search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchayat President"

    • கடையம் அருகே உள்ள புங்கம்பட்டி ஊரணியில் 100 பனைவிதைகள் விதைப்பு பணி நடைபெற்றது.
    • தெற்கு மடத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் பிரேமராதா ஜெயம் முதல் பனைவிதையை நட்டு தொடங்கி வைத்தார்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள புங்கம்பட்டி ஊரணியில் 100 பனைவிதைகள் விதைப்பு பணி நடைபெற்றது. தெற்கு மடத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் பிரேமராதா ஜெயம் முதல் பனைவிதையை நட்டு தொடங்கி வைத்தார். இதில் துணைத்தலைவர் சிவக்குமார், ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வெங்காடம்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொருள் செல்வி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    கடையம்:

    கடையம் யூனியன் வெங்காடம்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சாருகலா ரவி தலைமை தாங்கினார். மாவட்ட உதவி இயக்குனர் தணிக்கை ருக்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சி திருமலை முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி கண்ணன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்ரா பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொருள் செல்வி, அம்பிகா , சரஸ்வதி, விஜயா, ரேகா, பற்றாளர் அசோக், ஊராட்சி செயலர் பாரத், வேளாண் துறை அதிகாரி, பொறியியல் துறை உதவி பொறியாளர், கால்நடை மருத்துவர் , வெங்காடம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • களக்காடு அருகே உள்ள படலையார்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது41). இவர் படலையார்குளம் பஞ்சாயத்து தலைவராக உள்ளார்.
    • அதே ஊரைச் சேர்ந்த முருகன் (49) என்பவர், தான் புதியதாக கட்டிய வீட்டிற்கு வீட்டு வரி ரசீது வழங்கும்படி கேட்டுள்ளார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள படலையார்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது41). இவர் படலையார்குளம் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த முருகன் (49) என்பவர், தான் புதியதாக கட்டிய வீட்டிற்கு வீட்டு வரி ரசீது வழங்கும்படி கேட்டுள்ளார்.

    அதற்கு முருகன், மேல் அதிகாரிகளிடம் கேட்டு ரசீது வழங்குவதாக கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் பஞ்சாயத்து தலைவர் முருகன், படலையார்குளத்தில் உள்ள முத்துக்குமார் என்பவருக்கு சொந்தமான கிணற்றின் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த முருகன், ஊய்க்காட்டான் ஆகியோர் முருகனை அவதூறாக பேசி தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, 2 பேரையும் தேடி வருகிறார்.

    • தி.மு.க.வை சேர்ந்த முருகன் சமீப காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.
    • இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு உடல்நிலை பாதிப்பு அதிகமானதால் தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 49). இவர் கழுநீர்குளம் பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்தார். தி.மு.க.வை சேர்ந்த இவர் சமீப காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு உடல்நிலை பாதிப்பு அதிகமானதால் தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் இறந்தார்.

    • மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் சுமார் 1 1/2லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.
    • இங்குள்ள பிரதான சாலையில் அதிக அளவு ஆக்கிரமிப்புகள் இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், கலெக்டர் செந்தில்ராஜ்யிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் சுமார் 1 1/2லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பிரதான சாலையில் அதிக அளவு ஆக்கிரமிப்புகள் இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது.இது குறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.குறிப்பாக தாளமுத்துநகர் மெயின்ரோடு, தாளமுத்துநகர் முதல் சவேரியார்புரம் வரை, சிலுவைபட்டி விலக்கு முதல் டேவிஸ்புரம் வரை,மாதாநகர் முதல் வண்ணாரப்பேட்டை வரை மற்றும் ராஜபாளையம் முதல் சோட்டையன் தோப்பு வரையிலான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளது.இந்த சாலைகளில் சமீபத்தில் நடந்த விபத்துக்களினால் கல்லூரி மாணவர் ஒருவரும், பள்ளி மாணவர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

    எனவே இந்த சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    • சில்லரைபுரவு ஊராட்சிமன்ற தலைவர் குமாரிடம், விவசாயிகள் சார்பில் மெட்டல் சாலை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
    • செங்குளம் குளக்கரையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 23 லட்சத்தில் புதிய மெட்டல் சாலை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சில்லரைபுரவு ஊராட்சியில் மத்தளம்பாறை அருகே உள்ள சோகோ மென்பொருள் நிறுவனத்தின் எதிரே அமைந்துள்ள செங்குளம் குளக்கரையினை சில்லரை புரவு, புல்லுக்காட்டுவலசை, முத்துமாலைபுரம், மத்தளம்பாறை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களுக்கு செல்வதற்காக பயன்படுத்தி வந்தனர்.

    மெட்டல் சாலை

    எனினும் மழை காலங்களில் குளக்கரையை கடந்து செல்வதற்கு விவசாயிகள் பெரிதும் சிரமமடைந்து வந்தனர். இது குறித்து சில்லரைபுரவு ஊராட்சிமன்ற தலைவர் குமாரிடம் விவசாயிகள் சார்பில் மெட்டல் சாலை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

    அதன்படி ஊராட்சிமன்ற தலைவர் குமாரின் முயற்சியால் தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தற்போது செங்குளம் குளக்கரையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 23 லட்சத்தில் புதிய மெட்டல் சாலை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய மெட்டல் சாலை அமைப்ப தற்கான பூமி பூஜையினை சில்லரைபுரவு ஊராட்சிமன்ற தலைவர் குமார், துணைத் தலைவர் முத்துச்செல்வி வெள்ளை பாண்டியுடன் சேர்ந்து தொடங்கி வைத்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் விவசாய சங்க தலைவர் ராமச்சந்திரன், புல்லுக்காட்டுவலசை தர்மர், வார்டு உறுப்பினர் தாமரைச்செல்வன், அரசு ஒப்பந்ததாரர் முருகன், முத்துமாலைபுரம் முத்தையா மற்றும் ஊராட்சி செயலர் செண்பகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இச்சாலை பணிகள் நிறைவடைந்தால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயனடைவர்.

    • காலங்கரை கிராமத்திற்கு சீரான மின்சாரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதுடன் இது குறித்து தொடர் நடவடிக்கைகளை ஊராட்சி தலைவர் செல்வபிரபா அதிசயராஜ் மேற்கொண்டார்.
    • அதன்படி கோரம்பள்ளம் மின் தொகுப்பில் இருந்து நேரடியாக காலாங்கரை கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கோரம்பள்ளம் ஊராட்சிக்குட் பட்டது காலாங்கரை கிராமம். முற்றிலும் விவசாய தொழில் நடைபெறும் இந்த கிராமத்தில் 250 வீடுகள் உள்ளது. இந்த கிராமத்திற்கு தூத்துக்குடி முத்தையாபுரம் மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது.

    பொதுமக்கள் கோரிக்கை

    இதில் அடிக்கடி மின்தடைகளும், மின்குறைபாடுகளும் ஏற்பட்டு மின்சாரம் இன்றி மக்கள் பாதிப்படைந்து வந்தனர். இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டு வந்ததால் கிராமமே இருளில் மூழ்குவது தொடர்கதையாக இருந்து வந்தது. இது தொடர்பாக அப்பகுதி மாணவ, மாணவிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரம்பள்ளம் ஊராட்சி தலைவர் செல்வபிரபா அதிசயராஜிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இது குறித்து ஊராட்சி தலைவர் செல்வபிரபா அதிசயராஜ் மின்துறை அதிகாரிகளை சந்தித்து காலங்கரை கிராமத்திற்கு சீரான மின்சாரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதுடன் இது குறித்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    ஊராட்சி தலைவருக்கு பாராட்டு

    அதன் தொடர்ச்சியாக இதுவரை முத்தையாபுரம் மின் தொகுப்பில் இருந்து வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பு நிறுத்தப்பட்டு, கோரம்பள்ளம் மின் தொகுப்பில் இருந்து நேரடி யாக காலாங்கரை கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது.

    கோரம்பள்ளம் தனியார் குடிநீர் ஆலை முதல் காலாங்கரை வரை புதிய மின்கம்பங்கள், மின்விளக்கு கள் மற்றும் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு காலாங்கரை கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    கிராமமக்களின் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை மேற்கொண்ட கோரம்பள்ளம் ஊராட்சி தலைவர் செல்வபிரபா அதிசய ராஜுக்கு அப்பகுதி மக்கள் பாரட்டு தெரிவித்துள்ள னர்.

    • நிகழ்ச்சிக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி தலைமை தாங்கினார்.
    • உமரிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ்குமார் பேவர் பிளாக் சாலைகளை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    தென்திருப்பேரை:

    ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் உமரிக்காடு ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊராட்சி மன்ற நிதியில் இருந்து சுமார் ரூ.14 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் 3 பேவர் பிளாக் சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் திறப்பு விழா உமரிக்காட்டில் நடைபெற்றது.

    மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி தலைமையில் ,ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாஸ்கர் முன்னிலையில் உமரிக்காடு ஊராட்சி மன்ற தலைவரும், ஊராட்சி தலைவர்கள் மாவட்ட கூட்டமைப்பு தலைவருமான ராஜேஷ்குமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேவர் பிளாக் சாலைகளை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பேச்சியம்மாள், மணிகண்டன், நிரஞ்சனா தேவி, ஊராட்சி செயலாளர் வாசுதேவன், மக்கள் நல பணியாளர் விஜயா, பஞ்சாயத்து ஊழியர்கள்,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.
    • ஊராட்சி செயலர் ஜெயக்குமார் வரவேற்று தீர்மானங்களை நிறைவேற்றினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் படி சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது,

    மாப்பிள்ளையூரணி சிலுவைப்பட்டி ஆர்.சி.பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு தலைமை வகித்து மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான சரவணகுமார் பேசினார்,

    அப்போது அவர் கூறுகையில், மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி அரசின் நலத்திட்டங்களை பெற்று ஊராட்சியியை முழுமையாக வளர்ச்சி அடைய செய்வதற்காக செயலாற்றுகிறோம்.

    கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றி அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று எம்.பி,அமைச்சர் ,எம்.எல்.ஏ, கலெக்டர் என அனைவரின் ஒத்துழைப்புடன் திட்டங்களைப் பெற்று செயல்படுத்துவோம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அனைத்து திட்டங்களையும் பெற்று மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் செயல் படுத்தப்பட்டு வளர்ச்சி அடைந்த ஊராட்சியாக மாப்பி ள்ளையூரணி ஊராட்சியை மாற்றி காட்டுவோம் என்று பேசினார். ஊராட்சி செயலர் ஜெயக்குமார் வரவேற்று தீர்மானங்களை நிறைவேற்றினார்.

    கூட்டத்தில் துணைத் தலைவர் தமிழ்ச்செ ல்வி,தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஒன்றிய கவுன்சி லர்கள் மற்றும் மின்வாரிய அலுவ லகர்கள், குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழு பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • இலந்தைகுளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மானங்காத்தான் கிராம சமுதாய நலக்கூடத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் செல்வி ரவிக்குமார் முகாமை தொடங்கி வைத்தார்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மானங்காத்தான் கிராம சமுதாய நலக்கூடத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செல்லையா தலைமை தாங்கினார். தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் செல்வி ரவிக்குமார் முகாமை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் லட்சுமி, பண்டாரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நெல்லை கண் ஒளி பரிசோதனையாளர் இசக்கி ராஜா மற்றும் மருத்துவ உதவியாளர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கிட்டப் பார்வை, தூரப்பார்வை மற்றும் கண்புரை போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் ஆத்திகுளம், ராமலிங்கபுரம், மானங்காத்தான், கம்மாபட்டி பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.

    ஏற்பாடுகளை பஞ்சாயத்து அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • சங்கராபுரம் ஊராட்சி தலைவராக தேவி மாங்குடி பதவியேற்றார்.
    • நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.

    இதில் தலைவர் பதவிக்கு தேவி மாங்குடி மற்றும் பிரியதர்ஷினி அய்யப்பன் போட்டியிட்டனர்.இதில் வெற்றி பெற்றதாக முதலில் தேவி மாங்குடிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.இதற்கு பிரியதர்ஷினி அய்யப்பன் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, தேவி மாங்குடி இல்லாமல் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக மற்றொரு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தனக்கு முதலில் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் வேறொருவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கியதை எதிர்த்து தேவி மாங்குடி தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதை விசாரித்த நீதிபதிகள் வெற்றி பெற்றதாக ஒருவருக்கு சான்றிதழ் வழங்கியபின் மற்றொருவருக்கு சான்றிதழ் வழங்க முடியாது எனவே 2-வதாக வழங்கப்பட்ட சான்றிதழுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

    இதையடுத்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் பிரியதர்சினி அய்யப்பன் மேல் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.ஆர். சுவாய், சி.டி.ரவிக்குமார் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

    தேவி மாங்குடி தரப்பில் முன்னாள் நிதியமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம் ஆஜரானார்.பிரியதர்ஷினி அய்யப்பன் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.வசந்த் வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்க ளையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஐகோர்ட் கிளை உத்தரவில் நாங்கள் தலையிட விரும்ப வில்லை, எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என தீர்ப்பளித்தனர்.உச்சநீதிமன்ற தீர்ப்பை யடுத்து தன்னை பதவியேற்க அனுமதிக்கும்படி தேவி மாங்குடி தரப்பில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கலெக்டர் அனுமதியின்பேரில் சங்கரா புரம் ஊராட்சி மன்ற தலைவ ராக தேவி மாங்குடி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

    அவருக்கு சாக்கோட்டை ஒன்றிய ஆணையாளர் ஹேமலதா பதவிப் பிரமா ணம் செய்து வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பி னர் மாங்குடி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப், துணை பி.டி.ஓ பொன்னுச்சாமி, முன்னாள் ஆணையாளர் கேசவன் உள்பட காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஆவினங்குடி ஊராட்சியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் காரணமாக காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர் நிறுத்தி வைத்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவினங்குடி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் கலையரசி (வயது 34). இவர் ஆவினங்குடி ஊராட்சியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் காரணமாக ஊராட்சிகள் சட்ட விதியின்படி பஞ்சாயத்து தலைவர் காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர் நிறுத்தி வைத்துள்ளார்.  தொடர்ந்து ஆவினங்குடி பஞ்சாயத்து நிர்வாகம் பி.டி.ஓ. கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. ஊராட்சி செயலாளர் இளவரசி நேற்று மாலை துப்புரவு பணி யாளர்களுக்கு சம்பளம் போடுவதற்காக கேஸ் புக் மற்றும் தீர்மானம் நோட் தருமாறு பஞ்சாயத்து தலைவரிடம் கேட்டார் 

    அதற்கு பஞ்சாயத்து தலைவர் கலையரசி அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்க்குமாறு கூறியுள்ளார். இதில் ஊராட்சி செயலாளர் இளவரசி வீட்டில் எழுதி எடுத்துக்கொண்டு பி.டி.ஓ.விடம் கையெழுத்து வாங்கி கொள்கிறேன் என கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது  இதில் ஆத்திரமடைந்த பஞ்சாயத்து தலைவர் கலையரசி உடனடியாக ஊராட்சி அலுவலகத்தை பூட்டிவிட்டு அலுவலக வெளிப்புறத்தில் அமர்ந்து ஊராட்சி செயலாளரை இடமாற்றம் செய்ய கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.   இது குறித்து தகவல் அறிந்த மங்களூர் பி.டி.ஓ. முருகன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பஞ்சாயத்து தலைவரிடம் கூறியதை அடுத்து பஞ்சாயத்து தலைவர் போராட்டத்தை கைவிட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×