என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "people arrested"
துருக்கியில் கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தாயீப் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சித்தது. ஆனால் மக்கள் ஆதரவுடன் அதிபர் அந்த புரட்சியை முறியடித்தார்.
அமெரிக்காவில் வசித்துவரும் துருக்கியை சேர்ந்த மத குரு பெதுல்லா குலென் தான், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு காரணம் என தாயீப் எர்டோகன் குற்றம் சாட்டினார். அதனை தொடர்ந்து அவர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தொடங்கினார்.
இந்த நிலையில், தற்போது மத குரு குலனுடன் தொடர்புடைய 1,112 பேரை கைது செய்ய துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. போலீஸ் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கள் மகாலிங்கம், பட்டு மற்றும் போலீசார் தேன்கனிக்கோட்டையில் உள்ள தர்கா மற்றும் தனியார் லாட்ஜ் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த பாலாஜி(வயது 29), மஞ்சுநாத்(29), இர்பானுல்லா (27), ராஜா(42), பாலாஜி (34), ஹரீஷ்(30), சரவணன்(34), ராஜவேல்(51), கிருஷ்ணமூர்த்தி(33), கணேஷ்(31) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.500-ம், சீட்டுகட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் ஊத்தங்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சென்னப்பநாயக்கனூர் ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மறைவான பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர் களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த போஸ் என்கிற இளந்திரயன்(24), கணேஷ் (29), சேட்டு(41), வெங்கடா சலம்(31), இளங்கோ(26) ஆகியோர் என தெரியவந்தது. பின்னர் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,000 மற்றும் சீட்டுகட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 34). இவருடைய சித்தப்பா தமிழ்மணி (62). தன்னுடைய நிலத்தை வேதாரண்யம் பகுதி முதலியார்தோப்பைச் சேர்ந்த தர்மராஜ் (45) என்பவரிடம் விலைபேசி முன்பணம் வாங்கியுள்ளார்.
பாக்கி பணத்தை கொடுத்து தர்மராஜ் நிலத்தை பதிவு செய்து கொள்ளவில்லை. இதனால் முன்பணத்தை தர்மராஜனிடம் திருப்பி கொடுப்பதற்காக தமிழ்மணி, பிரபாகரன் மற்றும் சிலர் சென்றுள்ளனர்.
அப்போது தமிழ்மணி தரப்பிற்கும் தர்மராஜ் தரப்பினருக்கும் தாகராறு ஏற்பட்டதில் தர்மராஜ் கத்தியால் பிரபாகரனை வெட்டியுள்ளார்.
தர்மராஜனை, பிரபாகரன், தமிழ்மணி, சேகர், ஆனந்தன் ஆகிய நால்வரும் சேர்ந்து கம்பால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பிரபாகரன், தர்மராஜ் இருவரையும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் தர்மராஜ் மீதும், தர்மராஜ் கொடுத்த புகாரின் பேரில் தமிழ்மணி, சேகர், ஆனந்தன், பிரபாகரன் ஆகிய 4 பேர் மீதும் தனித்தனியே வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் அகோரம் வழக்குப்பதிவு செய்தார். இதில் தமிழ்மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாவர்:
வளவனூர் அருகே உள்ள நலவரசன் பேட்டையை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது36). இவர் சொந்தமாக லாரி வாங்கி அவரே ஓட்டி வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சக்கரவர்த்தி லாரியை கிருமாம்பாக்கத்தில் நிறுத்தி விட்டு அருகில் உள்ள டைல்ஸ் நிறுவனத்தில் சவாரி கேட்க சென்றார்.
பின்னர் வந்து பார்த்தபோது லாரியை காணாமல் சக்கரவர்த்தி திடுக்கிட்டார். லாரியை யாரோ திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சக்கரவர்த்தி கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, குற்றபிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசு ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சக்கரவர்த்தியின் லாரி கடலூர் சாலையில் உள்ள ஒரு ஓர்க்ஷாப்பில் நிறுத்தி இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கிருமாம்பாக்கம் போலீசார் தமிழக போலீசார் ஒத்துழைப்புடன் அந்த ஓர்க்ஷாப்புக்கு சென்றனர். அப்போது லாரியை திருடி சென்ற வாலிபர் லாரியின் டயர்களை கழற்றி கொண்டு இருந்தார். இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பாகூர் காமராஜ்நகரை சேர்ந்த குமரகுரு (வயது35) என்பதும், இவரும் உருளையன்பேட்டை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அலாம்தீன் (26) என்பவருடன் சேர்ந்து லாரியை திருடி டயர்களை கழற்றி மற்றொரு லாரி உரிமையாளருமான நிர்மல்ராஜ் என்ற வாலிபரிடம் விற்க முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து லாரியை திருடிய குமரகுரு, அலாம்தீன் மற்றும் லாரியை திருட தூண்டுதலாக இருந்த லாரி உரிமையாளர் நிர்மல்ராஜ் என்ற விமல் ஆகிய 3பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட லாரி மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
மதுரை:
மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து திண்டுக்கல், கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இங்கு எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இன்று காலை பஸ் நிலையப்பகுதியில் கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.
அப்போது ஒருவர் கையில் பேக்குடன் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தார். அவரது நடவடிக்கை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனால் அவரை அழைத்து இன்ஸ்பெக்டர் மன்னவன் விசாரித்தார். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் பேக்கை வாங்கி சோதனை நடத்தினர்.
அதில், ரூ.19 லட்சம் இருந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பணம் யாருடையது? எங்கிருந்து கொண்டு வந்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
ஆனால் அவர் சரியாக பதில் அளிக்காததால் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் பிரபாகரன் (வயது 50) என்பதும், தேனி மாவட்டம், போடி தாலுகா, சக்கம்பட்டியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்த ரூ.19 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவாமிமலை:
கும்பகோணம் தாலுகா களம்பரம் பகுதி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ரஜேஸ்வரி(வயது45). இவரது மகள் பிரான்சிஸ் மேரி(17). மனநிலை பாதிக்கப்பட்டவர். அதே தெருவை சேர்ந்தவர் ராமதாஸ். இவர் பிரான்சிஸ் மேரியை அடிக்கடி கேலியும், கிண்டலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் கண்டித்து வந்துள்ளார்.
கடந்த 14-ந்தேதி இதேபோல் பிரான்சிஸ் மேரியை ராமதாஸ் கிண்டல் செய்தததை கண்ட ராஜேஸ்வரி கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த ராமதாஸ் நேற்று வீட்டில் தனியாக இருந்த பிரான்சிஸ் மேரியை மானபங்கம் படுத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ராஜேஸ்வரி தனது மகளை ராமதாசிடம் இருந்து மீட்டார்.
பின்னர் இதுகுறித்து அவர் சுவாமிமலை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரேகாராணி வழக்குப்பதிவு செய்து மனநிலை பாதித்த பெண்ணை மானபங்கம் படுத்த முயன்ற ராமதாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்