என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pongal Collection"
- கலெக்டர் பாராட்டு
- கூட்டம் கூடுவதை தவிர்த்து டோக்கன் வழங்கி விநியோகிக்கப்பட்டது
திருப்பத்தூர்:
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங் கியதில் தமிழகத்திலேயே திருப்பத்தூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் ஜி.சரஸ்வதி கூறியதாவது:-
தமிழக அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங் கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ரொக்கம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து, கடந்த 9-ந் தேதி இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்கன் வழங்கப்பட்டு அதன்படி பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
- சிவகாசியில் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புகள் மேயர் வழங்கினார்.
- சிவகாசி ஒன்றியங்களில், கட்டளைப்பட்டி, எம்.புதுப்பட்டியில் ஒன்றிய துணைத்தலைவர் விவேகன் ராஜ் பொங்கல் தொகுப்பு வழங்கினார்.
சிவகாசி
சிவகாசி மாநகராட்சியில் தமிழக அரசின் இலவச பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநகராட்சி மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஸ்பிரியா தொடங்கி வைத்தனர்.
தி.மு.க., மாநகர செய லாளர் உதயசூரியன், பகுதிகழக செயலாளர் காளிராஜன், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் சக்திவேல், வர்த்தக அணி துணை அமைப்பாளர் இன்பம், ராஜேஸ், பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் வார்டு கவுன்சிலர்கள் ரேணு நித்திலா, ராஜேஷ், உள்ளிட்டோர் அவரவர் வார்டுகளில் உள்ள ரேஷன் கடைகளில், பயனாளி களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினர்.
சிவகாசி ஒன்றியங்களில், கட்டளைப்பட்டி, எம்.புதுப்பட்டியில் ஒன்றிய துணைத்தலைவர் விவேகன் ராஜ் பொங்கல் தொகுப்பு வழங்கினார். இதேபோல் தேவர்குளம் ஊராட்சியில் தலைவர் முத்துவள்ளி, ஆனையூர் ஊராட்சியில் பொறுப்பு தலைவர் முத்துமாரி, விஸ்வநத்தம் ஊராட்சியில் தலைவர் நாகராஜ், சித்துராஜபுரம் ஊராட்சியில் தலைவர் லீலாவதி, நாரணாபுரம் ஊராட்சியில் தலைவர் தேவராஜன், அனுப்பன்கு ளம் ஊராட்சியில் தலைவர் கவிதா, செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சியில் தலைவர் கருப்பசாமி, பள்ளபட்டி ஊராட்சியில் பொறுப்பு தலை வர் ராஜபாண்டி, பொங்கல் தொகுப்பினை வழங்கினர்.
- ரேசன் கடைகளில் டோக்கன் வழங்கி வருகின்றனர்
- பொது மக்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு பொங்கல் தொகுப்புகளை வழங்கினர்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகப்பு வழங்கப்படுகிறது. இதற்காக ஒரு நாளைக்கு 200 குடும்பங்களுக்கு டோக்கன் வழங்கி வருகின்றனர்.
டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி நேரம் அடிப்படையில் பொதுமக்கள் ரேசன் கடைகளுக்கு சென்று பொங்கல் தொகுப்பு பெற்றுக்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 699 ரேஷன் கடைகளிலும் இன்று முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
முதல் நாளான இன்று அனைத்து ரேசன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.தொடங்கிய ஒரு மணி நேரத்தில் அனைத்து ரேசன் கடைகளில் உள்ள கைரேகை பதிவு செய்யக்கூடிய கருவி பழுதானது.
சர்வர் பிரச்சினை காரணமாக இந்த கருவிகள் அனைத்து ரேசன் கடைகளிலும் இயங்க வில்லை. இதனால் நீண்ட நேரம் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு பொங்கல் தொகுப்பு வழங்க உத்தரவி டப்பட்டது.
அதன்படி அனைத்து ரேசன் கடைகளிலும் பொது மக்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு பொங்கல் தொகுப்புகளை வழங்கினர்.
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3.45 லட்சம் ரேசன் அட்டை தாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 376 குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. ராணிப்பேட்டை நவல்பூர் பகுதியில் உள்ள கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சரவணன் வரவேற்றார்.
ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதாவினோத், ஒன்றியக்குழு தலைவர் வெங்கடரமணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
ஒரு கிலோ அரிசி, கரும்பு, வேட்டி, சேலை, ரூ.1000 பணம் ஆகியவற்றை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கி பேசியதாவது:-
இந்த பொங்கல் தொகுப்பு இன்று முதல் 12-ந்தேதி வரையில் ரேசன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு அனைத்து ரேசன் கடைகளுக்கும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் சர்க்கரை, ரொக்கம் ரூ.1000 வழங்க ஏதுவாக முழுமையாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.பொங்கல் பரிசு தொகுப்பு 9-ந்தேதி முதல் 12-ந் தேதி வரையில் வாங்க தவறியவர்கள் வரும் 13-ந்தேதி ரேசன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 3,45,075 குடும்பங்கள் இதனால் பயன் பெறுகின்றனர்.
நிகழ்ச்சியில் நகரமன்ற துணை தலைவர் ரமேஷ்கர்ணா, நகரமன்ற உறுப்பினர் வினோத், வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, துணை பதிவாளர் சந்திரன், தாசில்தார் நடராஜன், வட்ட வழங்கல் அலுவலர் கன்னியப்பன், நகர செயலாளர் பூங்காவனன் உள்பட அரசு அலுவலர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், திமுக பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முடிவில் பொது விநியோக துணை பதிவாளர் சிவமணி நன்றி கூறினார்.
- கலெக்டர் தகவல்
- டோக்கன்கள் வினியோகம் தீவிரம்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 3,44,679 மொத்த அரிசி குடும்ப அட்டைதாரர்களும், முகாம்களில் வாழும் இலங்கை தமிழர் குடும்ப அட்டை 376 குடும்பங்களும், சிறப்பாகக் கொண்டாட பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, மற்றும் ஒரு முழுக்கரும்புடன் ரூ.1,000 வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணத்தினை 9.01.2023 முதல் - அமைச்சர் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கப்பட்டு பொங்கல் திருநாளுக்கு முன்னர் வரை வழங்கப்படும்.
மேலும் ரேசன் கடைகளில் சுழற்சி முறையில் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் 3.1.2023 முதல் 8.1.2023 வரை வீடு தோறும் சென்று ரேசன் கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்படும்.
குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் எவர் வந்தாலும் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்படும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருட்கள் வாங்கச் செல்ல வேண்டும்.
மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் உடன் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04172-2271766-க்கு தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, மற்றும் ஒரு முழுக் கரும்புடன் ரூ. 1000 ரொக்கப்பணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
- 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் விநியோக பணி முழுமையாக முடிக்கப்படும்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளி யிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முதல்-அைமச்சர் இந்த ஆண்டுதைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்பஅட்டை தாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் களில் வசிக்கும் குடும்பங்க ளுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, மற்றும் ஒரு முழுக் கரும்புடன் ரூ. 1000 ரொக்கப்பணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடை களிலும் நடை முறையில் உள்ள 6,14,906 அரிசி பெறும் குடும்ப அட்டை தாரர்களுக்கும் மற்றும் 434மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட வுள்ளது.
பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் பெற ஏது வாக குடும்ப அடடை தாரர்களுக்கு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்களை (3-ந் தேதி) முதல் 8-ந் தேதி வரை விடுமுறை தினமான 6-ந் தேி நீங்கலாக டோக்கன் வழங்கப்படும். பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் விநியோகப் பணியினை 9-ந் தேதி அன்று தொடங்கப்பட்டு பொங்கல் திருநாளுக்கு முன்னரே 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் விநியோக பணி முழுமையாக முடிக்கப்படும். கூட்ட நெரி சலை தவிர்க்கும் பொருட்டு ரேசன் கடை பணியாளர் கள் வாயிலாக வீடு வீடாகச் சென்று பொது மக்கள் எந்த நாட்களில் எந்த நேரத்தில் கடைக்குச் சென்று பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்ற விவரத்தை தெரிவித்து டோக்கன் வழங்கப்படும்.
குடும்ப அட்டை தாரர் களுக்கு விநியோகம் செய்யப்படும் பொங்கல் பரிசுமற்றும் ரொக்கப்பணம் விநியோகத்தில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் விழுப்புரம் மாவட்ட கூட்டு றவு சங்கங்களின் இணைப்பதி வாளர் அலுவல கத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04146- 229854 மற்றும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் இயங்கி வரும் தொலை பேசி எண் 04146-229884 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தளபதி பேரவை தலைவர் ஏ.ஆர். அருள்காந்த் நன்றி தெரிவிப்பு
- பொதுமக்கள் வரவேற்பதாக அறிக்கையில் தகவல்
திருவண்ணாமலை:
தளபதி பேரவை தலைவர் ஏ.ஆர்.அருள்காந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழர்களின் திருநாளாம் தை பொங்கலை தமிழகம் முழுவதும் விவசாயிகளின் உற்சாகமாக கொண்டாடும் வேலையில் பொங்கல் தொகுப்பில் கரும்பு விடுபட்டு இருந்தது இதை அரசியல் ஆக்க வேண்டும் என துடித்து ஜனவரி 2ம் தேதி திருவண்ணாமலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்தது சென்னை உயர்நீதி மன்றத்திலும் கரும்பு வழங்க வேண்டும் என ஒரு பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அனைத்தையும் முறியடித்து விவசாயிகளின் பொதுமக்களின் நலம் கருதி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரும்பு வழங்கப்படும் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருப்பது அனைத்து தரப்பிலும் வரவேற்பையும் வாழ்த்துகளையும் பெற்று இருக்கிறது. முதல்-அமைச்சருக்கு தளபதி பேரவை சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை எழும்பூரில் அனைத்து மாவட்ட விவசாயிகளையும் ஒன்றிணைத்து காத்திருப்பு போராட்டமும் நடைபெற்றது.
- சென்னை எழும்பூரில் அனைத்து மாவட்ட விவசாயிகளையும் ஒன்றிணைத்து காத்திருப்பு போராட்டமும் நடைபெற்றது.
பல்லடம்:
பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டி வரும் 31-ந் தேதி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகையில் கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து சாலை மறியல் போராட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வக்கீல் ஈசன் பல்லடத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:- தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில்கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பன்னீர் கரும்பை கொள்முதல் செய்து பொங்கல் பரிசுத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கிட கோரி தமிழ்நாடு அரசிற்கு விவசாயிகள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி நேற்று சென்னை எழும்பூரில் அனைத்து மாவட்ட விவசாயிகளையும் ஒன்றிணைத்து காத்திருப்பு போராட்டமும் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் பன்னீர் கரும்பை வழங்க உத்தரவு பிறப்பித்தார். இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் , வேளாண்துறை அமைச்சருக்கும், விவசாயிகளின் கோரிக்கைகளை முதல்வருக்கு எடுத்துச்சென்ற கூட்டுறவுத்துறை செயலாளருக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
அடுத்த ஆண்டு முதல் இரண்டு கரும்புகளை வழங்கி கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட அரசு உதவ வேண்டும் .நெல்லை கொள்முதல் செய்வது போலவே பன்னீர் கரும்பையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் .மேலும் கரும்பை கொள்முதல் செய்து விநியோகம் செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டதால் வரும் 31ந்தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பொங்கல் தொகுப்புடன் கரும்பு, வெல்லம் உள்ளிட்டவைகளை வழங்கக்கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- அந்த விவசாயிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்த பொங்கல் தொகுப்புடன் கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகிய பொருட்களை வழங்க வேண்டும்.
மதுரை
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேசன் கார்டுதாரர்களுக்கு ரொக்கம் ரூ.1000 ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சீனி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு வழங்கமாக வழங்கப்பட்டு வந்த கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் இந்த ஆண்டு வழங்கப்பட வில்லை.
இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. பொங்கல் தொகுப்புடன் கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை வழங்க கோரி இன்று மாநிலம் முழுவதும் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.
பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
மதுரையில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு மாநகர் மாவட்ட பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில விவசாய அணி செயலாளர் செந்தூர் பாண்டியன் தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர்கள் சுசீந்திரன் (மாநகர்), சசிக்குமார் (மேற்கு), ராஜ சிம்மன் (கிழக்கு) ஆகி யோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சுசீந்திரன் பேசியதாவது:-
திராவிட மாடல் அரசு என்று ஆட்சி நடத்தும் தி.மு.க.வுக்கு விவசாயிகள் நலனில் அக்கறை இல்லை. டாஸ்மாக் வியாபாரத்தில் கவனம் செலுத்தும் இந்த அரசு, விவசாயிகளை பாதுகாக்க தவறி விட்டது.
மத்திய அரசு வழங்கும் உதவி தொகையை பெற்று விவசாயிகள் இந்த ஆண்டு கரும்பு விவசா யம் செய்துள்ளனர். அந்த விவசாயிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்த பொங்கல் தொகுப்புடன் கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகிய பொருட்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல், நிர்வாகிகள் ராஜரத்தினம், சோலை மணி கண்டன், வினோத்குமார், ராஜா, ஏர்போர்ட் கார்த்திக், கீரைத்துறை குமார், மீனா இசக்கி, மணிமாலா, தமிழ்செல்வி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்