search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Photoshoot"

    • 4 போட்டோகிராபர்களை வைத்து போட்டோ வீடியோ ஷுட் நடத்தினார்.
    • வம்சி நாத்ரெட்டிக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், கன்னவரத்தை சேர்ந்தவர் வம்சி நாத் ரெட்டி. தொழிலதிபர். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாக உள்ளார்.

    இவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

    தரிசனம் முடிந்து வெளியே வந்த வம்சி நாத் ரெட்டி கோவில் முன்பாக 4 போட்டோகிராபர்களை வைத்து போட்டோ வீடியோ ஷுட் நடத்தினார்.

    போட்டோகிராபர்கள் வம்சிநாத் ரெட்டியை பல கோணங்களில் வீடியோ, படம் எடுத்தனர். தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் இதனைக் கண்டு முகம் சுழித்தனர்.

    இதுகுறித்து தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகளிடம் பக்தர்கள் புகார் செய்தனர்.

    தேவஸ்தான அதிகாரிகள் போட்டோ ஷூட் நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைக் கண்ட ஒரு சில பக்தர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

    சமூக வலைதளங்களில் வம்சி நாத்ரெட்டிக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்தனர்.

    திருப்பதி கோவிலில் நேற்று 56,952 பேர் தரிசனம் செய்தனர். 21,714 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.84 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 13 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். 

    • குறுகலான ரெயில் பாலத்தில் நின்று ட்ரோன் மூலமாக ஒரு புதுமண தம்பதி ஃபோட்டோஷூட் நடத்தியுள்ளனர்.
    • பாலத்தில் இருந்து புதுமண தம்பதி குதிக்கும் வீடியோ உறவினரின் மொபைல் போனில் பதிவாகியுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் குறுகலான ரெயில் பாலத்தில் நின்று ட்ரோன் மூலமாக ஒரு புதுமண தம்பதி ஃபோட்டோஷூட் நடத்தியுள்ளனர்.

    அப்போது ரெயில்வே தடத்தில் திடீரென ரயில் வந்ததால் பயத்தில் செய்வதறியாது 90 அடி பள்ளத்தில் கணவன் மனைவி இருவரும் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    பாலத்தில் இருந்து புதுமண தம்பதி குதிக்கும் வீடியோ உறவினரின் மொபைல் போனில் பதிவாகியுள்ளது.

    குறைவான வேகத்தில் ரெயில் வந்து கொண்டிருந்ததால் புதுமண தம்பதியை பார்த்து உடனடியாக ரெயிலை நிறுத்தினார். ஆனால் ரெயில் நிற்பதற்கு முன்பாக அவர்கள் இருவரும் பாலத்தில் இருந்து குதித்துள்ளனர்.

    ரயிலை நிறுத்திய ஓட்டுநர்கள், கீழே விழுந்த ராகுல் - ஜான்வி தம்பதியை அவர்களின் நண்பர்களுடன் இணைந்து மீட்டனர். படுகாயம் அடைந்த இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    சமீப காலமாக தம்பதிகள் திருமண போட்டோஷூட்களை வித்தியாசமான முறையில் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஒரு காதல் ஜோடி, ஒரு ரோப் காரில் அந்தரத்தில் தொங்கிய நிலையில் சாகசம் செய்தபடி மேஜையில் அமர்ந்து 'போட்டோஷூட்' நடத்தி உள்ளனர்.

    இதுதொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு ஜோடி, பள்ளத்தாக்கு பகுதியில் ரோப் காரில் அமர்ந்துள்ளனர். பார்ப்பதற்கு டைனிங் டேபிள் வடிவில் அமைக்கப்பட்ட அந்த ரோப்பில் அமர்ந்து தம்பதியினர் கேபிளை பிடித்தபடி பேசுவது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலாகி 69 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது.

    வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 'தி லாஸ்ட் சப்பர்' என்று ஒரு பயனரும், பணத்தை வீணாக்குகிறீர்கள் என ஒரு பயனரும் பதிவிட்டுள்ளனர்.

    • தான்யாவின் இன்னொரு முகத்தை விரைவில் சினிமாவில் ரசிகர்கள் பார்க்கலாம்.
    • தற்போது படங்களில் கிளாமர் காட்டவும் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

    பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தியான தான்யா, தமிழில் பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலமாக அறிமுகமானார். 'பிருந்தாவனம்', 'கருப்பன்', 'நெஞ்சுக்கு நீதி', 'மாயோன்', 'ரசவாதி' போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் படங்கள் நடித்திருக்கிறார்.

    தற்போது அருண் விஜய்யின் 'ரெட்ட தல' படத்தில் நடித்து வருகிறார். பட விழாவில் அவர் உடுத்திய ஊதா நிற கண்ணாடி இழையிலான சேலையும் பரபரப்பாக பேசப்பட்டது.

    இதுவரை படங்களில் ஹோம்லியாக நடித்து வந்த தான்யா ரவிச்சந்திரன், தற்போது படங்களில் 'கிளாமர்' காட்டவும் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் போட்டோஷூட் நடத்தி தான்யா வெளியிட்டுள்ள கவர்ச்சி படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த படங்களை பார்த்த ரசிகர்களும் தான்யாவின் அழகை புகழ்ந்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்களாம்.

    ரசிகர்களின் பேராதரவினால் தொடர்ந்து கவர்ச்சி படங்கள் வெளியிடவும், படங்களிலும் கிளாமராக நடிக்கவும் தான்யா முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் தான்யாவின் இன்னொரு முகத்தை விரைவில் சினிமாவில் ரசிகர்கள் பார்க்கலாம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா என்ற படத்தில் துப்புரவு தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நிமிஷா சஜயன்.
    • ஜோதிகாவுடன் இணைந்து இந்தியில் உருவாகி வரும் டப்பா கார்டல் எந்த வெப் தொடரில் நடித்துள்ளார்.

    சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா என்ற படத்தில் துப்புரவு தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நிமிஷா சஜயன்.

    தொடர்ந்து தமிழ், மலையாள படங்களில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நிறைமாத கர்ப்பிணியாக பழங்குடி பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . படத்தில் அவரது நடிப்பை லாரன்ஸ் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் ஒவ்வொரு விழாக்களிலும் பாராட்டினார்கள்.

    அடுத்ததாக ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மிஷன் சாப்டர் 1 படத்தில் நர்ஸ் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு பாராட்ட வைத்தது.

    தொடர்ந்து ஜோதிகாவுடன் இணைந்து இந்தியில் உருவாகி வரும் டப்பா கார்டல் எந்த வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் விரைவில் வெளியாக இருக்கிறது.

    சினிமா மற்றும் வெப் தொடர்களில் பிசியாக நடித்து வரும் நிமிசா சஜயன் சமூக வலைத்தளங்களிலும் தீவிர ஆர்வம் கொண்டு அவரது புகைப்படம் மற்றும் வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

    அந்த வகையில் அருவி ஒன்றில் ஆனந்தமாக குளித்து மகிழும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நிமிஷா சஜயன்.

    இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கவர்ச்சியாகவும் நடிப்பதற்கு நிமிஷா ரெடி என்பது உள்பட பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'பேச்சுலர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் திவ்ய பாரதி.
    • தற்போது திவ்ய பாரதி இலங்கையில் பொழுதை கழித்து வருகிறார். அங்கு கவர்ச்சி உடை அணிந்து புகைப்படம் எடுத்திருக்கிறார்.

    'பேச்சுலர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் திவ்ய பாரதி. 'ஆசை', 'மதில் மேல் காதல்' போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

    பேச்சுலர் படத்தில் ஜி.வி.பிரகாசுடன், அவர் கிளாமராக நடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தில் அவர்களுக்கு இடையே இருக்கும் நெருக்கமான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

    இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடருகிறார்கள்.

    தற்போது திவ்ய பாரதி இலங்கையில் பொழுதை கழித்து வருகிறார். அங்கு கவர்ச்சி உடை அணிந்து புகைப்படம் எடுத்திருக்கிறார். அவற்றை இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டுள்ளார்.

     

    இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. திவ்யாபாரதி தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'கிங்ஸ்டன்' படத்தில் நடித்து வருகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தற்போது கோடை விடுமுறை என்பதால் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
    • பூங்காவுக்கு வருவோர் செல்போன்களில் படம் எடுக்க எந்த தடையுமில்லை.

    புதுச்சேரி:

    பிரெஞ்சு கலாச்சாரத்தின் ஜன்னல் என அழைக்கப்படும் புதுவையில் அழகிய வீதிகள், பூங்காக்கள், ரம்மியமான கடற்கரை, பிரெஞ்சு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கட்டிடங்கள், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சுற்றுலா பயணிகளை கவருகிறது.

    அழகிய சுற்றுலா தளமான புதுச்சேரிக்கு ஜெர்மன், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் புதுச்சேரியின் அழகை ரசிப்பதற்கு படையெடுத்து வருகிறார்கள்.

    மேலும் புதிதாக திருமணம் செய்பவர்கள் மற்றும் பல்வேறு விசேஷங்களுக்கு போட்டோஷூட் எடுக்க விரும்புபவர்கள் புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள்.

    அவர்கள் பிரெஞ்சு கலாச்சாரம் உள்ள பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் முன்பும் நின்று அழகிய கலைநயம் மிக்க போட்டோஷூட் மற்றும் வீடியோ எடுத்து வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி கடற்கரை சாலை அருகே உள்ள மிகவும் பிரபலமான புகழ்வாய்ந்த பாரதி பூங்காவிலும் பல்வேறு தரப்பு மக்கள் போட்டோ எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

    தற்போது கோடை விடுமுறை என்பதால் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் தற்போது பாரதி பூங்காவில் போட்டோஷூட் மற்றும் வீடியோ எடுக்க நகராட்சியில் வருவாய் பிரிவை அணுகி அனுமதி பெற வேண்டும் எனவும் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும் அப்போதுதான் அனுமதி வழங்கப்படும் என்று பாரதி பூங்காவின் நுழைவு வாயில் முன்பு நகராட்சி சார்பில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.

    அதேநேரத்தில் பூங்காவுக்கு வருவோர் செல்போன்களில் படம் எடுக்க எந்த தடையுமில்லை என்றும் கேமராக்கள் மூலம் படம் எடுக்க மட்டுமே கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சமீபத்தில் ஜிவி பிரகாஷுடன் இணைந்து டியர் படத்தில் நடித்தார்.
    • ’உத்தரகண்டா’ என்ற கன்னட படத்தில் துர்கி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

     தமிழ் திரையுலகில் கடந்த 2019 முதல் சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், கடந்த 2012ம் ஆண்டு வெளியான "அட்டக்கத்தி" என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். 2010ம் ஆண்டு வெளியான "நீதானா அவன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் களமிறங்கினார்.

    தொடர்ச்சியாக தமிழில் "ரம்மி", "பண்ணையாரும் பத்மினியும்", "திருடன் போலீஸ்", "காக்கா முட்டை", "மனிதன்", மற்றும் "தர்மதுரை" போன்ற படங்களில் இயல்பான தனது நடிப்பை வெளிப்படுத்தி புகழ்பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

    சமீபத்தில் ஜிவி பிரகாஷுடன் இணைந்து டியர் படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து அடுத்தடத்த படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். 'உத்தரகண்டா' என்ற கன்னட படத்தில் துர்கி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அவர் நடிக்கும் முதல் கன்னட படம் இதுவே.

     

    இந்நிலையில் அவர் கருப்பு நிற ஜல்லடை ஆடையில் கிளாமர் போட்டோஷூட் செய்து அதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " வியரிங் பிளாக் இஸ் எ வே ஆஃப் லைஃப்" என்ற தலைப்பில் பதிவிட்டுல்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் சர்வதேச அளவில் வெளியாகி வரவேற்பை பெற்றது
    • விஜய் நடித்த தெறி படத்தை இந்தி மொழியில் நடிகரான வருண் தவான் வைத்து ரீமேக் செய்துவருகிறார்.

    அட்லி தமிழ் திரை உலகத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பெயர் இன்று இந்திய திரை உலகமே உச்சரிக்கும் பெயராக உயர்ந்து நிற்கிறது.

    ரஜினி நடித்த எந்திரன், விஜய் நடித்த நண்பன் ஆகிய படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜாராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. தொடர்ந்து விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார்.

    இந்த படங்களுக்கு கிடைத்த வெற்றியை அடுத்து அட்லியின் மார்க்கெட் உச்சத்தை அடைந்தது. இந்த நிலையில் பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அட்லி இந்தி திரை உலகில் தடம் பதித்தார்.

    ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் சர்வதேச அளவில் வெளியாகி வரவேற்பை பெற்றதுடன் ரூ.1,200 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. ஜவானுக்காக பல புகழையும் பல விருதுகளையும் அட்லீக்கு பெற்றுக் கொடுத்தது.

    இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக மும்பையில் அலுவலகம் தொடங்கியுள்ளார். விஜய் நடித்த தெறி படத்தை இந்தி மொழியில் நடிகரான வருண் தவான் வைத்து ரீமேக் செய்துவருகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராஜ்பால் யாதவ், வமிக்கா கபி போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

    அடுத்ததாக ஹாலிவுட் படங்களை அட்லி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. என் வெற்றிக்கு முக்கிய காரணமே எனது மனைவி பிரியாதான் என பல மேடைகளில் பேசி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆர்வம் கொண்ட அட்லியும், பிரியாவும் விதவிதமான ஸ்டைலில் உடைகளில் 'போட்டோ சூட்' எடுத்து சமீப காலமாக வெளியிட்டு வருகின்றனர்.

    அதில் அவரது மனைவியான பிரியா இன்று அவரது குழந்தையை தூக்கி கொஞ்சிய படியே வாரிசு படத்தை பார்ப்பதுப்போல் இருக்கும் வீடியோவை அட்லி அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து ’ஊ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு நடனமாடினார்.
    • இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலை தளங்களில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. விஜய், சூர்யா, சிம்பு, அல்லு அர்ஜூன், நானி போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார்.

    விஜயுடன் சமந்தா ஜோடியாக நடித்த 'தெறி' 'கத்தி', 'மெர்சல்' போன்ற படங்கள் தொடர் வெற்றி அடைந்தது.

    அதை தொடர்ந்து நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.திருமணமான 4 ஆண்டுகளில் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து 'ஊ சொல்றியா மாமா' என்ற பாடலுக்கு நடனமாடினார். இப்பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.

    இதைதொடர்ந்து விஜய் தேவரகொண்டா திரைப்படத்தில் நடித்தார். உடல்நலக் குறையால் கடந்த ஆண்டு நடிப்பில் இருந்து தற்காலிக பிரேக் எடுத்துக் கொண்டார். இப்பொழுது மீண்டும் இந்தாண்டு நடிக்க தொடங்கவிருக்கிறார்.

    இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலை தளங்களில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது ஒரு புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பெருமளவு கவர்ச்சியாக போஸ் கொடுத்து மிரட்டியுள்ளார். கருப்பு கலர் கோட் சூட் அணிந்து அதில் காணப்படுகிறார். 'இட்ஸ் ஃபேஷன் பேபி' என்ற தலைப்பில்  பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை எடுத்தவர் அகுலா மது. ஆடை வடிவமைப்பை ப்ரீத்தம் செய்துள்ளார்.

     

    இந்த புகைப்படங்கள் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தேயிலை தோட்டங்களில் நின்று புகைப்படம் எடுப்பதும், குழுவாக நின்று வீடியோக்களை எடுத்து பதிவு செய்வதும் தொடர்ந்து வருகிறது.
    • சுற்றுசூழல் பாதிக்கப்படுவதால் வெளியாட்கள் தேயிலை தோட்டங்களுக்குள் நுழையகூடாது என எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளனர்.

    சின்னமனூர் :
    தேனிமாவட்டம் சின்னமனூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது மேகமலை கிராமம். 18 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இப்பகுதியில் அதிகளவில் தேயிலை விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு ஹைவேவிஸ், மணலாறு, மேகமலை, மகாராஜாமெட்டு, வெண்ணியாறு, இரவங்கலாறு உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன.
    திரும்பிய திசையெல்லாம் பசும்போர்வை போர்த்தியது போல பச்சை பசேலென தேயிலை தோட்டங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி என்பதால் இங்கு பெரும்பாலும் குளிர்ச்சியான சீதோசன நிலையே காணப்படும். இங்கு யானை, காட்டுமாடு, பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.
    மேலும் புலிகள் சரணாலய பகுதிகள் இருப்பதால் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. இரவு நேரங்களில் மலைச்சாலை போக்குவரத்துக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இருந்தபோதும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள்   மேகமலைக்கு வராமல் செல்வதில்லை. தேயிலை தோட்டங்களில் நின்று புகைப்படம் எடுப்பதும், குழுவாக நின்று வீடியோக்களை எடுத்து பதிவு செய்வதும் தொடர்ந்து வருகிறது.

    குறிப்பாக திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமக்களை அழைத்து வந்து  போட்டோஷூட் எடுப்பதற்கு சிறந்த இடமாக இது உள்ளது. தோட்டங்களின் மையப்பகுதிகளுக்கு சென்று பலமணி நேரம் செலவிட்டு விதவிதமான புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர். இதற்காக குடை,  பிளாஷ், பலூன், பந்து உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு வந்து போட்டோஷூட் நடத்துகின்றனர்.

    அவை முடிந்ததும் தாங்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக்பை உள்ளிட்ட கழிவுகளை அங்கேயே விட்டு செல்கின்றனர். இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதால் வெளியாட்கள் தேயிலை தோட்டங்களுக்குள் நுழையகூடாது என எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளனர்.
    தேயிலை தோட்டங்கள் பார்ப்பதற்கு அழகாக தெரிந்தாலும் இங்கு அட்டை புழுக்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் தோட்டங்களுக்கு வரும் வனவிலங்குகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால் ஏற்படும் பாதிப்பை தடுக்க இதுபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளதாக தேயிலை தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • பாலி கடலில் மூழ்கிய 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு சென்னை கொண்டு வர உறவினர்கள் இந்தோனேசியா சென்று உள்ளனர்.
    • புதுமண ஜோடியின் உயிரிழப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அங்குள்ள போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் விபூஷ்னியா டாக்டர். இவருக்கும் சென்னையை சேர்ந்த டாக்டரான லோகேஸ்வரனுக்கும் கடந்த 1-ந் தேதி பூந்தமல்லியில் திருமணம் நடைபெற்றது.

    திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகளான டாக்டர் ஜோடி தேனிலவுக்காக இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவுக்கு சென்றனர். அங்குள்ள ஓட்டலில் தங்கி புதுமண ஜோடி பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாலித்தீவில் உள்ள கடலில் மோட்டார் படகில் சென்றபோது தவறி விழுந்ததில் தம்பதிகள் விபூஷ்னியா-லோகேஸ்வரன் ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து சென்னையில் உள்ள பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    பாலி கடலில் மூழ்கிய 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு சென்னை கொண்டு வர உறவினர்கள் இந்தோனேசியா சென்று உள்ளனர். இதற்கிடையே புதுமண ஜோடி போட்டோ ஷூட் எடுத்தபோது கடலில் தவறி விழுந்து இறந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    சம்பவத்தன்று தம்பதியினர் விபூஷ்னியா- லோகேஸ்வரன் ஆகிய இருவரும் உற்சாகத்துடன் போட்டோ ஷூட்டுக்காக கடலில் மோட்டார் படகில் சென்று உள்ளனர். அப்போது வேகமாக திரும்பியபோது படகு கடலில் கவிழ்ந்து உள்ளது. இதில் சிக்கிய புதுமண தம்பதி விபூஷ்னியா- லோகேஸ்வரன் ஆகியோர் கடலில் மூழ்கி இறந்து போய் இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலில் மூழ்கிய லோகேஸ்வரனின் உடல் வெள்ளிக்கிழமையும், விபூஷ்னியாவின் உடல் நேற்றும் கடலில் மீட்கப்பட்டது.

    புதுமண ஜோடியின் உயிரிழப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அங்குள்ள போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே பலியான விபூஷ்னியா- லோகேஸ்வரன் ஜோடியின் உடலை சென்னை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    இந்தோனேசியாவில் இருந்து நேரடி விமானம் இல்லை. எனவே உடல்கள் மலேசியா வழியாக சென்னை கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். எனவே உடல்களை கொண்டு வர 4 அல்லது 5 நாட்கள் வரை ஆகலாம் என்று உறவினர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக இந்திய தூதரகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தேனிலவு கொண்டாட சென்ற புதுமண தம்பதி திரும்பி வந்ததும் வரவேற்க தயாராக இருந்த உறவினர்கள் அவர்கள் பலியானது அறிந்ததும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

    ×