search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "playground"

    • வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள் வாலிபால் விளையாட முடிவு செய்தனர்.
    • மின் கம்பத்திலிருந்து மின்சாரம் எடுத்து மின் விளக்கினை பொருத்த முயற்சி செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள எலவடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் வெங்கடேஷ் (வயது 24). இவர் அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள் வாலிபால் விளையாட முடிவு செய்தனர். போதிய வெளிச்சம் இல்லாததால், விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இருந்த மின் கம்பத்திலிருந்து மின்சாரம் எடுத்து மின் விளக்கினை பொருத்த முயற்சி செய்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக வெங்கடேஷ் மீது மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கடேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிந்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மயிலம் ஊராட்சி ஒன்றியம் கொள்ளார் ஊராட்சியில், கிளை தி.மு.க. சார்பில் விளையாட்டு மைதானம் தயார் செய்யப்பட்டது.
    • ஊராட்சி செயலர் முனியாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    மயிலம் அருகே கொள்ளார் ஊராட்சியில் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்த அமைச்சர் மஸ்தான், கிரிக்கெட் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். மயிலம் ஊராட்சி ஒன்றியம் கொள்ளார் ஊராட்சியில், கிளைதி.மு.க. சார்பில் விளை யாட்டு மைதானம் தயார் செய்யப்பட்டது.

    விளை யாட்டு மைதானத்தை மயிலம் ஒன்றிய செயலா ளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான சேதுநாதன் மற்றும் மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் முன்னிலையில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்து விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் சேகர், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சந்திரன், ரிஸ்வான், கவுன்சிலர் உமா ஞானசேகர், வக்கீல் கமலக்கண்ணன், ஒன்றிய பிரதிநிதி தெய்வகண்ணன், ஊராட்சி செயலர் முனியாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு அய்யப்பன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு ரூ.3 கோடி மதிப்பீட்டில் மைதானம் மற்றும் அரங்கம் அமைய உள்ளது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதையொட்டி உசிலம்பட்டியை அடுத்த சீமானூத்து கிராமத்தில் உள்ள ஒரு இடத்தை உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன், ஊராட்சி மன்ற தலைவர் அஜித் பாண்டி, சென்னை இ.பி.எம்.சி.ஆர். நிர்வாக இயக்குநர் கவின்குமார், பொறி யாளர்கள் வினோத்குமார், சவுமியா சிரபன் மற்றும் குழுவினர்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கண்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு ரூ.3 கோடி மதிப்பீட்டில் மைதானம் மற்றும் அரங்கம் அமைய உள்ளது.

    இந்த ஆய்வின்போது கீரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சின்னச்சாமி, கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா, அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணி நகரச் செயலாளர் சசிகுமார், ஒன்றிய செயலாளர் ஜான்சன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு அணி சிவன் ஆகியோர் உடனிருந் தனர்.

    • அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • 2020ல் அம்மா விளையாட்டு மேம்பாட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    பல்லடம் :

    தமிழகத்தில் கிராமபுறங்களில் மாணவர்கள், இளைஞர்கள் விளையாட்டுத்திறனை மேம்படுத்தவும்,உடற்பயிற்சிகள் செய்வதற்கான ஆர்வம் ஏற்படுத்தவும், கடந்த 2006 தி.மு.க., ஆட்சிக்காலத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு, அடிப்படை உடற்பயிற்சிகள் செய்வதற்கான உபகரணங்கள், கபடி, வாலிபால் விளையாடுவதற்கான கட்டமைப்பு மற்றும் குழந்தைகளுக்கான சறுக்கு, ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டது.

    மேலும் பல்வேறு விளையாட்டு சாதனங்களும், ஊராட்சி நிர்வாகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. மைதானங்கள் பராமரிப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த திட்டம் சில ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்தது. அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், மைதானங்கள் பராமரிப்பு குறித்து சில ஆண்டுகள் கண்டுகொள்ளப்படவில்லை. பின்னர் கடந்த, 2020ல் அம்மா விளையாட்டு மேம்பாட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், கிராமம்தோறும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மைதானங்கள் மேம்பாடு செய்யப்பட்டது.

    தற்போது அனைத்து கிராமங்களிலும் மைதானங்கள் பயன்பாடு இல்லாமல் புதர் மண்டி மாயமாகி வருகிறது.

    மேலும் விளையாட்டு, பயிற்சி உபகரணங்கள், துருப்பிடித்து, பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி விட்டது. ஆக்கிரமிப்பால் பல இடங்களில் மைதானமே இல்லாத நிலை உள்ளது. தற்போது கிராமப்புற இளைஞர்களிடமும், விளையாட்டு ஆர்வம் வெகுவாக குறைந்து விட்டது. பெருந்தொற்று காலத்துக்குப்பிறகு, மொபைல்போனில் மூழ்கி, அடிப்படை உடற்பயிற்சிக்கு கூட இளைஞர்களும், மாணவர்களும், முக்கியத்துவம் அளிப்பதில்லை.அதே போல், விளையாட்டில், சாதிக்க நினைப்பவர்களுக்கும், கிராமங்களில், எவ்வித வசதியும் இல்லை. எனவே, கிராமப்புற மைதானங்களை பராமரித்து, உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்க வேண்டும். சிறப்புக்குழு அமைத்து, மைதானம், உபகரணங்கள் பராமரிப்பை ஒப்படைக்க வேண்டும்.கிராமம் வாரியாக விளையாட்டு போட்டிகள் நடத்தி இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • போதிய கட்டமைப்பு வசதிகள் பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ளது.
    • இளைஞர்கள் பல்வேறு விளையாட்டுகளில் மாநில அணியில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை நகரின் மையப்பகுதியில் 6.30 ஏக்கர் பரப்பில் நேதாஜி மைதானம் அமைந்துள்ளது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்குரிய இம்மைதானம், சுற்றுப்பகுதி விளையாட்டு வீரர்களின் முக்கிய பயிற்சி மைதானமாக உள்ளது.

    ஆனால் போதிய கட்டமைப்பு வசதிகள் பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ளது. கடந்த2014-15ல், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஸ்கேட்டிங் மைதானம் மட்டும் ஏற்படுத்தப்பட்டது. பிற விளையாட்டுகளுக்கான வசதிகள் எதுவும் இல்லை. தற்போது இப்பகுதியில் ஆக்கி, தடகளம், வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி பெற உடுமலை பகுதி இளைஞர்கள் ஆர்வம் காட்டினாலும், மைதானத்தில் போதிய வசதிகளில்லை.

    எனவே மின்னொளியுடன் கூடிய வாலிபால் மைதானம், தடகளத்துக்கான ஓடுதளம் மற்றும் கால்பந்து மைதானம் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் மற்றும் உடற்பயிற்சிக்கூடம் ஆகிய வசதிகள் தேவை என இப்பகுதி விளையாட்டு வீரர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

    ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடுமலை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு விளையாட்டுகளில் மாநில அணியில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். மேலும், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பயிற்சி பெற்றுவிளையாட்டில் சாதிக்க காத்திருக்கின்றனர்.எனவே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேதாஜி மைதானத்தில் ஆய்வு செய்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   

    ×