search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Passenger Rail"

    • ரெயில்களின் எண்களும் 7-ல் ஆரம்பிக்கும் வகையில் மாற்றப்பட்டன.
    • பழைய எண்களை அறிவிக்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    பெருநகரங்களையும், சிறு கிராமங்களையும் இணைக்கும் முக்கிய ரெயில் போக்குவரத்தாக பயணிகள் ரெயில் விளங்குகிறது. கொரோனா பரவலுக்கு முன்பு தெற்கு ரெயில்வே சார்பில் 3,081 கி.மீ. தொலைவுக்கு 487 பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டன.

    கொரோனா கட்டுப்பாட்டின்போது நிறுத்தப்பட்ட இந்த ரெயில் சேவை பின்னர் முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் எனும் பெயரில் இயக்கப்பட்டன.

    இதனால் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10-லிருந்து ரூ.30 ஆக உயர்ந்ததால் தினசரி பயணிக்கும் ஏழை நடுத்தர மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் முதல் அனைத்து மெமு, டெமு, பயணிகள் சிறப்பு ரெயில்கள் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும் எனவும், கொரோனா கட்டுப்பாட்டுக்கு முன்பு வசூலித்த கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த முன்பதிவில்லா சிறப்பு ரெயில்களுக்கான எண்கள் வழக்கமான பயணிகள் ரெயில்களுக்கான எண்களாக மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவில் இருந்து அனைத்து கோட்ட பொதுமேலாளருக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா பரவலுக்கு பின்பு அனைத்து பயணிகள் ரெயிலும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்களாக மாற்றி இயக்கப்பட்டன.

    இந்த ரெயில்களின் எண்களும் 7-ல் ஆரம்பிக்கும் வகையில் மாற்றப்பட்டன. இந்த நிலையில் தெற்கு ரெயில்வேயில் இயங்கும் அனைத்து முன்பதிவில்லா ரெயில்களின் எண்களையும் மாற்றி மீண்டும் பழைய எண்களை அறிவிக்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    தெற்கு ரெயில்வேயில் இயங்கும் 288 பயணிகள் ரெயில்கள் மற்றும் 8 மலைப்பாதை ரெயில்களின் எண்கள் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி பழைய எண்களை கொண்டு இயக்கப்படும்.

    உதாரணமாக திருப்பதி-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில் 06728 எனும் எண்ணிலும், மதுரை-செங்கோட்டை பயணிகள் ரெயில் 06504 எனும் எண்ணுக்கு பதிலாக 56719 எனும் எண்ணிலும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திண்டிவனம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியவர் தண்டவாளத்தில் விழுந்து பலியானார்.
    • இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 58). இவர் செங்க ல்பட்டு மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதை அடுத்து அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டு கம்பெனியில் இருந்து விடைபெற்றார். செங்கல்பட்டில் இருந்து திண்டிவனம் பஸ்சில் வந்த அவர், திண்டிவனம் ெரயில் நிலையத்தில் இருந்து தனது சொந்த ஊரான விழுப்புரம் சொல்வதற்கு பேசஞ்சர் ெரயிலில் சென்று கொண்டிருந்தார்.

    அப்பொழுது திண்டிவனத்தில் இருந்து புறப்பட்ட ெரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரது செல்போன் பிளாட்பார்மில் கீழே விழுந்தது. பிளாட்பார்மில் விழுந்த செல்போனை எடுப்பதற்காக ஓடும் ெரயிலில் இருந்து கீழே இறங்கிய போது, நிலை தடுமாறிய சுதாகர், தவறி விழுந்தார். இதில் பிளாட்பாரத்தில் இருந்து கீழே விழுந்து ரெயிலின் அடியில் சிக்கி கால் துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து செங்கல்பட்டு ெரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை- போடி இடையே விரைவில் பயணிகள் ரெயில் முழுமையாக இயக்கப்படும்.
    • மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    மதுரை

    மதுரை-போடி அகல ரெயில் பாதை திட்டத்தில் மதுரை - தேனி வரை பணிகள் முடிந்து ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த நிலையில் தேனி - போடி இடையே 15 கிமீ தொலைவுக்கான அகல ரெயில் பாதை பணிகள் தற்போது முடிந்து உள்ளன. இங்கு ஏற்கனவே ரெயில் என்ஜின் விடப்பட்டு வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.

    தேனி - போடி புதிய அகல ரெயில் பாதையில் நேற்று 120 கி.மீ வேகத்தில் ரெயில் என்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி போடியில் இருந்து புறப்பட்ட ரெயில் என்ஜின், தேனிக்கு 9 நிமிடங்கள், 20 நொடியில் சென்றது. இந்த ஆய்வின் போது லோகோ பைலட் முத்துகிருஷ்ணன், உதவி லோகோ பைலட் அய்யனார் ஆகியோர் ரெயில் இன்ஜினை ஓட்டினார்கள். தேனி- போடி அகல ரெயில் பாதை சோதனையின் போது தென்னக ரெயில்வே கட்டுமான பிரிவு துணை முதன்மை பொறியாளர் சூரியமூர்த்தி, உதவி பொறியாளர் சரவணன் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    மதுரை- தேனி இடையே பயணிகள் ரெயில் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது. தேனி முதல் போடி வரை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு விட்டது. எனவே மதுரை-போடி இடையே பயணிகள் ரெயிலை முழுமையாக இயக்குவது என்று மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    ×