவருக்கும் பல தொல்லைகள் வந்தன.
- ஓ.பன்னீர்செல்வத்திடம் நிலைத்தன்மை இல்லை.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பேசும் போது, ஓ.பன்னீர்செல்வத்திடம் நிலைத்தன்மை இல்லை. மிரட்டுகிறவர்களுக்கு பயந்து பதவியை விட்டு விலகினால், இயக்கத்தை எப்படி வழிநடத்த முடியும். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றபோது அவருக்கும் பல தொல்லைகள் வந்தன. அதனை அவர் தைரியமாக எதிர்கொண்டார்.
பெருந்தன்மையுடன் அ.தி.மு.க. வளர வேண்டும் என்பதற்காக எடப்பாடி தலைமையில் ஒற்றை தலைமை அமைக்க வழிவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் ராஜசேகர், மாவட்ட அ.தி.மு.க. இணைச் செயலாளர் செரினா பாக்கியராஜ், துணைச் செயலாளர்கள் வசந்தா, சந்தனம், பொருளாளர் அமலிராஜன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் யு.எஸ்.சேகர், சார்பு அணி செயலாளர்கள் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் வீரபாகு, துணைச் செயலாளர் வலசை வெயிலூமுத்து,அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா,மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், இளைஞர்பாசறை தனராஜ்,சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர் பிரபாகர், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, வக்கீல்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதி மணிகண்டன், முனியசாமி, சரவணபெருமாள், பகுதி செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ், நட்டார் முத்து , சேவியர், ஓன்றிய செயலாளர் காசிராஜன், பகுதி இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம் ,துணைச் செயலாளர் டைகர் சிவா, மற்றும் ரமேஷ் கிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர் .
மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக இருந்து வருகிறது. இருப்பினும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, அணைகள் பாதுகாப்பு சட்டம் போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
பல்கலைக்கழக மானிய குழுவுக்கு பதிலாக இந்திய உயர் கல்வி ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக் கும் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தினால் தயாரித்து அளிக்கப்பட்டுள்ள இந்திய உயர் கல்வி ஆணையத்துக்கான வரைவு சட்ட மசோதா மீது தமிழக அரசு கொண்டுள்ள சந்தேகம் குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்க இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
அனைத்து மாநில அரசு களிடம் இருந்தும் அந்த மசோதா மீது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கருத்துகளை கோரியுள்ளது.
ஒழுங்குமுறை மற்றும் நிதி ஆகிய இரண்டு அதிகாரங்களையும் கொண்ட பல்கலைக் கழக மானிய குழுவே (யு.ஜி.சி.) தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் கருத்தாக உள்ளது.
எனவே, யு.ஜி.சி.யை கலைத்துவிட்டு, அந்த இடத்தில் ஒழுங்குமுறை அதிகாரத்தை மட்டுமே கொண்டுள்ள இந்திய உயர் கல்வி ஆணையத்தை அமைக்க தேவை இல்லை.
உயர் கல்வி நிறுவனங்களைக் பராமரித்து கண்காணிக்கவும், அவற்றின் கல்வி மற்றும் ஆராய்ச்சித் தரத்தை மேம்படுத்தும் பொறுப்புகளை யு.ஜி.சி. தன்னகத்தே வைத்துள்ளது. அவற்றோடு, பல்வேறு கல்வித் திட்டங்களுக்கு 1956-ம் ஆண்டில் இருந்து நிதி ஒப்பளித்து வருகிறது. இதுவரை அதன் மீது எந்த புகாரும் எழவில்லை.
நிதிக்கான முன்மொழிவு களை மதிப்பிட்டு அதை வழங்கக்கூடிய திறன் யு.ஜி.சி.க்கு உள்ளது. மேலும் அந்த நிதியை வெளிப்படைத்தன்மையுடன் ஒதுக்குகிறது. யு.ஜி.சி.க்கான நிதி அளிக்கும் அதிகாரம் என்பது தன்னுடைய பரிந்துரைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்து கொள்ளும் கூடுதல் செயல்திறனாக அமைந்துள்ளது.
தற்போது கொண்டுவர முன்மொழியப்பட்டுள்ள சட்ட மசோதா, யு.ஜி.சி.க்கான நிதி அதிகாரத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கோ அல்லது வேறு அமைப்புக்கோ இடமாற்றம் செய்வதாக அமைந்துள்ளது.
இதில் தமிழக அரசுக்கு பலமாக சந்தேகங்கள் உள்ளன. ஏனென்றால், பல்வேறு மத்திய அரசுத் துறைகளால் தமிழக அரசுக்கு அனுமதிக்கப்பட வேண்டிய நிதியைப் பெறுவதில் எங்களது அனுபவம் நேர்மறையாக இருந்ததில்லை. அதுவும் நிதி அளிக்கும் அதிகாரத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை பெற்றுவிட்டால், தமிழகத்துக்கு தற்போது கிடைக்கும் 100 சதவீத நிதி, இனிமேல் மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு இடையே 60:40 என்ற வீதத்தில் அமைந்துவிடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எனவே இந்த காரணங் களுக்காக, இந்திய உயர் கல்வி ஆணைய (யு.ஜி.சி. சட்டத்தை நீக்குதல்) சட்டம்-2018 என்ற வரைவு சட்ட மசோதாவை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது. அதோடு, யு.ஜி. சி.யே தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை, தமிழக அரசு கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்