search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pathum Nissanka"

    • மந்தமாக விளையாடிய நிசங்கா 49 பந்தில் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
    • வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    மந்தமாக விளையாடிய நிசங்கா 49 பந்தில் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா- குசல் மெண்டீஸ் களமிறங்கினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 77 ரன்கள் குவித்தது. இதில் குசல் மெண்டீஸ் 26 ரன்னில் வெளியேறினார். நிதானமாக விளையாடிய நிசங்கா 49 பந்தில் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    அடுத்து வந்த வீரர்கள் குசல் பெரேரா 24, கமிந்து மென்டிஸ் 19, அசலங்கா 9 என வெளியேறினர். இதனால் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • 219 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
    • இலங்கை அணியின் பதும் நிசங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இங்கிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. இதன் மூலம் இரு போட்டிகளில் வென்று தொடரையும் கைப்பற்றியது.

    இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 6 ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து பேட் செய்த இலங்கை அணி 263 ரன்களை எடுத்தது.

    பிறகு, இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி அதிர்ச்சி அளிக்கும் வகையில் 156 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து 219 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

    இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணியின் பதும் நிசங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் களமிறங்கிய திமுத் கருணரத்னே 8 ரன்களிலும், குசல் மெண்டிஸ் 39 ரன்களையும் எடுத்தனர். மறுபுறம் நிசங்கா சதம் அடிக்க, ஏஞ்சலோ மேத்யூஸ் 32 ரன்களை எடுத்த நிலையில், இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    போட்டி முடிவில் பதும் நிசங்கா 127 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து சார்பில் க்ரிஸ் வோக்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த தொடரின் முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றிய நிலையில், இலங்கை அணி மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது அந்த அணிக்கு ஆறுதலாக அமைந்தது.

    • முதலில் ஆடிய வங்காளதேசம் 286 ரன்கள் எடுத்துள்ளது.
    • அடுத்து ஆடிய இலங்கை 287 ரன்களை எடுத்து வென்றது.

    சட்டோகிராம்:

    இலங்கை, வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி சட்டோகிராமில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேசம் 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது. ஹிருடோய் 96 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். சவுமியா சர்க்கார் 68 ரன்னும், ஷாண்டோ 40 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டும், மதுஷனகா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ டக் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 16 ரன்னும், சமரவிக்ரமா ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    ஒருபுறம் விக்கெட்கள் விழுந்தாலும் பொறுப்புடன் ஆடிய பதும் நிசங்கா சதமடித்து அசத்தினார். அவருக்கு அசலங்கா நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. அசலங்கா அரை சதம் கடந்தார்.

    4வது விக்கெட்டுக்கு 185 ரன்கள் சேர்த்த நிலையில் பதும் நிசங்கா 114 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அசலங்கா 91 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இலங்கை 47.1 ஓவரில் 287 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

    • முதலில் பேட் செய்த இலங்கை 381 ரன்களைக் குவித்தது.
    • தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் 339 ரன்கள் எடுத்தது.

    பல்லேகலே:

    ஆப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்டில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 381 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா அதிரடியாக ஆடி இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் 210 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ 88 ரன்னில் அவுட்டானார். சமர விக்ரமா 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே ஆப்கானிஸ்தானுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அந்த அணியை அனுபவ வீரர் முகமது நபி, ஒமர்சாய் ஜோடி சரிவிலிருந்து மீட்டது. இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

    சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 242 ரன்கள் திரட்டியது. முகமது நபி 136 ரன்களில் அவுட்டானார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இலங்கை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஒமர்சாய் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 381 ரன்களை குவித்தது.

    இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.

    இதைத் தொடர்ந்து இரு அணிகள் இடையே முதல் ஒருநாள் போட்டி இன்று (பிப்ரவரி 9) நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 381 ரன்களை குவித்தது.

    இலங்கை சார்பில் அதிரடியாக ஆடிய பதும் நிசங்கா ஆட்டமிழக்காமல் 210 ரன்களை குவித்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய முதல் இலங்கை அணி வீரர் என்ற பெருமையை நிசங்கா பெற்றிருக்கிறார். இவருடன் களமிறங்கிய அவிஷ்கா ஃபெர்னான்டோ 88 ரன்களையும் குவித்தார். அடுத்து வந்த குசல் மென்டிஸ் 16 ரன்களையும் சதீரா சமரவிக்ரமா 45 ரன்களை எடுத்தனர்.

    இந்த போட்டியில் இரட்டை சதம் விளாசிய பதும் நிசங்கா ஒருநாள் கிரிக்கெட்டில் சனத் ஜெயசூர்யா சாதனையை முறியடித்துள்ளார். முன்னதாக 2000-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சனத் ஜெயசூர்யா 189 ரன்களை குவித்ததே ஒருநாள் போட்டிகளில் இலங்கை வீரர் குவித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது.

    • டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை 381 ரன்களைக் குவித்தது.

    பல்லேகலே:

    ஆப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்டில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா அதிரடியாக ஆடினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்த்தது.

    அவிஷ்கா 88 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேப்டன் குசால் மெண்டிஸ் 16 ரன்னில் வெளியேறினார்.

    3வது விக்கெட்டுக்கு நிசங்கா, சமரவிக்ரமா ஜோடி 120 ரன்களை சேர்த்தது. சமர விக்ரமா 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சிறப்பாக ஆடிய நிசங்கா இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் 211 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 381 ரன்கள் குவித்துள்ளது.

    இதையடுத்து, 382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்குகிறது.

    • பதும் நிசங்காவுக்கு மாற்று வீரராக பெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டார்.
    • இலங்கை அணியில் இதுவரை 3 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இலங்கை-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 364 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.

    நேற்றைய 3-வது நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 431 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியை விட இலங்கை அணி 67 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் இலங்கை அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரரான பதும் நிசங்காவுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அவருக்கு மாற்று வீரராக பெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் இதுவரை மேத்யூஸ், பிரவீன் ஜெயவிக்ரமா, பதும் நிசங்கா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேத்யூஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு பதிலாக பெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • 3வது ஒருநாள் போட்டியில் சதமடித்த இலங்கை வீரர் பதும் நிசங்கா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
    • இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

    கொழும்பு:

    இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஆரோன் பின்ச் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். அவர் 62 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய டிராவிஸ் ஹெட் 70 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அலெக்ஸ் கேரி 49 ரன்னில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 18 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 33 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க வீரர் பதும் நிசங்கா சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 137 ரன்னில் வெளியேறினார். குசால் மெண்டிஸ் 87 ரன்களில் அவுட்டானார்.

    இறுதியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 292 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இலங்கை அணி ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    ×