என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "pettai"
- மாணவிகளின் பெற்றோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று மதியம் பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒன்று திரண்டனர்.
- மாணவிகள் பஸ்சில் ஏறுவது, இறங்குவதில் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
போலீஸ் நிலையத்தில் புகார்
ஏழை-எளிய மாணவிகள் பயின்று வரும் இப்பள்ளி தொடங்கும் நேரத்திலும், முடியும் வேளையிலும் பஸ் நிறுத்தத்தில் வாலிபர் சிலர் தொல்லை கொடுப்பதாகவும், பஸ்களில் மாணவிகளை முறையாக ஏற்றி செல்வதில் உரிய பாதுகாப்பின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும், போக்குவரத்தை சீர் செய்திடவும் பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் கல்வி மேலாண்மை குழு மூலமாக பேட்டை போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் போலீசாரின் போதிய நடவடிக்கை இன்றி மாணவிகள் இன்னலுக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாணவிகளின் பெற்றோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று மதியம் பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒன்று திரண்டனர்.
மாணவிகளிடம் கேலி, கிண்டல் செய்வது, தவறாக அணுகுவது உள்ளிட்ட அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாணவிகள் பஸ்சில் ஏறுவது மற்றும் இறங்குவதில் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.அந்த வேளைகளில் போலீசார் மாணவிகளின் நலம் கருதி போக்குவரத்தை சீர் செய்திடவும் , மாணவி களுக்கு தொல்லை தரும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தனர்.
அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய டவுன் உதவி கமிஷனர் சுப்பையா பஸ் நிறுத்தத்தில் உரிய போலீசார் பாது காப்பு பணிகளை மேற்கொள்ள வும், போக்கு வரத்தினை சீர் செய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி தெரி வித்ததையடுத்து அவர் கள் கலைந்து சென்றனர்.
- மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பஸ்சை திருப்பினார்.
- விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்தது.
நெல்லை:
சாத்தான்குளம் அருகே உள்ள முதலுரை சேர்ந்தவர் கோட்டியப்பன். இவர் நெல்லையில் தனியார் பஸ் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
பள்ளத்தில் இறங்கியது
தினமும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து காரையாறுக்கு செல்லும் அந்த பஸ்சில் இன்று காலை வழக்கம் போல் புறப்பட்டார். புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணி களை ஏற்றிக் கொண்டு பஸ் புறப்பட்டு சென்றது.
பேட்டை ஐ.டி.ஐ அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் மோதாமல் இருப்பதற்காக டிரைவர் கோட்டியப்பன் பஸ்சை திருப்பினார். அப்போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மற்றொரு பகுதிக்கு சென்று அங்கிருந்த சாலையோர பள்ளத்தில் இறங்கி அங்குள்ள தனியார் நிறுவன சுற்றுச்சுவர் மீது மோதி நின்றது.
டிரைவர்- பயணிகள் காயம்
இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து டிரைவர் கோட்டியப்பன் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் 5 பேர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த கோட்டியப்பன் மற்றும் பயணிகளை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர்களுக்கு தற்போது கோடைகால விடுமுறை அளிக்கபட்டுள்ளது. இதையடுத்து விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் மாணவர்களுக்கு பல்வேறு இடங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நெல்லை பேட்டை அருகே உள்ள கோடீஸ்வரன்நகர் பகுதியில் கடந்த 13-ந் தேதி முதல் கோடைகால பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் மாணவர்களுக்கு யோகா, ஸ்கேட்டிங் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி நாளை மறுநாளுடன் (31-ந் தேதி) முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை அமல்தாமஸ் செய்து வருகிறார்.
மாணவர்களுக்கு கோடைகால பயிற்சிகளை அழகேசராஜா வழங்கி வருகிறார். 85 மாணவர்கள் ஸ்கேட்டிங் பயிற்சியும், 200 மாணவர்கள் யோகா பயிற்சியும் பெற்று வருகிறார்கள்.
- தொழுவத்தில் கட்டி வைத்திருந்த பசுமாடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
- வியாபாரி ஒருவரிடம் ரூ. 35 ஆயிரத்துக்கு மாடுகளை ஒருவர் விற்க முயன்றுள்ளார்.
நெல்லை:
நெல்லை பேட்டையை அடுத்த கண்டியப்பேரி அருகே இலந்தைகுளம் பிள்ளை யார்கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்(வயது 45). சம்பவத்தன்று இவர் தனது வீட்டுக்கு அருகே தொழுவத்தில் கட்டி வைத்திருந்த 2 பசுமாடுகள், ஒரு கன்றுகுட்டியை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
இதுதொடர்பாக அவர் பேட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் மாட்டின் உரிமையாளரான செந்தில் பாவூர்சத்திரத்தில் இன்று நடைபெற்ற கால்நடை சந்தையில் சென்று அங்கு யாரேனும் தனது மாட்டை விற்பனைக்கு கொண்டு வருகிறார்களா? என்று தேடிப்பார்த்தார். அப்போது ஒரு நபர் வியாபாரி ஒருவரிடம் ரூ. 35 ஆயிரத்துக்கு மாடுகளை விற்க முயன்றதை கண்டார்.
உடனடியாக செந்தில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அந்த நபர் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(30) என்பதும், அவரது மனைவி மகாலட்சுமிக்கு சொந்த ஊர் கண்டிய பேரி என்பதும் தெரியவந்தது.
மேலும் மகாலட்சுமியின் தூண்டுதலின் பேரில் ரமேஷ் அந்த மாடுகளை திருடி வந்து ஆலங்குளத்தைச் சேர்ந்த மாட்டு வியாபாரியான மிக்கேல் ராஜிடம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பசு மாடுகளை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
- நேற்று இரவு மோட்டார் சைக்கிள்களை வீட்டில் நிறுத்திவிட்டு தூங்க சென்றனர்.
- திருட்டு குறித்து பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 22). அதே பகுதியில் வசித்து வருபவர் விக்ரம்(37). இவர்கள் 2 பேரும் தங்களது 3 மோட்டார் சைக்கிள்களையும் வீட்டின் முன்பு நிறுத்துவது வழக்கம்.
நேற்று இரவும் வழக்கம்போல் மோட்டார் சைக்கிள்களை வீட்டில் நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டனர். இன்று அதிகாலை எழுந்து பார்த்தபோது அவர்களது 3 மோட்டார் சைக்கிள்களையும் காணவில்லை. மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பதை அறிந்த அவர்கள் பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- முருக பெருமாள், குணசேகரன் வீட்டின் அருகே நின்று கொண்டு அவதூறாக பேசி உள்ளார்.
- தாக்குதலில் தனலட்சுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை:
பேட்டை மலையாளமேடு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் தனலட்சுமி (வயது 23), நர்சிங் கல்லூரி மாணவி.
தாக்குதல்
இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முருக பெருமாள். சம்பவத்தன்று முருக பெருமாளின் மகனுக்கும், குணசேகரனின் மகனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பின்னர் சமரசம் பேசி முடித்துள்ளனர்.
இந்நிலையில் முருக பெருமாள், குணசேகரன் வீட்டின் அருகே நின்று கொண்டு அவதூறாக பேசி உள்ளார். மேலும் முருக பெருமாள், அவரது மனைவி அமுதா, மகன் செல்லத்துரை ஆகியோர் சேர்ந்து குணசேகரனின் மகள் தனலட்சுமியை கம்பியால் தாக்கி உள்ளனர். இதில் தனலட்சுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
4 பேர் மீது வழக்கு
அப்போது அமுதாவின் சகோதரரும், தி.மு.க. பிரமுகருமான மலை கண்ணன் தனலட்சுமியை மிரட்டி உள்ளார். படுகாயம் அடைந்த தனலட்சுமி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் முருக பெருமாள் உள்பட 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் வள்ளியம்மாள் விசாரணை நடத்தி வருகிறார்.
- விக்ரமன் மகளுக்கு இன்று காலை அவரது வீட்டில் வைத்து திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
- இன்று காலை 8 மணிக்கு விக்ரம் வீட்டின் முன்பு உள்ள மின்கம்பத்தில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு திருமண பந்தலில் தீப்பொறிகள் விழுந்தது.
நெல்லை:
நெல்லை பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் விக்ரமன். இவரது மகளுக்கு இன்று காலை அவரது வீட்டில் வைத்து திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டின் முன்பு ஓலை பந்தல் போடப்பட்டது.
திடீர் தீ விபத்து
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு விக்ரம் வீட்டின் முன்பு உள்ள மின்கம்பத்தில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு திருமண பந்தலில் தீப்பொறிகள் விழுந்தது. இதனால் பந்தல் முழுவதும் தீ பற்றி எரிந்தது.
உடனடியாக வீட்டி லிருந்த மணமகன் மற்றும் மணமகள், உறவினர்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து விட்டனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருமண பந்தல் எரிந்து நாசம்
இது குறித்து பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். எனினும் திருமண பந்தல் தீயில் எரிந்து நாசமானது.
இது தொடர்பாக அப்பகுதி நரிக்குறவர் காலனி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக புதிய மின் வயர்கள் பொருத்தப்படவில்லை. எனவே இன்று காலை மின் விபத்து ஏற்பட்டு பந்தல் முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது.
எனவே உடனே எங்கள் பகுதியில் பழைய மின் வயர்களை மாற்றி புதிய மின் வயர்கள் பொருத்த வேண்டும் எனக் கூறினர்.
- விவசாயிகளுக்கான கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் கொண்டாளவளவு சமுதாய நல கூடத்தில் நடந்தது.
- கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு சத்துள்ள தினை மாவு வழங்கினர்.
நெல்லை :
பேட்டை ரூரல் ஊராட்சிக்குட்பட்ட கொண்டாளவளவு சமுதாய நல கூடத்தில் விவசாயிகளுக்கான கால்நடை பராமரிப்பு வழிகாட்டுதல் பயிற்சி 2022-2023 ஆண்டுக்கான சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இம்முகாமில் கால்நடைகளை பராமரிப்பதும், வளர்ப்பதும் குறித்தும் மருத்துவர்கள் பேசினர். பின்பு கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு சத்துள்ள தினை மாவு வழங்கினர். நிகழ்ச்சியில் கால்நடை உதவி மருத்துவர்கள் ரேவதி, அனுபாமா, ஆய்வாளர்கள் மணிகண்டன், ஹரிநாராயணன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சுப்பிரமணியன்மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
- மின்சார சிக்கனம் குறித்து பொதுமக்கள், மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது
- நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேஷ் மணி வரவேற்று பேசினார்
நெல்லை:
நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் சார்பாக நெல்லை மாவட்டத்தில் மின்சார சிக்கனம் குறித்து பொதுமக்கள், மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து மின்சார சிக்கன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) வெங்கடேஷ் மணி வரவேற்று பேசினார். நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறி யாளர் குருசாமி தலைமை தாங்கினார்.
நெல்லை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து ெதாடங்கி வைத்தார். உதவி செயற்பொறியாளர் சங்கர் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் செல்வகுமார், செயற்பொறியாளர்கள், கற்பகவிநாயக சுந்தரம், ஜான் பிரிட்டோ, உதவி செயற் பொறியாளர்கள் முத்துசாமி , சின்னசாமி, சைலஜா, கலா ராஜகோபால், தங்க முருகன், ராஜசேகர், குத்தாலிங்கம், உதவி மின்பொறியாளர்கள், சரவணன், அருணன், சரவணகுமார், முருகன், சரவணன், ஜெனட் மல்லிகா, ஜெயஸ்ரீ எழில், மேகலா, திரேசா பாக்கியவதி, ஆன்சிங்ரூபலா, மனோகரன், அபிராமி நாதன், வெங்கடேஷ் மற்றும் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பேட்டை ரஹ்மானியா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- செல்போன் டவர் நிறுவுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கபட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
நெல்லை:
நெல்லை பேட்டை ரஹ்மானியா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகமது மைதீன் கசாலி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
பேட்டை ரஹ்மானிய பள்ளிவாசல் அருகில் ரஹ்மத்நகர், ராஜீவ் காந்திநகர், ஆசிரியர் காலனி, ப.த.நகர் ஆகிய இடங்களில் 5 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளது. அப்பகுதியில் அதிக கதிர்வீச்சு பரப்பக்கூடிய செல்போன் டவர் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செல்போன் டவர் கதிர்வீச்சால் பலவிதமான நோய்களால் குழந்தைகளும், பெண்களும், முதியோர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே இப்பகுதி மக்கள் அச்சப்படுவதாலும் உயிர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத காரணத்தினாலும் இந்த பகுதியில் செல்போன் டவர் நிறுவுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கபட்டதை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து கோரி க்கை மனுவை அளித்தனர்.
- நெல்லை பேட்டையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரதமரின் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் வருகிற 10-ந் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறுகிறது.
- மத்திய, மாநில அரசு மற்றும் தனியாா் துறையைச் சோ்ந்த பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தோ்வு செய்ய உள்ளனா்
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நெல்லை பேட்டையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரதமரின் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் வருகிற 10-ந் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறுகிறது.
முகாமில், ஐ.டி.ஐ. பயின்று தோ்ச்சிப் பெற்ற பயிற்சியாளா்கள், பொறியியல் பிரிவில் பட்டயம் மற்றும் பட்ட சான்றிதழ் பெற்ற இளைஞா்கள், இளம் பெண்கள் கலந்துகொள்ளலாம். இதில், மத்திய, மாநில அரசு மற்றும் தனியாா் துறையைச் சோ்ந்த பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தோ்வு செய்ய உள்ளனா்.முகாமில் பங்கேற்க விரும்பும் பயிற்சியாளா்கள், தாங்கள் பயின்ற கல்வி நிறுவனத்தில் தோ்ச்சி பெற்ற சான்றிதழ், 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். மேலும், விவரங்களுக்கு பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திற்கு எதிரில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 04622-342432, 9499055790 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பேட்டை ரூரல் ஊராட்சி கிராம சபை கூட்டம் தலைவர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது.
- 6 மாதமாக துணை தலைவர் கையெழுத்து இடாமல் காலம் தாழ்த்தி வருவதால் துணைத்தலைவர் அதிகாரத்தை ரத்து செய்ய கோரி மனு அளித்தனர்.
நெல்லை:
பேட்டை ரூரல் ஊராட்சி கிராம சபை கூட்டம் இடகரை பகுதியில் தலைவர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது. இதில் அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, குடிதண்ணீர், உடைந்த பைப்புகள் சரிபார்த்தல், தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளுக்கான செலவுக்கு தலைவர் மற்றும் துணை தலைவர் காசோலையில் கையெழுத்திட வேண்டும்.
கடந்த 6 மாதமாக துணை தலைவர் கையெழுத்து இடாமல் காலம் தாழ்த்தி வருவதால் பொதுமக்கள் இன்று கிராம சபை கூட்டத்தில் துணைத்தலைவர் அதிகாரத்தை ரத்து செய்ய கோரி மனு அளித்தனர். மேலும் ஞானம்மாள் கட்டளையில் பகுதி நேர ரேசன்கடை வேண்டி வருகிற 11-ந்தேதி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தவும் பொதுமக்கள் முடிவு செய்தனர்.
இக்கூட்டத்தில் மானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின், கிராம நிர்வாக அலுவலர் ராஜா அங்கப்பன், ஒன்றிய கவுன்சிலர் முபீன் முகம்மது இஸ்மாயில், துணைத்தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள்,மகளிர் சுய உதவிக்குழுக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்