search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palladam Municipality"

    • பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகளில் சுமார் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
    • தொழிலாளர்கள் பலர் குடிபெயர்கின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகளில் சுமார் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விசைத்தறி, கறிக்கோழி பண்ணைகள், பனியன் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இவற்றை சார்ந்த தொழிலாளர்கள் பலர் குடிபெயர்கின்றனர்.இதனால் பல்லடம் நகரின் மக்கள் தொகை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனால், அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் பல்லடம் இன்னும் பின்தங்கியே உள்ளது.

    அந்தவகையில் பல்லடம் நகராட்சிக்கு இதுவரை நகரமைப்பு அலுவலர் நியமிக்கப்படாததால், அருகில் உள்ள நகராட்சிகளின் நகரமைப்பு அலுவலர்கள் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தனர். இதனால் பல்லடத்தில் கட்டிட வரைபட அனுமதி, நகர பகுதியில் விதிமீறல் கட்டடங்கள் குறித்த ஆய்வு உள்ளிட்ட பணிகள் மிகுந்த காலதாமதம் ஆனது. இதற்கிடையே தற்போது நகர அமைப்பு அலுவலராக ரவிச்சந்திரன் என்பவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். மூன்றாம் நிலை நகராட்சியில் இருந்த பல்லடம் முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது முதல் நகர அமைப்பு அலுவலர் நியமிக்கப்படவில்லை.தற்போது நீண்ட காலத்துக்கு பின் நகர அமைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இனியாவது கட்டிட வரைபட அனுமதி உள்ளிட்ட பணிகள் விரைவாக நடக்குமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

    • நகராட்சிக்கு சொந்தமான 52 கடைகள் கட்டப்பட்டுள்ளது.
    • புதிய கடைகள் கட்ட ஒத்துழைப்பு வழங்கவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் தினசரி மார்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 52 கடைகள் கட்டப்பட்டுள்ளது. சிமெண்ட் கூரைகளால் அமைக்கப்பட்டுள்ள இந்த கடைகளை அகற்றி விட்டு, ரூ.1.61 கோடி மதிப்பில் 48 கடைகள் கான்கிரீட் மேற்கூறையுடன் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து கடைகளை வாடகைக்கு எடுத்துள்ள வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதாமணி தலைமையில் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஆணையாளர் விநாயகம் முன்னிலை வகித்தார். இதில் மாற்று இடம் வழங்கப்படுவதாகவும், புதிய கடைகள் கட்ட ஒத்துழைப்பு வழங்கவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    வியாபாரிகள் தரப்பில் கட்டப்படும் புதிய கடைகளில் ஏற்கனவே வாடகைக்கு உள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். கட்டப்படும் கடைகளுக்கு குடிநீர், சுகாதார வளாகம், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். நியாயமான தொகையில் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    • ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்துள்ளார்.
    • ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சியில் ரூ.7 கோடி வரி பாக்கி நிலுவையில் உள்ளதாகவும் பொதுமக்கள் வரி இனங்களை விரைவாக செலுத்தி, ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பல்லடம் நகராட்சி 18 வார்டுகளில் 15,664 குடியிருப்புகள் 1,263 வணிக கட்டடங்கள், 546 தொழிற்கூடங்கள் மற்றும் 25 கல்வி நிறுவனங்கள் உள்ளன. சொத்து வரி ரூ.2கோடியே99லட்சத்து 59 ஆயிரம், காலியிட வரி ரூ.5லட்சத்து65 ஆயிரம், தொழில் வரி ரூ.15லட்சத்து39 ஆயிரம், குடிநீர் கட்டணம் ரூ.1கோடியே63லட்சத்து12 ஆயிரம், கடை வாடகை ரூ.3கோடியே15லட்சத்து10 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.

    எனவே வரி இனங்களை பொதுமக்கள் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்துக் கொள்ளுவதோடு, நகராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் தங்களது இல்லத்தில் இருந்தே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து TN URBAN ESEVAI என்ற செயலியில் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்த தங்களது அலைபேசி எண்ணின் மூலமாக செலுத்தலாம். அதற்குரிய ரசீது உடனே வரும் அதனை பதிவு இறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது.
    • பொதுமக்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டு அவை கடிதங்களாக பெறப்பட்டன.

    பல்லடம் :25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது.

    தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்துவரி சீராய்வு செய்யப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இதன்படி நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகள், கடைகள் உள்ளிட்டவற்றுக்கு 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது.பல்வேறு தரப்பினரும் இதற்கு ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.

    இது குறித்து பொதுமக்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டு அவை கடிதங்களாக பெறப்பட்டன. சொத்து வரி உயர்வு தொடர்பாக நகராட்சி கூட்டத்திலும் ஆலோசிக்கப்பட்டு, எதிர்ப்புகளுக்கு இடையே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சொத்து வரி உயர்த்துவதற்கான கட்டடங்களின் நீள, அகலம், உயரம் உள்ளிட்டவை அளவீடு செய்யும் பணி நடந்தது. இதையடுத்து, புதிய வார்டுக்கு மாற்றம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. சீராய்வு செய்யப்பட்ட சொத்து வரி வசூல் செய்யும் பணி, கடந்த 2 மாதங்களுக்கு நிறுத்தப்பட்டிருந்தது.தற்போது புதிய உயர்த்தப்பட்ட சொத்து வரி வசூல் செய்யும் பணி துவங்கியுள்ளது. புதிய சொத்து வரி, பெயர் மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளையும் இனி மேற்கொள்ளலாம் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • 13ந் தேதி முதல் 15 ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்.
    • 18 ஆயிரம் கொடிகள் தயாரிக்கப்பட்டு வீடு வீடாக சென்று வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பல்லடம் :

    75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என பல்லடம் நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் கூறியதாவது:-

    சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் வரும் 13ந் தேதி முதல் 15 ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி என்ற கருத்தியல் படி ஏற்றி கொண்டாடுமாறு அரசுகள் அறிவுறுத்தியுள்ளது.இதன்படி பல்லடம் நகராட்சியில் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு தேசிய கொடியை ஏற்ற வைக்கும் நோக்கில் 18 ஆயிரம் கொடிகள் தயாரிக்கப்பட்டு நகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று தேசியக்கொடி வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த பணியில், நகராட்சி ஊழியர்கள், தற்காலிகபணியாளர்கள், மற்றும் கவுன்சிலர்களும் ஈடுபட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தேசியக்கொடிகளை பெற்றுக் கொண்டு அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் வீடுவீடாக தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

    • ரூ.6லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் குடிநீர் விரிவாக்கப் பணி.
    • குடிநீர் குழாய் விரிவாக்கப் பணி துவக்க விழா நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 15வது வார்டு மேற்கு பல்லடம் கருப்பாண்டி வீதி, பழனியப்பா வீதி, எஸ்.வி.கிளினிக் வீதி, கொசவம்பாளையம் சாலை, கிருஷ்ணப்பா வீதி, ராமசாமி ஆகிய வீதியில் ரூ.6லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் குடிநீர் பகிர்மான குழாய் அமைத்து விரிவாக்கப் பணி துவக்க விழா நடைபெற்றது.

    இந்த பணியை நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் துவக்கி வைத்தார். இதில் நகராட்சி பொறியாளர் ஜான்பிரபு, பணி மேற்பார்வையாளர் ராசுக்குட்டி, நகராட்சி கவுன்சிலர் விஜயலட்சுமி, முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் வைஸ் பி.கே.பழனிசாமி, நகர தி.மு.க. நிர்வாகிகள் நடராஜன், குட்டி பழனிசாமி,சேகர்,அன்வர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×