என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Palanquin"
- 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றது.
தஞ்சாவூர்:
திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை திருவிழா கொடி ஏற்றம் கடந்த 25-ந்தேதி தொடங்கியது.
29-ந்தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நடைபெற்றது. அப்போது 6 ஊர்களிலிருந்து சாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது.
3-ந்தேதி தேரில் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் தேரோட்டம் நடைபெற்றது.
6-ந்தேதி சப்தஸ்தான பெருவிழாவையொட்டி ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் சிவாச்சாரியர்கள் வேத பாராயணம் முழங்க புறப்பட்டு சென்றனர்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.அதனை தொடர்ந்து திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லை ஸ்தானத்தில் சங்கமித்தது.
இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெற்றது. நேற்று தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது மழை பெய்தது. இந்த மழையிலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றது.நேற்று இரவு காவேரி ஆற்றில் வாணவேடிக்கையும், இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீன சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- சித்திரை திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
- தேரடியில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:
திருவையாறு தருமை ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி அம்மன் சமேத ஐயாறப்பர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(புதன்கிழமை) நடைபெறுகிறது.
விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான பெருவிழா மே 6-ந் தேதி நடக்கிறது.7-ந் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன், 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலி ன்படி தேவஸ்தான டிரஸ்டி கார்ப்பார் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு போலீசார் செய்து வருகின்றனர்.
- பூ பல்லாக்கு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது.
- மின் தட்டிகள் மற்றும் மேல தாளங்கள், நாட்டிய குதிரைகள் ஊர்வ லத்தில் இடம்பெற்றன.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை தெற்குதெரு அரபுசாஹிப் ஆண்டவர் பள்ளிவாசலில் 535-ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று தொடங்கியது.
முன்னதாக விழா கமிட்டியினர் முன்னிலையில் கந்தூரி விழா ஊர்வலத்தை முத்துப்பேட்டை ஜாம்புவா னோடை தர்கா முதன்மை அறங்காவலரும், தமிழக தர்காக்கள் முன்னேற்ற பேரவை நிறுவன தலைவருமான எஸ்.எஸ்.பாக்கர்அலி சாஹீப் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து, அரபு சாஹிப் ஆண்டவர் பள்ளிவா சலில் இருந்து கந்தூரி பூ பல்லாக்கு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது.
இதில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட 2 பூப்பல்லாக்கு, கண்ணாடி களால் அலங்கரிக்கப்பட்ட 2 ரதங்கள், மின் விளக்கு களால் உருவாக்கப்பட்ட ஏராளமான மின் தட்டிகள் மற்றும் மேல தாளங்கள், நாட்டிய குதிரைகள் ஊர்வ லத்தில் இடம்பெற்றன.
ஊர்வலம் பேட்டை ரோடு, முகைதீன் பள்ளி திடல், பட்டுக்கோட்டை சாலை, பங்களா வாசல், நியூ பஜார், பழைய பஸ் ஸ்டான்ட், திருத்துறைப்பூண்டி சாலை வழியாக புதிய பஸ் நிலையம் சென்றது.
பின்னர், அங்கிருந்து பெரிய கடைத்தெரு, மரைக்காயர் தெரு, எஸ்.கே.எம் தெரு வழியாக மீண்டும் பள்ளிவா சலை வந்தடைந்தது.
பின்னர் இரவு 9 மணிக்கு மௌலுத் ஷரீப் மற்றும் துஆ ஓதப்பட்டு புனித கொடி ஏற்றப்பட்டது.
இதில் நூற்றுக்க ணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தையொட்டி திருவாரூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்