என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "passed away"
- 2021 ஆம் ஆண்டு டி. கிட்டு இயக்கத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு.
- ஓடிடி தளமான பிளாக்ஷீப் சார்பில் பி.எஸ் வால்யூவில் வெளியிடப்பட்டது.
2021 ஆம் ஆண்டு டி. கிட்டு இயக்கத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. ஓடிடி தளமான பிளாக்ஷீப் சார்பில் பி.எஸ் வால்யூவில் வெளியிடப்பட்டது.
குட்டி மணி, ஈஸ்வர் பாஷா, ஆனந்தன், விஜய் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளரான பிரவீன் குமார் இசையமைத்து இருந்தார். அதைத்தொடர்ந்து ராக்கதன், மேதகு 2 , கக்கன், பம்பர், ராயர் பரம்பரை போன்ற படங்களுக்கு இசையமைத்தார்.
28 வயதான பிரவீன் குமார் உடல் நிலை குறைவால் இன்று அதிகாலை காலமானார். இவ்வளவு சிறு வயதிலே ஒருவர் காலமானது மக்களிடையே மற்றும் சினிமா துறையில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
- எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.
- அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல்.
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.அன்பழகன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
கடந்த 2001- 2006 வரையில் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். அன்பழகன். இவர் எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஏ.கே.எஸ் அன்பழகன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- சுமார் 350 படங்களிலும் நடிகராகவும் மற்றும் 150 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்
- ‘பிதாமகன்’ படத்தில் லைலாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.
தமிழ் சினிமாவின் பிரபலங்கள் அடுதடுத்து உயிரழந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். கடந்த வாரம் நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார். இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் டேனியல் பாலாஜி காலமானார். அச்சோகத்தில் இருந்து மீண்டுவரமால் இருந்த திரையுலகம் இப்போழுது அடுத்து மீண்டும் ஒரு உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளது.
பல படங்களில் துணை நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்து பிரபலமானவர் நடிகர் விஸ்வேஷ்வர ராவ். திடீர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 62.
விக்ரம் -சூர்யா நடிப்பில் வெளியான'பிதாமகன்' படத்தில் லைலாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.உன்னை நினைத்து படத்திலும் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பார்.
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்ர நடிகராகவும் நடித்துள்ளார். சுமார் 350 படங்களிலும் நடிகராகவும் மற்றும் 150 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது உடல் நாளை தகனம் செய்யப்படவுள்ள நிலையில், சிறுசேரியில் உள்ள இவரது வீட்டில் பொதுமக்கள் மற்றும் திரையுலக நண்பர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
- தேமுதிக தொண்டர்கள், பொது மக்களுக்கு இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
- அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது
இதைதொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் சிறந்த முறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தீவுத்திடலில் இடம் ஒதுக்கீடு கொடுத்து, உதவி செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு தேமுதிக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதுகாப்பு வழங்கிய அனைத்து காவல்துறையினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தேமுதிக தொண்டர்கள், பொது மக்களுக்கு இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் எந்த தலைவருக்கும் கிடைத்திடாத அன்பு விஜயகாந்திற்கு கிடைத்துள்ளது. 2 நாட்களில் 15 லட்சம் தொண்டர்கள், பொது மக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ராகுல் காந்தி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- செட்டிக்குறிச்சி ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி காலமானார்.
- அவரின் இறுதிச்சடங்கு நாளை மதியம் 2 மணிக்கு மேல் அவரது இல்லத்தில் வைத்து நடைபெறும்.
மதுரை
மதுரை காவேரி மஹால் மறைந்த கே.வி.கே.ராஜேந் திரபிரபுவின் மைனத்துன ரும், அசோகா பேலஸ் உரி மையாளர் மறைந்த செட்டிக் குறிச்சி எஸ்.ஏ.ஜே.ராஜேந்திரனின் மனைவியும், எஸ். ஏ.ஜே.ஆர்.அசோக்குமா ரின் தாயாரும், மதுரை பி.டி.ஆர். அகாடமி மற்றும் பி.ஆர்.பி. ஏஜென்சி டாக்டர் ஆர்.பி.திருப்பதி ராஜின் பெரியம்மாவும், மதுரை சரஸ்வதி பவனம் லாட்ஜிங் வி.வி.பி.எம்.செல்வராஜின் சகோதரியும், மதுரை காமரா ஜர் பல்கலைக்கழக துணை பேராசிரியர் டாக்டர் எஸ்.பிரவின் குமாரின் அத்தையுமான ஆர்.ராஜேஸ்வரி நேற்று (23-ந்தேதி, திங்கட் கிழமை) மதியம் 12 மணியளவில் காலமானார்.
இதையடுத்து அவரது உடல் உறவினர்கள் அஞ்ச லிக்காக மதுரை காக்கா தோப்பில் சுப்புராயன் அக்ராயம் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக் கப்பட்டுள்ளது. இதில் மறைந்த ஆர்.ராேஜஸ்வரியி ன் உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட் சியினர், கல்வியாளர்கள் உள்ளிட்ேடார் கலந்து கொண்டு அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த ஆர்.ராஜேஸ்வ ரியின் இறுதிச்சடங்கு இன்று (24-ந்தேதி, செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணிக்கு மேல் அவரது இல்லத்தில் வைத்து நடைபெறும் என்று குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
- நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளரின் தந்தை செல்லப்பெருமாள் காலமானார்
- நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
காரைக்குடி
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப் பாளர்-பொறியாளர் வெற்றிகுமரனின் தந்தை நா.செல்ல பெருமாள் காலமானார்.
அவரது இறுதிச் சடங்கு இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணி யளவில் மதுரை பைபாஸ் ரோடு, துரைசாமி நகரில் உள்ள இல்லத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மரணம் அடைந்த செல்லப்பெருமாளின் உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை நாடாளு மன்ற தொகுதி மண்டலச் செயலாளர் சாயல்ராம், ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொரு ளாளர் ஓரிக்கோட்டை காளீஸ்வரன், திருவாடானை சட்ட மன்ற தொகுதி செய லாளர் வெற்றி என்ற ஜெயச்சந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
- காரைக்குடி தொழிலதிபர் கே.ஆர்.எஸ்.பி. கண்ணனின் தாயார் காலமானார்.
- அவரது உடலுக்கு அனைத்து கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
காரைக்குடி
காரைக்குடி முன்னாள் நகர்மன்ற தலைவர் சுப்பையா அம்பலத்தின் மனைவியும், காரைக்குடி தொழிலதிபர் கே.ஆர்.எஸ்.பி.கண்ணனின் தாயாரும், சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் அணி இணைச் செயலாளர்- காரைக்குடி நகர் மன்ற உறுப்பினருமான கே.ஆர்.எஸ்.பி.கே.தேவன் மற்றும் கே.ஆர்.எஸ்.பி.கே.ஞானேஸ்வரன் ஆகியோரின் அப்பத்தாவுமான சோலச்சி அம்மாள் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) மதியம் காலமானார். அவரது உடலுக்கு அனைத்து கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச் சடங்கு இன்று பகல் நியூடவுனில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பின்னர் தெற்குதெருவில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் தொகுதி முன்னாள் எம்.பி.யும், எனது நண்பருமான ஜே.கே.ரித்தீஷ், இளம் வயதில் திடீரென்று மறைந்துவிட்டார் என்ற துயர செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
நாளடைவில் வேறு இயக்கத்தில் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டாலும், தனது பழைய நட்பை மறந்துவிடாமல் தொடர்ந்து பாசத்துடன் பழகியவர். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுலகத்தினருக்கும் எனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #JKRitish #MKStalin
கர்நாடக மாநிலம், துமக்கூரு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சித்தகங்கா மடத்தின் ஜீயராக உள்ளவர் சிவகுமார சுவாமி. இவர் கடந்த 1941-ம் ஆண்டில் இருந்து துமக்கூரு சித்தகங்கா மடத்தின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.
மத்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் பட்டத்துடன் ‘நடமாடும் தெய்வம்’ என அவரது பக்தர்களால் அழைக்கப்படும் சிவகுமார சுவாமியின் தன்னலமற்ற தொண்டினை சிறப்பிக்குமாறு அவருக்கு நாட்டின் மிக உயரிய ‘பாரத ரத்னா’ விருது அளிக்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா பரிந்துரைத்திருந்தார்.
சிறுநீரகம் சார்ந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சிவகுமார சுவாமிஜி கடந்த ஆண்டு பெங்களூரு நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மடத்துக்கு திரும்பினார்.
கடந்த 2007-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கர்நாடக மாநிலத்துக்கு வந்திருந்தபோது துமக்கூருக்கு சென்று மடாதிபதி சிவகுமார சுவாமியை சந்தித்தது நினைவிருக்கலாம்.
ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். #ShreeShivakumaraSwamiji #Siddagangaseer
தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராஜமாணிக்கம் இன்று அதிகாலை காலமானார். இவர் 1984 ஆண்டு முதல் 1987 ஆண்டு வரை அரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா, ஜானகி அம்மாள் ஆகியோருக்கும் ராஜமாணிக்கம் நெருக்கமானவர். அன்னாரது இறுதி சடங்கு இன்று மாலை 3 மணிக்கு மேல் அம்பேத்கார் நகரில் நடைபெற உள்ளது.
இவருக்கு மனைவி தவமணி, மகன்கள் ராஜா, முருகன், சம்பத், மருமகள்கள் ஜெயந்தி, சரஸ்வதி, நாகலட்சுமி ஆகியோர் உள்ளனர். அவரது உடலுக்கு உறவினர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசு அலுவலர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். #ADMK #FormerMLARajamanickam
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்