என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Penalty for buses"
- குறைந்த அளவு பஸ்கள் வருவதால் மா ணவர்கள் படிக்கட்டுகளில் நின்றபடி பயணம் செய்கின்றனர்.
- அதிகமாக பயணிகளை ஏற்றி வந்த பஸ்களை நிறுத்தி அறிவுரை வழங்கி னர். ஒருசில கண்டக்டர்க ளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரத்திற்கு அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து அதிக அளவு டவுன் பஸ்கள் இயகப்படுகின்றன. இதில் பள்ளி மாணவ-மாணவி கள், கூலித்தொழிலாளிகள் என ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். ஒருசில வழித்தடங்களில் குறைந்த அளவு பஸ்கள் வருவதால் மா ணவர்கள் படிக்கட்டுகளில் நின்றபடி பயணம் செய்கின்றனர். இதனால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்து வருகின்றன.
எனவே அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி வரக்கூடாது என்று அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களுக்கும், ஆட்டோக்களுக்கும் அறி வுரை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் சாலைப்புதூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அபராதம்
அப்போது அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி வந்த பஸ்களை நிறுத்தி அறிவுரை வழங்கி னர். ஒருசில கண்டக்டர்க ளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.இதே போன்ற தவறை மீண்டும் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்தனர். போலீசாரின் இதுபோன்ற ஆய்வு தொடர்ந்து நடைபெற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பஸ் நிறுத்தத்திற்கு சேலம், ஈரோடு திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வரும் பஸ்கள் வருவதில்லை.
- பஸ்கள் கிடைக்காததால் மாணவர்கள், வேலைக்கு செல்வோரும் அவதியடை கின்றனர்.
சூலூர்,
சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி, மற்றும் வேலைகளுக்கு செல்வோர் கோவை செல்ல கருமத்தம்பட்டி பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கின்றனர்.
ஆனால் இந்த பஸ் நிறுத்தத்திற்கு சேலம், ஈரோடு திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வரும் பஸ்கள் வருவதில்லை.
மாறாக அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி பாலத்தின் மேலே பஸ்களை நிறுத்தி மாணவர்களை ஏற்றி செல்கின்றனர்.
போக்குவரத்து நிறைந்த கோவை அவிநாசி சாலையில் இவ்வாறு முறையற்ற வகையில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றது. மேலும் பஸ்கள் கிடைக்காததால் மாணவர்கள், வேலைக்கு செல்வோரும் அவதியடை கின்றனர்.
கருமத்தம்பட்டி பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்வதை வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் போராட்டம் நடத்தபோவதாக அறிவி க்கப்பட்டது. இதற்கு கருமத்தம்பட்டி பாஜக மண்டல தலைவர் எஸ்.மகேஷ், மகளிர் அணி மாவட்ட தலைவி ரேவதி, மாவட்ட பொது ச்செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் போராட்டத்திற்கு காவல்து றையிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை, சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகம், கருமத்தம்பட்டி பேருந்து பணிமனை மேலாளர் கார்த்திகேயன் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் இணைந்து அனைத்து பஸ்களும் கருமத்தம்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர். அவ்வாறு கருமத்தம்பட்டி பஸ் நிலையத்துக்கு வராத பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மீது போக்குவரத்து துறை மோட்டார் வாகன ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தார்.
மேலும் அனைத்து பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுரைகள் சொல்லி அனுப்பி வைக்கப்பட்டனர். போலீசார் உடன் இணைந்து பாஜகவினர் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர். போராட்டம் நடத்த அனுமதி வழங்காத போதும் தங்களது கோரிக்கை ஏற்கப்பட்டது மற்றும் செயல்படுத்தப்பட்டது குறித்து பாஜகவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். காவல்துறை போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து பணிமனை அதிகாரிகளுக்கு பா.ஜ.கவினர் நன்றி தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்