search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "palm workers"

    • செப்டம்பர் மாதம் 24-ந்தேதி தமிழக கடற்கரை ஓரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் முதல் விதை நடப்பட்டு தொடங்கி வைக்கப்படுகிறது.
    • பனை விதைகளை சேகரிக்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் பழைய எருமைவெட்டி பாளையத்தில் உள்ள ஆதித்தன் தோட்டத்தில் நடைபெற்றது.

    பொன்னேரி:

    தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன்நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப் பணி திட்டம் அமைப்புகள் இணைந்து கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதைகளை 14 மாவட்டங்களில் தமிழகத்தின் 1076 கிலோ மீட்டர் தொலைவுக்கான கடற்கரை ஓரங்களில் நடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    அதன்படி வருகின்ற செப்டம்பர் மாதம் 24-ந்தேதி என்எஸ்எஸ் தினத்தன்று தமிழக கடற்கரை ஓரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் முதல் விதை நடப்பட்டு தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முன்னோடியாக பனை விதைகளை சேகரிக்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் பழைய எருமைவெட்டி பாளையத்தில் உள்ள ஆதித்தன் தோட்டத்தில் நடைபெற்றது. இதில் டி சிஎஸ் நிறுவனத்தின் பணியாளர்கள், எலைட் பள்ளி தாளாளர் மற்றும் மாணவர்கள், கிரீன்நீடா அமைப்பினர்கள் கலந்து கொண்டு 1லட்சம் அளவிலான பனை விதைகளை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் சேகரித்தனர். நிகழ்ச்சியில் எலைட் பள்ளி தாளாளர் ஜெபாஸ்டின்

    பனைமர தோட்ட உரிமையாளர் அகிலன், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் வழக்கறிஞர் கண்ணன், முனிஸ்வரன், தங்கமுத்து, ஜெபராஜ்டேவிட், சீனிவாசன், ராஜேஷ், மோகன்ராஜ், தாஸ், சதீஷ், ரமேஷ், சங்கர பாண்டியன், வேல்முருகன், சண்முகசுந்தரம், சுடலை மணி, பாக்கியராஜ், ஆனந்த லிங்கம், சஞ்சீவராஜன், மகளிர் அணி கல்பனா, குணசுந்தரி, ஆனந்தி, விஜயலட்சுமி, அனிதா, ராஜேஸ்வரி கிரீன்நீடா அமைப்பின் சந்தான கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள், பனை தொழிலாளர்கள் பயன்பெறலாம்.
    • tnhorticulture.gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்தோ பயன்பெறலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் பனைமரங்கள் வளர்ப்ப தற்கு ஏற்ற மண் வளமும், காலநிலையும் உள்ளது. பனைமரத்தின் பரப்பினை அதிகரிக்கும் வகையில் விவசாயிகள் தங்கள் வயலின் வரப்புகளிலும், வயல் ஓரங்களிலும் நடவு செய்து பயன்பெறலாம். இதற்காக தமிழ்நாடு பனை மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ் தோட்டக் கலை துறை மூலம் 48 ஆயிரம் பனை விதைகளும், 250 பனை கன்றுகளும் முழு மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.

    பனைமரம் வைத்தி ருக்கும் விவசாயிகளில் தொடக்க பனை வெல்ல கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள விவசாயிகளுக்கு பனை பொருட்கள் தயாரிக்கும் கூடாரம் அமைப்பதற்காக 50 சதவீதம் மானியத்தில் ஒரு அலகிற்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    பனைமரம் ஏறுவதற்கான உரிமம் வைத்துள்ள பனை தொழிலாளர்களுக்கு பனைமரம் ஏறுவதற்கும், அறுவடை செய்வதற்கும் உகந்த உபகரணங்கள் 75 சதவீதம் மானியத்தில் ஒரு அலகிற்கு ரூ.4 ஆயிரத்து 500-ம் வழங்கப்பட உள்ளது.

    எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பனை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் மற்றும் பனை சார்ந்த தொழிலாளர்கள், இத்திட்டத்தில் பயன்பெற அருகில் உள்ள தோட்டக் கலை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ, உழவன் செயலி, tnhorticulture.gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்தோ பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×