என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Passengers Protest"
- பயணிகள் ரெயில் காலதாமதமாக இயக்கப்படுவதால் மாணவர்கள், அலுவலர்கள் பாதிக்கப்படுவதாக புகார் கூறினர்.
- சென்னை நோக்கி செல்லும் ரெயில்கள் அதிக அளவில் நிற்பதில்லை எனவும் பயணிகள் குற்றம் சாட்டினர்.
செங்கல்பட்டு:
விழுப்புரத்தில் இருந்து மதுராந்தகத்திற்கு இன்று காலை 6.40-க்கு வர வேண்டிய பயணிகள் ரெயில் 15 நிமிடங்கள் காலதாமதமாக வந்ததால் பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பயணிகள் ரெயில் காலதாமதமாக இயக்கப்படுவதால் மாணவர்கள், அலுவலகத்திற்கு செல்வோர் பாதிக்கப்படுவதாக புகார் கூறினர். சென்னை நோக்கி செல்லும் ரெயில்கள் அதிக அளவில் நிற்பதில்லை எனவும் பயணிகள் குற்றம் சாட்டினார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- பெங்களூரில் இருந்து ஏ.சி. இயங்காததால் பயணிப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது.
- அதிகாரிகள், கோவை போத்தனூர் சென்றதும் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
திருப்பூர்:
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று மதியம் ஹூப்ளியில் இருந்து கொச்சுவேலிக்கு புறப்பட்டது. பெங்களூரு ரெயில் நிலையத்திற்கு வந்த போது அந்த ரெயிலின் ஏ1 குளிர்சாதன பெட்டியில் ஏ.சி.யில் பழுது ஏற்பட்டது.
ஏ.சி. சரியாக இயங்காததால் அந்த பெட்டியில் பயணித்த பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அவர்கள் சரி செய்வதாக கூறியுள்ளனர். ஆனால் பழுதான ஏ.சி.யை சரி செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தநிலையில் சேலம், ஈரோட்டை கடந்து நேற்றிரவு 11 மணிக்கு ரெயில் திருப்பூர் ரெயில் நிலையம் வந்தது. அங்கேயும் ஏ.சி.யை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஏ1 பெட்டியில் பயணித்த பயணிகள் ரெயில் புறப்பட தயாரான போது அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தினர்.
இதைப்பார்த்த திருப்பூர் ரெயில் நிலைய அதிகாரிகள், போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனே அதிகாரிகள் மற்றும் போலீசார், குளிர்சாதன பெட்டியில் பயணித்த பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பயணிகள், நாங்கள் பணம் கொடுத்து தான் பயணிக்கிறோம். பெங்களூரில் இருந்து ஏ.சி. இயங்காததால் பயணிப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது. உடனே சரி செய்து தாருங்கள் என்று அதிகாரிகள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே அதிகாரிகள், கோவை போத்தனூர் சென்றதும் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
பின்னர் ரெயில் திருப்பூரில் இருந்து புறப்பட்டு சென்றது. போத்தனூர் சென்றதும் அங்கு ஏ.சி. பழுதான ஏ1 பெட்டி மாற்றப்பட்டு மாற்றுப்பெட்டி இணைக்கப்பட்டது. அதன்பிறகு பயணிகள் நிம்மதியுடன் பயணித்தனர்.
ஏ.சி.இயங்காததால் பயணிகள் ரெயிலை நிறுத்திய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் காரணமாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து அரை மணிநேரம் தாமதமாக கொச்சுவேலிக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் சற்று சிரமம் அடைந்தனர்.
- பணிமனையில் இருந்து அதிகாலை 5 மணி அளவில் வரும் முதல் பஸ் உத்திரமேரூர் பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும்.
- பயணம் செய்யும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
உத்திரமேரூரில் அரசு போக்குவரத்து பணிமனை செயல்பட்டு வருகிறது. இந்த பணிமனையில் இருந்து செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ -மாணவிகள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் அதிகம் பயணம் செய்து வருகிறார்கள்.
பணிமனையில் இருந்து அதிகாலை 5 மணி அளவில் வரும் முதல் பஸ் உத்திரமேரூர் பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த பஸ் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அதில் பயணம் செய்யும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று அதிகாலை முதலே சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் காலை 7 மணி வரை இயக்கப்படவில்லை. இதனால் செங்கல்பட்டு, சென்னை தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ -மாணவிகள் தவித்தனர். காலை 7.20 மணியளவில் முதல் பஸ் பணிமனையில் இருந்து உத்திரமேரூர் பஸ் நிலையத்திற்கு வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டிரைவர், கண்டக்டரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்