search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paver Block"

    • பரமக்குடி அருகே புதிய பேவர் பிளாக் சாலையை முருகேசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    பரமக்குடி அருகே உள்ள வேந்தோனி ஊராட்சிக்குட்பட்ட முத்துச்செல்லாபுரம் கிராமத்தில் சர்ச் முன்பகுதியில் தண்ணீர் தேங்குவதால் வழிபாடு செய்வதற்கும், தேர் செல்லும் சாலை மேடு பள்ளமாக இருப்பதால் விழா காலங்களில் தேர் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.

    ஆகையால் சர்ச் முன் பகுதி மற்றும் தேர் செல்லும் பாதையில் சாலைகள் அமைத்துத் தருமாறு முத்துச்செல்லா புரம் கிராம மக்கள் முருகேசன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.

    இதனை தொடர்ந்து முருகேசன் எம்.எல்.ஏ. தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைத்து அதனை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி முன்னாள் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், கிளை செயலாளர் சவரிமுத்து, இளைஞ ரணி அந்தோனிதாஸ், கிளை நிர்வாகிகள் உலகநாதன், மாரிமுத்து, மகளிர் அணி அல்போன்ஸ்சா உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் அருகே பேவர் பிளாக், கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள சக்கரப்பநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட மேலப்பெருமாள்பட்டி கிராமத்தின் தேவர் நகரில் சாக்கடை வசதி இல்லாததால் அந்த பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். வீட்டைச் சுற்றி கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இங்கு கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதே போல் மணல்பட்டி கிராமத்தில் உள்ள தெற்கு தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    தாழ்வான பகுதியான இங்கு சாதாரண மழைக்கு தண்ணீர் குளம் போல் தேங்கி மக்கள் வெளியேற முடியாத அவல நிலை உள்ளதாக விவசாயி அழகுசாமி (40) தெரிவித்தார். இதேபோல் வீரலட்சுமி (23) கூறுகையில், எங்கள் பகுதிக்கு சாக்கடை வசதி இல்லாததால் வீட்டுக்கு முன்பு கழிவு நீர் தேங்கி பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம். ஊராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாய் வசதி செய்து, பேவர் பிளாக் சாலை அமைத்து தர வேண்டும் என்றார்.

    ×