search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "picketed"

    • 14 நாட்களாக குடிநீர் வராததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.
    • மறியலினால் இப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. ஊரா ட்சி தலைவராக நித்திய நந்தக்குமார், துணைத்தலை வராக தங்கராஜ் ஆகியோர் உள்ளனர்.

    ஊராட்சிக்கு தேவை யான குடிநீர் பவானி ஆற்றில் இருந்து எடுத்து குழாய்கள் மூலம் குடியிருப்பு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 12-வது வார்டுக்குட்பட்ட தேக்கம்பட்டி, கெண்டே பாளையம், தேவனாபுரம், நஞ்சேகவுண்டன் புதூர், தொட்டதாசனூர், காளியப்பனூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    இங்குள்ள குடியிருப்பு வாசிகளுக்கு கடந்த 14 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் தெரிவித்த போது குடிநீர் மோட்டார் பழுது ஏற்பட்டு இருப்பதா கவும், குடிநீர் பணியாளர்கள் போதிய அளவில் இல்லாத காரணத்தினாலும் முறையாக குடியிருப்பு வாசிகளுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் குடிக்க தண்ணீர் இல்லாததால் இன்று காலை 7 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து தேக்கம்பட்டிக்கு வந்த அரசு பஸ்சை பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் திரண்டு காலிக்குடங்களுடன் மறித்து சாலை மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஊராட்சி தலைவர் நித்யா நந்தகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், ஊராட்சி துணைத்தலைவர் தங்கராஜ், ஒன்றிய கவுன்சிலர் சரவ ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மக்களி டம் பேச்சு வார்த்தை நடத்தி னர்.

    உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் இப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

    • ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் பண்ருட்டி தபால் நிலையம் முன்புமாவட்ட பொது செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது
    • மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்அனைவரையும் பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் கைது செய்தார்,

    கடலூர்:

    மத்தியஅரசை கண்டித்தும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக 44 சட்டங்கள், 4 ஆக சுருக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் பண்ருட்டி தபால் நிலையம் முன்புமாவட்ட பொது செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்அனைவரையும் பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் கைது செய்து பண்ருட்டி திருமண மண்டபத்தில்தங்க வைத்துள்ளனர்

    ×