search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poison gas attack"

    • இன்றுகாலை தொழிற்சாலையில் இருந்த தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • அப்போது சல்பைடு என்னும் விஷவாயு தாக்கி மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஹசன்(34), சுமன்(35), ராஜபாளையத்தை சேர்ந்த ரங்கநாதன்(35) ஆகியோர் மயங்கி விழுந்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பொன்மாந்துரைபுதுப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை உள்ளது. இங்கு உள்ளூர் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இன்றுகாலை தொழிற்சாலையில் இருந்த தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது சல்பைடு என்னும் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 3 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஹசன்(34), சுமன்(35), ராஜபாளையத்தை சேர்ந்த ரங்கநாதன்(35) ஆகியோர் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு அருகே தொட்டியில் பரவி இருந்த வி‌ஷ வாயு தாக்கி 2 பேர் மூச்சு திணறி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

     ஈரோடு:

    ஈரோடு பெரிய சேமூர் மாமரத்துபாளையம் அருகே கார்த்திக்கேயன் பிரிண்டிங் மில் என்ற ஒரு தனியார் நிறுவனம் உள்ளது.

    இங்கு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மன்னீர் (வயது 48), மண்டரி பண்டித் (40) ஆகியோர் பணி புரிந்து வந்தனர்.

    இவர்கள் 2 பேரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மில்லில் உள்ள கெமிக்கல் கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்தனர்.

    அப்போது அந்த தொட்டியில் பரவி இருந்த வி‌ஷ வாயு அவர்களை தாக்கியது. இதில் 2 பேரும் மூச்சு திணறி மயங்கி விழுந்து இறந்து விட்டனர்.

    இதற்கிடையே சுத்தம் செய்ய தொட்டியில் இறங்கிய 2 பேர் வராததால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது 2 பேர் சுருண்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையொட்டி அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு வி‌ஷ வாயு தாக்கி இறந்து கிடந்த 2 தொழிலாளர்களின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    வி‌ஷ வாயு தாக்கி பலியான மன்னீருக்கு முகிலாபேகம் என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதே போல் மண்டரி பண்டித்துக்கு மிம்மியாதேவி என்ற மனைவியும் ஒரு மகளும், ஒரு மகளும் உள்ளனர்.


    வி‌ஷ வாயு தாக்கி இறந்த சம்பவத்திற்கு நீதி விசாரணை கோரி சத்தி ரோட்டில் திடீரென அந்த பகுதியை சேர்ந்த ஒரு திருநங்கை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினார்.

    சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த திருநங்கையிடம் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். 

    ×