search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pay hike"

    • மாற்றத்திறன் படைத்த குழந்தைகளுக்கென சிறப்பாசிரியர்கள் மூலம் பிரத்யேக பயிற்சி கல்வி வழங்கப்படுகிறது.
    • சைகை மொழி பேச்சு, பிரெய்லி எழுத்துக்கள் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது.

    திருப்பூர் : 

    அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் உள்ள பன்முகத் திறமையை வெளிக்கொணர பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலை விழா நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மாற்றுத்திறனாளி குழந்தைகளை சமுதாயத்தில் இருந்து மாறுபடுத்தி காண்பிக்காமல் அவர்களுக்கும் உள்ளடக்கிய கல்வி வழங்க பள்ளிக்கல்வித்துறை ஊக்குவித்து வருகிறது.

    அதன்படி மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளையும், சாதாரண நிலையில் கல்வி பயிலும் பிள்ளைகளுடன் இணைத்து கல்வி கற்பிக்க செய்வதே உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் நோக்கமாகும். சாதாரண குழந்தைகளுடன் மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளின் தன்மைகேற்ப அவர்களை பழக்கப்படுத்துவது, அமர வைப்பது, சிறப்பாசிரியர்கள் மூலம் கல்வி கற்பிக்க செய்வது உள்ளிட்ட பணிகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

    ஏற்கனவே ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் சார்பில் வட்டார அளவில் மாற்றத்திறன் படைத்த குழந்தைகளுக்கென சிறப்பாசிரியர்கள் மூலம் பிரத்யேக பயிற்சி கல்வி வழங்கப்படுகிறது. சைகை மொழி பேச்சு, பிரெய்லி எழுத்துக்கள் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது.

    சிறப்பு கல்வி வழங்குவது, இயன்முறை மருத்துவம், ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்குவது உள்ளிட்ட பணிகளை சிறப்பு பயிற்றுனர்கள் செய்து வருகின்றனர். ஆனால் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசு மெத்தனம் காண்பித்து வருவதாக அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் சிறப்பு பயிற்றுனர்களுக்கு தற்காலிக பணி ஆணை, அடிப்படை பணிச்சலுகை கூட வழங்கப்படுவதில்லை. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் பணிபுரியும் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் ஒன்றரை ஆண்டுகளில் மூன்று முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டுவிட்ட நிலையில், உள்ளடக்கிய சிறப்பு பயிற்றுனர்களுக்கு 4 ஆண்டில் ஒரு முறை கூட ஊதியம் உயர்த்தப்படவில்லை.உள்ளடக்கிய கல்வி தகுதி பெற்ற சிறப்பு பயிற்றுனர்களை மாநில, மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

    இக்கோரிக்கையை முன்வைத்து மாவட்ட கலெக்டர்களிடம் மனு வழங்குவது, முற்றுகை போராட்டம் நடத்துவது என அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபட தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளதாக திருப்பூர் மாவட்ட சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • அறிவுசார் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கோரிய வழக்கில் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மதுரை

    தமிழ்நாடு சிறப்பு பள்ளிகள் கவுன்சில் அமைப்பின் செயலாளர் வெற்றிவேல் முருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அறிவு சார் குறைபாடு உடைய குழந்தைகள் நலன் கருதி சிறப்பு பள்ளிகளை நடத்தி வருகிறோம்.

    பல்வேறு மாவட்டங்களில் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கு உள்ள சிறப்பு பள்ளிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறோம்.

    அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் அறிவுசார் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன. இங்குள்ள சிறப்பு ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கான ஊதியம் மிக மிகக் குறைவு.

    மற்ற ஆசிரியர்களைப் போல அவர்களுக்கும் பல்வேறு சலுகைகளுடன் கூடிய உரிய சம்பளத்தை வழங்கும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். இதுவரை அது தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

    எனவே அறிவுசார் குறைபாடு உடைய குழந்தைகளுக்கான சிறப்பு ஆசிரியர்களுக்கு பிற ஆசிரியர்களைப் போல சலுகைகள் உடன் கூடிய உரிய சம்பளத்தை வழங்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் சாமித்துரை ஆஜராகி, மாணவர்கள் 8 பேருக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி சிறப்பு பள்ளிகளிலும் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்களுக்கான ஊதிய முறைகள் குறித்து ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளது. அந்த உத்தரவுகளை உரிய முறையில் அமல்படுத்த வேண்டும் என்று வாதாடினார்.

    விசாரணை முடிவில், சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கும் மற்ற ஆசிரியர்களைப் போல ஊதிய நடைமுறைகள் வழங்குவது குறித்து எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.

    ஊதிய உயர்வு, பிடித்தம் செய்யப்பட்ட ரூ.7 ஆயிரம் கோடி ஆகியவற்றை வழங்க கோரி, நவம்பர் 1-ம் தேதி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதாக தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கள் அறிவித்துள்ளன. #TNBusStrike #CITU
    சென்னை:

    ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த ஜனவரி மாதத்தில் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை ஐகோர்ட் தலையிட்ட பின்னர், ஸ்டிரைக் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. அப்போது, அரசின் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் சிலவற்றை அரசு நிறைவேற்றியது. 

    இந்நிலையில், ஊதிய உயர்வு, தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 7 ஆயிரம் கோடியை திரும்ப வழங்க வேண்டும், 2003-க்கு பின் பணியில் சேர்ந்த பணியாளர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 1-ம் தேதி ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதாக தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

    வேலை நிறுத்தத்துக்கான நோட்டீஸ் விரைவில் போக்குவரத்து மேலான் இயக்குநர் மற்றும் தொழிலாளர் துறை ஆணையரிடம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மாநில கவர்னர்களுக்கான மாத ஊதியம் ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதனை மறுத்து பழைய ஊதியமே போதும் என சத்தீஸ்கர் கவர்னர் பால்ராம்ஜி தாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
    ராய்ப்பூர்:

    நாட்டின் அனைத்து மாநில கவர்னர்கள் மற்றும் துணை நிலை கவர்னர்களுக்கான ஊதியம் கடந்த மார்ச் மாதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. ரூ.1.10 லட்சத்தில் இருந்து ரூ.3.5 லட்சமாக ஊதியம் உயர்த்தப்பட்டது. இந்த ஊதிய உயர்வு கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தை முன் தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, 26 மாதங்கள் நிலுவைத்தொகையுடன் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில், சத்தீஸ்கர் கவர்னராக உள்ள  பால்ராம்ஜி தாஸ் ஊதிய உயர்வை ஏற்க மறுத்து கடந்த மாதம் கடிதம் எழுதியுள்ள நிகழ்வு தற்போது வெளியாகியுள்ளது. பழைய ஊதியமே தனக்கு போதுமானதாக இருப்பதாகவும், புதிய உயர்த்தப்பட்ட ஊதியம் தேவையில்லை என பால்ராம்ஜி தாஸ் அம்மாநில கணக்குப்பிரிவு தலைவருக்கு (தணிக்கை) கடிதம் எழுதியுள்ளார்.

    பால்ராம்ஜி தாஸின் கோரிக்கையை ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கணக்குப்பிரிவு தலைவர் பழைய ஊதியமே அவருக்கு செலுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
    ×