என் மலர்
நீங்கள் தேடியது "Polio"
- இயந்திர நுரையீரலுக்குள் 70 ஆண்டுகள் வாழ்ந்த அவர், கல்லூரி படிப்பை முடித்து வழக்கறிஞராக மாறினார்
- போலியோ ஒரு நபரின் முதுகுத் தண்டுவடத்தை பாதித்து, பக்கவாதத்தை ஏற்படுத்தும்
அமெரிக்காவில் 1952 ஆம் ஆண்டு பால் அலெக்சாண்டர் என்பவர் தனது 6-வது வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவரது கழுத்துக்கு கீழ் உள்ள பாகங்கள் செயல் இழந்து முடங்கினார். இதனையடுத்து சுவாசிக்க முடியாமல் அவர் சிரமப்பட, டெக்சாஸில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு அவசர மூச்சுக்குழாய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் 600 பவுண்டுகள் (272 கிலோ கிராம்) எடையுள்ள இயந்திர நுரையீரலின் உதவியுடன் அவர் உயிர் பிழைத்தார். பின்பு வாழ்நாள் முழுவதும் அந்த உலோகக் கட்டமைப்பிற்குள் வாழ வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.
இப்படி 70 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த அவர் நேற்று (மார்ச் 12) உயிரிழந்துள்ளார். இயந்திர நுரையீரலுடன் 70 ஆண்டுகள் வாழ்ந்த அவர், கல்லூரி படிப்பை முடித்து வழக்கறிஞராக மாறினார். பின்னர் எழுத்தாளராக ஆனார். இவரின் கதை உலகம் முழுவதும் உள்ள மக்களை ஈர்த்தது.
பால் அலெக்சாண்டர் இறப்பு குறித்து பேசிய அவரது சகோதரர் பிலிப், "எனது சகோதரரின் நிதி திரட்டலுக்கு நன்கொடை அளித்த அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது அவரது கடைசி சில வருடங்களை மன அழுத்தமின்றி வாழ அனுமதித்தது" என தெரிவித்துள்ளார்.
போலியோ வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொரு நபருக்கு பரவுகிறது. போலியோ ஒரு நபரின் முதுகுத் தண்டுவடத்தை பாதித்து, பக்கவாதத்தை ஏற்படுத்தும்.
- இன்று [செப்டம்பர் 1] முதல் 3 நாட்களுக்கு தினமும் 8 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே உடன்பாடு எட்டப்பட்டது.
- நசீரத் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
பாலஸ்தீன நகரங்களின்மீது கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 40,000 திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். தொடர் போரால் காசா நகரம் முழுவதுமாக உருக்குலைந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களும் சுகாதார சேவைகளும் கிடைக்காமல் தோற்று பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் காசாவில் உள்ள 6.4 லட்சம் குழந்தைகளுக்கு உலக சுகாதார அமைப்பு போலியோ சொட்டு முகாம் நடத்த முன்வந்தது. இதனை முன்னிட்டு இன்று [செப்டம்பர் 1] முதல் 3 நாட்களுக்கு தினமும் 8 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. ஆனாலும் நேற்றைய தினமே பல இடங்களில் மாதிரி முகாம்கள் நடத்தப்பட்டன.

அந்த வகையில், நேற்றைய தினம் நாசர் மருத்துவமனை வார்டுகளில் அடையாள முகாம் நடத்தி, சில குழந்தைகளுக்கு மருத்துவ அதிகாரிகள் போலியோ சொட்டு மருந்து வழங்கினர். இந்நிலையில், நேற்றய தினம் காசாவில் இஸ்ரேல் படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் சமூக நலப் பணியாளர்கள் சொட்டு மருந்து முகாம்களுக்கு தயாரான நிலையில், காசா பகுதியில் அமைந்த அகதிகள் முகாம்களில் ஒன்றான நசீரத் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காசாவில் நேற்று அடுத்தடுத்து தொடர்ந்து நடந்த தொடர் தாக்குதல்களில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஒரே நாளிலில் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது.
மதுரை மாவட்டத்தில் நாளை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து கலெக்டர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் நாளை (ஞாயிறு) போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் 2,85,400 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிறந்தது முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முகாமில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
குறிப்பாக வேறு மாநிலத்தில் இருந்து குடிபெயர்ந்து வந்துள்ள குழந்தைகள், செங்கல் காளவாசல், நரிக்குறவர், இலங்கை அகதிகள் ஆகியோரின் குழந்தைகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தி சொட்டு மருந்து வழங்கப்படும்.
இந்த சொட்டு மருந்து மையங்கள் அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், சத்துணவு மையங்களில் அமைந்துள்ள சொட்டு மருந்து வழங்கும் பூத்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படும்.
இதை தவிர்த்து நடமாடும் குழுக்கள் மூலமாகவும் பஸ் நிலையம், புகைவண்டி நிலையம், விமான நிலையம் ஆகிய இடங்களில் பூத்கள் அமைத்து சொட்டு மருந்து வழங்கப்படும்.
சொட்டு மருந்து வழங்கும் பணியை கண்காணிக்க பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிககள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத்தவிர்த்து சுகாதாரத் துறை மூலமாக 9 மேற்பார் வையாளர்களும், ஆரம்ப சுகாதார நிலைய அளவில் 200 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப்பணியில் சுகாதாரத்துறை மூலமாக 1,167 பணியாளர்கள், சத் துணவுத்துறை மூலமாக 2,490 பணியாளர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலமாக 85 பணியாளர்கள் உட்பட 7412 பணியாளர்கள் ஈடுபடு கிறார்கள்.
முகாமிற்கு தேவையான பொது சுகாதாரத்துறையைச் சேர்ந்த வாகனங்கள் 44 மற்றும் பிற துறை வாக னங்கள் 73 ஈடுபடுத்தப்பட உள்ளன.
இதற்கு முன் எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து போட்டிருந்தாலும், இந்த சொட்டு மருந்து முகாமில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாது போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோ நோயை முழுமையாக ஒழிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #Polio
தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் உப்பாலையா (40). சிறு வயதில் போலியோ நோய் தாக்கியதால் 2 கால்களும் ஊனம் அடைந்தவர். தற்போது தையல் தொழிலாளியாக பணிபுரிகிறார்.
அவரது மனைவி விவசாய கூலி வேலை செய்கிறார். இவர்களது மகன் சசிகிரண் (15). இவன் ‘கிரைப்போ ஜெனி சிர்கோசிஸ்’ என்ற கல்லீரல் நோயினால் அவதிப்பட்டான். அதன் காரணமாக அவனது கல்லீரல் செயல்படவில்லை.
அதற்காக ஐதராபாத்தில் உள்ள நிஜாம் மருத்துவ அறிவியல் நிறுவன ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். மற்றவர்களிடம் இருந்து மாற்று கல்லீரல் தானம் பெற்று பொருத்தினால் தான் சசிகுமார் உயிர் பிழைப்பான் என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர்.
ஆனால் கல்லீரல் தானம் பெற்று ஆபரேசன் செய்வோர் பட்டியலில் சசிகுமார் 12-வது இடத்தில் இருந்தான். இதனால் அவனது உயிருக்கு ஆபத்து நெருங்கி கொண்டே இருந்தது.
இந்த நிலையில் அவனுக்கு கல்லீரல் தானம் வழங்க அவனது தந்தை உப்பாலையா தயாராக இருந்தார். ஆனால் அதில் ஒரு சிறிய பிரச்சனை இருந்தது.
அதாவது தானம் செய்பவரின் கல்லீரலில் 5 சதவீதத்துக்கும் குறைவான அளவில் கொழுப்பு இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு அதற்கும் அதிகமாக இருப்பதை லேப்ராஸ்கோப்பி கருவி காட்டிக் கொடுத்தது.
எனவே உடல் எடையை குறைந்தது 4 கிலோவாவது குறைக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதை ஏற்றுக் கொண்ட உப்பாலையா முதலில் தனது மகனுக்காக உடல் எடையை 4 கிலோ குறைத்தார். அது போதாது என டாக்டர்கள் கூறியதால் மீண்டும் 4 கிலோ எடையை குறைத்தார்.
45 நாட்களில் தனது உடலை வருத்தி 8 கிலோ எடையை குறைத்தார். அதன் பின்னர் சசிகுமாருக்கு கல்லீரல் மாற்று ஆபரேசன் நடத்தப்பட்டது. உப்பாலையா உடலில் 330 கிராம் எடை கல்லீரல் எடுக்கப்பட்டு சசிகுமாரின் உடலில் பொருத்தப்பட்டது. டாக்டர் பீரப்பா தலைமையிலான குழுவினர் இந்த ஆபரேசனை வெற்றிகரமாக செய்து முடித்தனர். இது உயிருடன் இருப்பவரிடம் இருந்து கல்லீரல் தானம் பெற்று செய்த முதல் உறுப்பு மாற்று ஆபரேசன் ஆகும்.
ஆபரேசன் நடைபெற்ற 7 நாளில் உப்பாலையா நலமுடன் வீடு திரும்பினார். சசிகுமார் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.
உடல் எடையை குறைத்தது குறித்து உடல் ஊனமுற்ற தந்தை உப்பாலையா கூறும்போது, “தினமும் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தேன். அரிசி சாதம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்தேன். ஜுஸ் வகைகளை நிறைய குடித்தேன். முதலில் 4 கிலோ குறைத்தேன். மேலும் உடல் எடை குறைக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியதால் மீண்டும் 4 கிலோ என 8 கிலோ எடை குறைத்தேன்” என்றார். #LiverTransplant #Polio