search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchayat Council"

    • விஸ்வநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் முள் வேலி அமைக்கக்கூடாது என்று ஊராட்சி மன்றத்தலைவர் கோரிக்கை விடுத்தார்.
    • பாதையை மறிக்காமல் தகுந்த நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    சிவகாசி

    சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் நாகராஜ் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறி யிருப்பதாவது:-

    சிவகாசி ஊராட்சி ஒன்றியம் விஸ்வநத்தம் ஊராட்சியில் சிவகாசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான சுமார் 35 ஏக்கர் நிலம் உள்ளது. தற்போது இந்த இடம் தரிசு நிலமாக முள் செடிகள் படர்ந்து காணப் படுகிறது. இந்த இடத்தில் சுமார் 150 மீட்டர் நீளத்திற்கு ஓ.பி.ஆர் நகர், பெரியார் நகர், டிப்ஜி நகர், ஏ.ஆர் நகர் போன்ற குடியிருப்பு கிராம மக்கள் அணுகு சாலையாக கடந்த 50வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர்.

    தற்போது இந்த கோவில் இடத்தை சுற்றி இந்து சமய அறநிலையத்துறை சார்பாக முள்வேலி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

    பொதுமக்கள் பயன்படுத்தும் இந்த பாதையில் முள்வேலி அமைத்தால் இப்பகுதி மக்கள் 1 கிலேமீட்டர் சுற்றி செல்ல வேண்டும். 5ஆயிரம் மக்கள் பாதிக்கப்படு வார்கள்.

    மேலும் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவர். எனவே பொதுமக்களின் நலன் கருதி பொதுமக்கள் பயன் படுத்தும் பாதையை மறிக்காமல் தகுந்த நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கல்குறிச்சி ஊராட்சி மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    • தீர்மானங்களை ஊராட்சி செயலர் வாசித்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் கல்குறிச்சி ஊராட்சி மன்ற கூட்டம் தலைவி யாஸ்மின் தலைமை யில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவி பானு வனிதா, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்களை ஊராட்சி செயலர் வாசித் தார்.

    கூட்டத்தில் துணைத்தலைவி பானுவனிதா, வார்டு உறுப்பினர்கள் மகாலட்சுமி, மலைச்சாமி ஆகியோர் பேசியதாவது:-

    கல்குறிச்சி ஊராட்சியில் வள ர்ச்சி திட்டப்ப ணிகள் நடைபெற வில்லை. எங்கள் பகுதியில் அடிப்படைவசதி இல்லை. குடிநீருக்காக அலைய வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே நடை பெற்ற கூட்டங்களில் நிறை வேற்றிய தீர்மானங்களின் படி வளர்ச்சி திட்டப்பணி கள் மேற்கொள்ள உறுப்பி னர்கள் ஒப்புதல் தெரி வித்தும் எந்தப்பணியும் நடைபெறாமல் உள்ளது.

    கல்குறிச்சி ஊராட்சியில் நிதி முறைகேடு நடத் துள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்துள்ளோம். முறைகேடு ெதாடர்பாக தலைவி யாஸ்மின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர். இதற்கு ஊராட்சிச் செயலர் மறுத்து விட்டார். இதையடுத்து துணைத்தலைவர் பானுசித்ரா, வார்டு உறுப்பினர்கள் சத்திய வாணிமுத்து, மலைச்சாமி, மகாலட்சுமி, பூமா ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

    இதுகுறித்து ஊராட்சி தலைவி யாஸ்மின் கூறுகையில், சிலரது தூண்டுதலின் பேரில், வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி கூட்டத்தை நடத்த விடாமல் இடையூறு செய்கின்றனர். கல்குறிச்சி ஊராட்சியில் பொதுமக்களுக்கான அனைத்து திட்டப்பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றார்.

    • நாலுவேதபதி ஊராட்சியில் ரூ. 44 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • தலைஞாயிறு மாநில விவசாயிகள் குழு உறுப்பினர் மகா குமார் அடிக்கல் நாட்டினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதி ஊராட்சியில் ரூ. 44 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இதில் தலைஞாயிறு மாநில விவசாயிகள் குழு உறுப்பினர் மகா குமார் அடிக்கல் நாட்டினார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசுந்தரி சுந்தரபாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர் உதயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெபஸ்டி அம்மாள், அண்ணாதுரை, ஒன்றிய பொறியாளர்கள் கோவிந்தராஜ், ரசுகுமாரன், ஒன்றிய மேற்பார்வையாளர் தர்மராஜன், உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க இயக்குனர் மச்சழகன், வழக்கறிஞர் ஜெய்சங்கர், தி.மு.க.மாவட்ட பிரதிநிதி வீரகுமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ராம சபை கூட்டத்தில் தாராபுரம் ஒன்றிய பெருந்தலைவர் எஸ். வி. செந்தில் குமார் கலந்து கொண்டார்.
    • கிராம சபை கூட்டத்தில் தாராபுரம் ஒன்றிய பெருந்தலைவர் எஸ். வி. செந்தில் குமார் கலந்து கொண்டார்.

    தாராபுரம்:

    தாராபுரம் வட்டம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்றத்தில் கிராம சபை கூட்டம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட 2-வது வார்டு சம்பத் நகர் பூங்கா மைதானத்தில் நடைபெற்றது. கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தாராபுரம் ஒன்றிய பெருந்தலைவர் எஸ். வி. செந்தில் குமார் கலந்து கொண்டார் .ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாச்சிமுத்து மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கே. கே. ஜீவானந்தம் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் மற்றும் நீதித்துறை கிராம அலுவலர் மற்றும் சுகாதாரத்துறை மகளிர் சுய உதவி குழுக்கள், அங்கன்வாடி உறுப்பினர்கள் ,பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,வேளாண்துறை மற்றும் மருத்துவத்துறை, மின்சார வாரியம், கால்நடை மருத்துவர்கள் ஆகிய துறைகளில் இருந்து பலர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நவம்பர் 1ந் தேதியை தமிழகத்தின் உள்ளாட்சி தினமாக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஊராட்சி மன்றம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் சுய உதவி குழுக்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ,இணைய வழி வீட்டு வரி, சொத்துவரி, பண்ணை சார்ந்த தொழில்கள், மக்கள் நல ஆய்வு மற்றும் இதர பொருள்கள் அனைத்தும் விவாதிக்கப்பட்டு கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்றத்தின் அங்கீகாரம் பெறப்பட்டது . இதற்கான ஏற்பாடுகளை கவுண்டச்சிபுதூர் ஊராட்சி செயலர் பெரியசாமி செய்திருந்தார்.

    ×